Monday, May 21, 2007

சோத்துக்கு பிச்சையெடுக்கும் ஆ.வி

ஆ.வி என்றால் என்ன பத்திரிக்கை என்று உங்களுக்கு தெரியும்...குமுதத்துக்கு போட்டியாக தமிழக்கத்தில் வெளிவரும் ஒரு இதழ்...

சமீபத்தில் மதுரையில் பத்திரிக்கை சுகந்திரம் கொளுத்தப்பட்டது அனைவருக்கு தெரியும்...அதில் மூன்று அப்பாவி உயிர்கள் பறிபோனதும் அறிவோம்...

ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றாக கருதப்படும் பத்திரிக்கையை - அதன் ஊழியர்களை ரவுடியிஸமும் பாஸிஸ வெறியும் தீ நாக்குகளை கொண்டு விழுங்கிக்கொண்டது...

ஆனால் அந்த காயம் புரையோடிப்போகவும் இல்லை, வழியும் ரத்தம் நிற்கவுமில்லை...அதற்கு முன் ஆ.வி போன்றதொரு பத்திரிக்கை, "அழகிரி வீட்டில் தயாநிதி" என்று பத்திரிக்கையின் முன்பக்கத்தில் போட்டு விற்பனைக்கு கொண்டுவருகிறது...

இது மு.க.அழகிரி அவர்களின் மகன் துரை தயாநிதியை பற்றியது...சிறு குழந்தை கூட சொல்லிவிடும் இது பத்திரிக்கையை விற்பனை செய்வதற்கான ஒரு ஸ்டண்ட் என்று...

அல்லது குங்குமத்தின் வளர்ச்சியை கண்டு வரும் வயிற்றெரிச்சலினால் வந்த விளைவு, குனிந்திருக்கும்போது கொஞ்சம் குட்டிக்கொள்வோமே, இனியெப்போது குட்டப்போகிறோம் என்ற சாடிச மனப்பிறழ்வு என்று கூட கொள்ளலாம்...!!!

த்த்த்தூத்தேரி...இதெல்லாம் ஒரு பொழப்பு...இதுக்கு பிச்சையெடுக்கலாம்...!!!

8 comments:

வெங்கட்ராமன் said...

//////////////////////////
த்த்த்தூத்தேரி...இதெல்லாம் ஒரு பொழப்பு...இதுக்கு பிச்சையெடுக்கலாம்...!!!
//////////////////////////

தல பின்னீட்டிங்க. இதப் படிச்சா கூட இவிங்களுக்கு சொரண வராது.

Anonymous said...

உங்கள் தலைப்பிற்கும் ஆ.வி மேல் கூறும் குற்றச்சாட்டிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனாலும் நீங்க இவ்வளவு உணர்ச்சி வசப்படக்கூடாதுங்க.
- விபின்

கார்மேகராஜா said...

///அதற்கு முன் ஆ.வி போன்றதொரு பத்திரிக்கை, "அழகிரி வீட்டில் தயாநிதி" என்று பத்திரிக்கையின் முன்பக்கத்தில் போட்டு விற்பனைக்கு கொண்டுவருகிறது...///

என்ன கொடுமை சரவனன்?

ச.மனோகர் said...

ஆனந்த விகடன் இந்த மாதிரி மூன்றாம் தர வியாபார யுக்தியை கையாண்டது கேவலமானது.அது குறித்த உங்கள் விமர்சனம் நியாயமானது.. தேவையானதும் கூட..

Hariharan # 03985177737685368452 said...

//"அழகிரி வீட்டில் தயாநிதி"//

இப்படித் தலைப்பு வைத்தது கவன ஈர்ப்புக்கு. இப்படியான தலைப்பைக்கூட காலத்தின் கட்டாயம்னு விட்டுவிட முயற்சிக்கலாம். வாரிசுப்போட்டி நிறைந்த கருணாநிதி குடும்பத்தில் இருக்கும் ஏகப்பட்ட நிதிகளில் ஒரு நிதி இன்னொரு நிதியைச் சந்திப்பது தமிழ்நாட்டு மக்களுக்கு (நல்ல) செய்தி!!!

ஆனால் இங்கு தலைப்பை விட கட்டுரையின் பொருள், கோணம் மிகவும் கண்டனத்துக்குரியது!

ஆனால் மூன்று இளைஞர்களை தீக்குண்டுகள் எறிந்து கொன்று வெறியாட்டம் போட்ட அஞ்சாநெஞ்சன் அழகிரியைப் பாசமிக்க தந்தைஎனும் கோணத்தில் கட்டுரை வெளியிட்டது எச்சக்கலைத்தனம் தாண்டிய எரிகிற வீட்டில் பீடி பற்ற வைக்கும் அயோக்கியத்தனமாகவே பார்க்கிறேன்.

தமிழ்நாட்டுப் பத்திரிக்கைகள் பசையான ஆளும் கட்சிக்கு பச்சையான அடிவருடித்தனத்துடன் இருந்துகொண்டு சமூகத்தின் நான்காம்தூண் என்று பேசுவது அக்மார்க் வெட்கம் கெட்ட செயல்.

//சமீபத்தில் மதுரையில் பத்திரிக்கை சுகந்திரம் கொளுத்தப்பட்டது அனைவருக்கு தெரியும்//

இதில் பத்திரிக்கை சுதந்திரம் என்பது போர்வை. நடந்தது ஒரு குடும்பத்தின் வாரிசு அதிகாரப்போட்டி, கடைந்தெடுத்த தனிநபர் சுயநலம். ஆனால் இதில் மடிந்தது நம்மை மாதிரி சாமானியக்குடும்பத்து மகன்கள் மூவர்!

Anonymous said...

கன்னாபின்னாவென கனடாவில் இருந்தும் பித்தம் தெளியாத நிலையில் சத்யம் கம்ப்யூட்டர்ஸில் இருந்தும் திட்டி அனானி பின்னூட்டம் இடும் அன்பர்களுக்கு...

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்...ஓடிப்போயிருங்க...

Anonymous said...

125.17.25.8 இவன் யாரு ?

Anonymous said...

செந்தழல் ரவி said...
உண்மை என்னன்னா, பல திரைப்படங்களும் நகைச்சுவை காட்சிகளும் அருமையாக ஓப்பன் செய்ய முடியுது...
///

http://www.tamilsoundz.com/

http://lollu-sabha.blogspot.com/

http://www.01tamil.com

http://www.apnicommunity.com/

http://www.tamilrules.com


ஹி ஹி



M

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....