தேடுங்க !

Monday, November 02, 2009

போலிச்சாமி பகத் பஸ்பருக்கு கடிதம்வணக்கம் போலிச்சாமியார் பகத் பஸ்பர் அவர்களே. இரும்படிக்கும் இடத்தில் ஈக்கென்ன வேலை என்று கேட்கிறீகளா ? அதை நான் ஏன் கேட்கக்கூடாது சொல்லுங்கள்.

முதலில் நீங்கள் யார் ? அருட்தந்தை என்கிறார்கள். எப்போது எங்கே, யாரின் அருள் உங்களுக்கு கிடைத்தது ? உங்களை பார்த்தால் கிருத்தவ மி(வி)ஷநரிகள் நம் நாட்டில் விட்டுவிட்டுப்போன, இந்தியாவில் அபகரித்த நிலங்களில் பில்டிங்குகள் ப்ளேகிரவுண்டுகள் கட்டிக்கொண்டு, மிச்சத்தை எச்சத்தை தின்றுவிட்டு, ஒயினை குடித்துவிட்டு, சுருட்டை புகைத்துக்கொண்டு உடல் பெருத்து உட்கார்ந்திருக்கும் பிரிஸ்ட்டு சாமியார்கள் போல தெரியவில்லையே ?

ஆள் கொஞ்சம் வெடவெடவென்றுதானே இருக்கிறீர்கள் ? ஏன் பிரான்ஸில் இருந்து ஒயின் வருவதில்லையா ? இல்லை நீங்கள் தங்கியிருக்கும் இடத்தில் நல்ல சிக்கன் மட்டன் சமைக்க ஆட்கள் இல்லையா ?

அப்கோர்ஸ், நீங்கள் ஆர்.சி (ரோமன் கத்தோலிக்கு) சாமியாரா, பிராட்டஸ்டண்டு சாமியாரா, அல்லது இவாஞ்சலிக்கல் செவண்த் டே அல்லேலூயா கோஷ்டியா என்று தெரியவில்லை. ஏன்னா, ரோமன் கத்தோலிக்கு கோஷ்டி சாமியார்கள் கல்யாணம் செய்துகொள்வதில்லை (அதற்காக அவர்கள் வாலிப வயோதிக அன்பர்களே என்றழைக்கும் டாக்டர்கள் கொடுக்கும் தாது புஷ்டி லேகியத்தை சாப்பிடாமல் இருப்பதில்லை), அல்லது கண்ணிகாஸ்திரிகளுக்கும் பஞ்சமில்லை. பிராட்டஸ்டண்டு சாமியார்கள் என்றால் குடும்பம் குழந்தை குட்டி பொட்டி என்று எல்லாமும் இருக்கும்.

சரி அந்த கதை எதுக்கு இப்போ ? ஏன் பொழுது போகவில்லையா பகத் பஸ்பர் ? வெண்ணை மங்கமம் என்று கவிஞர் ஒருவரோடு இணைந்து கலைநிகழ்ச்சி நடாத்தினீர்களே ? அது போரடித்துவிட்டதா ? அல்லது தமிழ்நாட்டில் காலையில் அவுட்ஸைடில் அவுட்சைட் போகிறவர்கள் யார், அல்லது வெஸ்டர்ன் டாய்லெட்டில் வெளிக்கு போகிறவர்கள் யார் என்றெல்லாம் சர்வே செய்துகொண்டிருந்தீர்களே ? அதுவும் இப்போது செய்யவில்லை போலிருக்கிறது.

ஆங் நீங்கள் ஏதோ புனைவுகள் கட்டுரைகள் எழுத ஆரம்பித்துவிட்டதாக சொன்னார்கள். பொதுவாக ஆளுங்கட்சிகளுக்கு அல்லது ஆட்சியாளர்களுக்கு பீப்பி ஊத, கும்மி அடிக்க, மேளம் தட்ட பெரிய கோஷ்டியே உண்டு. நீங்கள் அந்த மாதிரி ஒரு பத்திரிக்கையில் பீப் பீப் என்று ஊதிப்பார்க்க ஆரம்பித்திருப்பதாகவும் சொன்னார்கள்.

அந்த புனைவுகளில் போராளிகளுக்கு நீங்கள் தான் காண்டாக்ட் பாய்ட்ண்ட் என்றும், காலையில் நீங்கள் பல் விளக்கும்போது சாட்டிலைட் போனில் என்ன டிபன் என்று கேட்க அவர்கள் வன்னியிலிருந்து போன் செய்துகொண்டிருந்ததாகவும் சொல்கிறீர்களாமே ? இருக்கும் இருக்கும். நம்பித்தானே ஆகவேண்டும். மறுத்துப்பேச யாரும் இல்லையென்றால் நாம் விடும் கரடியெல்லாம் வரலாறு ஆகிவிடுமே ? யார் கண்டா ? நாளை ஏழாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உங்கள் புருடாக்களை சேர்த்தாலும் சேர்த்துவிடுவார்கள்.

தயவுசெய்து போராளிகளை, அவர்களின் தியாகத்தை, தன்னுயிரை ஈந்து கொள்கைகாத்த மாவீர்களை கொச்சைப்படுத்தாதீர்கள். நீங்கள் மத்தியஸ்தம் செய்ததாகவும், அவர்கள் சரணடைய தயார் என்றும் புனைந்துகொட்டாதீர்கள். தேவை என்றால் நான் சொல்லுவதெல்லாம் பொய் என்று தலைப்பில் பிள்ளையார் சுழி, மன்னிக்க, மேரி மாதா சுழி போட்டுவிட்டு, எந்த கருமத்தையாவது எழுதி தொலையுங்கள். அஞ்சனா தேவி, மஞ்சனா தேவி போன் செய்தார், ஆரோக்கிய சாமி லெட்டர் போட்டான் என்றெல்லாம் உங்கள் உடான்ஸுகளுக்கு வலு சேர்த்துக்கொண்டிருக்காதீர்கள்.

2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் இயேசு. நல்லவன். ஆனால் கொஞ்சம் லூசு. அதே சமயம் கொஞ்சம் இண்டலக்சுவல். நிறைய கதை சொல்லிவிட்டு, உபதேசம் செய்துவிட்டு, மக்களை திருத்த முயன்று செத்து தொலைந்தான். அதனால் கடவுள் என்கிறீர்கள். இட்ஸ் ஓக்கே. கண்டுகொள்ளவில்லை. ஆனால் நான் பாவ மன்னிப்பு வழங்குகிறேன், கடவுளிடம் டேரக்ட் ப்ரான்ஸைசி பெற்ற என்னிடம் வந்து பாவ மன்னிப்பு பெற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லும் உடான்ஸ் மதம் கிருத்தவ மதம். அதில் இருந்து வரும் சாமியாரான உங்களை எப்படி நம்புவது ?

நீங்கள் அரசியலில் ஈடுபடவோ, மத்தியஸ்தம் செய்யவோ, உங்கள் சர்ச் அனுமதிக்கிறதா ? நீங்கள் அதற்காகவா பணிக்கப்பட்டீர்கள் ? உங்களை செலவு செய்து படிக்கவைத்து, சம்பளம் கொடுக்கும் சர்ச்சுக்கே நீங்கள் நேர்மையாக இல்லையே ? உங்களிடம் எப்படி அரசியல் நேர்மையை எதிர்பார்க்கமுடியும் ?

உங்கள் சர்ச்சில் பியானோ இருக்கிறதா ? அதில் ட்யூன் போடுங்கள். இசை பழகுங்கள்.

'இறைவனின் ஆவி நிழலிடவே
இகமதில் அவர் புகழ் பகர்ந்திடவே
என்னை அழைத்தார்
அன்பில் பணித்தார்
அவர் பணிதனை தொடர்ந்திடவே.'

இப்படி எதையாவது எழுதி, அதற்கு இசையமைத்து பாடுங்கள். அதன் மூலம் உங்கள் நேரம் அழகான முறையில் செலவிடப்படும். இனியும் அந்த அப்பழுக்கற்ற தலைவனின் பெயரை உச்சரிக்காதீர்கள். அசிங்கமாக இருக்கிறது.

நன்றி. (கடிதம் முடிஞ்சுபோச்சு. எச்சில் துப்பி உறையை ஒட்டவேண்டும்)

51 comments:

செந்தழல் ரவி said...

எனக்கு நானே ஒரு ஓட்டு போட்டுக்கிட்டேன். என் எழுத்தின் மீது எனக்கு நம்பிக்கையிருக்கிறது. உங்களுக்கு நம்பிக்கை இருக்கா ?

ப்ரியமானவள் said...

இதுவும் சரிதானோ?

பெண்களின் முன்னேற்றம் உண்மையா
http://priyamanavai.blogspot.com/2009/11/blog-post.html

அக்னி பார்வை said...

அப்படியே அறைவது போலான பதிவு

VISA said...

Ok. What you have said might be right. But also please make us clear what spurred you to write this. Any interesting incidents???

பிரபாகர் said...

சொல்லியிருக்கிற விஷயம் புரியுது. ஆனால் சொல்லவந்த விஷயம் முழுசா புரியல... என்ன நான் சொல்றது புரியலையா? எனக்கும்தான்... கொஞ்சம்.

ஓட்டுக்கள போட்டுட்டேன்...

பிரபாகர்.

வழக்கறிஞர் சுந்தரராஜன் said...

:)

செந்தழல் ரவி said...

நன்றி அக்னி பார்வை....

செந்தழல் ரவி said...

விசா. இருக்கு. இது அவருக்கு மட்டுமான கடிதம். உங்களுக்கு வேண்டுமானால் தனியா கடிதம் எழுதவா ?

செந்தழல் ரவி said...

ஆமா, எனக்கே புரியலைங்கும்போது உங்களுக்கு எப்படி புரியும் ஹி ஹி

VISA said...

enakku thaniyavaa??? aiyoa veandam saami.

Ok. Now I got some clues from Nakeeran web site. I couldnt comprehend the relevance of this topic. Now I understood. Let me read Nakeeran reports.....for more information.

Barari said...

oru thani manithan seiyum thavarai vaiththu avar saarntha mathaththaiyo allathu avarkal nambum kadavulaiyo izivu paduththuvathu enbathu padiththa panbudaiyavar seiyum velaiyillai.raviyai pondravarkalidam irunthu intha pathivu achchiriya paduththukirathu.

பதி said...

//என் எழுத்தின் மீது எனக்கு நம்பிக்கையிருக்கிறது. உங்களுக்கு நம்பிக்கை இருக்கா ?//

:)

+1 !!!

பிரபாகர் said...

ரவி புரிஞ்சிடுச்சி... படிச்சிட்டேன். இப்போ புரிஞ்சு சொல்றேன் சூப்பர். சாரி ரவி இன்னொருமுறை ஓட்ட போடமுடியாது. அடுத்த இடுகைக்கு அட்வான்சா ஸ்டாக் வெச்சுக்கறேன்....

பிரபாகர்.

செந்தழல் ரவி said...

விசா.

நீங்கள் அவ்வளவு தூரம் அதனை படித்து புரிந்துகொள்ளவேண்டியதில்லை.

சாக்கடையில் இருந்து கிளம்பிவரும் விலங்கின்மீதிருந்து சாக்கடைதான் நம்மீது தெளிக்கும்.

ஏன் என்றால் அந்த விலங்கு கிளம்பி வரும் இடம் சாக்கடை.

satheshpandian said...

Good.. Need More details.

முகிலன் said...

ரவி, எனக்கும் நீங்கள் சொன்ன ஆள் மீது கோபம் தான். ஆனால் உங்கள் கடிதத்தில் அவர்மீதான கோபத்தை விட கிறிஸ்துவ மதத்தின் மீதான கோபமே அதிகப்படியாக வெளிப்பட்டிருப்பதாகக் கருதுகிறேன். என்ன சொல்கிறீர்கள்?

panaiyeri said...

//2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் இயேசு. நல்லவன். ஆனால் கொஞ்சம் லூசு.//
கொஞ்சம் ஓவரா இல்லையா ?... தனி மனித தாக்குதலில் பிற மதத்தின் நம்பிக்கையை இழிவு படுத்தாதீர்

செந்தழல் ரவி said...

அன்புள்ள முகிலன்.

எனக்கு என் மீதே கோபமாக இருக்கிறது.

செந்தழல் ரவி said...

பனையேறி சார்.

இண்டலக்சுவல் என்றும் சொல்லியிருக்கிறேனே.

என்னுடைய கருத்தை சொல்லியிருக்கிறேன்.

உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் மாற்றச்சொல்லுங்கள். மாற்றுகிறேன்.

குறும்பன் said...

பஸ்பர் இந்த மாதிரி எத்தனை கடிதம் படிச்சிறுப்பார். அந்தாளு ரேஞ்சே தனி.

panaiyeri said...

//என்னுடைய கருத்தை சொல்லியிருக்கிறேன்.

உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் மாற்றச்சொல்லுங்கள். மாற்றுகிறேன்.//

ரவி உங்களுடைய கருத்தில் எனக்கு பெரும்பாலும் 70 % உடன்பாடு இல்லையென்ற போதும் நான் உங்களுடைய தனி மனித கருத்துகளை புரிந்து கொள்கிறேன் ...வியக்கிறேன்.. தொடர்கிறேன்
..ஆனால் // கொஞ்சம் லூசு.// என்பது கொஞ்சம் மிகை ..
கஸ்பார் விசயத்தில் இயேசுவை இழுக்காதீர் ..

VISA said...

//சாக்கடையில் இருந்து கிளம்பிவரும் விலங்கின்மீதிருந்து சாக்கடைதான் நம்மீது தெளிக்கும்.//

அருமை. இதன் மூலம் அவருடைய மதம் ஒரு சாக்கடை என்று சொல்ல வருகிறீர்களா?
நான் மத சார்பற்றவன். ஆனால் மதம் மனிதனின் மன ஆரோக்கியத்துக்கு தேவைப்படுவது என்பதை ஆழமாக நம்புபவன்.
கிறிஸ்துவ மதத்தில் நிறைய குளறுபடிகளும் ஒழுங்கீனங்களும் இருக்கலாம். ஆனால் அந்த மார்க்கத்தை குறை கூறுவது தவறு. ஏனெனில் இன்னும் கோயிலில் மண்டி போட்டு ஏதோ ஒரு மூதாட்டி தன் நோய் தீர வேண்டிக்கொண்டிருப்பாள். ஒரு இளைஞன் வேலை கிடைக்க வேண்டும் என பிராத்தித்துக்கொண்டிருப்பான். இன்னொருவர் தனக்கு இருக்கும் துன்பங்கள் அகல வேண்டும் என வேண்டிக்கொண்டிருப்பார். அதை எல்லாம் சிலுவையில் இருக்கும் இயேசு தீர்த்து வைப்பார் என்று நான் சொல்லவில்லை. ஆனால் கோடானு கோடி மக்களின் ஆழமான நம்பிக்கைக்குரிய ஒரு மார்க்கத்தை படு கீழ்த்தரமாக விமர்சிப்பது தவறு.
இது எல்லா மதத்திற்கும் பொருந்தும்.
என்னை பொறுத்தவரை பசி தான் உண்மையான கடவுள்.
இரண்டு நாள் பசியோடு இருந்தால் எனக்கு தர்க்காவில் பிரியாணியோ...அல்லது ஹிந்து கோயிலில் கூழோ...அல்லது கிறிஸ்துவ ஆலயத்தில் கஞ்சியோ கிடைத்தால் குடித்து என்னை காப்பாற்றிக்கொள்ள நினைப்பேனே தவிர சாக மாட்டேன். அநேகமாக மதவெறியர்களை தவிர மனிதர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என்றே தோன்றுகிறது.
எனவே எங்கோ ஒரு மூதாட்டியின் ஒரு ஏழையின் ஒரு குருடனின் ஒரு பிச்சைக்காரனின் ஒரு போர் கைதியின் நம்பிக்கையாய் திகளும் எந்த ஒரு மத கோட்பாட்டையும் குறை கூறுவது மிகவும் கீழ்த்தரமானது என்பது என் கருத்து.
நீங்கள் அந்த கடவுளை வணங்கவில்லை என்றாலும் அந்த மார்கத்தை பின்பற்றும் மனிதர்களை நேசியுங்கள். குறைந்தபட்சம் அவர்களின் மனதை புண் படுத்த வேண்டாமே.


I have no strong points to understand your angst towards that whatever christian priest he is. But the way you wrote about a religion hurt me. Whatever it is Ravi tomorrow if you have something which you feel no one in this world can give you....you will go searching to your God. Whether its allah or sivan or jesus. That is same with every other human being who believes in God. So let us not hurt their feelings. Let us write about useless fellow beings not God.

VISA said...

//நீங்கள் அந்த கடவுளை வணங்கவில்லை என்றாலும் அந்த மார்கத்தை பின்பற்றும் மனிதர்களை நேசியுங்கள். குறைந்தபட்சம் அவர்களின் மனதை புண் படுத்த வேண்டாமே.
//
Instead of
//மனிதர்களை நேசியுங்கள்//
Read as

//மனிதர்களின் உணர்வுகளை மதியுங்கள்.//
Read like this.

♠புதுவை சிவா♠ said...

"கிறிஸ்துவ மதத்தின் மீதான கோபமே அதிகப்படியாக வெளிப்பட்டிருப்பதாகக் கருதுகிறேன்"

பரலோகத்தில் இருக்கும் பரம பிதாவே
செந்தழல் ரவி செய்த இப் பதிவு பிழையை மன்னிப்பாராக!

ஆமேன்

செந்தழல் ரவி said...

விசா. ரிலாக்ஸ். பேசலாம். அமைதி.

செந்தழல் ரவி said...

புதுவை சிவா.

அமவுண்டு கொடுத்தால் மன்னிக்கும் ப்ரிஸ்டுகள் உண்டு. ஐ கேன் டேக் தெயர் ஹெல்ப்.

VISA said...

// விசா. ரிலாக்ஸ். பேசலாம். அமைதி.
//

OK :)

புரட்சிகர தமிழ்தேசியன் said...

தோழர் செந்தழல் ரவி!

இவரது போக்கு குறித்து ஆரம்பத்தில் இருந்தே எனக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது..அமெரிக்கா மெர்சி என்ற மீட்பு கப்பலை ஈழத்திலிருக்கும் அப்பாவி உறவுகளை காப்பாற்ற அனுப்பிய போது அதை தடுத்தது எந்த களவாணிகள் என்று உலகம் முழுமைக்கும் தெரியும்.. ஆனால் பெயரை குறிப்பிடாமல் ஒரு தமிழகத்தை சார்ந்த மூத்த காங்கிரசு அமைச்சர் போர் நிறுத்ததிற்கு முயன்றார் என வாய்கூசாமால் புளுகுகிறார்.. இதில் இருந்தே தெரியவில்லை இவர் ரோவினுடைய கைகூலி என்று.. இவனுங்களுக்கு அடுத்தநாட்டில் எவனும் நன்றாக இருந்தால் பிடிக்காது..அது ஈழமாகட்டும் ..மாலைதீவு ஆகட்டும்..பலுசுஸ்தானாகட்டும்... ஆக இவர்கள் வீரமெல்லாம் இளித்த வாயன்கள் மீதுதான் எங்கே சீனா மீது எதாவது இவ்வாறு சித்து விளையாட்டுகளை செய்ய சொல்லுங்கள் வாலை ஒட்ட நறுக்கி அனுப்புவாரகள்..

இந்த இந்தி ய அதிகாரத்திலுள்ள பீடைகளுக்கு ஒருவித மனநோய் பிடித்துள்ளது.. அது தன்னை விட தாழ்ந்தவனிடம் தங்கள் வீரதீர சாகசங்களை காட்டுவது ஆங்கிலத்தில் கெர்ப் கோஹன் உங்களால் முடியும் என்ற ஒர் நூலில் 5வது அதிகாரத்தில் ஒரு இடத்தில் குறிப்பிடுவார்..அதன் சராம்சம் இதுதான்

ஏற்கனவே அதிகாரத்தில் உள்ள ஒருவன் தன்னால் முடியாத ஒன்றிணை அதே போல சக அதிகாரத்தில் உள்ளவன் அதை செய்யும் போது அதிகாரமற்ற மற்றவர்கள் முன்பு அதிகாரம் இருந்ததை போல சீன் காட்டி கொண்டிருந்தவனை புறம்தள்ளுவார்கள்.. அதன் விளைவு சீன் காட்டி ஊரை ஏமாற்றி கொண்டிருந்தவன் .. தங்களுக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாது தங்களுக்கு கட்டுபடுத்த முடியாத அமைப்பை அடித்து நொறுக்குவார்கள்..


சுருக்கமாக சொன்னால் வலிமை குறைந்தவனை நண்பனை அடித்துவிட்டு நானும் ரவுடிதான் நானு தெற்காசிய ரவுடிதான் என ஓலமிடுவது..இதில் சீனா,பாகிஸ்தான்.விடுதலை புலிகள் என எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன்

குழலி / Kuzhali said...

என்ன கொடுமை ரவி இது... இந்த ஆள் போராளிகள் பெயரை சொல்லி டுபாக்கூர் விடுவது மட்டுமின்றி போர்நிறுத்தம், காப்பாற்றல் லொட்டு லொசுக்கு என்று விடும் புருடாக்கள் தாங்க முடியலை இதில் இன்னொரு ஜால்ரா சுப.வீயை வேறு சாட்சிக்கு அழைக்கிறார்... வேலிக்கு ஓணான் சாட்சியாம்....

வவ்வால் said...

ரவி,
காலம் கடந்தவரய்யா நீர்!இப்ப மட்டும் தானா எப்பவுமே இப்படித்தானா?:-))

//என் எழுத்தின் மீது எனக்கு நம்பிக்கையிருக்கிறது. உங்களுக்கு நம்பிக்கை இருக்கா ?//
உமது சுய நம்பிக்கை அபாரம்!

//அருட்தந்தை என்கிறார்கள். எப்போது எங்கே, யாரின் அருள் உங்களுக்கு கிடைத்தது ?//

அருள் அவர் பையன் பெயராக இருக்கும் அருளின் தந்தை அருட்தந்தை தானே! :-))

இவரையெல்லாம் லூஸ்ல விடனும்,இதெல்லாம் இவர் படிப்பாரா? லோக்கல் பேப்பரில் ஒபாமாவுக்கு ஒரு ஆலோசனைனு எழுதும் வாசகர் கடிதம் தான் நினைவுக்கு வருது!

கார்க்கி said...

ரவி, எனக்கு ஒரு டவுட்டு. இந்த புனித ஆவியில இட்லி வேகுமா வேகாதா?

செந்தழல் ரவி said...

தமிழ்தேசியன்.....

நன்றி நன்றி நன்றி

குழலி சார் நன்றி

ஹை. வவ்வால்...நல்லாருக்கீயளா ??

நான் எப்பவுமே அப்படித்தான் :))))

கார்க்கி, ஐ லவ் இட்லி. எந்த ஆவியில் வெந்தாலும்...

இட்லியோட மல்லாட்டை = மனிலா சட்னி சாப்ட்ருக்கீங்களா

பீர் | Peer said...

விசா 'வின் நீண்ட பின்னூட்டத்தை ரசித்தேன். :)

செந்தழல் ரவி said...

////தம்பி நீ எந்த சாக்கடையில் இருந்து வந்தியோ தெரியாது , மதங்களை விமர்சிக்கும் முன் ஒன்றை நினைவில் வைத்து கொள் , உன் தாயை நீ எப்படி நீ நம்புகிறயோ அது போல்தான் அவரவர் கடவுளை அவரவர் நம்புகிண்டனர் ,எனவே தனிப்பட்ட நபரை நீ எப்படி வேண்டும் என்றாலும் விமர்சித்து கொள் . ஒரு மதத்தை விமர்சிகாதே ....////

மைக்கல் டென்னிஸ் என்ற தோழர் அனுப்பிய மின்னஞ்சல்.

இந்த உலகில் எதனையும் எவரையும் விமர்சிக்கும் உரிமை எந்தவொரு தனிமனிதருக்கும் உண்டு. அது என்னுடைய தனிப்பட்ட சுகந்திரம், என்பதை அந்த தோழருக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

கிறிஸ்தவ மதத்தை விமர்சித்தவுடன் காட்டமாக, திட்டும் உங்களுக்கு ஏசு பெருமான் இதையா சொன்னார் ? அல்லவே ? ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையல்லவா காட்டச்சொன்னார். அப்படியென்றால், தோழரே, இன்னும் நன்றாக விமர்சியுங்கள் என்று அல்லவா நீங்கள் மடல் அனுப்பியிருக்கவேண்டும் ?

உங்கள் சகோதரன் உனக்கு எதிராக குற்றம் செய்தால் ஏழு முறையல்ல, ஏழு முறை எழுபது முறை மன்னிக்கச்சொன்னாரில்லையா. என்னையும் மன்னித்துவிடுங்கள். இன்னும் ( 7 x 70 ) - 1 முறை நான் பாவம் செய்ய அனுமதிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

செந்தழல் ரவி said...

விசா. இன்னும் 300 ஆண்டுகளில் மதம் என்ற ஒரு கட்டமைப்பே உலகில் இருந்து ஒழிந்துவிடும். அவ்வளவுதான் இப்போதைக்கு சொல்லமுடியும். (உ.ம் கொரிய நாட்டில் எந்த மதத்தையும் பின்பற்றாதவர்களின் சதவீதம் 60)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ஜெகத்கஸ்பார் எழுதுவது அல்ல கிறுக்குவது அரைவேக்காட்டுத்தனமான தகவல்கள என்பது முதல் ஐந்து இதழ்களிலேயே தெரிந்து போய்விட்டது..

புலியையும் ஆதரிக்க வேண்டும்.. ஈழ விடுதலையையும் ஆதரிக்க வேண்டும்.. தி.மு.க.வையும் பாராட்ட வேண்டும்.. கலைஞரையும் துதிபாட வேண்டும் என்று பல்வேறு நோக்கங்களை ஒன்றுகூடி வைத்துக் கொண்டு கும்மியடித்துக் கொண்டிருக்கிறார்.

எப்படியோ இவருக்கும் பொழைப்பு ஓடுகிறது.. அவ்வளவுதான்..!

ஆமாம்.. நீ ஏன் இப்ப திடீர்ன்னு இயேசுவையும் தாக்குற..? பாவம் நல்ல மனுஷன்..! ஏதோ தெரியாம பொறந்து தொலைச்சிட்டாரு. அதுதான் அவர் செஞ்ச பாவம்..!

நீ ஒரு நல்ல கிறித்துவனாக இருக்கிறாய் என்று நினைத்தேன்..!

செந்தழல் ரவி said...

ஆமாம்.. நீ ஏன் இப்ப திடீர்ன்னு இயேசுவையும் தாக்குற..? பாவம் நல்ல மனுஷன்..! ஏதோ தெரியாம பொறந்து தொலைச்சிட்டாரு. அதுதான் அவர் செஞ்ச பாவம்..! &&&&


உ.த அண்ணே. மாட்னீங்களா.

பாயிண்ட் 1

இயேசு மனிதன் என்று சொன்னது

பாயிண்ட் 2

இயேசு பாவம் செய்ததாக சொன்னது. அவரே மனிதர்கள் பாவத்தை மன்னிக்க வந்த கடவுளாமே ?

ஓக்கே கம்மிங் பேக் டு த பாய்ண்ட். விசாவுக்கு பதில் அளிக்க நினைத்திருந்தேன். உங்க கேள்வி அதனை எளிதாக்கிவிட்டது.

வலையுலகின் சூப்பர் ஸ்டார் மருத்துவர் ஒருவர் கிருத்தவர், அரசுப்பணியில் இருக்கிறார்.

அவர் அரசு பணியில் இருப்பதால் அரசை விமர்சிக்காமல் இருக்கமுடியுமா ? அரசு பல்வேறு நல்ல காரியங்களை செய்கிறது. இலவச மருத்துவம், விதவைகளுக்கு பென்ஷன்,விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், கல்விக்கடன் தள்ளுபடி, பள்ளி பிள்ளைகளுக்கு சத்துணவு சைக்கிள் என்று. அதற்காக லஞ்ச ஊழலை, பல அரசு ஊழியர்களின் மெத்தனத்தை, ஊடகங்களை வைத்து செய்யப்படும் பொய் பிரச்சாரத்தை எல்லாம் பார்த்துக்கொண்டு வாளாவிருக்க முடியுமா ? சர்வ அதிகாரம் பொருந்திய அரசை கேள்விகேட்கிறோம் அல்லவா ? பல மக்களுக்கு நன்மை செய்யும் அரசை, சில மக்களை அம்போவென விடும் அரசை, பல சமயம் மக்களை ஏமாற்றும் அரசை விமர்சிக்க, கேள்வி கேட்க, சாட எல்லா உரிமைகளும் நமக்கு இருக்கிறது அல்லவா ?

அய்யோ. நாம் மிகவும் விரும்பும் பதிவர் ஒருவர் அரசு துறையில் இருக்கிறார். அதனால் நாம் அரசை பற்றிய விமர்சனங்களை நிறுத்திக்கொள்வோம் என்று இருக்கமுடியுமா ? அரசு என்ற இடத்தில் மத நம்பிக்கை என்ற விடயத்தை வைத்து பார்க்குமாறு விசா அவர்களை கேட்கிறேன்.

கபிலன் said...

இப்படிப்பட்ட பதிவு ரொம்பத் தேவை தாங்க..!
அதுமட்டுமல்ல, திராவிட கழக சிகாமணிகள் சர்ச்சு பாதிரியார்களையோ, பொருளாளர்களையோ தேடித் தேடி அலைந்து ஈழத்தைப் பற்றி பேச வைப்பதின் நோக்கமே புரியவில்லை. தொடர்பில்லாதவர்கள் கூட மேடையேறி பேசுவதைப் பார்த்திருக்கிறேன்.

ராசாக்களா....வந்து படிச்சுட்டு போங்க......பகத் பாஸ்பரை தூக்கி தலையில வச்சு ஆடுனீங்களே...வாங்க....

செந்தழல் ரவி said...

கபிலன் நன்றி.

இரண்டு உண்மைகள் அதற்கு நடுவே நான்கு பொய்கள் என்று பொய்களை உண்மைக்கு நடுவே சாண்ட்விச் போல செய்துகொடுத்துக்கொண்டிருக்கிறார் பகத் பஸ்பர்.

நாளை இந்த பொய் புரட்டுகள் உண்மைகள் என்று நம்பப்படும். இது தான் வரலாறு என்று படிப்பிக்கப்படும்.

உதாரணமாக.

இன்று அவர் சொல்வது
%%%%% %%%%%% %%%%%%%%

காங்கிரஸ் தலைவர் ஒருவர் விடுதலை புலிகளை காக்க முயன்றார்.

நாளை இப்படி சொல்லப்படும்
%%%%%% %%%%%% %%%%%%%%%%%%%

காங்கிரஸ் கட்சிதான் ஈழத்தமிழர்களை காத்த கட்சி

இப்படி எளிதாக திரிப்பு செய்ய, மக்களை ஏமாற்ற இவரை ஒரு கருவியாக ஆட்சியாளர்களும் ஆட்சியாளர்கள் சார்ந்த ஊடகங்களும் பயன்படுத்துகிறது.

எம்.எம்.அப்துல்லா said...

எனக்கு இரவி அண்ணன்மேல் உடன்பாடு உண்டு.ஆனால் இந்த இடுகையின் மேல் அல்ல.

செந்தழல் ரவி said...

ரொம்ப நன்றி அப்துல்லா. கருத்தை கருத்தாக எடுத்துக்கொள்வதற்கு.

LOSHAN said...

ரொம்பவே சூடு... உண்மையின் ஆத்திரம் தெரிகிறது..
வாக்களித்தேன் ரவி..

செந்தழல் ரவி said...

நன்றி லோஷன்

சீனு said...

//உ.ம் கொரிய நாட்டில் எந்த மதத்தையும் பின்பற்றாதவர்களின் சதவீதம் 60//

உண்மையா? ஆச்சரியம். நீங்கள் சொல்வது வட கொரியா என்று நினைக்கிறேன்.

நியூசிலாந்திலும் 30% பேர் எந்த மதத்தையும் பின்பற்றாதவர்களாம்...

செந்தழல் ரவி said...

ஆமாம் சீனு..நன்று கமெண்டுக்கு..

செந்தழல் ரவி said...

^^^அந்த பின்னூட்டம் உங்கள் மீதான ஒரு பிம்பத்தை குறைத்து காட்டியது அவ்வளவு தான்&&&

விசா. அப்படி எல்லாம் பிம்பம் வைத்துக்கொள்ளாதீர்கள். தம்பி அந்த வரிகள் எனக்கு பிடிக்கவில்லை, நீக்குடா என்று கட்டளை இட்டிருந்தால் நீக்கிவிட்டிருப்பேன். நான் என்ன ஆனந்தவிகடனிலா எழுதுகிறேன், அச்சில் ஏறியதை எடுக்க முடியாமல் போக ? எடிட் அண்டு பப்ளிஷ்.

உங்களுக்கு ஒரு கருத்துண்டு. எனக்கு ஒரு கருத்துண்டு. நாம் இருவரும் அதனை நம்முடனே வைத்துக்கொண்டால் பிரச்சினையில்லை. ஒரு பொது தளத்தில் வைக்கும்போது அந்த என்னுடைய சொந்த கருத்து உங்களுக்கு தவறாக தெரிந்தால் அது புண்படுத்துகிறது. நாம் இருவரும் இணையும் புள்ளி நமது வலைப்பதிவே. ஆகவே தொடர்ந்து விவாதிப்போம்.

ஆனால் இந்த பதிவில் நாம் மேற்கொண்டு விவாதித்தால் கிறிதவ மதம் ஒன்றை நோக்கியே விவாதம் போகும் போல தெரிகிறது. ஜெனரிக்காக எல்லா மதங்களையும் தாக்கி ஒரு பதிவு எழுதி விட்டால் அங்கே என்னை எல்லாரும் கும்முவார்கள். பார்க்க காமெடியாக இருக்காது ?

மற்றபடி வரும் காலத்தில் மதங்களின் தேவை குறைந்துபோய், ஒரு கட்டத்தில் 0 ஆகிவிடும். அதனால் தான் மதங்களை Cultural Symbol ஆக்க கிறித்தவ இஸ்லாம் இந்து மதவாதிகள் பெருமுயற்சி எடுத்து வருகிறார்கள்.

நேற்று ஐரோப்பிய கோர்ட், பள்ளி வளாகங்களில் உள்ள சிலுவை சின்னத்தை அகற்ற உத்தரவிட்டுவிட்டது.

http://mybiz.optus.com.au/news/46016/too-much-cross-to-bear-for-italian-schools.html

அது கல்வி சுகந்திரத்தை, மத சுகந்திரத்தை மீறும் செயல் என்றும் கூறியுள்ளது. கிறிதவ மதத்தில் வேரிலேயே வெந்நீர் ஊற்றும் சம்பவம் இது.

உடனே, கிறித்தவ பிஷப்புகள், சிலுவை அடையாளம் ஒரு கலாச்சார சின்னம் என்று கூப்பாடு போட ஆரம்பித்துவிட்டார்கள்.

மத நம்பிக்கைகளை புண்படுத்தாமல் மதத்தை விமர்சனம் செய்ய முடியாது என்பது என்னுடைய கருத்து. முன்பே சொன்னதுபோல் வேரில் வெண்ணீர் ஊற்றினால்தான் களையை களைய முடியும்.

இயேசுவை லூசு என்று சொல்ல பல காரணங்கள் உண்டு. நூறு பேர் இருக்கும் இடத்தில் ஒருவனாக சென்று சண்டையிடுவது முட்டாளின் செயல். மத நம்பிக்கைகள் வேரூன்றிய யூத ஆலயத்தின் வாசலில் சென்று கயிறுகளால் சாட்டை பின்னி அங்கே இருந்த வியாபாரிகளை அடித்தார். அதனால் வியாபாரிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பை சம்பாதித்தார். கோயிலின் உள்ளே சென்று இந்த கோயிலை இடித்து மூன்று நாளின் கட்டுவேன் என்றார். அதனால் அங்கேயுள்ள குருமார்களின் எதிர்ப்பை சம்பாதித்தார். விபச்சாரியை கொல்ல வந்தவர்களை தடுத்தார். ஓய்வு நாள் எனப்படும் நாளில் சோளக் கதிர்களை பறித்து தின்று காட்டினார். மற்றவர்களுக்கும் கொடுத்து தின்னவைத்தார். ஆக பொதுவாக அவர் ஒரு நாத்திகர். கலகம் செய்தார். கலகக்காரரை லூசு என்று எப்படி பொதுப்புத்தியோடு அழைப்போமோ அதேபோல் அழைக்கப்பட்டு, ஒரு கொலை தண்டனை பெற்ற ரவுடிக்கு ஈடாக்கூட மதிக்கப்படாமல் சித்ரவதைக்கு ஆட்பட்டு இறந்தார்.

அதனால் தான் அப்படி எழுதினேன்.

ஒவ்வொரு நாட்டிலும் எந்த மதத்தையும் பின்பற்றாதவர்கள் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறது. பொருளாதார வளர்ச்சியும் அறிவியல் வளர்ச்சியும் ஒரு Factor இந்த வளர்ச்சியில். கொரியாவில் 60 சதம், நியூசிலாந்தில் 30 சதம் என்று எனக்கு தெரிந்தவரை. இந்தியாவில் இன்னும் சில நூறு ஆண்டுகளில், அவர்களின் பொருளாதார அறிவியல் வளர்ச்சியை நாமும் எட்டும்போது மதம் என்ற கட்டமைப்பு வெறும் ஹிட்ஸ்ட்ரி ஈ புக் (புக் இருக்குமா அப்போ) ஒன்றில் மட்டும் இடம்பெறும்.

தனிப்பதிவு இடனுமா ?

ஊர்சுற்றி said...

//உங்கள் சர்ச்சில் பியானோ இருக்கிறதா ? அதில் ட்யூன் போடுங்கள். இசை பழகுங்கள்.

'இறைவனின் ஆவி நிழலிடவே
இகமதில் அவர் புகழ் பகர்ந்திடவே
என்னை அழைத்தார்
அன்பில் பணித்தார்
அவர் பணிதனை தொடர்ந்திடவே.'//

ச்ச... கலக்குறீங்க அண்ணே!!! கலக்குறீங்க... பாடல் குழுவில் இருந்தீங்களோ?!!! :)))

செந்தழல் ரவி said...

கஷ்டப்பட்டு இந்த பதிவின் நோக்கத்தை மதம் நோக்கி திருப்பிவிட்டவர்கள் இன்றைக்கு வினவின் பதிவில் என்ன செய்யப்போகிறார்கள்

bala said...

naan nenachen nenga solitinga :)

bala said...

naan nenachen nenga solitinga :)

bala said...

naan nenachen nenga solitinga :)