தேடுங்க !

Friday, May 21, 2010

குணங்குடி ஹனீபா விடுதலை. தூங்கிய நீதி !!தமுமுக குணங்குடி ஹனீபா, குண்டுவெடிப்பு பொய் வழக்கு ஒன்றில் இருந்து விடுதலை பெற்றுள்ளார். ஒன்றா இரண்டா பதிமூன்று ஆண்டுகள். தாமதித்துத்தான் இந்த நீதி கிடைத்துள்ளது.

இப்படி பதிமூன்று ஆண்டுகள் அவர் சிறையில் வாடிய காலம் திரும்ப கிடைக்குமா ? தனது தந்தையார் இறந்த நிகழ்வுக்கு கூட இவரை பரோலில் விடாமல் செய்தது எப்பேர்ப்பட்ட அநீதி ?

சமீப காலத்தில் ஜூவி இவரை பேட்டி கண்டு வெளியிட்டபோது, தமிழக முதல்வர் கலைஞருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும் வரும் தேர்தலில் இஸ்லாமியர்களின் ஆதரவு தேவை என்பதாலும், மமக ஒரு ஒருங்கமைந்த சக்தியாக உருவெடுத்து வருவதாலும், இவர் விடுதலை செய்யப்பட்டிருக்கக்கூடும்...

முதலில் இதுபோன்ற பொய் வழக்குகளை அரசியல் காரணத்துக்காக சோடிக்கும் அதிகாரிகளை கடுமையாக தண்டிக்கவேண்டும். அப்போது தான் இப்படிப்பட்ட அநீதிகளை வரும் காலத்தில் நடாத்த அதிகார வட்டம் கொஞ்சமாவது தயங்கும்..!!

தாமதிக்கப்பட்ட நீதி என்பது அநீதியாகும். ஆகவே அதனை இழைத்தவர்கள் குற்றவாளிகள். ஆகவே அந்த அநீதியை இழைத்தவர்கள் தண்டிக்கப்பட்டே தீரவேண்டும் !!! தந்தையின் முகத்தை இறுதியாக காண விடாத இந்த பாவிகள் உப்பை தின்றவர்கள். தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்...!! அது கோவை குண்டுவெடிப்பு வழக்கானாலும் சரி. குணங்குடி ஹனீபா வழக்கானாலும் சரி !!

...

17 comments:

ரோஸ்விக் said...

//இதுபோன்ற பொய் வழக்குகளை அரசியல் காரணத்துக்காக சோடிக்கும் அதிகாரிகளை கடுமையாக தண்டிக்கவேண்டும்.//

வழிமொழிகிறேன் ரவி.

எம்.எம்.அப்துல்லா said...

// மேலும் வரும் தேர்தலில் இஸ்லாமியர்களின் ஆதரவு தேவை என்பதாலும், மமக ஒரு ஒருங்கமைந்த சக்தியாக உருவெடுத்து வருவதாலும், இவர் விடுதலை செய்யப்பட்டிருக்கக்கூடும்...


//

ரவிண்ணா,

தீர்ப்பைச் சொல்பவர் முதல்வர் அல்ல.. நீதிபதி. நீங்கள் இப்படிச் சொல்வது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் வரும்.

செந்தழல் ரவி said...

நன்றி ரோஸ்விக்

செந்தழல் ரவி said...

அப்துல்லா..

அவர் வாப்பாவின் ஜனாஸாவில் கூட பங்கெடுக்க விடாமல் தடுத்த அந்த (அ)நீதியை எத்தனை முறை வேண்டுமானாலும் அவமதிக்க தயார்...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ரத்தச் சம்பந்தமுள்ள உறவினர்கள் இறந்து போனால் சிறையில் இருப்பவர்களை சிறை அதிகாரிகளே பரோலில் போலீஸ் காவலுடன் அனுப்பி வைக்கலாம்..!

இதைச் செய்ய வேண்டியது தமிழக அரசின் உள்துறை.. செய்ய மறுத்ததும் அந்தத் துறைதான். உள்துறைக்கு யார் பொறுப்பு..?

பதின்மூன்று ஆண்டுகளை தமிழர் தலைவர் என்று தன்னைத்தானே சொல்லிக் கொள்பவரால் திருப்பித் தர முடியுமா..?

இது போன்ற நிகழ்வுகளை பார்க்கின்றபோது இவர்களை மாதிரியான மனித எதிரிகளையெல்லாம் கிஞ்சித்தும் வாழ்த்திப் பேச நா மறுக்கிறது..!

S said...

This is just a tip of the iceberg. Because a leader of the community organisation is involved, the case has been speedily cleared by the judiciary. There are thousands of ordinary (innocent)people, because of lack of worthy background or follow up, are still suffering in jails and awaiting the so called justice.

செந்தழல் ரவி said...

நல்லா சொன்னீங்க உண்மையாரே !!!

அரசு நினைத்தால் என்னவேண்டுமானாலும் நடக்கும்.

அரசு நீதித்துறையை இண்ப்ளூயன்ஸ் செய்யவில்லை என்பதை நீதித்துறையை சேர்ந்தவர்களே நம்பமாட்டார்கள்...

மனிதம் செத்த நிகழ்வு ஒன்றை மீண்டும் நினைத்துப்பார்க்க கூட மனம் வெம்புகிறது..

ஆல் இன் ஆல் அழகு ராஜா said...

இன்னும் பல அப்பாவிகள் செய்யாத குற்றத்திற்க்கு விசாரனை கைதியாய் வாழ்வை தொலைத்து கொண்டிருகின்ரனர் விடியலை தேடி.

நியோ said...

// ...இன்னும் பல அப்பாவிகள் செய்யாத குற்றத்திற்க்கு விசாரனை கைதியாய் வாழ்வை தொலைத்து கொண்டிருகின்ரனர் விடியலை தேடி... //

ரிப்பீட்டு ...

மு.அ. ஹாலித் said...

தாமதிக்கப்பட்ட நீதியால்., இந்த அப்பாவி நிரபராதி தண்டிக்கபட்டு தன் வாழ்நாளின் பாதியை சிறையில் கழித்துவிட்டார் கண்ணை கட்டிய நீதி தேவதை இவரின் இளமை வாழ்க்கையை தீண்டிவிட்டது கால தாமதிக்கப்பட்ட தீர்ப்புகளால் இளமையை இழந்து., , பெற்றோர், நன்பர்கள், உறவினர்களை பறிகொடுத்து ஆயிரக்கானக்கான இல்லை இல்லை இலட்சக்கனக்கான நிரபராதிகள் இன்னும் கோடிக்கனக்கான வழக்குகளில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், வயதானோர் வழ்க்கையை இழந்து சின்னாபின்னாக்க ப் பட்டுள்ளனர் இவர்களின் வழக்கு நடைபெற்ற காலகட்டத்தில் பல நீதிபதிகள் இறந்து இருக்கலாம்... ஆனால் நீதி ? கரை படிந்த இந்த கருப்பு சட்டங்களும் ., இவருக்கு துரோகம் விளைவித்த அரசு இயந்திரங்களும் இவர் இழந்த வாழ்க்கையும், பறிகொடுத்த சொந்தங்களையும் திருப்பி கொடுக்குமா? சட்டம் அந்த இருட்டரையிலிருந ்து எப்பொழுது வெளிச்சத்திற்க் கு வரும் Justice delayed is justice தேனித் மு.அ. ஹாலித் சிட்னி www.alaippoo.blogspot.com

raja said...

கரை படிந்த இந்த கருப்பு சட்டங்களும் ., இவருக்கு துரோகம் விளைவித்த அரசு இயந்திரங்களும் இவர் இழந்த வாழ்க்கையும், பறிகொடுத்த சொந்தங்களையும் திருப்பி கொடுக்குமா?

ராஜ நடராஜன் said...

//முதலில் இதுபோன்ற பொய் வழக்குகளை அரசியல் காரணத்துக்காக சோடிக்கும் அதிகாரிகளை கடுமையாக தண்டிக்கவேண்டும். அப்போது தான் இப்படிப்பட்ட அநீதிகளை வரும் காலத்தில் நடாத்த அதிகார வட்டம் கொஞ்சமாவது தயங்கும்..!!//

கனவு?

வஜ்ரா said...

வினவு தளத்தில் கோக் பெப்சி பற்றி என் பெயரில் வந்துள்ள பின்னூட்டம் என்னுடையது அல்ல. இதை உங்கள் மறுமொழியில் என் பெயரை நீங்கள் பயன்படுத்தியதால் என்னால் அறிந்துகொள்ளமுடிந்தது.

வினவு போன்ற தளங்களில் பின்னுட்டம் போடுவது கூடக் கேவலமான செயல் என்று கருதி தள்ளிப் போகிறவன் நான். அதை நான் ஏற்கனவே அங்கே சோல்லியும் உள்ளேன்.

செந்தழல் ரவி said...

தகவலுக்கு நன்றி.

UFO said...

உண்மையை உலகறிய சொன்னதற்கு நன்றி, திரு.செந்தழல் ரவி.

இவ்வளவு காலம் தாமதித்து குற்றவாளி இல்லை என்று விடுதலை செய்துவிட்டார்கள். தூங்கிய நீதி என்கிறீர்கள்...
ஆனால், இப்போது அடுத்து பல கேள்வி பிறக்கிறது.
சரி....இது இத்துடன் முடிந்துவிட்டதா?
"இரயில் குண்டு கேஸ் அப்படியே கிடக்கே?"
"உண்மையான குற்றவாளி யார்?"
"அவரை எப்போது பிடிப்பீர்கள்?"
"இவ்வளவு காலம் தாழ்த்தியது அக்குற்றவாளியை தப்புவிக்கவா?"
"அப்போ காவல் துறையும் தூங்குகிறதா?"

ILA(@)இளா said...

அப்ப நளினி கேஸ் என்னாகும்?

கிருஷ்ணமூர்த்தி said...

இங்கே ப்ரிடிஷ்காரர்களிடமிருந்து சுவீகரித்துக்கொண்ட நீதித்துறை இந்தியாவின் மிக விசித்திரமான வலை! திமிங்கிலங்கள் தப்பித்துவிடும்! சிறிய மீன்கள் மட்டுமே மாட்டிக் கொள்ளும்!


தாமதமாகவே இருந்தாலும்கூட நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்ட அத்தனை பேரும், நியாயங்களின் அடிப்படையில் விடுவிக்கப் பட்டவர்கள் என்று பொதுமைப் படுத்துகிற மாதிரி இருக்கிறது திரு ரவி!

ஆல் இன் ஆல் அழகு ராஜா ஒருவர் தான் கொஞ்சம் நிதானமாக, யதார்த்த நிலையைப் புரிந்து கொண்டு கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.