தோழி அல்லது தோழருக்கு !!

ஆனந்த விகடனில் வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்தும் இன்பாக்ஸ் பகுதி இருக்கிறது. பல வலைத்தளங்களை வெளியிட்டுவருகிறார்கள்.அந்த வகையில் கடந்த 24 ஆம் தேதியிட்ட மார்ச் மாத இதழில் தோழி என்பவரின் வலைத்தளத்தை அறிமுகம் செய்தார்கள்.

சித்தர்கள் பற்றிய வலைப்பூ அது. http://siththarkal.blogspot.com

அந்த வலைப்பூவில் வரும் உடான்ஸுகளை தாங்க முடியாமல் பார்த்துக்கொண்டிருந்தேன்...!! வீர ரசம் காந்த ரசம் என்று காதில் பூ சுற்றும் சமாச்சாரங்களாக இருக்கிறது.

சித்தர்கள் என்பவர்கள் மருத்துவ முறைகள், வாழ்வியல் முறைகள் ஆகியவற்றை அனுபவத்தால் கற்று தேர்ந்து, அதனை வைத்து பல வாழ்வை ஒளியேற்றியது உண்மைதான். அவர்களை நான் மதிக்கிறேன், வணங்குகிறேன்...ஆனால் அந்த காலத்திய வாழ்க்கை முறைக்கும் சமூக நிலைக்கும் மட்டுமே அவை பொருத்தமானவையாக இருந்தன.

ஆனால் இப்போது சைக்யாட்ரிஸ்டும் ஆங்கில மருத்துவமும் தான் பொருத்தமான ஒன்று. காரணம் நமது வாழ்வியல் முறையும், சமூக அமைப்பும் மாறிவிட்டது. நாம் உண்ணும் உணவில் இருந்து, பேசும் பேச்சில் இருந்து, பயன்படுத்தும் பொருட்களில் இருந்து, அனைத்தும் மாறிவிட்டது.

ஆகவே பழைய மருத்துவம் ஒருவேளை ஒருசில நோய்களில் பயன்படலாம். அதே அனைத்துக்குமான சர்வலோக நிவாரணி அல்ல. மேலும் நவீன மருத்துவத்தின் வசதிகளும் வாய்ப்புகளும் பழைய முறைகளில் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

நான் பொங்குவதன் காரணம் அது அல்ல. அதில் மூட நம்பிக்கைகளின் உச்சமாக ரசவாதம் , இரும்பை தங்கமாக மாற்றுதல் ஆகியவற்றை பற்றி உடான்ஸ் விடப்படுகிறது..

தங்கம் உருவாக பல லட்சம் டிகிரி வெப்பம் தேவை. நட்சத்திரங்களின் நடுவே நியூக்ளியர் ப்யூஷன் ஏற்பட்டு பெருவெடிப்பு ஏற்படும்போது அங்கே உருவாகும் தனிமங்களில் தங்கமும் ப்ளாட்டினமும் சிதறுகின்றன என்று நான் மிகவும் மதிக்கும் இப்போதைய வாழும் அறிவியலாளர்களில் முதன்மையான காஸ்மாலஜிஸ்ட் ஸ்டிபன் ஹாக்கிங் சொல்கிறார்.

இங்கே சட்டியில் தங்கம் உருவாக்கலாம் என்கிறார்கள். இது போன்ற பாடல்களை உண்மையில் போகர்தான் எழுதினாரா ? இல்லை வேறு யாராவது எழுதினார்களா ? இந்த மருத்துவ முறையால் எயிட்சுக்கும் சர்க்கரை நோய்க்கும் மருந்து கொடுக்கமுடியவில்லையே ? என்று பல கேள்விகள் எழுகின்றன.

எதுவும் தவறாக சொல்லியிருந்தால் மன்னிக்க தோழி அல்லது தோழர். உங்களை வாலிப வயோதிக அன்பர்களுக்கான சிகிச்சை மருத்துவர் என்று நான் நம்பவில்லை. ஆனால் காலத்துக்கு ஒவ்வாத பொய்த்த தகவல்களை ஏன் பதிவு செய்து படிப்பவர்களை முட்டாளாக்குகிறீர்கள் ?

ரசவாதத்தில் காந்த ரசத்தில் இருந்து தங்கம் வரும் என்றால் நான் அமவுண்டு தருகிறேன். வால்பையனை போல ஆன்லைன் தங்கம் இல்லாவிட்டாலும் ஐந்து கிராம் தங்கமாவது கையில் கொடுத்திடவேண்டும்..!! இந்த சவாலை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் நான் உங்களை சந்திக்க வரும்போது தக்காளி ரசமும் முட்டை ஆம்லெட்டும் கொடுத்தால் சாப்பிட்டுவிட்டு போகிறேன்...!!!

பின் கேள்விகள் :

ஜெயா டிவியில் திருவண்ணாமலையில் சிந்தர் ராக்கெட் போல பறந்த ஒரு வீடியோ வேறு வந்தது. திருவண்ணாமலையில் நல்ல கூட்டம்...!!! அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்றும் சொல்லவும்..

போகர் ஒரு சீனர் என்றும் நினைத்த மாத்திரத்தில் சீனாவுக்கு சென்று மேட்டர் செய்துவிட்டு வந்துவிடுவார், அதனால் தான் அவர் பெயர் போகர் என்றும் வரவணையான் சொன்னார். அது உண்மையா ? அவர் ஒரு சீனரா ? இப்போதெல்லாம் விக்கிபீடியாவிலும் உடான்ஸ் கலையை ஆரம்பித்துவிட்டார்கள் அய்யா...!!

..
..

Comments

VELU.G said…
ஓகோ....
நியோ said…
// போகர் ஒரு சீனர் என்றும் நினைத்த மாத்திரத்தில் சீனாவுக்கு சென்று மேட்டர் செய்துவிட்டு வந்துவிடுவார், அதனால் தான் அவர் பெயர் போகர் //
சீனாவிலும் சுந்தரிகளா தழல் ....?

அப்புறம் ...
சாரு ஏதாவது ஒரு பதிவு கூட போடலைன்னா தோழியோட பதிவுகளை படிக்கிறது என்னோட வழக்கம் ...
Palay King said…
@ நியோ

Romba nakkalu
shans said…
here in Chennai there is a lady telling she is POGAR. Vijay TV exposed her.
NIZAMUDEEN said…
//ஆனந்த விகடனில் வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்தும் இன்பாக்ஸ் பகுதி இருக்கிறது//

'இன்பாக்ஸ்' அல்ல நண்பரே,
'வரவேற்பறை!'
smart said…
உணவு முறை மாறியது என்பது அந்நிய மோகத்தில் ஆட்பட்டவர்கள் மட்டும்தான். இயற்கையோடு உணவு முறை கொண்டவர்கள் அதிகம். அதுவும் சித்தமருத்துவம் என்பதை எதோ புதிய மருத்துவ முறை என்ற எண்ணம் இருப்பதால்தான் இப்படி கேட்கிறீர்கள் இது உணவே மருந்து என்று பார்க்கவேண்டும்.
உங்கள் கம்யுனிஸ்ட் தோழர்களுக்காக தாத்தா போகரை பலியாக்காதீர்கள். //தங்கம் உருவாக பல லட்சம் டிகிரி வெப்பம் தேவை.// இங்கே தாத்தா போகர் கூறியிருப்பது தங்கத்தை பிரிக்கும் வழிதான். அடிப்படை பௌதிகத்தின் படி தங்கத்தின் கொதிநிலை வெப்பமே சுமார் 3000 செல்சியஸ் தான். தங்கத்திற்குள் காந்த தன்மையுண்டு என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள் au-au அணுகரு பிணைப்பினால் இது சத்தியமே. அவர் கூறிய அந்த வகை காந்தத்தில் இயல்பாகவே தங்கத்துகள்கள் இருந்திருக்கலாம். போகர் கூறிய முறைகளை ஆராய்ந்து பார்க்காமல் உடான்ஸ் என்பது மடத்தனாமான மூடநம்பிக்கை வாதம். அவற்றை சோதித்துப் பார்க்க தகுந்த வசதியை ஏற்பாடுத்துங்கள். மீறி முடியாவிட்டால் அவரின் மற்ற குறிப்புகளை சேகரிக்க முயலுங்கள். அண்ணன் ஸ்டிபன் ஹாக்கிங் தனது தளத்தில் விவாதித்திருப்பது புதியதாக இந்த தனிமம் உருவாகும் முறைதான்.

சரி ஆன்லைன் தங்கம்(வால் பையன்) எந்த சூப்பர்நோவா வெடிப்பில் உருவாகியது என்றும் அதன் அட்டாமிக் நம்பர் என்ன என்றும் கூறினால் தன்யனாவேன்.
மங்கை said…
ரவி...

ஒரு சின்ன விஷ்யம்..

தோழி எழுதற விஷ்யம் உண்மையா பொய்யா னு எனக்கு தெரியாது... ஆனா இத்தனை அறிய தகவல்களை ஒன்றினைத்து அதீத ஆர்வத்தோடு தொகுத்து வழங்கும் அந்த பெண்ணை எனக்கு பாராட்டத்தான் தோனுது... என் பெண்ணை விட 3 அல்லது 4 வயது தான் மூத்தவர்...இந்த வயதில் இந்த ஆர்வமும் எடுத்துகொண்ட விஷயத்தையும் பார்க்கும் போது எனக்கு ஆச்சிரியமா இருக்கு.. இந்த அறிய தகவல்கள் பற்றிய நூல்களை அவர் வீட்டு பெரியவர்கள் பாதுகாத்து வைத்திருக்கின்றனர்... இதுல எது தேவையோ அதை மட்டும் எடுத்துக்க வேண்டியது தான்..

ரவி...அவரின் உழைப்பை பற்றி அறிவேன்...அதை சொல்லத்தான் இந்த பின்னூட்டம்... பொத்தாம் பொதுவான விமர்சனமா போயிட கூடாது..அதான்...இந்த பதிவை படிக்கறவுங்க அதை வேற விதமா எடுத்துக்க கூடாது...அவரின் உழைப்பு தவறா விமர்சனம் செய்யப்பட கூடாது..அதுக்கு உங்க பதிவு ஒரு காரணமா இருக்கனுமா
நமக்கு தெரியாதது, அல்லது இயலாதது எல்லாம் உடான்ஸ் என்றால் இதுவும் உடான்ஸ்தான்.:))

போகர் மேட்டர் முடிக்கத்தான் சீனா சென்று வந்தார் என்கிற நண்பரின் கூற்றை எல்லாம் கேட்டு பொங்கி எழ ஒன்றுமே இல்லை..

சிரித்து கொள்கிறேன் ...உங்களது வாழ்க்கை உங்கள் கையில்....எண்ணங்களின் கையிலும்தான் :))
//புலஸ்தியன் என்ற என் சீடனே கேள், பூனை வணங்கி என்கின்ற செடிக்கு சாபம் நீக்குவதற்கு மந்திரம் எதுவென்றால் "தூ தூ " என்று ஓத சாபம் நிவர்த்தியாகும். சகல பலம் பொருந்திய மன்னரையே மயக்கக் கூடிய இந்தத் தழைக்கு ஒருலட்சம் தடவை "தூ தூ " என்று ஓதி உருக்கொடுத்து பிடுங்கி வைத்துக் கொண்டால் இந்த நாடு எல்லாமே உனக்கு வசியமாகும்//

இது ஒரு சாம்பிள். மூட நம்பிக்கையின் ஊற்றுக்கண் ஆக இருக்கும் அந்த பதிவுகள் !!!

இந்த பதிவு, அந்த குழந்தையை பரணில் கிடக்கும் உதவாக்கரை புத்தகங்களை கொடுத்து முட்டாளாக்கும் அவரது பெற்றோரை நோக்கியே மங்கை அக்கா..

எப்படி கடவுள் நம்பிக்கையை சிறு வயதிலேயே புகுத்துகிறார்களோ அது போல ரசவாதம், வசியம், பில்லி சூனியம், சித்தர், போகர், கோரக்கர் எக்ஸட்ரா. மூட நம்பிக்கைகளின் உச்சம் உச்சம்...

ஏற்கனவே சொல்வது தான். புண்படுத்தாமல் பண்படுத்தமுடியாது என்பதில் நம்பிக்கை...!!

உண்மையில் எந்த மண்ணாங்கட்டியினையும் தங்கமாங்க முடியாது என்பதை உணரும் முன் நிறைய நேரத்தை இதில் அந்த பிள்ளை வீணடித்திருக்குமே என்பது தான் என் காவலை...!!!
நிகழ்காலத்தில் அய்யா...!!!

நீங்கள் கடவுளை நம்புகிறவர் என்று நினைக்கிறேன்...அதனால் அப்படியே தன் ஆப்டர்மாத் ஆகிய மூட நம்பிக்கைகள் சித்தர் வசியம் எக்ஸட்ரா ? நீங்கள் அப்படியே இருங்கள்..உங்கள் பிள்ளைக்காவது அறிவியலை சொல்லிக்கொடுங்கள்..!!
தவறுகளை புண்படுத்தாமல் சொல்லுறிங்க....
பகிர்வுக்கும் பகீர்க்கும் நன்றிங்க.

Popular Posts