பருப்பு சாம்பார்...........

நான் இப்போ இருக்க நாட்டுல சைவம், அசைவம் என்று எல்லாம் பிரிவினைவாதம் கிடையாதுங்க...எல்லாரும் எல்லாமும் திங்கற ஊரு...சரி நேத்து அப்பார்ட்மெண்ட்ல சாம்பார் வெக்கலாம்னு முடிவெடுத்து, தேடும்போது இந்த சமையல் குறிப்பு கிடைச்சுது...

இதுல இருந்து சில விஷயங்களை போட்டு ஒரு பதிவு போட்டுடலாம்னு...எதுக்குங்க வளவளன்னு...(வளவளன்னு தான்...வள் வள்னு இல்ல...)...மேட்டருக்கு வருவோம்...

முருங்கைக் காய் - 2
புளி - எலுமிச்சை அளவு
தக்காளி - 2
துவரம் பருப்பு - 1/2 கப்
சாம்பார்ப் பொடி - 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித் தழை - சிறிது

மசாலா அரைக்க:
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 1
தனியா - 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித் தழை - சிறிது

தாளிக்க - எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை.செய்முறை:

புளியை நீர்க்க இரண்டு மூன்று முறைகளாகக் கரைத்துவைத்துக் கொள்ளவும்.
துவரம்பருப்பை குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும்.

முருங்கைக் காயை 3 அங்குலத் துண்டுகளாகவும் தக்காளியை மெல்லிதாக நீளவாக்கிலும் நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணையைச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.

அதில் நறுக்கிய முருங்கைத் துண்டுகளைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் அரை கப் தண்ணீர் சேர்த்து, அடுப்பை குறைந்த தீயில் வைத்து, வாணலியை மூடிவைக்கவும்.

ஐந்து அல்லது எட்டு நிமிடங்களில் முருங்கை பாதி வெந்திருக்கும்; இப்போது புளித் தண்ணீர் சேர்க்கவும்.

மேலே உப்பு, மஞ்சள்தூள், தக்காளி, அரைத்த மசாலா, சாம்பார்ப் பொடி சேர்த்துக் கொதிக்க விடவும்.

புளிவாசனை போனபின், வேகவைத்த துவரம் பருப்பைச் சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்களுக்குக் கொதிக்கவைத்து இறக்கவும்.

கொத்தமல்லித் தழை நறுக்கித் தூவி, பரிமாறவும்.

இந்த பதிவுப்படி பல விஷயங்களை சாம்பார்ல போட்டுட்டேன்...பட்...முருங்கைக்கா மட்டும் கிடைக்கல...அதுக்கு பதிலா கடையில இருந்து வாங்கிகிட்டு வந்த பிஷ் பிரையில் இருந்து ஒரு ரெண்டு மீனை எடுத்து உள்ளாற போட்டுட்டேன்...

நீங்களும் செஞ்சு சாப்பிடுங்க...!!!! நல்லாருந்துச்சு...!!! இந்த பதிவு மாதிரியே...!!!

Comments

சாம்பாருக்கு கொத்தமல்லியா?
புதுசா இருக்கு.
சாம்பார்னாலே பருப்புதான் பிரதானம் சாமி;)

அதனால் இது பருப்பு சாம்பார் இல்லை. முருங்கைக்காய் சாம்பார்தான். ஆனால் நீங்க செஞ்சது மீன் சாம்பார்:)
///வடுவூர் குமார் said...
சாம்பாருக்கு கொத்தமல்லியா?
புதுசா இருக்கு. ///

வாங்க வடுவூர் குமார்...எதார்த்தமா கேட்டாலும் நல்ல பதார்த்தமான கேள்வி...

புதுசா ? எறக்கும்போது போடலாமே...நல்லா வாசனையா இருக்கும் சாம்பார்..
///அதனால் இது பருப்பு சாம்பார் இல்லை. முருங்கைக்காய் சாம்பார்தான். ஆனால் நீங்க செஞ்சது மீன் சாம்பார்:) //

மீன் போட்டா மீன் கொழம்புன்னு கூட சொல்லலாம் இல்லையா...:)))

நேத்து வெச்ச / முந்தாநேத்து வெச்ச மீன் கொழம்பு சூடு பண்ணி சாப்ட்ருக்கீங்களா ?
ILA(a)இளா said…
//சாம்பாருக்கு கொத்தமல்லியா?//
இதுல என்னங்க புதுசு. நாம போட்டுதான் செய்யுவோம்.

மை.மதன. கா.ராஜன் பார்த்திருக்கீறா ஓய்? என்னங்கானும், சின்ன மீன் போட்டு பெரிய மீன் புடிக்கிறீராக்க்கும்.
வெளிநாடு வந்தா “தனித்திரு விழித்திரு பசித்திரு” இந்த மூணும் உங்களுக்கு ஒண்ணா சேந்து நடக்குது போல.
///மை.மதன. கா.ராஜன் பார்த்திருக்கீறா ஓய்? என்னங்கானும், சின்ன மீன் போட்டு பெரிய மீன் புடிக்கிறீராக்க்கும்.///

ஏற்கனவே பெரிய மீனா புடிச்சுட்டதால சின்ன மீன் புடிக்கிறது இப்ப சைடிஷ்ஷுக்கு ஓய்...
///வெளிநாடு வந்தா “தனித்திரு விழித்திரு பசித்திரு” இந்த மூணும் உங்களுக்கு ஒண்ணா சேந்து நடக்குது போல. ///

வாரும் ஏ.வீ.எஸ்...இப்பத்தான் மொத மொறையா உங்களை பார்க்கிறேன்...ஆமா நீங்க சொன்னது தான் நடக்குது...:)))
//மீன் போட்டா மீன் கொழம்புன்னு கூட சொல்லலாம் இல்லையா...:)))//

பருப்பு இருப்பதால் அது சாம்பார்தான். மீன் குழம்புக்கு பருப்பு போடுவதில்லை.

நேத்து வெச்ச / முந்தாநேத்து வெச்ச மீன் கொழம்பு சூடு பண்ணி சாப்ட்ருக்கீங்களா ?

தாராளமா :) பிரிட்ஜில் வைக்காமல் மண்சட்டியில் வைத்திருந்து மறுதினங்களில் சூடுபண்ணிச் சாப்பிட்டால் அது தனி ருசிதான்.
ரவி,

சுவையான பதிவு.

அடுத்து தயிர் வடை ரிசிப்பி தேவைப்படுது.

வடைக்கு பதில் ஆமை முட்டை போடலாம் என்று முடித்துவிடாதீர்கள்.
சீரியஸான கிச்சன் கலினரி அப்ரண்டிஸ் டிரைய்னிங் ஜோரா போயிட்டிருக்குற மாதிரி தெரியுதே!

டிஸ்ப்ளே ஐட்டத்தை நிஜமாவே சாப்பிட முடிஞ்சுதா:-))
வாங்க கோவியாரே...தயிர்வடை தானே, போடுறேன் போடுறேன்...
//சீரியஸான கிச்சன் கலினரி அப்ரண்டிஸ் டிரைய்னிங் ஜோரா போயிட்டிருக்குற மாதிரி தெரியுதே!//

ஆமாம்...வருங்காலத்தில் தங்கமணி என்று ஒருவர் வரும்போது அவரிடம் ஆப்பு வாங்காமல் இருக்க இப்போதே ப்ராக்டீஸ்...

///டிஸ்ப்ளே ஐட்டத்தை நிஜமாவே சாப்பிட முடிஞ்சுதா:-)) ///

இது அவங்க பிலாகுல இருந்து சுட்டது...பசியில எல்லாத்தையும் முடிச்ச பிறகுதான் போட்டோ போடனும்னே தோனுச்சு...

அடுத்த டி.டீ.ஆர் ஆக்டிவிட்டியை போட்டோவா புடிச்சு போடுறேன்...
அடுத்த முறை ங்கோயா ரசம்,
ச்சீ!
வெங்காய ரசம் எப்படீன்னு எழுதுங்க ரவி!
;-D
சாமி, நீங்க என்னை திட்டலை தானே...
//சாமி, நீங்க என்னை திட்டலை தானே...//
அது எப்படீய்யா அவ்ளோ சரியா கண்டுபிடிக்கறீங்க?
;-D
ரவி
பிரிட்ஜில் வைக்காமல் மண்சட்டியில் வைத்திருந்து மறுதினங்களில் சூடுபண்ணிச் சாப்பிட்டால் அது தனி ருசிதான்.

தனித்து இறுப்பதன் அர்தம் இப்பதான் புரியுது.
அடுத்தது இட்லிவடையைச் சுடுவது எப்படியா ? :-)
பருப்பு இல்லாமல் சாம்பார் உண்டா?

Popular Posts