Wednesday, March 26, 2008

மோகன்தாஸ் கதைகளின் மீது ஒரு விமரிசனப்பார்வை

பொதுவாக மோகன்தாஸ் எழுத்துக்களை பார்த்தால் ரொம்ப பழுத்த உலக அனுபவவாதியின் எழுத்துக்கள் போலிருக்கும்...இப்போ வவ்வால் எழுதுகிறாரே...அதுபோல இருக்கும்...ஆனால் அவரை நேரில் சந்தித்த வெகுசிலரில் நானும் ஒருவன் என்பது தவிர அதிகம் தொடர்புகொள்வதில்லை.

பி.கே.எஸ் போன்றவர்கள் அவரது எதுக்களின் மீது விமர்சனங்கள் வைக்கும்போது, ரொம்ப பெரிய ரைட்டர் போலிருக்கு என்று எனக்கு ஒவ்வாத குரூப்பில் வைத்து ( அதாவது பதிவைக்கண்டதும் தமிழ்மணத்தையே மூடிவிடுவது :))))...புறக்கணித்துக்கொண்டிருந்தேன்.

ஒருமுறை ஒரு ம.க.இ.க தோழர் கூட மோகன்தாஸ் நன்றாக எழுதுவதாக சொன்னார்...அப்பவே முடிவு செய்துவிட்டேன், இந்தமாதிரி ஆளுங்க பதிவை எட்டியே பார்க்கக்கூடாது என்று...

வெறுப்பு இல்லை, அந்த அளவுக்கு நமக்கு சரக்கு இல்லை என்பதே உண்மையான காரணம்...

ஆனால் - அதனை அந்த சந்திப்பு மாற்றியது.

முதலில் பார்த்ததும், மோகன்தாஸ் தன்னோட மகனை அனுப்பி விளையாட்டு காட்டுகிறாரோ என்று தான் நினைத்தேன். தலைமேலடித்து சத்தியம் வைக்காத குறையாக சொன்னபிறகு தான் நம்பினேன்...

இருபத்து மூன்றுகளில் நிற்கும் மோகன்தாஸா இவ்வளவு நீள அகலமான எழுத்துக்களுக்கு சொந்தக்காரர் என்று நம்பவே சற்று கடினமாக இருந்தது...

அப்புறம் ஆசிப் அண்ணாச்சியுடனும் மோகனாவுடமும் அடித்த நீண்ட லால்பாக் அரட்டை மற்றும் வாலிபால் விளையாட்டு வாட்சிங்...ஊப்ஸ்...மறக்கவே முடியாத காவியம் :))

இவரிடம் எனக்கு பிடித்த இன்னொரு விஷயம், தன்னுடைய மனதுக்கு பிடித்ததை / மனதுக்கு சரியென்று பட்டதை தயங்காமல் செய்யும் குணம்...

இந்த வார இறுதியில் வரும் நீண்ட பயணத்துக்கான பணிகளில் ஒன்றாக மடிக்கணினியில் நல்ல சிறுகதை - தொடர்கதைகளை இணையத்தில் இருந்து உறிஞ்சும் வேளையில் மோகன் பி.டி.எப் கோப்பாக கொடுத்து இருந்த தொடர்கதைகளின் பட்டியல் தென்பட்டவேளையில் அப்படியே உருவிக்கொண்டேன்.

விமானத்தை தொலைத்தாலோ அல்லது நீண்ட நேரம் விமான நிலையங்களில் அமரவேண்டியிருந்தாலோ படிக்கலாம் என்றுதான் எடுத்தேன், ஆனால் டெஸ்க்ட்டாப்பிலேயே அடிக்கடி என்னை தொந்தரவு செய்துகொண்டிருந்ததால் இன்றைக்கு திறந்துவிட்டேன்.

இதுக்கு பிறகு தான் விமர்சனமே வருதுங்னா, ப்ளீஸ் வெயிட்...

கதைகள் ஏனோ வளவளா !!!! ஒன்றுக்கொண்று தொடர்பில்லாத பல வாக்கியங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து பத்திகளை உருவாக்குகின்றன...

ஒவ்வொரு காரெக்டர்களும் ஏதோ தாடி வைத்த சாமியார் பேசுவது போல விஷயங்களை அள்ளித்தெளித்திடுகின்றன....

இண்டராக்டிவ் என்பதை விட ப்ரீச்சிங் அதிகமாகவே காணக்கிடைக்கிறது....

கொஞ்ச நேரம் படித்தபிறகு ஏனோ ஒரு திடீர் சலிப்பு வந்து ஒட்டிக்கொள்கிறது....

இவ்ளோ தான் என்னோட விமர்சனம்....எனக்கு மட்டும்தான் இப்படி தோனுதா என்பது தெரியவில்லை, இருந்தாலும் எழுதிவிட்டேன்...

5 comments:

Mohandoss said...

இப்பத்தான் பார்த்தேன்.

எப்ப எழுதினீங்க இதை. உங்கள் விமர்சனத்திற்கு நன்றிகள், author is deadடாமாம்.

தப்பிக்க இப்படி ஒரு வழி. :)))))

PKS said...

// பி.கே.எஸ் போன்றவர்கள் அவரது எதுக்களின் மீது விமர்சனங்கள் வைக்கும்போது, ரொம்ப பெரிய ரைட்டர் போலிருக்கு என்று எனக்கு ஒவ்வாத குரூப்பில் வைத்து //

அய்யா, இது என்ன? என்னை வைத்துக் கும்மியா :-) அல்லது என்னைக் கும்மப் போகிறார்களா :-) நான் விமர்சனம் வைத்தால் அவர் பெரிய ரைட்டர் என்று எழுதியிருப்பதைப் பார்க்கும்போது உங்களைக் கும்மப் போகிறார்கள் என்றே தோன்றுகிறது. :-))

மோகன் எழுத்துக்கு அன்றிலிருந்து இன்றுவரை நான் வைக்கும் நிலையான விமர்சனம் இதுதான். "உங்களுக்குப் புகைப்படக் கலையும் ஓவியமும் நன்றாக வருகிறது. அதில் கவனம் செலுத்தலாம். புகைப்படத்திலிருந்து அப்படியே ஒளிப்பதிவு என்று நகர்ந்தால் (அவருக்குப் பிடித்த நடிகைகளை நேரடியாக ஜொல்லிய மாதிரியும் இருக்கும்.) திரையுலகத்திற்கு நல்ல ஒளிப்பதிவாளர் கிடைக்க வாய்ப்பிருக்கிறது."

ரவி said...

நேற்றுத்தான்...!!!!

ஆர்தர் கிளார்க்கை சொல்றீங்களா, இல்லை உங்களுக்கு பிடித்த ஆர்த்தர் சுஜாதாவை சொல்றீங்களா ?

:)))))

பி.கே.எஸ் சொன்னபிறகு தான் நியாபகம் வருது, உங்கள் புகைப்பட திறமைக்கு நான் பேன்...!!!

ரவி said...

கும்மி எல்லாம் இல்லைங்க, மனதில் பட்டதை எழுதினேன்...

குந்தவை' ஆல்பங்களை காட்டினால் பி.சி.சிரீராம் அல்லது கே.வி.ஏ கூட சேர்த்துப்பாங்க...

ஐ.டியை சைட்லெ வெச்சுக்கிட்டு உண்மையில இதுல இறங்கினா டாப்..!!!

அதுக்கு சென்னைப்பக்கமா ஆபர் வாங்கிட்டு கெளம்பவேண்டியது தான்..

ஆனா கன்னடத்துப்பைங்கிளியின் அம்புகளை சமாளிப்பது எப்படியோ ?????

வவ்வால் said...

செந்தழல்,

//பொதுவாக மோகன்தாஸ் எழுத்துக்களை பார்த்தால் ரொம்ப பழுத்த உலக அனுபவவாதியின் எழுத்துக்கள் போலிருக்கும்...இப்போ வவ்வால் எழுதுகிறாரே...//

இதுல என்னைக்கோத்துவிட்டு காமெடி ஆக்கிட்டிங்களே, இதுல ஏதோ உள்/வெளிக்குத்து இருக்கிறதா என் அந்தராத்மா சொல்லுது! ஏன் இந்த கொல வெறி!

அப்படியே வந்ததுக்கு நானும் மோஹன் கதைப்பற்றி ஒரு கருத்தை கக்கிட்டு போறேன்,

அவரது "narration" நன்றாக இருக்கும், ஆனால் கதையை கையாள்வது குமுதம் ஒரு பக்க கதைகளின் ஃபார்முலாவிலேயே இருக்கிறது(இது என்னோட மனப்பிராந்தியா). பெரும்பாலான கதைகள் படிக்கும் போதே எப்படிக்கதை போகும் என்பது பிடிப்பட்டு விடும். ஒரு வேளை அதனால் தானோ உங்களுக்கும் சீக்கிரம் சலிப்பு தட்டியதோ?

ஆனால் அதில் ஒன்றும் தப்பில்லை போக போக மெருகு ஏற்றிக்கொண்டு மாற்றிக்கொள்வார் என நினைக்கிறேன்.ஆரம்பத்திலேயே புதுமை பித்தன் ரேன்சுக்கு போகணும் என்று நாம் தான் அதிகம் எதிர்ப்பார்க்கிறோம் போல!

அதே போல அவரது இயற்கை, வெளிப்புற காட்சிகள் புகைப்படம் நன்றாக இருக்கும்.

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....