இலங்கை தமிழர்களுக்கு ஏன் டெங்ஷன் ?

கடத்தப்பட்டிருந்த மீனவர்கள் திரும்பிவிட்டார்கள்...சிலர் அது புலிகளின் செயல் என்று குற்றம் சாட்டுகிறார்கள்...சிலர் அதை மறுக்கிறார்கள்...ஆனால் ஓவர் டென்ஷன் ஆவது பல ஈழத்தவர்கள்...

புலிகள் கடத்தினால் என்ன, கடத்தாவிட்டால் என்ன...அவர்கள் திரும்ப வந்துவிட்டார்கள் தானே...ஏதோ ஒரு சின்னப்பையன் எங்களை கடத்தியது இலங்கை இராணுவம் என்று சொன்னால் சொல்லிவிட்டு போகட்டும்...

புலிகள் கூட அந்த சிறுவனின் கண்ணுக்கு இராணுவமாக தெரிந்திருக்கலாம்...அந்த சிறுவனுக்கு எது SLA / எது நேவி / எது புலிகள் என்று எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை...யூனிபார்ம் அணிந்த யாரும் அவனுக்கு அரசாங்க இராணுவ வீரனாக தெரிந்திருக்கலாம்...

அதை பிடித்து ஏன் தொங்க வேண்டும் ? இராஜீவ் கொலையையே அம்னீஷியா துணைகொண்டு மறந்துகொண்டுவரும் இந்த காலகட்டத்தில் இந்த சிறுபிள்ளைத்தனமான கடத்தல் நாடகத்துக்கு இந்திய உளவு அமைப்பான 'ரா' துணைபோயிருக்கும் என்பதும், இது கூட்டு சதி என்பது, முதிர்வான சொற்களாயில்லை...

விட்டுத்தள்ளுங்க...!!!!!

Comments

Anonymous said…
செந்தழலாரே.. தவறொன்றைச் செய்து விட்டுப் பிறகு அதை சோற்றுக்குள் பூசனிக்காயை மறைத்தாற்போல் மறைக்கப்பார்ப்பதும் அவர்களின் வாடிக்கை. தற்போது இணையப் பக்கங்கள் வேறு துணையிருக்கிறது மற்றும் கோழிப்பிரியாணி நிருபர்களுக்கும் பஞ்சமில்லை. ஆகவே அவர்களின் மறுப்புப் பிரச்சாரம் கனஜோராக நடக்கிறது. TamilCircle இணையப்பக்கத்தில் அதைப்பற்றி விளக்கியிருக்கிறார்.
//புலிகள் கடத்தினால் என்ன, கடத்தாவிட்டால் என்ன...அவர்கள் திரும்ப வந்துவிட்டார்கள் தானே.//

அப்ப எதுக்கு இந்தியாவும் சிறீ லங்காவும் இந்த விஷயத்தை தூக்கிப்பிடித்து பெரும் அரசியல் பண்ண வேண்டும்? வந்துட்டாங்கதானே? பேசாமல் விட்டுவிடலாம் தானே?


//புலிகள் கூட அந்த சிறுவனின் கண்ணுக்கு இராணுவமாக தெரிந்திருக்கலாம்...அந்த சிறுவனுக்கு எது SLA / எது நேவி / எது புலிகள் என்று எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை...யூனிபார்ம் அணிந்த யாரும் அவனுக்கு அரசாங்க இராணுவ வீரனாக தெரிந்திருக்கலாம்//

காட்டில் வைத்திருந்ததாக காசு வேண்டியவர்கள் சொன்னதுக்கும், வீட்டில் வைத்திருந்ததாக சிறுவன் சொன்னதுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் சாதாரணமானதா?

//சிறுபிள்ளைத்தனமான கடத்தல் நாடகத்துக்கு இந்திய உளவு அமைப்பான 'ரா' துணைபோயிருக்கும் என்பதும், இது கூட்டு சதி என்பது, முதிர்வான சொற்களாயில்லை...//

சிறுபிள்ளைத்தனமான மாலைதீவு ஆக்கிரமிப்பு நாடகத்தில் புளொட் அமைப்பு "ரா" வினால் தான் வழிநடத்தப்பட்டது என்பது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.

பிராந்தியத்தில் தன்னுடைய மேலாதிக்கத்தை நிலை நிறுத்த எவ்வளவு முடியுமோ அவ்வளவு அநியாயங்கள் செய்ய இந்தியா எப்போதும் தயாராயிருக்கிறது.

தனது சுயநலத்துக்காக எங்கள் உரிமைகளோடும், எங்கள் போர்ப்படையோடும் சீண்டும் இந்தியாவின் நாடகத்தைக்கண்டு டென்ஷன் ஆவதும், எதிர்ப்பினை முடிந்தளவு பதிவு செய்வதும் எங்கள் உரிமை.

உங்கள் ராணுவம், திறந்த வீட்டு நாய் மாதிரி எங்கள் நாட்டுக்குள் புகுந்து எங்கள் மக்களை கொலை செய்ததையும், எங்கள் தலைவர்களை கொலை செய்ததையும் கூடத்தான் மறந்து வருகிறோம்.
vasi said…
இவனுங்க பேச்சையெல்லாம் விட்டுதள்ளுங்க மயூரன்....

//வஞ்சனை பேய்கள் என்பார்.. இந்த மரத்தில் என்பார் அந்த குளத்தில் என்பார்..அஞ்சி அஞ்சி சாவார்...இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே...// மாப்ள உன்னொட bittu உனக்கே supera பொருந்துது...
//உங்கள் ராணுவம், திறந்த வீட்டு நாய் மாதிரி எங்கள் நாட்டுக்குள் புகுந்து எங்கள் மக்களை கொலை செய்ததையும், எங்கள் தலைவர்களை கொலை செய்ததையும் கூடத்தான் மறந்து வருகிறோம்.//

இந்தியராணுவம் அதன் வரலாற்றிலே எப்போதும் தானாய் எங்கேயும் சென்றதில்லை. ஜெயவர்த்தனே தலைமையிலான இலங்கை அரசு கெஞ்சி அழைத்ததின் பேரிலேயே அமைதி நிலைநாட்டுவதற்கு அனுப்பியதன் பலன் நல்ல தலைவனாகிய ராஜிவ் காந்தியை இழந்தது.
//இந்தியராணுவம் அதன் வரலாற்றிலே எப்போதும் தானாய் எங்கேயும் சென்றதில்லை. //

பங்களாதேசுக்கு வெத்தலை பாக்கு வெச்சா கூப்பிட்டாங்க?
Anonymous said…
\\இந்தியராணுவம் அதன் வரலாற்றிலே எப்போதும் தானாய் எங்கேயும் சென்றதில்லை. ஜெயவர்த்தனே தலைமையிலான இலங்கை அரசு கெஞ்சி அழைத்ததின் பேரிலேயே அமைதி நிலைநாட்டுவதற்கு அனுப்பியதன் பலன் நல்ல தலைவனாகிய ராஜிவ் காந்தியை இழந்தது. \\

What about Bangladesh!!!!
Who asked us to go there?
Luckily, Bangladesh operation was highly successful. Had it been a failure, would we ever consider going into another country?
//இந்தியராணுவம் அதன் வரலாற்றிலே எப்போதும் தானாய் எங்கேயும் சென்றதில்லை. ஜெயவர்த்தனே தலைமையிலான இலங்கை அரசு கெஞ்சி அழைத்ததின் பேரிலேயே அமைதி நிலைநாட்டுவதற்கு அனுப்பியதன் பலன் நல்ல தலைவனாகிய ராஜிவ் காந்தியை இழந்தது.//

அறிவுகெட்ட ஹரிஹரன்,
அமைதி நிலைநாட்ட சென்ற இடத்தில் கொன்று குவித்தார்களே. அதையும் ஜெயவர்த்தனே சொல்லித் தான் செய்தார்களோ. இந்திய ராணுவ தளபதி போல் பேசுகிறீர்.
Anonymous said…
//உங்கள் ராணுவம், திறந்த வீட்டு நாய் மாதிரி எங்கள் நாட்டுக்குள் புகுந்து எங்கள் மக்களை கொலை செய்ததையும், எங்கள் தலைவர்களை கொலை செய்ததையும் ...//

Yeah, we can kill our leaders and our people ourselves. India need not do that job. In fact we have been successful in doing that to eliminate whoever has an alternate opinion.

Popular Posts