கடைசி பக்கம் 27 ஏப்ரல் 2009


கடைசி பக்கம் 27 ஏப்ரல் 2009

முதல்வர் கலைஞர் உண்ணாவிரதம், சிதம்பரம் டெலிபோன் பேச்சு, இலங்கையின் திடீர் போர் நிறுத்த அறிவிப்பு, அப்புறம் மறுப்பு என்று பதிவுலகமே அல்லோலகல்லோல படுது. தி.மு.க ஆதரவு பதிவர்கள் ஒரு பக்கம், அ.தி.மு.க ஆதரவு பதிவர்கள் ஒரு பக்கம், ஈழத்தமிழர்கள் ஒரு பக்கம், நடுநிலைத்தமிழர்கள் ஒரு பக்கம், எவன் எப்படி போனா என்று நகைச்சுவை பதிவு, சமையல் குறிப்பு பதிவு, சுயேச்சை வேட்பாளர் பேட்டி என்று இன்னும் சிலர் இன்னொரு பக்கம்...

எதுவும் விடுபட்டுப்போகாமல் இருக்க செய்திகளை தொகுத்து தர இந்த கடைசி பக்கம்...!!!

**********************

முதலில் போர் நிறுத்தம் என்றார்கள், அப்புறம் கனரக ஆயுதங்களை பயன்படுத்த தடை விதித்துள்ளோம் என்றார்கள், இப்போது அப்படி எல்லாம் எதுவுமே இல்லை என்கிறார்கள். இதுவரையில் / நான் கேள்விப்பட்ட வரையில் காலையில் ஆரம்பித்து லஞ்சுக்கு முன் உண்ணாவிரதம் முடித்தவர்கள் எவருமில்லை. முதல்வர் அந்தவகையில் பெரிய சாதனையாளர்தான். ஏய் நானும் ரவுடிதான் என்று ஜீப்பில் ஏறிவிட்டார்...என்னுடைய வயதும் அனுபவமும் இதற்கு மேல கிண்டல் செய்ய அனுமதிக்கவில்லை.

நாடகம் விடும் வேளைதான் உச்ச காட்சி நடக்குதம்மா !!!!!!!!


**********************

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட திரு.கொளத்தூர் மணி விடுதலையாகியுள்ளார். கலைஞர் அரசுக்கு தர்க்க ரீதியாக கிடைத்த இன்னொரு தோல்வி இது. மணியண்ணனுக்கு வாழ்த்துக்கள்...தொடருங்கள் உங்கள் பணியை..

**********************

புலித்தலைவர் பிரபாகரன் மகன் சார்லஸ் அந்தோனி கடல் மார்க்கமாக தப்பியதாக செய்திகள் வெளியாகின்றன. இது உண்மையா அல்லது வட இந்திய / இலங்கை மீடியாக்களின் வழக்கமான பரப்புரையா தெரியவில்லை

**********************

பிரமிட் சாய்மீராவை பங்கு வர்த்தகத்தில் இருந்து விலக்க செபி நடவடிக்கை எடுத்துள்ளது. பங்குகளை போலியாக விலையேற்ற நடவடிக்கை எடுத்தமை போன்ற மோசடி குற்றச்சாட்டுகள் அதன் மீது..ஒரே நாளில் பத்து படங்களுக்கு பூஜை போட்ட / சினிமாவை கார்ப்பரேட் தளத்துக்கு எடுத்துச்சென்ற பிரமிட் சாய்மீராவை பற்றி என்னை விட சில பதிவர்களுக்கு / அங்கேயே பணிபுரியும் பதிவர்களுக்கு தெரியும். அவர்கள் எழுதினார் தேவலை.

**********************

அட்சய திருதியையாம். நகை வாங்குங்கடா என்கிறார்கள். பத்து சவரன் துபாயில் வாங்கினால், அதே காசுக்கு இந்தியாவில் அதைவிட மட்டமான கலப்பட தங்கத்தை ஒன்பது சரவன் தான் வாங்க முடியுமாம்..எந்த அளவுக்கு உண்மை என்று தெரியல.

**********************

லக்கியின் பதிவு டார்கெட் செய்வது குழலி மற்றும் தமிழ் சசி என்பது போல ஒரு தோற்றப்பாடு உள்ளது. லக்கி தான் விளக்கவேண்டும்..

**********************

இலங்கை சம்பந்தமாக அமெரிக்காவின் கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது போல தெரிகிறது. புலம்பெயர் தமிழர்களின் தொடர் போராட்டமும் ஒரு காரணம். இப்படித்தான் யூதர்கள் இஸ்ரேலை பெற்றார்கள். தொடர்ந்து போராடவேண்டும். இதனை நீர்க்கச்செய்ய எடுக்கப்படும் முயற்சிகளில் பலியாகிவிடவேண்டாம்.

**********************

திமுகவை, கலைஞரை ஆதரிப்பவர்கள், மூன்று ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் கலைஞர், இப்போது முகாம்களில் இருப்பவர்களுக்கு என்ன செய்தார் என்று சொல்லுங்களேன் பார்ப்போம்...!!

**********************

**********************

**********************

Comments

//திமுகவை, கலைஞரை ஆதரிப்பவர்கள், மூன்று ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் கலைஞர், இப்போது முகாம்களில் இருப்பவர்களுக்கு என்ன செய்தார் என்று சொல்லுங்களேன் பார்ப்போம்...!!
//

இப்படி எல்லாம் கேட்டா அப்பறம் நூறு பக்கத்துல அது செஞ்சேன் இது செஞ்சேன்னு சொல்லுவாரு, அத சொல்லிபுட்டு எதாவது பண்ணினாகூட பரவால அதுவும் பன்னமாடாறு....
பாலா... said…
ஏமாந்தது தான் மிச்சம்.
இலங்கை சம்பந்தமாக அமெரிக்காவின் கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது போல தெரிகிறது. புலம்பெயர் தமிழர்களின் தொடர் போராட்டமும் ஒரு காரணம். இப்படித்தான் யூதர்கள் இஸ்ரேலை பெற்றார்கள். தொடர்ந்து போராடவேண்டும். இதனை நீர்க்கச்செய்ய எடுக்கப்படும் முயற்சிகளில் பலியாகிவிடவேண்டாம்.//

இதுதான் என்னுடைய எண்ணமும். ஈழத்தமிழர்களுக்கு இன்றைய தேவை வலிமையான நண்பர். யூதர்களுக்கு அமெரிக்கா போல். ஈழத்தமிழர்கள் தங்களுடைய போராட்டத்தின் நியாயத்தை உணர்த்தி வலிமையான ஆதரவை பெறவேண்டும்.
//திமுகவை, கலைஞரை ஆதரிப்பவர்கள், மூன்று ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் கலைஞர், இப்போது முகாம்களில் இருப்பவர்களுக்கு என்ன செய்தார் என்று சொல்லுங்களேன் பார்ப்போம்//

என்னங்க ரவி இப்படி கேட்டுட்டீங்க.

மொதல்லே குடும்பம் முக்கியம்.
அப்புறம் கட்சிக்காரன்
அதுக்கப்புறம் ஆதரிக்கும் ஜாதிக்காரன்
அதுக்கப்புறம் போனாப்போகுதுன்னு ஓட்டுப்போட்ட மக்களுக்கு ஏதாவது செய்யுறமாதிரி காட்டணுமே.

அதுக்காக ஒரு ரூபாய்க்கு அரிசி,டிவி
எல்லாந்தான் குடுத்தாங்களே.

அதை விட்டுட்டு ஓட்டு போடாத அகதிகளுக்கு என்னத்த செய்ய முடியும்.


அழையா விருந்தாளிகளுக்கு பிரியாணீயா குடுக்கமுடியும்.
சோறே ரெண்டு நாளைக்குத்தான் போட முடியும்.அப்புறம் மோர்க்கொழம்புதான், அதுக்கப்புறம் கஞ்சிதான்.

எதுக்கும் விவரம் அறியும் சட்டத்துலே யாராச்சும் வெவரம் கேட்டு பாருங்க.
அகதிகளுக்கு தெனமும் பிரியாணி போட்டதா கணக்கு எழுதியிருக்கலாம்.
கஞ்சி ஊத்துனது போக மீதி எல்லாம் உ.பிக்களுக்கு கட்டிங் போயிருக்கலாம்.
//அட்சய திருதியையாம். நகை வாங்குங்கடா என்கிறார்கள். பத்து சவரன் துபாயில் வாங்கினால், அதே காசுக்கு இந்தியாவில் அதைவிட மட்டமான கலப்பட தங்கத்தை ஒன்பது சரவன் தான் வாங்க முடியுமாம்..எந்த அளவுக்கு உண்மை என்று தெரியல.//

அதெல்லாம் இருக்கட்டும் என்னிடம் இருக்கும் 4 பவுனை அடகு வைக்க எங்கேயாவது நல்ல சேட் கடை இருந்தா சொல்லுங்க!வட்டி கம்மியா இருக்கனும்!
//இலங்கை சம்பந்தமாக அமெரிக்காவின் கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது போல தெரிகிறது. புலம்பெயர் தமிழர்களின் தொடர் போராட்டமும் ஒரு காரணம். //

லக்கி சொன்னது போல் நீங்க எழுதிட்டீங்க:)))
ILA said…
//லக்கி தான் விளக்கவேண்டும்..//
எந்த.. எந்தப் பதிவய்யா???(தேவர் மகன் - எந்த எந்த பாட்டய்யா மாதிரி படிச்சுக்குங்க)
// அங்கேயே பணிபுரியும் பதிவர்களுக்கு தெரியும். அவர்கள் எழுதினார் தேவலை.//

பத்துபக்கங்களுக்கு மிகாமல் இருக்கும் படிக்க ரெடின்னா சொல்லுங்க அண்ணனிடம் சொல்லிடலாம்:) செந்தழல் உங்க பதிவுக்காக வெயிட்டிங் என்று:)
//புலித்தலைவர் பிரபாகரன் மகன் சார்லஸ் அந்தோனி கடல் மார்க்கமாக தப்பியதாக செய்திகள் வெளியாகின்றன.//

உண்மையாகவே இருக்கட்டும்.யார் யாரோ வாரிசு அரசியல் நடத்தும் போது நிகழ்கால நிஜத்தில் தீர்ப்புக்கள் சரியாக அமையா விட்டால் எதிர்காலத்துக்கும் ஒரு தலைவன் உருவாவது அவசியமே.
மூன்று மாதத்திற்கு முன்னர் உண்ணாவிரதம் இருந்திருந்தால் எவ்வளவு உயிர்களை காப்பாற்றி இருக்கலாம் தலைவரே! தேர்தல் வரட்டும் என்று காத்திருந்து இருப்பார் போலும்! வாழ்க தலைவர் ! வாழ்க தலைவர் குடும்பம்! சவுதியில் இருந்து ஒரு பாமரன்.
//திமுகவை, கலைஞரை ஆதரிப்பவர்கள், மூன்று ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் கலைஞர், இப்போது முகாம்களில் இருப்பவர்களுக்கு என்ன செய்தார் என்று சொல்லுங்களேன் பார்ப்போம்...!!//

இது நச்சுன்னு ஒரு பாயின்டு. அகதிகளாய் வந்தவர்களை தவிக்கவிட்டுக் கொண்டிருப்பது கழக ஆட்சிகளுக்கு கைவந்த கலை. 80-களில் வந்தவர்களின் நிலைமை தேவலை.

ஆனால் கடந்த சில ஆண்டுகளில் வந்தவர்கள் நிலைமை மிக மோசம். நேரில் கண்டும் கேட்டும் அனுபவித்ததால் இதைச் சொல்கிறேன்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளில் வந்தவர்கள் நிலைமை மிக மோசம். நேரில் கண்டும் கேட்டும் அனுபவித்ததால் இதைச் சொல்கிறேன்.

please write that..

Popular Posts