Wednesday, March 18, 2009
டிவி சீரியல் அசிங்கங்கள்
பொதுவாக பாலிவுட் திரைப்படங்களில் உறவுச்சிக்கல்கள் ஆபாசமாக அமைந்திருக்கும். அடுத்தவன் மனைவியை லவ் பண்ணுவது (??), ஆனால் அவளோ புருசனை விடுத்து இன்னோருத்தனை லவ்வுவது, அவள் புருசனோ அவளை விட்டுவிட்டு இன்னொருத்தி பின்னால் போவது என, சமுதாயத்தில் மிக குறைவாக இருக்கும் செய்திகளை மிக மலிந்திருப்பது போல் காட்டி பணம் செய்வார்கள் பாலிவுட்டார்...
தென்னிந்திய அல்லது தமிழ் திரைப்படங்களில் இந்த ஆபாச விஷயங்கள் சற்று குறைவு தான் என்று சொல்லலாம். தென்னிந்தியர்கள் பொதுவாக குடும்ப உறவுமுறைக்கு மதிப்பு தருவதுடன், கலாச்சார வேலியில் ஓனான் ஏறிவிடாமல் கல் எறிபவர்கள். அதனால் தான் பாலசந்தர் பாலுமகேந்திராவின் சில முயற்சிகள் கூட தோற்றன..
ஆனால் இப்போது அந்த ஆபாச ரசாபாசங்களை டி.வி சீரியல்கள் அரங்கேற்றிவருவது, குடும்ப உறவுகளை சிதைக்க போதுமானதாக இருக்கிறது. என்னதான் சீரியலின் முடிவில் எல்லாம் சுபமாக காட்டினாலும், கொண்டு செல்லும் விதத்தில் பல அசிங்கங்களை அரங்கேற்றுகிறது டிவி சீரியல்கள்.
அழுகாச்சிகளையே எவ்வளவு நாள் காட்டுவது என்று இந்த ஆபாச அவதாரம் எடுத்துவிட்டார்கள் போலிருக்கிறது திருக்குமரன்கள். எத்தனை எத்தனை சீரியலடா அதில் எத்தனை எத்தனை ஆபாசமடா என்று நினைக்கையில், மகளிரும் சில சமயம் வலுக்கட்டாயமாக குழந்தைகளும் பார்க்கும் டி.வி சீரியல்களின் கதைக்கும் கருப்பொருளுக்கும் கட்டாய சென்சார் தேவை என்று தோன்றுகிறது...
வசந்தம் என்று ஒரு சீரியல்.
துளசி கல்யாணமான பெண். கணவன் ஆட்டோக்காரன். அதனால் வேலைபார்க்கும் அலுவலகத்தில் தன்னுடைய முதலாளியை காதலிக்கிறாள். முதலாளியோ இவளை எப்போது கொடைக்கானலுக்கு தள்ளிக்கொண்டு போகலாம் என்ற எண்ணத்தில் திரிகிறான்...
அத்திப்பூக்கள் என்று ஒரு சீரியல்.
மேகலா ஏற்கனவே விஸ்வத்தை காதலிக்கிறாள். ஆனால் மேகலா வேலை பார்க்கும் அலுவலக முதலாளி அவளை காதலிக்கிறான்.
வேறு சில கந்தாயங்கள்
ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ள ஒருவன், இன்னோருத்தியை காதலித்து திருட்டு கல்யாணம் செய்ய முயல்கிறான்.
ஏற்கனவே கல்யாணம் ஆகி டைவர்சும் ஆனவனின் ரெண்டாவது பொண்டாட்டியை பர்ஸ்ட் நைட் கொண்டாட விடாமல் தடுக்கிறாள் முதல் மனைவி.
ரெண்டு பொண்டாட்டிக்காரன் ஒருவன், ரெண்டாவது பொண்டாட்டியின் குறைகளை கண்டறிந்து அவளுக்கு பாடம் புகட்ட அவள் வீட்டுக்கு சொத்துக்களை உதறி குடியேறுகிறான். அவளுக்கு ஏற்கனவே நான்கு காதலர்கள் மட்டும்.
காதலிப்பவன் ஒருவன், தன்னுடைய காதலியின் தந்தை அவமானப்பட வேண்டும் என்பதற்காக பத்திரிக்கை அடித்து கல்யாண மேடைக்கு மணமகள் போகும் வரை காத்திருந்து, அப்புறமாக தள்ளிக்கொண்டு ஓடுகிறான்.
எங்கே பிராமணன் என்று சாதி பெயரை வைத்து ஒரு சீரியல். அதை தயாரிப்பது மண்டையில் முடி இல்லாத ஒரு தயாரிப்பாளர்.
மகள், மேகலா, அத்திப்பூக்கள், கோலங்கள், வசந்தம், அரசி, செல்வி என ஆபாசம், அசிங்கம் இல்லாத சீரியலை காதில் கூட கேள்விப்பட்டிருக்கமாட்டீர்...
டேய் டேய் டேய் என்று ஒவ்வொரு சீரியலிலும் ஒவ்வொரு ஆபாசங்கள், சமூக தளத்தில் ஒவ்வாத விஷயங்கள்.
பரபரப்பு வேண்டும் என்பதற்காக நியாயம் இல்லாத செயல்கள், அதனை நியாயப்படுத்தும் வசனங்கள்.
இது போன்ற சீரியல்களை வைத்த கண் வாங்காமல், கணவனுக்கு உணவளிக்கக்கூட நேரமில்லாமல், குழந்தைகளை பராமரிக்கக்கூட சரியான நேரத்தை ஒதுக்காமல் பார்க்கும் சமுதாயம், உருப்படுமா ?
தொலைக்காட்சி இன்றைக்கு வீட்டில் நுழைந்து, வரவேற்பறையில் அமர்ந்துவிட்ட ஒரு விஷயம்.
அதில் பொறுப்பான விஷயங்களை காட்டவேண்டும், நல்ல விஷயங்கள் மக்களை சென்று சேரவேண்டும் என்ற பொறுப்பு கொஞ்சமாவது இருக்கவேண்டும்..
<<<<< பி.கு : இந்த சீரியல்களை எல்லாம் நீ ஏன் பார்க்கிறாய் ? என்ற கேள்வியை கேட்காமல் ஓட்டு மட்டும் போட்டுவிட்டு போகவும் அக்காங் >>>>
வாக்களிக்க
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
'கள்' உண்ணாமை வேண்டும் அப்படின்னு காந்தி சொன்னதா கேள்வி..ஆனா அவர் கிட்ட கள் பத்தி யாரோ கதை விட்டு இருக்கனும்...கள் ரொம்ம போதை..உடம்ப...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...
45 comments:
// பி.கு : இந்த சீரியல்களை எல்லாம் நீ ஏன் பார்க்கிறாய் ? என்ற கேள்வியை கேட்காமல் ஓட்டு மட்டும் போட்டுவிட்டு போகவும் அக்காங்//
அப்படியே செய்யுறேன்
இந்த சீரியல்களை எல்லாம் நீ ஏன் பார்க்கிறாய் ?
ஆனா நான் வோட்டு போட்டுட்டேன்.
இந்த சீரியல்களை எல்லாம் நீ ஏன் பார்க்கிறாய் ?
சித்தி,கையளவு மனசு...அதன் பின் கையெடுத்துக் கும்பிடு போட்டுவிட்டேன்.
//தென்னிந்தியர்கள் பொதுவாக குடும்ப உறவுமுறைக்கு மதிப்பு தருவதுடன், கலாச்சார வேலியில் ஓனான் ஏறிவிடாமல் கல் எறிபவர்கள். //
ஹைய்யோ ஹைய்யோ!
அப்புறம் ஏன் தென்னிந்தியாவின் அரசியல்வியாதிகள் மட்டும் குறைந்தபட்சம் மூன்று மனைவிகளோடு வாழ்கிறார்கள்?
சரவண பவன் அண்ணாச்சி என்ன வடக்கிலிருந்து வந்தவரா?
இன்னும் பல உதாரணங்களை சொல்ல முடியும்!
//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
சித்தி, கையளவு மனசு அதன் பின் கையெடுத்துக் கும்பிடு போட்டுவிட்டேன்.//
யோகன் கையளவு மனசு பார்த்தீங்களா..! எனக்கு ரொம்பப் புடிச்ச சீரியல்..!
எல்லாம் அதோட போயிருச்சு யோகன்..!
தம்பீ..
நானும் ஓட்டுப் போட்டுட்டேன்..
ஆமா இந்த சீரியல்களையெல்லாம் பார்க்குறதுக்கு உனக்கு எங்க நேரம் கிடைக்குது..? பார்க்க முடியுது..!
இந்த சீரியல்லாம் வீட்ல வேலை வெட்டியில்லாம இருக்குற பெண்களுக்கானது.. உனக்கில்ல..!
ஜோ
நீங்கள் கலைஞரை சொல்வீர்களாயின் அவர்கள் எல்லாம் பழைய ஆட்கள். அந்த காலத்தில் அது தவறு ஆக இல்லாமல் இருந்தது.
இப்போது அப்படி கிடையாது. ரெண்டு பொண்டாட்டிக்காரரை எல்லாம் நீங்கள் சென்னையில் பார்ப்பது அரிது.
உண்மை அண்ணே.
நான் உடம்புக்கு முடியாம இரண்டு வாரம் விடுப்பில் இருப்பது தெரியும் தானே ?
///இந்த சீரியல்லாம் வீட்ல வேலை வெட்டியில்லாம இருக்குற பெண்களுக்கானது.. உனக்கில்ல..!///
பெண்ணீயத்தனமான ஸ்டேட்மெண்ட்.
திருமண வாழ்க்கையில் இணையாதவர் என்பதால் உம்மை கும்மாமல் விடுகிறேன்.
காலையில் எழுந்ததில் இருந்து இரவு படுக்கும் வரை குடும்ப பெண்களுக்கு எவ்வளவு வேலை தெரியுமா ?
யோகன் அண்ணே...
சித்தீ பார்த்தீங்களா ? குட். தமிழகத்திலும் மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்திய சீரியல்...
//எங்கே பிராமணன் என்று சாதி பெயரை வைத்து ஒரு சீரியல். அதை தயாரிப்பது மண்டையில் முடி இல்லாத ஒரு தயாரிப்பாளர்.//
மண்டையில் மூளையில்லாத தயாரிப்பாளர் என்பதே சரியாக இருக்கும்.
சிரியல் பாக்க நேரம் இருக்கு!
ஆனா..............
வாங்க வச்சிகிறேன்.
வாழ்க்கை என்றோரு தொடர் தூர்தர்ஷனில் வந்தது.அதுவும் கூட நல்ல தொடர்தான்.கையளவு மனசு எனக்கும் மிகவும் பிடித்த தொடர்.
நீங்க சொல்லி இருக்கிறதெல்லாம் சரிதான்! ஆனால் நீங்களே இத்தனை சீரியல்களைப் பார்க்கிறீர்களா? என்னைப் பொறுத்தவரை ஒன்றுக்கும் உதவாத இந்த ஒரு சீரியலையும் பார்ப்பதே இல்லை!
இந்த சீரியல்கள் ஒரு கொடுமை. அதைவிட குழந்தைகளும்..
போட்டிகள் என்ற பெயரில் ஆபாச நடனங்களையும் அருவருக்கதக்க நிகழ்வுகளையும் நடு ஹாலில் உட்கார்ந்து மணிகணக்கில் பார்ப்பது என்பது கொடுமையிலும் கொடுமை.
மற்றும் கதை புத்தகங்களை படிக்கும் ஆர்வம் மிகுதியாக இல்லாத இந்தியாவில் குழந்தைகளுக்கு என்று திரைப்படமே இல்லை என்பது மிகுந்த வேதனையான விஷயம். அதனால் தான் குழந்தைகளுக்கு மன அழுத்தமும் வீணான சிந்தனக்களும் வருகிறது என்பது உளவியலாளர்கள் கருத்து.
நான் சிறு வயதில் படித்து என்னை மெருகேற்றிய அம்புலிமாமா , பாலமித்ரா, தெனாலி ராமன் கதைகள், முத்து, ராணி மற்றும் லயன் காமிக்ஸ்” போன்ற புத்தகங்கள் இந்த தலைமுறைக்கு அன்னியமாக வே இருக்கிறது.
டிவி பார்பதை அவவளவு சீக்கிரம் நிறுத்த இயலூமா..???
தோன்றவில்லை. குறைக்கலாம்.
படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த முயற்ச்சி எடுக்கலாம்
இது போன்ற சீரியல்களை வைத்த கண் வாங்காமல், கணவனுக்கு உணவளிக்கக்கூட நேரமில்லாமல், குழந்தைகளை பராமரிக்கக்கூட சரியான நேரத்தை ஒதுக்காமல் பார்க்கும் சமுதாயம், உருப்படுமா ?
உணமையிலே நடக்குதுங்க.
ஆமா... ஆமா.... சும்மா சும்மா படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இல்லைன்னு சொல்லுறது.... ஹாலிவுட் ரேஞ்சுக்கு சீரியல் எடுத்தா? இப்படி ஒரு பதிவா?
:)
///உணமையிலே நடக்குதுங்க.//
பாதிக்கப்பட்ட அப்பாவி ஆறுமுகம். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//ஆமா... ஆமா.... சும்மா சும்மா படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இல்லைன்னு சொல்லுறது.... ஹாலிவுட் ரேஞ்சுக்கு சீரியல் எடுத்தா? இப்படி ஒரு பதிவா?//
ஆஹா னைநா, இன்னா இது...
///நான் சிறு வயதில் படித்து என்னை மெருகேற்றிய அம்புலிமாமா , பாலமித்ரா, தெனாலி ராமன் கதைகள், முத்து, ராணி மற்றும் லயன் காமிக்ஸ்” போன்ற புத்தகங்கள் இந்த தலைமுறைக்கு அன்னியமாக வே இருக்கிறது.///
டி.வி அந்த இடத்தை பிடித்துவிட்டது என்பது தான் உண்மை.
கண்டிப்பாக குறைக்கவேண்டும். ஆனால் அதில் உள்ள நல்ல விஷயங்களை எடுக்கவேண்டும். அல்லாததை ஒதுக்கவேண்டும்..
///நீங்க சொல்லி இருக்கிறதெல்லாம் சரிதான்! ஆனால் நீங்களே இத்தனை சீரியல்களைப் பார்க்கிறீர்களா? என்னைப் பொறுத்தவரை ஒன்றுக்கும் உதவாத இந்த ஒரு சீரியலையும் பார்ப்பதே இல்லை! //
மோகன், ஆராய்ச்சி செய்யனும்னா பார்த்து தானே ஆகவேண்டும்...
//மண்டையில் மூளையில்லாத தயாரிப்பாளர் என்பதே சரியாக இருக்கும்.///
உங்க குரு கோவிக்கப்போறாரு வால்...
சாதியை வளர்த்து மக்களிடையே விரோத போக்கை வளர்க்கும் யாவரும் மூளையில்லாதவர்கள் தான் எனக்கு!
தல(ழ)..
நெஞ்சார்ந்த நன்றினு அவ்வளவு பெரிய வார்த்தைய நம்ம கடைல சொன்னதுக்கு நெஞ்சார்ந்த நன்றி..
ஒரு படத்துல விவேக் சொல்லுவறே.. கதையோட“ நாட்”ட அங்க கொண்டுபோயாட வைக்கிறீங்க???னு.. நினைச்சேன் சிரிச்சேன்..
தொடருங்க தல.. தொடர்வேன்
நான் உடம்புக்கு முடியாம இரண்டு வாரம் விடுப்பில் இருப்பது தெரியும் தானே ?
: ))) athuthan intha kelai veriyaa??
னோஓஓஓஓஓஓஓஓஓ
ஆமாண்ணே பிரஷரை கூட்டுற வேலையண்ணே சீரியல் பாக்கறது...
அது சரி கட்டாயமா ஓட்டுப்போடணுமா? இந்த சீரியல் எடுக்கிறவங்களை பொடா, தடா மாதிரி ஏதாச்சும் ஒரு சட்டத்துல உள்ள போட முடியாதா...?
இந்த சீரியல்களை எல்லாம் நீ ஏன் பார்க்கிறாய் ?
சீரியல் எல்லாம் பார்க்கிறீங்களா?பொறுமைதான்.
இதை போன்ற சீரியல்-களையும் மற்ற ஆட்டம் போடும் நிகழ்ச்சிகளையும் பற்றி ஆண்களாகிய நாம்தான் ஆட்சேபம் தெரிவிக்கிறோமே தவிர ,பெண்கள் பக்கமிருந்து அவ்வளவாக ஆட்சேபம் வருகிற மாதிரி தெரியவில்லை
வாங்க தமிழன் கருப்பி...
என்ன பெயர் அது ? பெயர் காரணம் தரமுடியுமா ?
//சீரியல் எல்லாம் பார்க்கிறீங்களா?பொறுமைதான்.//
வேற வழியில்லை என்பதை சொல்ல வேறு வார்த்தை உண்டா அண்ணே ?
:-)))
>> மேகலா ஏற்கனவே விஸ்வத்தை >> காதலிக்கிறாள். ஆனால் மேகலா >> வேலை பார்க்கும் அலுவலக >> >> முதலாளி அவளை காதலிக்கிறான்.
ithula enna aabasam? triangle love solla koodatha? yaar veetla yavathu secret camera maati edit panni 1000 episode podalam...production selavu micham.
TV Serial mattum illa, cinema, somerealityshows like Ippadikku Rose, Maanada Korangada etc, magazines, newspapers, advertisements, -
first yaaru niruthurathu? so we got to face it.
அத்திப்பூக்கள் தொடரில் நீங்கள் குறிப்பிடும் கதாபாத்திரம் எதுவும் கிடையாது. வாடகைதாயின் உணர்வினை சொல்லும் அற்புதகாவியம்
அன்புடன்
அரவிந்தன்
கற்பகத்தை காதலிச்சுட்டு, நிசா புருசன் வெங்கட் கல்யாணம் பண்ணியது யார ? கற்பகத்தோட அண்ணன் பொண்டாட்டி பேசும் வசனங்களை பாருங்களேன்...
வேற ஏதாவது ஒரு கந்தாய நாடகத்தில் இருந்திருக்கும், தகவல் பிழை வந்திருக்க வாய்ப்புண்டு.
/கற்பகத்தை காதலிச்சுட்டு, நிசா புருசன் வெங்கட் கல்யாணம் பண்ணியது யார/
கற்பகம் வாடகை தாயாக மாறியதால் வெங்கட்டை விட்டு விலகிப்போனாதால் வெங்கட் வேறு திருமணம் செய்துகொண்டார்.
நாளைக்கு ஒரு ஷோ இருக்கு இதுதான்யா டான்ஸ் ஷோன்னு கலா மாஸ்டர் சொல்லிருக்காங்க..
:)
கையளவு மனசு இலங்கையில் வீடியோ காசெட்டா கூட ஓடியது அப்படித்தானே யோகன்?
கீதாவை பல பேரு ரொம்ம்ம்ம்ப.....
விரும்பினாங்க....! :)
//நான் சிறு வயதில் படித்து என்னை மெருகேற்றிய அம்புலிமாமா , பாலமித்ரா, தெனாலி ராமன் கதைகள், முத்து, ராணி மற்றும் லயன் காமிக்ஸ்” போன்ற புத்தகங்கள் இந்த தலைமுறைக்கு அன்னியமாக வே இருக்கிறது//
மிகவும் சரியான விடயம் இது.
Post a Comment