Friday, August 29, 2008

கலைஞர் கருணாநிதியின் அடுத்த கவிதை அட்டாக் யாருக்கு ?

வரதராஜனை பிளந்தாச்சு...நெடுமாறனை அட்டாக் செய்தாச்சு என்று தமிழக முதல்வர் நாளொரு கவிதை செய்து யாரையாவது அட்டாக் செய்தவண்ணம் இருக்கிறார்...!!!

அவரது அடுத்த கவிதை யாருக்கு என்று புரியாமல் கதிகலங்கி நிற்கின்றனர் உடன்பிறப்புகள்...!!!

நாம் கொஞ்சம் விளையாடி, அவரது கவிதை யை கொஸ்டின் அவுட் ஆவது போல் வெளியிடலாமே என்று எண்ணியதன் விளைவு...

இந்த கவிதை...

ஒருவேளை அடுத்த கவிதை விஜயகாந்துக்காக இருக்கலாம் என்ற முன்முடிவுடன்...

டாஸ்மார்க்குக்கு வெளியே முழங்குகிறான்..
வெளி நாட்டுக்கொடி பறக்கும் கம்பத்தின் கீழ் நின்றபடி..
அணியொன்று தனியாக அமைத்திடுவேன்..
ஆட்டுக்கூட்டம் போதும் ஆரம்பத்தில்...

அத்தனையும் மொக்கைகளாய், சொத்தைகளாய்...
அதுவே பழரசக் கிண்ணத்தில் பளபளக்கும் முத்துக்களாய்!

அவை தவிர நம்மிடம் அடிமை ஆட்டுக்குட்டிகள் ஆயிரம் பணம் கொடுத்து வாங்கியது உண்டே...

பேரரசு நானே என்று அரிதாரம் பூசி...
பேய்வீடு காப்பேன் அதில் தாய்வீடு வைப்பேன் என்று முட்டுச்சந்தில் முழங்கி..

என் ரசிக கண்மணிகள் வீசினால் பெட்ரோல் குண்டுகூட குண்டாந்தடியல்ல..

ரேஷன் அரிசியை வீட்டிலே கொடுப்பேன், அதை பொங்கியும் தருவேன், பொங்கிய என் கண்களை காட்டி விருந்தும் தருவேன்..

குடும்பத்தினர் அரசியல் செய்தால் அதை ஒழிக்கவேண்டும்...
என்று என் மனைவி சொன்னதை அப்படியே ஒப்பித்தேன்...
ஆம் என் மனையாள் "அவாள்" அல்லவென்றாலும் அவள் என் குடுப்பத்தில் ஒருத்தியென் சொல்லிவிடாதீர்கள் யாரும்..\

மாமன், மைத்துனன் என்று என்று இராவில் ராவுத்தர்கள் எழுதும் வசனம் படிப்பேன்..

ஆவேச நடனம் ஆடி அடிக்கொரு நாயகியின் முகத்தில் ஆசை முத்தம் பதிப்பேன்..

இருந்தாலும்கூட; என் மீதிருந்து வரும் சோம பான சுரா பான வாசனைகள் சுகந்தம் என்பேன்..

தொண்டர் தள்ளினால் கை நீட்டி அடிப்பேன், தான் ஒரு நாயகன் என திரைக்கு வெளியிலும் நடிப்பேன்..

தனியொருவனாக நான் இங்கே வந்தது, அந்த நாற்க்காலிக்காகத்தான் என நம்பாதீர்கள். நம்பினால் நாசமாய் போங்கள்.

தேர்தல் வரும், அதில் பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள், ஆனால் ஓட்டை எனக்கு போடுங்கள் என்று சொல்லி, ஜனநாயகத்தை பணநாயகத்தில் போட்டுடைபேன்...

வரதட்சினை வாங்காதே நீ; ஆனால் அந்த கட்டுப்பாடு உன் தலைவனுக்கும் மைத்துனனுக்குமில்லை; நீ தொண்டன்;

குடவாசல் குடமுழுக்கு குப்பத்தில் என்றோம், புள்ளியியல் அறிஞர் போல தப்புத்தாளமாக விவரம் சொன்னோம் என்று சுட்டிக்காட்டினால்...வெட்டிக்காட்டுவோம்..

இது அரசியல் அனாதைகள் ஒண்டிக்கொள்ளும் சத்திரம், என்னிடம் ஏமாந்து பூச்சூடிக்கொள்ள நீங்கள் எம்மாத்திரம்...

எம்மாத்திரம்...எம்மாத்திரம்...

என்று முடித்துள்ளார் கலைஞர்...

இதில் அரசியல் அனாதைகள் என்று அவர் கூறியுள்ளது பன்னுருட்டி ராமச்சந்திரன் தான் என்று பெரிய விவாதம் துவங்கியுள்ளது...

நீங்களும் உங்களுக்கு தெரிந்த மேட்டர்களை சொல்லிவிட்டு, இங்கே ஓட்டு குத்திவிட்டு செல்லுங்கள்...

5 comments:

Anonymous said...

132323 டெஸ்ட் மெஸேஜ்

உண்மைத்தமிழன் said...

தம்பீ

நிஜமாகவே நீ 'முரசொலி'யில் வேலைக்குச் சேரலாம்.. முயற்சி செய்..

இல்லாவிடில் கொரியாவில் 'முரசொலி'க்கு ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பி..

பிழைத்துக் கொள்வாய்..

ரவி said...

வாங்க உண்மையாரே !!!

முதல் மேட்டர் நடவாதெனுனும், இரண்டாவது மேட்டரை செய்ய தயக்கமேது...

(கலைஞர் குரலில் படித்துக்கொள்ளவும்)(

Anonymous said...

:)))))))

ISR Selvakumar said...

//நாம் கொஞ்சம் விளையாடி, அவரது கவிதை யை கொஸ்டின் அவுட் ஆவது போல் வெளியிடலாமே என்று எண்ணியதன் விளைவு...//

இந்த வரிகளை மிகவும் இரசித்தேன். 'அவரே எழுதியது போல' என்பதை 'கொஸ்டின் அவுட் ஆவது போல்' என எழுதியிருக்கிறீர்கள். இந்த கற்பனை புதுசு.

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....