ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (2)

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (1)பாகம் ஒன்று

வாழ்க்கை வழக்கம்போல்தான் போய்க்கொண்டிருந்தது...கோடிங் செய்தல்...டெலிவரி செய்தல்...க்ளையண்டுடன் சேட்டிங் செய்தல்...அவன் சொல்லும் டப்பா பிரச்சினைகளை மென்பொருள் சரிசெய்தல் இப்படி...

எங்க மேனேஜர் வழமையான ஆக்டிவிட்டீஸ் எல்லாம் செய்துகொண்டிருந்தார்...வாரம் ஒரு முறை எங்களோட குட்டி டீமையும் அழைத்து ஸ்டேட்டஸ் கேட்பார்..நானும் விஜயும் ஏதோ அப்டேட் செய்துவிட்டு வருவோம்...அப்டேட் செய்வது என்பதை விட, கொஞ்ச நேரம் எங்களோட மேனேஜரோட ஜாலியா பேசிட்டு வருவோம்...

ஐஸ் ப்ரேக்கிங் அப்படீன்னு சொல்லுவாங்க...அது எம்ளாயீஸுக்கும் மேனேஜருக்கும் இடையில் நடக்க ஒரு சான்ஸ் கிடைத்தது...ஜாவா டீமில் சிரீதர் என்று ஒரு பழம் இருந்தான்...அவனுக்கு பர்த் டே...அதை தன்னோட வீட்ல கொண்டாடலாம் என்று மேனேஜர் சொல்லியிருக்கிறார்...அது அப்படியே பரபரன்னு சாட், இமெயில், எக்ஸ்டென்ஷன் போன் என்று ஆபீஸ் முழுக்க பரவுது...

எப்படியாவது இந்த பார்ட்டியில நாமளும் கலந்துக்கனும் என்று நானும் விஜயும் கொலைவெறியோட இருந்தோம்...காரணம் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அவரிடம் பேசி ஜாவா டீமுக்கு ஷிப்ட் ஆகுறது தான் எங்களோட டார்கெட்..எங்க டீம்ல இருந்தா இந்த வருஷம் பெருசா சம்பள உயர்வு எதுவும் கிடைக்காதுங்கற மைத் தான் காரணம்...

ஈவ்னிங் வெளிய தம்முக்கு போனபோது அவரோட ஆல்ட்டோ காரை திறந்துக்கிட்டிருந்தார்..சார்...எங்களை எல்லாம் பர்த்டே பார்ட்டிக்கு கூப்பிடமாட்டீங்களா என்று சற்று ஏக்கத்தோடு கேட்டேன்...அட என்ன இது...நீங்க இல்லாமலா...ஆல் ஆர் வெல்கம் என்றார்...வீக் எண்ட் கண்டிப்பா ஜெல் ஆகிக்கோங்க பீப்பிள்...அப்படீன்னார்...

எங்களையும் கூப்பிடுறார் என்று புரிந்தது...உள்ளூர பயங்கர சந்தோஷம்...!! வீக் எண்டும் வந்தது..

அவர் வீட்ல வொய்ப் பிரசவத்துக்கு போய்ட்டதால பார்ட்டி அங்கேதான் என்று அழைத்துப்போனார்...நானும் விஜயும் ஆறுமணி பார்ட்டிக்கு அஞ்சுமணிக்கே ஆபீஸ் வாசல்ல ஆஜர்...என்னோட ஸ்ப்லெண்டர்ல அவனோட மேன்ஷனுக்கு போய் அவசரப்படுத்தி கூட்டிவந்திருந்தேன்...

திநகர்லருந்து நேரா போற ரோட்ல கோடம்பாக்கம் மேம்பாலத்துக்கு லெப்ட் எடுக்கறதுக்கு முன்னால இன்னோரு லெப்ட் வரும், அங்கே இருபத்து நாலு மணி நேரத்துல இருபத்தி ரெண்டு மணி நேரம் திறந்திருக்கற ஒரு டீக்கடை இருக்கு, அதுக்கு பக்கதிலேயே அவரோட அப்பார்ட்மெண்ட்...

நாலு பெட்ரூம், நாங்க போனது ஈவ்னிங் தான், ஆனால் ஜாவா டீம் மக்கள் ஏற்கனவே அங்கே ஆஜர், எல்லோரும் மப்பு...நாங்க போனபோது சிரீதர் சோபாவுல காலை நீட்டி படுத்திருக்கான், சிவக்குமார் ஹால் நடுவுல உட்கார்ந்து மிச்சர் தின்னுக்கிட்டு இருக்கான்...பீரை ப்ரிஜ்ஜில இருந்து எடுத்து ஒப்பனிங் செரிமனியில இருக்கான் ஆந்திரா ராஜு...மீதிப்பேரு ஆங்காங்கே குடியும் குடுத்தனமுமா இருக்கானுங்க...

சார் எங்கேன்னு பார்த்தா ரூம்ல நாலு பசங்க சுத்தீலும் உட்கார்ந்திருக்க பெரிய க்ளாஸ்ல திரவத்தை ஊத்தி அடிச்சிக்கிட்டு இருக்கார்...வாங்கடா வாங்கடா, பாக்கெட் பி.ஸி டீம் ஸாரி நாங்க முன்னாலயே ஆரம்பிச்சிட்டோம் ஹி ஹி..

கோ கெட் எ பியர் கைஸ், நோ ஐ வில் கெட் யூ பியர் என்று எழுந்திருக்க முயன்றவர் கைலி அவிழ்ந்து விழுகிறது...

சார், முக்கா பீருக்கு மேல எனக்கு மப்பாகிரும் சார் என்றேன், அதை ஜோக் என நினைத்து விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள் அனைவரும்...

அப்படியே நாங்களும் குடியும் குடித்தனமுமாக ஐக்கியமாகிறோம், விஜய் ஒரு செவனப் பாட்டிலோடு டி.வி.டியில் செட்டில் ஆகிறார்...

பார்ட்டி முடிவடையும் தருவாயில் வா வீட்டை சுற்றி காட்டுகிறேன் என்று வாழ் குழழி - வாய் குழறி பேசி அழைத்து சென்று லிவ்விங் ரூமுக்கு அடுத்த ரூமில் இருந்த பெரிய க்வீன் சைஸ் பெட்டை காட்டினார்...

அப்போது தான் அந்த ஷாக் கொடுத்தார்....

இங்கே பார்...இந்த பெட்ல இருவத்தஞ்சு ஐட்டத்துக்கு மேல போட்டிருக்கேன், என் வைபை தவிர என்றார்...

Comments

அட.. அட.. அட.. கலக்குங்க...
//அவர் வீட்ல வொய்ப் பிரசவத்துக்கு போய்ட்டதால பார்ட்டி அங்கேதான் என்று அழைத்துப்போனார்...//

//இந்த பெட்ல இருவத்தஞ்சு ஐட்டத்துக்கு மேல போட்டிருக்கேன், என் வைபை தவிர என்றார்...//

ம்ம்ம்ம்.. கதையில நெறய வில்லங்கம் இருக்கும்போல..
வில்லங்க கதை தான். மக்கள் விழிப்புணர்ச்சி பெறத்தான்...
Anonymous said…
வில்லங்க கதை தான். மக்கள் விழிப்புணர்ச்சி பெறத்தான்...
இது ஒல்ட் சால்ஜாப்பு, புதுசா
வெறொரு காரணம் சொல்லு
:).
தலைவா இது புனைவுன்னு ஒரு லேபுள் போட்ருங்க,
எவனாவது அந்த மேனேஜரின் அட்ரஸ் கேக்க போறான்
ய்ப்பா கடைசி வரி காத்தவராயா? முழுசா சொல்லுப்பா

Popular Posts