ஜிமெயில் இன்று திறந்தவுடன் இன்ப அதிர்ச்சி...
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருந்து மின்னஞ்சல் வந்திருந்தது...
மொத்த பரிசுத்தொகையை கணக்கிட கால்குலேட்டர் ஓப்பன் செய்தேன்...தலை சுற்றுகிறது...
என்ன செய்வதென்றே தெரியவில்லை...
பார்த்துக்கொண்டிருக்கும் ஐ.டி வேலையை விட்டுவிட்டு ஊர்ப்பக்கம் போய் செட்டில் ஆகலாமா ?
பெங்களூர் லீலா பேலஸ் ஓட்டல் போல ஒரு ஓட்டலை டெல்லியில் கட்டலாமா ?
ரஜினிகாந்தை வைத்து ரோபோவுக்கடுத்தது "மார்ஸ்" என்று டைட்டில் வைத்து ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் டைரக்ஷனில், இளையராஜா இசையில் படம் எடுக்கலாமா ? தோட்டா தரணியை வைத்து மார்ஸ் அளவு பெரிய உருண்டை செய்து அதில் தலைவர் ஏலியன்களிடம் எல்லாம் மன்னிப்பு கேட்கிறமாதிரி சீன் வைத்து காமெடி செய்யலாமா ?
ஒரு லட்ச ரூபாய்க்கு கிங்ஸ் சிகரெட் வாங்கி பீடி பிடிப்பவர்களுக்கெல்லாம் இலவசமாக கொடுக்கலாமா ?
ஜாலிமார்க் என்ற பெயரில் காளிமார்க் சோடாவை திரும்ப கொண்டுவரலாமா ?
ரிலையன்ஸ் அதிபர் கட்டுவது போல மேல் மாடியில் புட்பால் கிரவுண்ட் வைத்து வீடு கட்டலாமா ?
முன்றாவது படிக்கும் அரசு பள்ளிக்குழந்தைகள் ஆயிரம் பேருக்கு மடிக்கணினி வாங்கிதரலாமா ?
ரெண்டு ஐ.ஏ.எஸ், மூன்று நீதிபதிகளை வாங்கிடலாமா ?
டுபாக்கோ - ட்ரினிடாட் அரூகே ஒரு குட்டித்தீவை வாங்கி தமிழ் ஈழம் என்று பெயர் வைத்து பாஸ்போர்ட் எல்லாம் அடித்து பிரபாகரனை அரசராக்கலாமா ?
பிரெயின் லாராவை சம்பளம் கொடுத்து கூட்டிவந்து இண்டோர் கேம்ஸில் ஸ்பின் பந்து போட்டு அவரை போல்டாக்கலாமா ?
கபடிக்கு க.பி.எல் என்று இந்தியா முழுக்க டோர்னமெண்ட் நடத்தலாமா ? அதுக்கு லலித் மோடியை விட்டுவிட்டு நரேந்திர மோடியை தலைவராக்கலாமா ?
துக்ளக் ஆபீஸை விலை கொடுத்து வாங்கி - பத்திரிக்கையை நிறுத்துவிட்டு அதில் மாட்டுத்தொழுவம் நடத்தி சந்திரபாபு நாயூடுவின் ஹெரிடேஜ் மாதிரி சொறிடேஜ் என்று பால் வியாபாரம் செய்யலாமா ?
பின்னூட்டம் போடுற ஒவ்வொருத்தருக்கும் ஒரு மடிக்கணினி பரிசா தரலாமா?
அய்யோ ஒன்னுமே புரியலியே, எல்லோரும் பின்னூட்டம் போட்டாவது ஹெல்ப் பண்ணுங்களேன் சாமிகளே ?
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
'கள்' உண்ணாமை வேண்டும் அப்படின்னு காந்தி சொன்னதா கேள்வி..ஆனா அவர் கிட்ட கள் பத்தி யாரோ கதை விட்டு இருக்கனும்...கள் ரொம்ம போதை..உடம்ப...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...
28 comments:
விளையாட்டுக்கு அஞ்சல் அடிச்சுப் பயம் காட்டுறாங்க.
I think somebody is playing.. like this..
கணக்குக்கு மாற்ற 2.5 லட்சம் கட்டச்சொல்வாங்களே...
//டுபாக்கோ - ட்ரினிடாட் அரூகே ஒரு குட்டித்தீவை வாங்கி தமிழ் ஈழம் என்று பெயர் வைத்து பாஸ்போர்ட் எல்லாம் அடித்து பிரபாகரனை அரசராக்கலாமா ?
//
Super...
//
துக்ளக் ஆபீஸை விலை கொடுத்து வாங்கி - பத்திரிக்கையை நிறுத்துவிட்டு அதில் மாட்டுத்தொழுவம் நடத்தி சந்திரபாபு நாயூடுவின் ஹெரிடேஜ் மாதிரி சொறிடேஜ் என்று பால் வியாபாரம் செய்யலாமா ?
//
Super....
//பின்னூட்டம் போடுற ஒவ்வொருத்தருக்கும் ஒரு மடிக்கணினி பரிசா தரலாமா?
//
Superrroo superr....
ஒரு லட்ச ரூபாய்க்கு கிங்ஸ் சிகரெட் வாங்கி பீடி பிடிப்பவர்களுக்கெல்லாம் இலவசமாக கொடுக்கலாமா
atha saiyunga vela athigam
இதெல்லாம் எதுக்குக்குங்க....பேசாம ஒரு கட்சி ஆரம்பிச்சிடுங்க...
ஜாலிமார்க் என்ற பெயரில் காளிமார்க் சோடாவை திரும்ப கொண்டுவரலாமா ? ////
thalai, still they are in the active marketing around Madurai, not existed
தோட்டா தரணியை வைத்து மார்ஸ் அளவு பெரிய உருண்டை செய்து அதில் தலைவர் ஏலியன்களிடம் எல்லாம் மன்னிப்பு கேட்கிறமாதிரி சீன் வைத்து காமெடி செய்யலாமா ?
:-)))))))))
puduvai siva
ஷேர்பாய்ண்ட் அவர்களே
வேண்டாம்...ப்ளீஸ்...இது பொய் என்று சொல்லி என்னுடைய நம்பிக்கையில் குண்டைப்போடாதீங்க...
கூடுதுறை said...
கணக்குக்கு மாற்ற 2.5 லட்சம் கட்டச்சொல்வாங்களே...
இல்லையே...மெயில்லேயே பணத்தை அனுப்பிட்டாங்களே...
இனிமே பேங்குல கொடுத்து காசு வாங்கவேண்டியது தான் பாக்கி...
இன்னைக்கு வாங்கின குவாட்டரோட சேர்த்து பக்கத்து பாருக்கு முன்னூத்தம்பது ருவா பாக்கி...
நாளைக்கு அக்கவுண்ட்ல கேஷ் பண்ணி கொண்டுவந்து தரேன்னு சோல்லியிரூக்கேன் பார் ஓனர்ட்ட
மாதங்கி முமு அப்படீன்னு கூப்பிடறதா ?
வாங்க விஜயானந்...
அகில உலக ஏலியன் முன்னேற்ற கழகம்னு வெக்கலாமா ?
ஹலோ,
அதான் பரிசுச் செய்திய ரகஸ்யமா வைக்கச் சொல்லியிருக்காங்கல்ல? ஊரெல்லாம் தண்டோரா போட்டிட்டிருக்கீங்க? போச்சு, இப்ப உள்ளூர் ரவுடிலருந்து உலக ரவுடிகள் வரைக்கும் உங்கள மிரட்டப் போறாங்க. மெரட்டறங்க மெய்ல் ஐடிக்கெல்லாம் இத பார்வர்டு பண்ணிருங்க. அவங்களும் பொழச்சுப் போகட்டும்.
ஆனாலும் உங்க குசும்பு உலகக் குசும்பு.
அது ஏன் தம்பி கிளைம் ஆப்பீசர் மெயில் ஐடி ஹாட் மெயில்லையும், யாஹு மெயில்லயும் இருக்கு?
அவிங்களுக்கு ஒரு மைக்ரொஸாப்ட் ஐடி கூடவா இல்ல?
//டுபாக்கோ - ட்ரினிடாட் அரூகே ஒரு குட்டித்தீவை வாங்கி தமிழ் ஈழம் என்று பெயர் வைத்து பாஸ்போர்ட் எல்லாம் அடித்து பிரபாகரனை அரசராக்கலாமா ?//
ஏன் இந்த நப்பித்தனம்? பெரிய தீவா வாங்குங்க
எல்லோருக்கும் குவாட்டர் வாங்கி கொடுப்பிங்களா?
நல்ல நகைச்சுவை பதிவு.
நகைச்சுவை முடிந்த அளவு யார் மனதையும் புண்படுத்தாத வகையில் அமைவது நல்லது.
முக்கியமாக நம் மொழியையே பேசும் தமிழ் மக்களின் பல ஆண்டு விடுதலைப் போராட்டம் கூட நமக்கு நகைச்சுவையா என்ன ?
இது மாதிரி எனது Yahoo mailற்கு மாதம் ஒருதடவை வரும்.
ஆனாலும் (பணம் வந்தால்) உங்கள் கற்பனைக்கு இடமே இல்லை...
எனக்கு வேண்டும் வேண்டும் மடிகணினி வேண்டும். பலநாட்களாக எனக்கு ஒரே ஆசை. மடிகணினி வாங்குவதுதான். என்னையும் சகவலைப்பதிவர் என்று நினைக்காமல், உங்க பின்னூட்ட வாசகரா ஏற்றுக்கொள்ளுங்கள். அதுபோதும். எப்படி மடிகணினி கிடைச்சிறும்.
//தோட்டா தரணியை வைத்து மார்ஸ் அளவு பெரிய உருண்டை செய்து அதில் தலைவர் ஏலியன்களிடம் எல்லாம் மன்னிப்பு கேட்கிறமாதிரி சீன் வைத்து காமெடி செய்யலாமா ?//
ஹா ஹா ஹா
சொக்கா எல்லாமே டாலர் ஆச்சே டாலர் ஆச்சே
ரவி கடைசியில முருகன் டாலர் கூட கிடைக்காது ஹி ஹி ஹி
இந்த ஸ்பாம் பயலுக இம்சை தாங்க முடியல...ஒரு குரூப் தான் அலையறானுக :-))
ரவி,
வாழ்த்துக்கள். இந்த ஏழைப் புலவனை (?!?!) மறந்து விடாதீர்கள் அரசே ! எவ்வளவு சொற்குற்றம்/பொருட்குற்றம் இருப்பினும் தக்கவாறு தள்ளுபடி செய்து, மீதி பரிசு கொடுத்து விடுங்கள்.
ஜோசப், ஒரு விதத்தில் உங்கள் கருத்து சரியானது (may be insensitive to our brothers' cause) என்று கொள்ளலாம். அப்படிப் பார்த்தால், ரஜினி மற்றும் சோ ரசிகர்களும் புண் படுவார்கள். என்னைப் பொறுத்தவரையில் ரவியின் ஆதங்கங்கள் மற்றும் ஆயாசங்கள் ஒரு வடிகால்களாக வெளிவந்துள்ளன. அவர்கள் எங்காவது சுதந்திரமாக வாழவேண்டும் என்ற அவா அவ்வாறு வெளிப்படுகிறது. கேலி செய்யும் உத்தேசம் எந்தத் தமிழனுக்கும் இருக்காது.
ரவி, இப்படி சப்போர்ட் பண்ணுவதைக் குறித்துக்கொண்டு குறைந்தது ஐந்து பின்னூட்டம் (என் ஒவ்வொரு பதிவுக்கும்) போடக்கடவது!
அனுஜன்யா
//பின்னூட்டம் போடுற ஒவ்வொருத்தருக்கும் ஒரு மடிக்கணினி பரிசா தரலாமா?
//
மடிக்கணினி அனுப்ப என் முகவரியை குறித்துக் கொள்ளுங்கள்
//முக்கியமாக நம் மொழியையே பேசும் தமிழ் மக்களின் பல ஆண்டு விடுதலைப் போராட்டம் கூட நமக்கு நகைச்சுவையா என்ன ? //
இதுல ஒன்னும் பெரிய கிண்டல் போல தெரியலையே. உண்மையா சொல்லனும்னா இந்த வெளிப்படையான நகைச்சுவைக்கு பாராட்டலாம்.
//தோட்டா தரணியை வைத்து மார்ஸ் அளவு பெரிய உருண்டை செய்து அதில் தலைவர் ஏலியன்களிடம் எல்லாம் மன்னிப்பு கேட்கிறமாதிரி சீன் வைத்து காமெடி செய்யலாமா ? ///
ரவி, உண்மையா சிரிச்சு புண்ணாகிடுச்சு வயிறு
Happy Weekend ;)
என்னோடு பழகுபவர்களெல்லாம் பணக்காரனாயிடுவாங்க :-)
-Theevu-
எனக்கு பத்து "ஜானிவாக்கர்" பார்சல்
வால்பையன்
:)
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
ரவி.. பணத்தை வீணடிக்காதிங்க.. எனக்கு இந்த மாதிரி வந்த பணம் அப்டியே பத்திரமா வச்சிருக்கேன். இன்னும் கொஞ்ச நாள்ல மைக்ரோசாப்ஃடையே விலைக்கு வாங்கிடுவேன். அடுத்து யாஹூவை அவங்க கேக்கற பணம் குடுத்து வாங்கிடுவேன். :)
அப்புறம் நாம 2 பேரும் சேர்ந்து கூகுளை வாங்கிடலாம். அப்புறம் நமக்கு வேண்டியவங்களுக்கு மட்டும் ப்ளாகர் சேவை வழங்கலாம். நமக்கு பின்னூட்டம் போடாதவங்க பாஸ்வேர்ட் எல்லாம் எடுத்து அதை வைத்து நாமளே நமக்கு பின்னூட்டம் போடலாம். :))
டீல் ஓகேவா? :))
நான் பின்னுட்டம் போட்டாச்சி மடிகணினி எங்க எப்படி தரிங்க
Post a Comment