காமெடி கீமடி பண்ணலியே ?

நடக்கும் சம்பவங்களை பார்த்தால் !! வடிவேலு பாணியில்...எங்களை வைத்து காமெடி கீமடி பண்ணலியே !!! என்று சொல்லத்தோன்றுகிறது...!!!

இரண்டு லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வீடிழந்து அகதிகளாக உயிரைக்காக்க ஓடிக்கொண்டிருக்கிறார்கள்...!!! மக்கள் வசிக்கும் இடங்களில் இலங்கை அரசு குண்டுகளை வீசுகிறது...படம் : இந்தியாவில் பயிற்சி பெறும் இலங்கை இராணுவம்

இந்திய அரசு கொடுத்த ராடார்கள், இந்திய அரசின் முக்கிய அதிகாரிகள் கொண்ட உதவிக்குழு, இந்திய அரசால் பயிற்சி பெற்ற இராணுவப்படையை கொண்டு தமிழர்களை வேரறுக்க கொலைவெறியோடு கிளம்பியுள்ளது இலங்கை இராணுவம்...

தன்னுடைய சொந்த நாட்டு மக்கள் மீது முப்படைகளை ஏவி விட்டு, கொலைவெறித்தாக்குதல் நடத்திக்கொண்டுள்ளது இலங்கை அரசு. வரலாற்றில் ஹிட்லருக்கு அடுத்தபடியாக சொந்த நாட்டு மக்களை கொள்ள முப்படைகளையும் ஏவியவர் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே மட்டுமே.படம் : ராஜபக்ஸ, பிரதமர், பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர்.

இந்திய பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் திரு.M.K.நாராயணன், இலங்கை துணை தூதர் பலிதனகோடாவை அழைத்து (தூதர் மெடிக்கல் லீவ்) இலங்கையில் தமிழர்களிடம் டீசண்டாக நடந்துகொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.

இந்திய பிரதமர், இலங்கை பிரதமரை அழைத்து வலியுறுத்தினால் ஏதாவது உண்மையிலேயே உருப்புடியா நடக்குது என்று நம்பலாம்...

துணைதூதரிடம் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் என்ன பேசினார் என்று யாராவது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் வழக்கு தொடர்ந்தால் நல்லது...ட்ராபிக் ராமசாமி முகவரி கொடுங்களேன்...

அமைச்சரவையில் இடம் தேவை என்பதால் டெல்லிவரை சென்று சோனியாவை சந்திந்த கலைஞர் அவர்கள், டாக்டர் ராமதாஸ் சொல்வது போல இந்த பிரச்சினைக்கும் டெல்லி செல்லவேண்டும், சோனியாவை, பிரதமரை சந்திக்கவேண்டும்.

இன்னும் அண்ணா, காமராஜர் காலத்து தந்தி மெத்தட் படு த்ராபை ஐடியா, ஒரு வேளை தந்தி மெஷின்கள் துருப்பிடித்து வேலை செய்யாமல் போகலாம்...அல்லது தந்தி ஊழியர்கள் கோடிக்கணக்கான (??) தந்திகளை அனுப்பி ஓய்வை இழக்கலாம்..!!! மேலும்

வெறும் தந்தியை அனுப்பினால் தொலை தொடர்புத்துறைக்கு தான் லாபம், பிரதமருடைய தொலைபேசி எண்ணை வெளியிடுங்கள், நாங்கள் நேரடியாக தொலைபேசிக்கே அழைக்கிறோம்..

மயிலை மாங்கொல்லையில் கூட்டம் போட்டால் என்ன டெல்லிக்கா கேட்கப்போகிறது ? முட்டுச்சந்து முருகேசன்கள் வேறு வழியில்லாமல் போடுவது தெருமுனைக்கூட்டம், நீங்கள் ஏன் அதை செய்கிறீர்கள் ?

சட்டமன்றத்தில் தீர்மானம் போடுங்கள்..
டெல்லிக்கு ஸ்பைஸ் ஜெட் மாதிரி குறைந்த விலை விமானத்திலாவது டிக்கெட் எடுங்கள்...
இலங்கை துணை தூதர், முழு தூதர், முக்கா தூதரை அழைத்து சட்டையை பிடியுங்கள்...

ப்ளீஸ் ஏதாவது செய்யுங்கள்...ஒன்றை மட்டும் விட்டுவிடுங்கள்...அதான் எங்களை வைத்து காமெடி செய்வது ?!!!!!!!!!

Comments

ஏதேனும் செய்து தமிழீழ மக்களை காப்பாற்றவேண்டும். மிக மிக முக்கியமாக இலங்கை படையினருக்கு இந்தியாவில் பயிற்சி கொடுப்பதையும் கருவிகளை கொடுப்பதையும் உடனடியாக இந்தியா நிறுத்தவேண்டும்.
//இந்திய பிரதமர், இலங்கை பிரதமரை அழைத்து வலியுறுத்தினால் ஏதாவது உண்மையிலேயே உருப்புடியா நடக்குது என்று நம்பலாம்...
//
இங்கு ஜனாதிபதிக்குத் தான் அதிக அதிகாரங்கள் குறிப்பாக நிறைவேற்று அதிகாரம் உண்டு. பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க கூட அதிகம் இனத்துவேசம் பேசுபவர்தான்.

//வெறும் தந்தியை அனுப்பினால் தொலை தொடர்புத்துறைக்கு தான் லாபம், பிரதமருடைய தொலைபேசி எண்ணை வெளியிடுங்கள், நாங்கள் நேரடியாக தொலைபேசிக்கே அழைக்கிறோம்..
//
நிச்சயமாக நல்லதொரு கேள்வியும் அடியும்.

இலங்கைத் தமிழர்களின் பரிதாபகரமான நிலையும் கொடுமைகளும் படுமோசமாக அதிகரித்துவருகிறது. பலமுள்ள குரல்கள் பல ஓங்கியொலிக்குமானால் இவற்றைத் தவிர்க்கலாம்.

பதிவுக்கு நன்றி.
காத்திரமான பதிவு
narsim said…
ரவி.. பதிவில் செந்தழல் தெ(எ)ரிகிறது..


நர்சிம்
சரியாக சொன்னீர்கள் மஞ்சூர் ராசா...!!!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிர்ஷன்
eelavan said…
நன்றி ரவி.
வாங்க நர்சிம், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !!!
வருகைக்கு நன்றி ஈழவன்.
கோவம் கோவமா வருது...
ஹே யூ ?

யார் மேல மேன் கோவம் கோவமா வருது ?
Anonymous said…
நன்கு சொல்லியுள்ளீர்கள்.
முதல்வரின் இன்றைய அறிக்கையில்(தந்தி அடிப்புச் சால்சாப்பு எடுபடவில்லை) சற்று மாற்றம் உள்ளது.
முதல்வரை உசுப்பி விட்ட செல்வி ஜெயலலிதாவுக்கும் நன்றி!!
(பதவியில் இருந்தால் இப்படிக் கூறியிருக்கமாட்டார் என்பது வேறு)
ஆனால் அறிக்கைகள் மாத்திரம் ஈழத் தமிழனைக் காப்பாற்ற
மாட்டாது.
நல்லது நடக்கட்டும்.
நல்லது நடக்க வேண்டும்.. ந்டக்கும்..
Anonymous said…
இறக்குவானை நிர்ஷன் உள்ளிட்ட சில ஈழதமிழர்களின் முதலை கண்ணீர் கேவலமானது. உயிரை காப்பாற்றி கொள்ள வெளிநாடுகளுக்கு ஓடி லட்சகணக்கில் சம்பாதித்து நிம்மதியாக செட்டில் ஆகிவிட்டு இணையத்தில் மட்டும் ஈழதமிழர்களுக்காக வாயை கிழிக்கிறார்கள். இவர்கள் சொகுசாக வாழவேண்டுமாம். தமிழ்நாட்டு தமிழன் போராட்டம், மசுரு, மட்டுவென்று வாழ்க்கையை தொலைக்கவேண்டுமாம். இவனுங்களுக்கு நாராயணன்களே மேல்.
வாங்க CarKey. நல்லது நடக்கும் என்று நம்பி !!! நம்பி !!!

கடந்த காலங்களில் ஏமாந்தோம் :(((
Anonymous said…
///உயிரை காப்பாற்றி கொள்ள வெளிநாடுகளுக்கு ஓடி ///

நீங்களே சொல்லிட்டீங்க உயிரை காப்பாற்றிக்கொள்ள என்று. வேறு என்ன செய்ய சொல்கிறீர்கள் ?
//Anonymous said...
இறக்குவானை நிர்ஷன் உள்ளிட்ட சில ஈழதமிழர்களின் முதலை கண்ணீர் கேவலமானது. உயிரை காப்பாற்றி கொள்ள வெளிநாடுகளுக்கு ஓடி லட்சகணக்கில் சம்பாதித்து நிம்மதியாக செட்டில் ஆகிவிட்டு இணையத்தில் மட்டும் ஈழதமிழர்களுக்காக வாயை கிழிக்கிறார்கள். இவர்கள் சொகுசாக வாழவேண்டுமாம். தமிழ்நாட்டு தமிழன் போராட்டம், மசுரு, மட்டுவென்று வாழ்க்கையை தொலைக்கவேண்டுமாம். இவனுங்களுக்கு நாராயணன்களே மேல்.
//

உங்கள் பார்வையில் முதலைக்கண்ணீர் என்றால் பரவாயில்லை அனானி.
நான் வெளிநாட்டில் வசித்துக்கொண்டு எம்மவர்களைப் பற்றி எழுதவும் இல்லை.இணையத்தில் மட்டும் கிழிக்கிறோம் என்று சொல்வதற்கு எம்மைப்பற்றி முழுமையாக அறிந்திருக்கிறீர்களா?

இந்தியத் தமிழர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையிலான தொடர்பு நேற்று இன்று தொடங்கியதல்ல. காலத்தால் குறித்துச்சொல்ல முடியாத தொப்புள்கொடி உறவு.கலாசாரத் தொன்மை வாய்ந்த உறவு என்பதால் தான் சில கருத்துகளை நாம் வெளிப்படையாக எழுதுகிறோம். எம்மவர்களிம் எதையும் கதைப்பதில் உரிமை உண்டுதானே?

அதற்காக நீங்கள் தவறாக எண்ண வேண்டாம். கூரைக்கு மேல் குண்டுவிழுந்து பிஞ்சுக்குழந்தை முதல் செல்ல நாய் வரை அனைத்துமே உடல்சிதறி இறப்பதை ஒருமுறை பாருங்கள்.அனுபவியுங்கள். அதன் பின்னர் இவ்வாறு எழுதுவதற்கு உங்கள் மனம் புறப்படாது.
துப்பாக்கி முனையில் கணவர் கடத்திச்செல்லப்படும்போது காலடியில் கிடந்து அழுதுஅழுது துடிக்கும் மனைவியையும் காரணமறியாமல் விழிநிறைக்கும் கைக் குழந்தையையும் நேரடியாகப் பார்த்திருந்தால் இவ்வாறு கேட்க மாட்டீர்கள். இன்னும் எழுதலாம்.நிறையவே எழுதலாம்.

நேரடியாக இவற்றைக் காணாமலே செந்தழல் ரவி இவற்றை எழுதுகிறாரென்றால் ஏதோ ஒருவகையில் தமிழன் என்றும் அதற்கு அப்பாற்பட்ட உறவு உண்டு என்பதும் உண்மை தானே?

அனானியாக பதிலளிப்பதைத் தவிர்த்து எழுதுங்கள்.

நன்றி ரவி.
பாவம்ய்யா முதல்வர் - விட்டுடுங்க -
ஏதோ அவரால முடிஞ்சது :)

அப்புறம் தூதரை அழைத்து என்ன சொன்னார்கள் என்றால்
அடியுங்க ஆனால் வலிக்காமல் அடியுங்க என்று சொன்னார்களாம்.

நேற்றொருவர் சொன்னார். இருந்து பார்- கிளிநொச்சியை ஆமி பிடிக்க இந்தியா அனுமதிக்காது என்று. அப்படியா என்றேன். ஆம் - அதுபோல யாழ்ப்பாணத்தை புலிகள் பிடிக்கவும் இந்தியா அனுமதிக்காது என்றார் அவர்.

என்ன கொள்கையோ
theni_ganesh said…
//வெறும் தந்தியை அனுப்பினால் தொலை தொடர்புத்துறைக்கு தான் லாபம், பிரதமருடைய தொலைபேசி எண்ணை வெளியிடுங்கள், நாங்கள் நேரடியாக தொலைபேசிக்கே அழைக்கிறோம்..
//
லாஜிக் புரியலை தலைவா ...தொலைபேசியில் outgoing உங்களுக்கு இலவசமா என்ன ?
புரிந்துணர்வுக்கு நன்றி நிர்ஷன்...

ஆமாம் சயந்தன், இவங்க கொளுகை தான் யாருக்கும் புரியாது :))))

கனேஷ், தந்தி வெத்துவேட்டு மேட்டர் என்பது எல்லோருக்கும் தெரியும். அதுவும் ஒரே செய்தியை தாங்கி. அதனால் தான் தொலைபேசியை தாருங்கள் என்றேன்.
Anonymous said…
//அதற்காக நீங்கள் தவறாக எண்ண வேண்டாம். கூரைக்கு மேல் குண்டுவிழுந்து பிஞ்சுக்குழந்தை முதல் செல்ல நாய் வரை அனைத்துமே உடல்சிதறி இறப்பதை ஒருமுறை பாருங்கள்.அனுபவியுங்கள். அதன் பின்னர் இவ்வாறு எழுதுவதற்கு உங்கள் மனம் புறப்படாது.
துப்பாக்கி முனையில் கணவர் கடத்திச்செல்லப்படும்போது காலடியில் கிடந்து அழுதுஅழுது துடிக்கும் மனைவியையும் காரணமறியாமல் விழிநிறைக்கும் கைக் குழந்தையையும் நேரடியாகப் பார்த்திருந்தால் இவ்வாறு கேட்க மாட்டீர்கள். இன்னும் எழுதலாம்.நிறையவே எழுதலாம்.//

அதற்காக நீங்கள் அனுபவித்ததை எல்லாம் தமிழ்நாட்டு தமிழனும் அனுபவிக்க வேணுமா.. நல்ல எண்ணமய்யா உங்களுக்கெல்லாம்.. இந்திய வல்லாதிக்கத்தை புறக்கணித்து தமிழ்நாட்டான் ஒரு மயிறும் புடுங்க முடியாது. கொட்டையை நசுக்கி விடுவார்கள் நசுக்கி. கலிஞரு தாத்தா கொட்டை எத்தனை முறை நசுக்கப்பட்டது தெரியுமில்லையா..
/அதற்காக நீங்கள் தவறாக எண்ண வேண்டாம். கூரைக்கு மேல் குண்டுவிழுந்து பிஞ்சுக்குழந்தை முதல் செல்ல நாய் வரை அனைத்துமே உடல்சிதறி இறப்பதை ஒருமுறை பாருங்கள்.அனுபவியுங்கள். அதன் பின்னர் இவ்வாறு எழுதுவதற்கு உங்கள் மனம் புறப்படாது.
துப்பாக்கி முனையில் கணவர் கடத்திச்செல்லப்படும்போது காலடியில் கிடந்து அழுதுஅழுது துடிக்கும் மனைவியையும் காரணமறியாமல் விழிநிறைக்கும் கைக் குழந்தையையும் நேரடியாகப் பார்த்திருந்தால் இவ்வாறு கேட்க மாட்டீர்கள். இன்னும் எழுதலாம்.நிறையவே எழுதலாம்.//

அதற்காக நீங்கள் அனுபவித்ததை எல்லாம் தமிழ்நாட்டு தமிழனும் அனுபவிக்க வேணுமா.. நல்ல எண்ணமய்யா உங்களுக்கெல்லாம்.. இந்திய வல்லாதிக்கத்தை புறக்கணித்து தமிழ்நாட்டான் ஒரு மயிறும் புடுங்க முடியாது. கொட்டையை நசுக்கி விடுவார்கள் நசுக்கி. கலிஞரு தாத்தா கொட்டை எத்தனை முறை நசுக்கப்பட்டது தெரியுமில்லையா..

இப்பவும் அது தானே நடக்குது. இந்தத் தமிழங்களை வாய் மட்டும் இல்லை என்றால் பொட்டை நாய் கூட காலைத்தூக்கி ஒண்ணுக்கு அடிச்சிருக்கும். வெட்கம், மானம், சூடு சுரணை, ரோசம் எதுவுமே இல்லாத பிறப்பிக்கள். விஜயிக்கும், ரஜினிக்கும் விளக்கு பிடிக்கத்தான் சரி.
தீவு said…
கலைஞரை உசுப்பிய தங்கச்சிலை செல்வி செயலலிதா வாழ்க.

Popular Posts