பின்னவீனத்துவாதியின் பிறாண்டல்கள்...

நான் எனக்கு தெரிஞ்ச ஒரு பின்னவீனத்துவாந்தியை...ச்ச்சே...வாதியை சந்திக்க திட்டம் போட்டேன்...டாஸ்மாக் வரச்சொல்லியிருந்தார்...அரக்கப்பரக்க போனபோது அவர் அங்கில்லை....முந்தாநாள் சாப்பிட்ட அவிச்ச முட்டை அழுகிய முட்டையாயிருந்ததால் அவர் வயிற்றுக்கோளாறு காரணமாக அவருடைய நன்பரை அனுப்பியிருந்தார்...அவருடன் எனக்கு அதிகம் பேச்சில்லை எனினும், எனக்கு பின்நவீனத்துவ நன்பரின் வவுத்து நோவு குறித்து அதிகம் கருத்தில்லை எனினும், அவரை பற்றியதான சில கருத்தாடல்கள் அங்கே நடந்தேறின...

நான் ஒரு பைதவுசனோடும், ஒரு எம்.ஸி விஸ்கி க்வாட்டரோடும் செட்டிலாகியிருந்தேன்...தோழர் அரை ஒயினுக்கே மப்பாகி அவரைப்பற்றி சொல்லிக்கொண்டிருந்தார்...எனக்கே சில விஷயங்கள் விளங்கவில்லை எனினும், அந்த உரையாடலை இங்கே பதிவுசெய்கிறேன்...என்றாவது ஒருநாள் எனக்கு பின்னவீனத்துவவாந்திகள் பற்றி விளங்கித்தொலையக்கூடும்...அப்போது இதை மீண்டும் படித்து புரிந்துகொள்வேன்...

செந்தழல் ரவி: தோழர், வரகுணா வர்ர்லியா ?

தோழர் : இல்லைங்க தோழர். அவருக்கு வவுத்து நோவு..புட் பாயசம்..அதனால வரலை. அதுக்கு பதிலாத்தான் என்னை அனுப்பினார்.

செந்தழல் ரவி: தோழர், புட் பாயசம்னு சொன்னீங்களே...அதுவா வவுத்து நோவுக்கு காரணம் ? பாயசம் நல்லாத்தானே இருக்கும்...ஏதாவது மட்டமான ஹோட்டல்ல உக்காந்து மாட்டிக்கிட்டாரா ?

தோழர்: அதாங்க சாப்பாடு கெட்டுப்போனா வருமே...அது...

செந்தழல் ரவி: ஓ புட் பாய்சனா ? (கிழிஞ்சுது கிருணகிரி..இவன் தாலியறுக்கப்போறன் இன்னைக்கு)

தோழர்: ஹி ஹி ஆமாம் தோழர்...கொஞ்சம் பேடு எக்கு சாப்பிட்டுட்டார்...

செந்தழல் ரவி: என்னாது...!!!!!!!!!! பேடு வெச்ச எஃகு சாப்பிட்டாரா ?

தோழர் : இல்லை தோழர்...அழுவுன முட்டைன்னு சொல்லவந்தேன்...

செந்தழல் ரவி: ப்ளீஸ் நாம தமிழ்லே பேசலாமே...கொஞ்சம் வரகுணா பற்றி சொல்லுங்களேன்..

தோழர்: அவர் பின்னவீனத்துவ வாதி...

செந்தழல் ரவி: சரி...அப்படின்ன்னா என்னன்னு எனக்கு வெளங்கல...கொஞ்சம் விளக்கமாத்தான் சொல்லுங்களேன்....

தோழர்: அவர் நல்ல வார்த்தையையும் கெட்ட வார்த்தையையும் ஒரே தட்டுல தான் வைப்பார்..

செந்தழல் ரவி: யோவ் வார்த்தையை எப்படிய்யா தட்டுல வைக்கமுடியும் ?

தோழர் : நான் ஒரு எக்ஸாம்புளுக்கு சொன்னேன்...

செந்தழல் ரவி: ஓ..இன்னும் கொஞ்சம் புரியும்படி சொன்னீங்கன்னா நல்லாருக்கும்...

தோழர்: அவருக்கு நல்ல வார்த்தை, பொல்லாத வார்த்தை, கெட்ட வார்த்தை, அசிங்க வார்த்தை என்று எந்த வார்த்தையும் கிடையாது...

செந்தழல் ரவி: ஓ...அப்புறம்...

தோழர்: அவருக்கு நல்லவன்,கெட்டவர், டவுசர் போட்டவன், கொண்டை போட்டவன், திருநீறு வெச்சவன், குல்லா போட்டவன், நாமம் போட்டவன், நாஷ்டா துன்னவன், ப்ளேடு போட்டவன், ஜட்டி அவுந்தவன், எல்லாரும் ஒன்னு..

செந்தழல் ரவி: டேய் எல்லாரும் எப்படிடா ஒன்னாக முடியும் ?

தோழர்: தோழர், கொஞ்சம் மரியாதையா பேசுங்க...நாங்க கம்முனிஸ்டு...எழவு ஊட்ல கூட சுயமரியாதை இல்லைன்னா பொணத்துக்கிட்ட கூட கோச்சுக்கிட்டு வெளிய வந்துருக்கோம்...பார்த்து வார்த்தைய உடுங்க...

செந்தழல் ரவி: டேய் நீதாண்டா நல்ல வார்த்தை, கெட்ட வார்த்தை அப்படீன்னு எதுவும் இல்லைன்ன ?

தோழர்: அது அவருக்கு...எனக்கு சொரணை, சூடு எல்லாம் இருக்கு...

செந்தழல் ரவி: சரிடா ஃபாடு, இனிமே உன்னை மரியாதையாவே கூப்பிடுறேன்...மேல சொல்லு..

தோழர்: அவர் யாரையும் நம்ப மாட்டார்....காசி, சுந்தரமூர்த்தி, சுந்தரலிங்கம், ராமலிங்கம் அப்படீன்னு யாரு வந்தாலும் அவங்களை தூக்கி உடைப்புல போடுவாரு...அட அவ்வளவு ஏன், அவர் அடிக்குற கோல்டு ப்ளாக் பில்டர் சிகரெட்டையே ராயபேட்டை பொது மருத்துவமனையில வேலை செய்யுற தோழரிடம் கொடுத்து எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்து, அந்த ரிசல்ட் பாத்த பிறகு தான் இழுப்பார்...

செந்தழல் ரவி: ஏன் அப்படி ? ஒன்னும் வெளங்கலியே ?

தோழர்: பின்ன, அதுல எவனாவது தூரோக தோழர் வெடிகுண்டு வெச்சுட்டான்னா ? சே கூவாராவை அப்படித்தானே துரோக தோழர்கள் காட்டிக்கொடுத்து கொலைசெஞ்சாங்க..

செந்தழல் ரவி: டேய் நிறுத்துடா வெண்ணை...தோழர் அப்படீங்கற...துரோகம் அப்படீங்கற..எப்படிடா துரோகம் செய்யுறவனை தோழர்னு கூப்பிடமுடியும் ? அப்புறம் இன்னொரு விஷயம்...

அது சே கூவாறா இல்லை...சே க்வேரா...கூவுறதுக்கென்ன அவர் குயிலா ?

தோழர்: நாங்க வாசிச்சதுல அப்படித்தான் இருக்கு...வேனுமுன்னா திராவிடர் கழக கையேட்டுல காமிக்கறேன்...பாக்குறீங்களா ?

செந்தழல் ரவி: ஒன்னும் வேணாம்...வரகுணா பத்தி சொல்லுங்க...

தோழர்: அதுக்கு முன்னால எங்க தோழர் ஏஞ்சலினா கோயிந்தசாமி எழுதிய புத்தகம் ஒன்றை உங்களுக்கு பரிசா தரச்சொல்லி சொன்னார் வரகுணா. அதை வாங்கிங்கங்க (ஜோல்னா பையை பிரித்து அழுக்கு பிடித்த புத்தகம் ஒன்றை எடுத்து தருகிறார்)...நல்லா வாசிங்க...வாசிப்பு தான் மனிதன் மனிதனாக உதவும்...மிருகம் மிருகமாக உதவும்..

செந்தழல் ரவி: அப்படியே டேபிள் மேல வைங்க தோழர், போவும்போது எடுத்துக்கறேன்...அப்புறம் இன்னொரு விஷயம்...யாரையும் நீங்க மதிக்கமாட்டீங்கன்னு சொல்றாங்களே...அது எந்த அளவுக்கு உண்மை...

தோழர் : அது ஒருவகையில் உண்மைதான் தோழர்..எங்க எழுத்தால மாலனை மதிக்காம அடிப்போம்...பத்ரியை பாக்காம அடிப்போம்...சுந்தர ராமசாமியை தூக்கி போட்டு மிதிப்போம்...சுஜாதாவை சொழட்டி சொழட்டி அடிப்போம்...இது மூலமா நாங்க எங்க எழுத்து திறமையை காட்டுவோம் தோழர்..

செந்தழல் ரவி: நல்லா காட்டீட்டீங்க போங்க...அதை விடுங்க...வரகுணாவை பற்றி சொல்லுங்க...

தோழர்: அவர் வாழ்க்கையை அவர் போக்கிலே வாழ்வார்...சாலையில் இடது பக்கம் திரும்பனும்னா அவர் திரும்ப மாட்டார்...நேராத்தான் போவார்...அப்புறம் ஒரு ரைட் அடிச்சு மறுபடி ஒரு லெப்ட் அடிச்சு, அப்புறம் ஒரு யூ அடிப்பார்...அப்போ ஆட்டமேட்டிக்கா அவர் போற எடத்துக்கு போயிருவார்...

செந்தழல் ரவி: டேய் ஏண்டா உளருற ? லெப்ட்ல போவனும்னா லெப்ட்ல தாண்டா போவனும்...அதுல எப்படிடா மாறமுடியும் ?

தோழர் : அதுக்கு பேருதாங்க தோழர் கட்டுடைத்தல்...

செந்தழல் ரவி: என்னது கட்டுடைக்கறீங்களா ? அப்படீன்னா ?

தோழர்: சொல்றேன் கேளுங்க...( ஜோல்னா பையில் இருந்து ஒரு புத்தகத்தை பிரித்து வாசிக்கிறார்) : வரைமுறைகள் என்பது இல்லாததொரு வாழ்க்கையை தனக்குத்தானே தீர்மானித்தல், எதை நம்புவது எதை நம்பக்கூடாதென்ற கட்டுகள் இல்லாமல், எதையும் நம்புதல், எதையும் நம்பாமலிருந்தல், தீர்மானங்களின் மீதான அனுமானங்களை விருப்பு வெறுப்புகளின் மீதான பார்வையை தவிர்த்து, வெகுஜனக்கூட்டங்களின் பொதுப்பார்வையை தவிர்த்து பெருவெளியில் காணுதல்...மேலும்...

செந்தழல் ரவி: தோழர், ஒரு நிமிஷம்...நான் அப்படியே வெளிய போயி பிஸ்ஸடிச்சுட்டு, ஒரு பாக்கட் சிகரேட் வாங்கிக்கிடு வந்துடறேன்...நீங்க எனக்கு இன்னொரு ஆம்லேட் சொல்லிருங்க..இந்தா டூ மினிட்ஸ்ல வந்துடறேன்...ஓக்கே...

தோழர்: ஓக்கே தோழர், நோ ப்ராப்ளம்..

பாரை விட்டு வெளியே வந்த செந்தழல் ரவி - சொல்லிக்காம கொள்ளிக்காம அப்படியே நூறு மீட்டர் முன்னால் நின்ன ஷேர் ஆட்டோவில் ஓடிப்போய் தொற்றுகிறார்...

"சார் எங்க போவனும்...? "

"வண்டி நிக்கிறவரைக்கும் போவனும்..வழியில டாஸ்மார் இருந்தா நிப்பாட்டிக்க...சுத்தமா எறங்கிருச்சி..."

Comments

ravi en indha kolai veri :-))))))))
/ஏஞ்சலினா கோயிந்தசாமி/

தோழர்.. இந்த பெயர் நல்லாயிருக்கு. நல்ல பிஹரா..? கோயிந்தசாமி அப்பா பெயர்தானே
நண்பர் ரவி,
யாரையும் சீண்டுவதால் நல்லது நடந்தவிடாது.
பதிவில் என்னவோ சொல்லுகின்றீர், எனக்கு முழுமையாக புரியவில்லை…
///ravi en indha kolai veri :-))))))))

Thursday, September 13, 2007
///

ஆட்டோமேட்டிக்கா வருது...என்ன செய்ய ?
டிஸ்கி: இதை படித்துவிட்டு நன்பர்கள் ஆரும் கோச்சுக்கவேனாம்...

ச்ச்சும்மா...லூலூவாயி...
OSAI Chella said…
ஆமா,என்னோட ஒயினை ஏப்பா பிச்சினையில நுழைக்கிற! பக்கத்துல இருக்கிற தம்பி ... ரவி அண்ணாத்த உங்களுக்குத்தேன் உள்குத்து வைச்சிருக்கின்னு கலாய்க்கிறான்! ஆனா பாவம்ப்பா, இப்படி எல்லாரும் டவுசர அவுத்தா அவங்கஎங்கணதான் போவாங்க! பின்னவீனத்தை கட்டுடைக்கும் செந்தழல் ரவி வாழ்கன்னு பின்னாடி சவுண்டு! யாருன்னா பாத்தா பலவருசமா புரியாம மண்டைய உடைச்சுக்கிட ஒரு ஜென்மம்!
///தோழர்.. இந்த பெயர் நல்லாயிருக்கு. நல்ல பிஹரா..? ///

நல்ல பிகர்தான்...கேத்தரின் பழனியம்மாளின் சகோதரி. இவர். மேல்விவரம் வரவணை தருவார்...:))
///நண்பர் ரவி,
யாரையும் சீண்டுவதால் நல்லது நடந்தவிடாது.
பதிவில் என்னவோ சொல்லுகின்றீர், எனக்கு முழுமையாக புரியவில்லை… ///

நன்பர் மருதமூரான்...

புதியதாக இந்த களம் காண்கிறீர். வாழ்த்துக்கள்...

ஆக்சுவலி இது ரத்த பூமி...

கொஞ்சநாள் போகட்டும்...புரியும்..
////ஆமா,என்னோட ஒயினை ஏப்பா பிச்சினையில நுழைக்கிற! பக்கத்துல இருக்கிற தம்பி ... ரவி அண்ணாத்த உங்களுக்குத்தேன் உள்குத்து வைச்சிருக்கின்னு கலாய்க்கிறான்! ஆனா பாவம்ப்பா, இப்படி எல்லாரும் டவுசர அவுத்தா அவங்கஎங்கணதான் போவாங்க! பின்னவீனத்தை கட்டுடைக்கும் செந்தழல் ரவி வாழ்கன்னு பின்னாடி சவுண்டு! யாருன்னா பாத்தா பலவருசமா புரியாம மண்டைய உடைச்சுக்கிட ஒரு ஜென்மம்! ///

நாம அவுக்காம வேற ஆரு அவுக்கறதாம் ? உங்களுக்கு பக்கத்துல உக்காந்திருக்கவருக்கு இந்த ஆப் ஒயின் மேட்டர் தெரியுமா ? அப்ப என்ன அது வரவணையா ?
தம்பி said…
:)))

செம காமெடி
தன்னிலை விளக்கம் :

இந்த பதிவில் வரும் வரகுணா யாரென்று எனக்கு தெரியாது. ஆனால் தோழர் நான் தான். நான் சொன்ன சில டயலாக்குகளை தோழர் என்ற கதாபாத்திரம் ஒப்பித்திருக்கிறது :-((((
வருகைக்கு நன்றி தம்பி...!!!!
///இந்த பதிவில் வரும் வரகுணா யாரென்று எனக்கு தெரியாது. ஆனால் தோழர் நான் தான். நான் சொன்ன சில டயலாக்குகளை தோழர் என்ற கதாபாத்திரம் ஒப்பித்திருக்கிறது :-(((( ///

பேனை பெருச்சாளியாக்குவோம்...

பெருச்சாளியை பெருமாளாக்குவோம்...

பெருமாளை தேர்தலில் நிறுத்தி கவுன்சிலராகவும் ஆக்குவோம்...
theevu said…
//செந்தழல் ரவி: டேய் ஏண்டா உளருற ? லெப்ட்ல போவனும்னா லெப்ட்ல தாண்டா போவனும்...அதுல எப்படிடா மாறமுடியும் ?

தோழர் : அதுக்கு பேருதாங்க தோழர் கட்டுடைத்தல்...//

:) :)
அமீரக அல்லக்கை முண்டம் ஒன்று அனுப்பிய பின்னூட்டம் ரிஜக்ட் செய்யப்படுகிறது.....
//OSAI Chella said...
ஆமா,என்னோட ஒயினை ஏப்பா பிச்சினையில நுழைக்கிற! பக்கத்துல இருக்கிற தம்பி ... ரவி அண்ணாத்த உங்களுக்குத்தேன் உள்குத்து வைச்சிருக்கின்னு கலாய்க்கிறான்! ஆனா பாவம்ப்பா, இப்படி எல்லாரும் டவுசர அவுத்தா அவங்கஎங்கணதான் போவாங்க! பின்னவீனத்தை கட்டுடைக்கும் செந்தழல் ரவி வாழ்கன்னு பின்னாடி சவுண்டு! யாருன்னா பாத்தா பலவருசமா புரியாம மண்டைய உடைச்சுக்கிட ஒரு ஜென்மம்!//

//லக்கிலுக் said...
தன்னிலை விளக்கம் : இந்த பதிவில் வரும் வரகுணா யாரென்று எனக்கு தெரியாது. ஆனால் தோழர் நான் தான். நான் சொன்ன சில டயலாக்குகளை தோழர் என்ற கதாபாத்திரம் ஒப்பித்திருக்கிறது :-((((//

//செந்தழல் ரவி said...
பேனை பெருச்சாளியாக்குவோம்... பெருச்சாளியை பெருமாளாக்குவோம்... பெருமாளை தேர்தலில் நிறுத்தி கவுன்சிலராகவும் ஆக்குவோம்...//

இன்னும் என்னென்ன கருமமெல்லாம் வெளில வரப் போகுதோ தெரியலை.. ஒரு குவார்ட்டருக்கே இப்படியா..?

தம்பி ரவி சனிப்பெயர்ச்சி நடந்திருச்சுன்னு ஊரெல்லாம் ஒரே பேச்சு.. பார்த்து நடந்துக்க..
///இன்னும் என்னென்ன கருமமெல்லாம் வெளில வரப் போகுதோ தெரியலை.. ஒரு குவார்ட்டருக்கே இப்படியா..?

தம்பி ரவி சனிப்பெயர்ச்சி நடந்திருச்சுன்னு ஊரெல்லாம் ஒரே பேச்சு.. பார்த்து நடந்துக்க..////

யாருப்பா இது..எந்த பதிவு எழுதினாலும் ஜாக்கிரதையா இருந்துக்க, அஜாக்கிரதையா இருக்காத, தண்ணியில கண்டம் என்று கம்பியூட்டர் ஜோசியம் மாதிரி பெனாத்திக்கிட்டே இருக்கறது ?
பதிவை ரசிச்சதுக்கு நன்றி தீவு...!!!
//அவர் பின்னவீனத்துவ வாதி...//

//அவர் நல்ல வார்த்தையையும் கெட்ட வார்த்தையையும் ஒரே தட்டுல தான் வைப்பார்..//

//அவருக்கு நல்லவன்,கெட்டவர், டவுசர் போட்டவன், கொண்டை போட்டவன், திருநீறு வெச்சவன், குல்லா போட்டவன், நாமம் போட்டவன், நாஷ்டா துன்னவன், ப்ளேடு போட்டவன், ஜட்டி அவுந்தவன், எல்லாரும் ஒன்னு..//

//அவர் வாழ்க்கையை அவர் போக்கிலே வாழ்வார்...//

இந்த டயலாக்குகள் மட்டுமே என்னுடையது என்று பிரெஞ்சு தத்துவஞானி தெரிதா மீது ஆணையிடுகிறேன்.

மீதி டயலாக்குகளை அண்ணாத்தே ஓசை செல்லா சொன்னாரா என்று எனக்குத் தெரியாது :-(((((
ஹே ஹே நல்லாதன் தாளிச்சு எடுத்திருக்கிங்க. நம்ம சுகுணா அண்ணாச்சி அவரோட பின்நவீனத்தோட உங்கள என்ன சொல்ல போறாருன்னு ஆர்வமா காத்திறுக்கரோம்
இப்படிக்கு
"இணைய சண்டையை வேடிக்கை பார்த்து குதூகலிக்கும் சங்கம்"
((((((((((((- . nalla pathivu. nalla sirichen, by the by nan goldfilder kudikkerithillai, willsfilder.

- suguna
///((((((((((((- . nalla pathivu. nalla sirichen, by the by nan goldfilder kudikkerithillai, willsfilder.

- suguna///

மக்கா இந்த பின்னூட்டம் முதல்லே எதிர்பார்த்தேன்...!!!!

நன்றி...!!!!

உங்க பில்டர் சரியா தெரியாம போட்டுட்டேன்...சிகரெட்டை குறைங்க...ஐ மீன் கம்மியாக்குங்க..

Popular Posts