சோதிடம் : உண்மையா - பொய்யா ?

பொதுவாக என்னுடைய பார்வையில் சோதிடம், ஜாதகம் ஆகியவை மூட நம்பிக்கைகளில் ஒன்றாக தெரிவதால், இதில் எந்தவித இண்ட்ரஸ்டும் காட்டுவதில்லை...சமயம் கிடைக்கும்போதெல்லாம் ஜோதிடம் பார்ப்பவர்களையும் ( லாங் நாமம் மிஸ்டர். கோழியூர் கோயிந்தன், காழியூர் நாராயணன், சிவல்புரி சிங்காரம்) அதை நம்புபவர்களையும் நக்கல் விட்டு வந்திருக்கிறேன்...

பால்வெளி மண்டலத்தில் சிறு துகளான பூமியைப்போல் ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான கிரகங்களின் இருப்பை கண்டறிந்துள்ள விஞ்ஞானத்தின் முன்னால், கண்ணுக்கு தெரிந்த வெறும் ஒன்பது கிரகங்களின் நகர்வை மையமாக வைத்து பிழைப்பு நடத்தி கஞ்சி குடிக்கும் அவர்கள் மீது எனக்கு கோபத்தினை விட பரிதாபமே மேலோங்கும்...

கையில் ஒரு கிளிக்கூண்டை வைத்துக்கொண்டு, அய்ந்து ரூபாய்க்காக மொட்டை வெயிலில் நாயாக அலையும் கிளி ஜோசியக்காரனும், அவன் கொடுக்கும் அரை நெல்லுக்காக அவன் பழக்கியபடி சீட்டை எடுத்துப்போடும் சிறகில்லாத கிளியும் என்னுடைய பரிதாப லிஸ்ட் ஜீவன்களே...

அதேபோல் வெற்றிலைப்பாக்குக்கும், ரேஷன் அரிசிக்கும் காசு தேற்ற பீச்சில் உட்கார்ந்திருக்கும் குறிசொல்லும் லேடீஸ், அதிகாலையில் சேவல் விழிக்குமுன் பழந்துணிக்கும், கால்படி அரிசிக்கும் வாசலில் வந்து நம் தூக்கத்தை கலைக்கும் குடுகுடுப்பைக்காரனும் பெரிய மல்ட்டிநேஷனல் பிஸினஸ் ஒன்றும் நடத்தவில்லைதான்...

சமீபத்தில் கையில் கிடைத்த சோதிட புத்தகங்கள் சிலவற்றை பார்த்தபோது, அவை உண்மையா பொய்யா என்பதை விட, அந்த பொய்களில் சில உண்மைகள் இருப்பதை சற்றே உணர்ந்தேன்...

சோதிடத்தை நம்பும் மக்களின் மனதில் (நம்பாதவர்கள் படிக்கவே போறதில்லை) தன்னம்பிக்கையையும், அற்ப நிம்மதியையும் ஏற்படுத்தவும், பிரச்சினைகளில் மூழ்கி இருப்பவர்களின் நெஞ்சத்தில் நம்பிக்கை கீற்றை விதைக்கவும் கண்டிப்பாக இது பயன்படும் என்றே தோன்றுகிறது...

உதாரணத்துக்கு சில ராசிக்காரர்களின் பலன்கள் பாருங்கள்:

மேஷம் : தன்னம்பிக்கையும் சுயகவுரவமும் உடைய நீங்கள் உறவினர்கள் வரவால் நிம்மதி அடைவீர்கள்..பணக்கஷ்டம் தீர வழி பிறக்கும்...வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் வழி உருவாகும்...

கடகம் : பொறுமைசாலியான நீங்கள் தைரியமாக உங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள்...அரசு வேலை பார்ப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும்...வீடு, நிலம் வாங்கும் வாய்ப்பு உருவாகும்..குழந்தைப்பேறு ஏற்படும்...

இவ்வாறு - நம்பிக்கையை விதைக்கும்படி போட்டிருக்கிறார்கள்...

இந்த சோதிடத்தை நம்பி சிலபேர் ஏமாளிகளானாலும், மக்களின் மூட நம்பிக்கையை பயன்படுத்தில் சில குடும்பங்கள் சாப்பிடுகின்றன என்றே வைத்துக்கொள்ளலாம்.....சோதிட தொழில் செய்து சொற்ப வருமானம் பெறும் சோதிடர்கள் தான் அதிகம் தமிழகத்தில்...சோதிட தொழில் நடத்தி முதலமைச்சர் பதவியை யாரும் பிடித்துவிடப்போவதில்லை...அதனால் பாவம் பொழைச்சு போறாங்க என்று தான் தோன்றுகிறது எனக்கு...!!! உங்களுக்கு ??

Comments

Anonymous said…
எதையுமே ஆராய்ந்து அறியும் தகுதி இல்லாமல் எதையுமே இகழ்ந்து எழுதுதல் நல்ல பண்பாக எனக்குப் படவில்லை. திம்மித்தனம் மிக்கவர்களுடன் பழகிய தோஷமா ரவி? உங்களால் முடிந்தால் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளமுயற்சி செய்யுங்கள். 'judgemental view' உடனெயே எல்லாவற்றையும் பார்த்து பார்த்துதான் நாம் எதையுமே புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறோம். நீங்கள் இருக்கும் தொழிலைப் பற்றி நீங்கள் எழுதுங்கள் - அதற்கு மதிப்பு இருக்கும். இல்லையென்றால் கருணாநிதி ராமனைப் பற்றிப் பேசுவதும் உங்கள் இந்தப் பதிவும் ஒன்றுதான். அரைகுடங்கள்
//சோதிட தொழில் நடத்தி முதலமைச்சர் பதவியை யாரும் பிடித்துவிடப்போவதில்லை//

ஆனால் ரவி ;சிலர் முதலமைச்சரையே பிடித்துக் கொண்டு ;அவர்கள் பதவிக்காலத்தில் கோடீஸ்வரராகி உள்ளார்கள்.
எனினும் இந்த சிறு சோதிட மன்னர்களிடம் நான் செல்வதில்லை. பெருஞ்சோதிடர்களிடம் செல்ல விற்றுக் கொடுக்கச் சொத்தில்லை.
pulliraja said…
" காதல் கல்யாணம்" பண்ணுவாய் என எனக்கும்தான் ஒரு பாவி சொன்னான். என்ன ஆச்சு?
ஒரு மாதிரி ஊர்ல இருக்கிறவங்க ஒன்டை இழுத்து வந்து கட்டிப் போட்டாங்க. அதுக்கு காதலே வரமாட்டுதாம். பொழைப்பு நாறுது.

புள்ளிராஜா
மக்களின் அறியாமையில் பணம் பன்னுகிறார்கள்..

கிளிஜோசியம், பீச் ஓரம் கைரேகை , குடுகுடுப்பை காரன் ஓகே. 5 , 10 வாங்குகிறார்கள், வயிற்று பிழைப்புக்கு...


ஏ சி அறையில், தொலைகாட்சியில் விளம்பரம் செய்து திட்டம் போட்டு கொள்ளை அடிக்குதே ஒரு கூட்டம்.. காழியூர், கோழியூர், ஜயஸ்வரூபா , ஒயிட் அன்ட் ஒயிட் நீலகண்டன் போன்றவர்களை பார்த்தால் தான் வெறுப்பாக இருக்கிறது..
அப்படியெல்லாம் விட்டுவிட முடியாது ஐயா!

இந்த சோதிடன் சில கட்டங்களை போட்டு எத்தனை இளைஞ, இளைஞி-களின் வாழ்கையில், லெப்ட், ரைட், யூ-டர்ன் எல்லாம் போட்டு விளையாடியிருப்பார்கள் தெரியுமா?

சரி அதையேன் இந்த இளைஞர்கள் நம்பவேண்டும் என்று நீங்கள் கேட்கலாம், என்ன செய்ய அதை நம்பக்கூடிய பெற்றோரின் வயிற்றில் பிறந்துவிட்டோமே!

அதைவிட கொடுமை பெற்றோருக்கு தொல்லையில்லாமல் 18 வயதில் ஒரு வேளையை பார்த்துக்கொண்டு தமக்கென ஒரு வாழ்கையை அமைத்துக்கொள்ளும் சுதந்திரம் இன்னும் நமது சமுதாயத்திற்கு வரவில்லை :-(
கலை said…
ஏறக்குறைய இதேதான் இங்கயும் இருக்கு. பாருங்க. :)
Anonymous said…
//சமீபத்தில் கையில் கிடைத்த சோதிட புத்தகங்கள் சிலவற்றை பார்த்தபோது//

நீங்கள் படித்தது சோதிட பலன் சொல்லும் புத்தகங்களா அல்லது சோதிடக் கலையைப் பற்றிய புத்தகங்களா என்று தெரியவில்லை. பின்னதாக இருந்தால் நேரமிருந்தால் இன்னும் சற்று ஆழமாகப் படித்துப் பாருங்கள். உங்களுக்கு இன்னும் சில விஷயங்கள் ஆச்சர்யமாகப் புரிபடும்.

அனுபவத்திலிருந்து சொல்கிறேன்.
தப்பில்லை. நாலு பேருக்கு நல்லது நடக்குதுன்னா எதுவுமே தப்பு இல்லை.

:))
Anonymous said…
sir, please read www.classroom2007
true online jothita kalvi.free and frank discussions.then comment upon jothidam which was never thrown open to common men like now.