கோவை வலைப்பதிவர் சந்திப்பு - தழலின் பார்வையில்

வலைப்பதிவர் சந்திப்புக்கு நான் சென்று சேர்ந்தபோது கிட்டத்தட்ட சந்திப்பு முழுமையாக ஆரம்பமாகியிருந்தது...அதனால் நான் பார்த்தவை கேட்டவை மட்டும் இந்த பதிவில்...

* பாமரன் அவர்கள் ஆறுமுகம் ஐயாவை எடுத்த பேட்டி பட்டாசு போல் வெடித்தது...தனக்கே உரிய குசும்புடன் பாமரன் பட்டையை கிளப்பினார்...லேட்டாக போய் மிஸ் பண்ணிவிட்டோமே என்று ஏங்க வைத்தது நான் பார்த்த ரெஸ்ட் ஆப் த இண்டர்வியூ...

* கேட்பரீஸ் பெர்க்ஸ் மற்றும் க்ரீம் பிஸ்கட்டுகள் சுற்றி வந்தன...அருமையானதொரு 'சாயா'வும் காலைச்சந்திப்பில் வழங்கப்பட்டது...

* பாலபாரதி ஆளுக்கொரு ஸ்க்ரிப்ளிங் நோட்டும் பேனாவும் கொடுத்தார்...மிகவும் உபயோகமாக இருந்தது...நான் அதில் நோட் செய்தது நிறைய...ஆனால் கூட்டம் முடிந்து வரும்போது மிஸ்பண்ணிவிட்டேன்...

* ஆறுமுகம் ஐயா கூறிய ஒரு கருந்து பலருக்கு உடன்பாடில்லை...அதாவது பாமரன் அவர்களுடைய கேள்வியான " கடந்த இருபதாண்டுகளில் சிறந்த இசையமைப்பாளராக யாரை கருதுகிறீர்கள்" என்ற கேள்விக்கு ஐயா "வித்யாசாகர்" என்றார்...பாமரன் சளைக்காமல் ஏன் ஏன் ஏன் என்று துளைத்தார்...ஐயாவின் பதில் என்னவென்றால் வித்யாசாகர்தான் இசையை முறையாக படித்தவராம்.....அப்போ இசை ராசாங்கம் நடத்திய இளைய ராஜா என்றொரு கேள்வி எல்லோருக்கும் எழுந்தது...எனக்கும் எழுந்தது...சிலர் கேட்டே விட்டார்கள்...நான் கேட்கவில்லை...(கேட்பரீஸ் பெர்க்ஸ் தின்றுகொண்டிருந்தேன்...)

* பின்நவீனத்துவத்துக்கு இங்கிலீஷில் Post Mordenizam என்று அறிமுகப்படுத்தினார் பேரா.ரமணி...வீடியோ காமிராவின் லைட் ஏ.சி குளுமையையும் மீறி நெற்றி வியர்வையுடன் பேசவைத்தது அவரை.....அவரது பத்து பக்க கட்டுரை வாசிப்பில் எனக்கு புரிந்தது "கட்டற்றது பின் நவீனத்துவம்"...ஆக வரையறைகளுக்குள்ளே வருவது பின்னவீனத்துவம் இல்லை என்றார்...ஆக பின்னவீனத்துவத்தையே வரையறுக்க முடியாதென்றார்.....அருமையான கட்டுரை...அவரது கையாலே வலையுலக பின்னவீனத்துவ வாதியான சுகுணா திவாகருக்கு ஒரு பின்னவீனத்துவ நினைவுப்பரிசை வழங்கவைத்தது மிகவும் சிறப்பு...!!!

* இரண்டாவது அமர்வுக்கு பிறகு எல்லோருக்கு பக்கத்து சைவ ஹோட்டலில் சாப்பாடு...ஒன்னும் சொல்லிக்கற மாதிரி இல்லைன்னாலும், தயிர்சாதம் நல்லா இருந்தது...லிவிங் ஸ்மைலுடன் சேர்ந்து சாப்பிட்டேன்...ஆங்காங்கே டேபிள்களில் வலைப்பதிவாளர்கள் ஆக்ரமிக்க, ஹோட்டலில் டோட்டல் சவுண்டு சில பல டெஸிபல்கள் கூடியது....இங்கே கையில் டோக்கன் கொடுக்கப்பட்டது...அவை உணவாக மாறியது...

* சிலபல தனிப்பட்ட வேலைகளுக்காக ராஜாவனஜுடன் வெளியே சென்றுவிட்டு திரும்புகையில் சிரில் அலெக்ஸ் வீடியோ கான்பரன்ஸில் கதைத்துக்கொண்டிருந்தார்...

வேறு தனிப்பட்ட வேலைகள் இருந்ததால் அனைவரிடமும் சொல்லிவிட்டு அப்பீட் ஆகிவிட்டேன்...

குறிப்பிட்டு சொல்லும்படியான சில பாய்ண்ட்ஸ்..

* வாத்தியார் சுப்பைய்யா மிகவும் இளமையாக தெரிகிறார்...கணீர் குரலில் பேசினார்...என்னுடைய வலைப்பதிவின் மூலம் செய்யப்படும் சேவைக்காக பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்....மிகவும் கூச்சமாக இருந்தது...

* மா.சிவக்குமார் மிகுந்த உற்சாகத்துடனிருந்தார்...ரெண்டு பூஸ்ட் சாப்பிட்டதுபோல, ஆரம்பத்தில் இருந்த அதே உற்சாகத்துடன் கடைசிவரை இருந்தார்...

* வினையூக்கியை மேலும் மொக்கை சிறுகதைகள் எழுதுமாறு கேட்டுக்கொண்டேன்...கண்டிப்பாக படிக்கிறேன் என்றும் ஓட்டி கதைத்தேன்...ச்ச்ச்சும்ம்மா செல்லம்...நீ எழுது கண்ணு....

* சென்ஷி டெல்லியில் இருந்து மொக்கைக்காகவே வந்திருக்கிறார்...படு ஒல்லியாக நரம்படி நாராயணன் மாதிரி இருக்கிறார்...ஆட்டுக்கால் சூப்பு மற்றும் நெஞ்செலும்பை ஒரு மாதம் சாப்பிட்டால் தேறும் வாய்ப்பு உண்டு...!!!

* எழுத்தாளர் பாமரன் துள்ளலாகவும், குசும்புடனும் எல்லோருடனும் கதைத்து, அனைவர் மனதிலும் ஒட்டிக்கொண்டார்...எந்த பந்தாவும் இல்லாத, சமூக ப்ரக்ஜை உடைய இவர்போன்ற எழுத்தாளர்கள் வலையுலகில் நிறைய உலாத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்ள நினைத்து, கேட்காமலேயே விட்டுவிட்டேன்...

* ராஜாவனஜ் கோவைக்காரர் ஆதலால் வழக்கம்போல ஊர்ப்பெருமை மற்றும் ஊரை விட்டுக்கொடுக்காத தன்மையில் இருந்தார்...கோவையில் தன்னுடைய கால் படாத தெருவே இல்லை என்றார்....கொள்கைக்குன்று...!!

* பாலபாரதி ஏதாவது பேசுவார், காலை வாரலாம் என்று சுமார் இருபது பேர் காத்துக்கொண்டிருப்பது போல் தோன்றியது...(பா.க.ச)...சந்திப்பில் இருந்தது இருபது பேர் தெரியுமில்லையா..தொழில் நுட்ப அறிவில் நல்ல முன்றேற்றம்...ஸ்கைப், வெப் காமிங் சேட் மற்றும் நிகழ்ச்சியை ஆர்க்கனைஸ் செய்வது என்று பம்பரமாக சுழன்றார்...

* தி ஹிந்து நாளிதழின் ரிப்போர்ட்டர் சுபா செய்தி சேகரிக்க வந்திருந்தார்...ரிலையன்ஸ் ப்ரஷ் மற்றும் உழவர் சந்தை தொடர்பான விவாதம் நடந்தபோது பொறுக்கமாட்டாமல் ஆட்டையில் அவரும் கலந்துகொண்டார்...பிறகு ஸ்மைல் மற்றும் வாத்தியார், மற்றும் மா.சி, பாலா பெயர்களை நோட் செய்து தனக்கான குறிப்புகளை தயாரிக்க எல்லோரிடனும் ஒரு ரவுண்டு அளவளாவினார்...

* மோகந்தாஸ் கோவை வரை பைக்கில் வந்திருக்கிறார்...பொறாமையாக இருந்தது...தன்னுடைய போனை வைத்து நிகழ்ச்சியை படம்பிடித்தவாறே இருந்தார்...அவ்வப்போது கேள்விகளையும் வீசினார்...தலைமுடியைத்தான் எப்போ வெட்டப்போறாருன்னு தெரியல...

* லிவிங் ஸ்மைல் ஆச்சர்யம் தந்தார்...தெளிவாக பேசினார்...ஒரு எல்.ஜி செல்பேசி மதுரைக்கு ராம் மூலமாக அனுப்புகிறேன் என்று கமிட் செய்துகொண்டேன்...

* நாமக்கல் சிபி ஏமாற்றினார்...அனுசுயா வராமல் ஏமாற்றினார்...தமிழ் பயணி பயணத்தை வேறு திசையில் நடத்திவிட்டார் போலிருக்கு...இருந்தாலும் அனுசுயா மற்றும் தமிழ்பயணியை நானும் ராஜாவனஜும் சென்று அன்னபூர்னா ஹோட்டலில் கண்டுகொண்டு அவர்கள் ஸ்பான்ஸர் செய்த அருமையான காபியை உறிஞ்சிவிட்டு மீண்டும் வலைப்பதிவர் கூட்டம் நடக்குமிடம் வந்தோம்...

* நிகழ்ச்சி முடிந்து வாத்தியார் துள்ளலாக தன்னுடைய ஸ்கூட்டியிடம் சென்றார்...பாமரன், தியாகு, பாலா, ராஜாவனஜ் போன்றவர்கள் கதைத்துக்கொண்டிருக்க பாய் சொல்லி நான் விரைந்தேன்...

இங்கே இந்த அருமையான கூட்டத்தை ஏற்பாடு செய்து, நோட்டுப்புத்தகம் முதல் ஏசி ஹால் வரை, முற்றிலும் வீடியோ மற்றும் மீடியா கவரேஜ், டீ, காபி, மதிய உணவுக்கு டோக்கன் முதல், தங்கும் இடம் வரை தெளிவாக ஏற்பாடு செய்த ஒருவரால் இதில் கலந்துகொள்ள முடியாமல் உடல்நலன் குன்றிவிட்டது தான் வருத்தம்....!!! இப்போது பரவாயில்லையாம்...இருந்தாலும் அவரை பார்க்க முடியலையே....அவர்தான் ஓசை செல்லா...!!!

இவ்ளோதான் என்னோட வியூஸ்...!!!

Comments

தகவல்களை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி...
Anonymous said…
ok coool
சுருக்கமாகவும் தெளிவாகவும் இருக்கிறது.

நன்றி.
ஓசை செல்லாவின் உடல் நலம் விரைவில் குணமடைய பிரார்த்திப்போம்.
// லிவிங் ஸ்மைல் ஆச்சர்யம் தந்தார்...தெளிவாக பேசினார்...///

அடிங்!!

///ஒரு எல்.ஜி செல்பேசி மதுரைக்கு ராம் மூலமாக அனுப்புகிறேன் என்று கமிட் செய்துகொண்டேன்...//

இருந்தாலும் இந்த ஒரு வார்த்திக்காக மன்னிச்சிட்டேன்!! சீக்கிரமா அனுப்புங்க தழல், இப்பவே என்னோட நோக்கியா1100 ரிப்பேராத்தான் கெடக்கு!!

அப்பிடியா சென்னாயில ஒரு நல்ல வேலயும்.
நீங்க பாட்டுக்கு சொல்லிக்காம கொல்லிக்காம கிலம்பிட்டீக!!! :) :)
தல, நல்ல வியூஸ்..
அடப்பாவி மனுசா... இவ்வளவு கவனித்தீராஆஆஆஆஆஆ?!

:(

நான் தான் சரியாக எந்த நிகழ்வையும் கவனிக்க முடியாமல் போயிடுச்சு.

நல்ல கவர் பண்ணி இருக்குங்கீங்க!
myspb said…
விடுபட்டவை தகவல்கள் நன்றாகவே இருந்தது ரவி சார். அற்புதம். வாழ்த்துக்கள்.
Anonymous said…
/பின்னவீனத்துவம் இல்லை என்றார்...ஆக பின்னவீனத்துவத்தையே வரையறு///

ந வ கரெக்ட் பண்ணுய்யா..பதிவுஎழுதுறாராம்
உங்க பதிவப் பாத்தா நீங்க 'பசித்து' மட்டும் இருந்திருக்கீங்கன்னு தெரியுது.
:)
தகவலுக்கு நன்றி.
ம்.. சந்தோஷம்..

உண்மைத்தமிழன் ஒருத்தன் செந்தழல்ரவின்னு ஒருத்தர் யாரு, யாருன்னு எல்லார்கிட்டேயும் கேட்டுக்கிட்டே இருந்தார்.. தெரியாதா தம்பி..?
விவரங்களுக்கு நன்றி,

ஓசை செல்லாவின் உடல் நலமடைய இறைவனை வேண்டுகிறேன்

தமிலரின் தேசியக் கொடி
(National Flag of Tamilar)
http://gvetrichezhian.tumblr.com/

தமிலு மொலியின் னோக்கம் (Purpose of the Tamilu Language)
http://vetrichezhian9.wordpress.com/2013/04/29/3/

எலுத்துச் சீர்மய் (Character Reform):
http://blogs.rediff.com/ulikininpin14/2013/05/08/azaaaaaaasa-asaaaaaa-character-reform/


Popular Posts