அய்யோ தாங்கலையே !!!!

************

நடிகர் கார்த்திக் "நாடாளும் மக்கள் கட்சி"ன்னு ஒன்னு ஆரம்பிச்சிருக்காராம்...

ஏன் சார், மீதிப்பேர் எல்லாம் காட்ட ஆள்றதுக்கா கட்சி ஆரம்பிக்கறாங்க...

************

சாய் பாபா பொதுக்கூட்டத்துக்கு யாரோ வெடி குண்டு மிரட்டல் விடுத்துட்டாங்களாம்...அதுக்கு மத்திய அமைச்சரே அங்கன போயி "சாமி, சாமி" வீ வில் கிவ் யூ பாது'காப்பு' சாமீன்னாராம்...

ஏங்க, சாமீக்கு தன்னை காப்பாத்திக்கத்தெரியாதா ? இதுக்கா எல்லா வெளிநாட்லருந்தும் புளிசாதமும், பொட்டியும் கட்டிக்கினு வார்றானுங்க ?

************

24 மணி நேர செய்தி சேனலை தொடங்குதாம் ராஜ் டிவி...

ஆமா நீங்க தொடங்கீட்டாலும்..!!!

************

ஷெல்'லுல பெட்ரோல் 68 ரூவாயாமே ? ஷெல் சூப்பர் பெட்ரோல் மட்டும் தான் போடுறான். அப்போ...செய்யவேண்டியது என்ன ? ப்ளான் இது தான்...உடனே ஒரு நல்ல சைக்கிள் வாங்கிர வேண்டியது தான்...!!! வீட்டை ஆபீஸ் பக்கத்துல மாத்திர வேண்டியது தான்...காரை பர்மணட் பார்க்கிங்ல போட்டுட்டு, பைக்கை விட்ல நிறுத்தினா முடிஞ்சது...எக்ஸஸைசுக்கு எக்ஸஸைசும் ஆச்சு...பெட்ரோல் செலவும் மீதியாச்சு :) எது பண்ணாலும் ப்ளான் பண்ணி பண்ணனும் ( வடிவேல் டோனில் படிக்கவும்)

*************

அய்யா, என்னுடைய வலைப்பூவை பார்த்து கருத்து சொல்லுங்க என்று எல்லா பதிவுலயும் ஒருத்தர் கேட்டிருக்கார். எனக்கு தெரிஞ்சு ஒரே பின்னூட்டத்தை அதிகபட்ச பதிவுகள்ல காப்பி பேஸ்ட் செய்த சாதனையை அவருக்கு கொடுக்கலாம்..

*************

www.craigslist.com பத்தி உங்களுக்கு தெரியுமா ?

தெரியலன்னா அது என்னன்னு போய் தெரிஞ்சுக்கோங்க...எல்லாத்துக்கும் ஸ்பூன் பீடிங் செய்யமுடியாது ஆமா...

*************

அனைத்து மதத்தினர் ஆதரவு இருந்தா ராமர் கோயில் கட்டிருவேன் அப்படீங்கறார் அத்வானி..

நோ-கமெண்ட்ஸ்... (கொத்தனாருங்க, மேஸ்திரிங்க ஆதரவு இருந்தாத்தான் கட்டமுடியும்)

*************

ஜே.ஜே சில குறிப்புகள் ஒரு வாழ்க்கை வரலாறுன்னு நினைச்சு தான் இதுவரைக்கும் படிச்சிக்கிட்டு இருக்கேன்...ஆனா திடீர்னு வால்பையன் ஒரு குண்டை தூக்கி போடுறாரு...ஜே.ஜேன்னு யாருமே இல்லையாமே ? அது ஒரு கதையாமே ? அமரர்.சுந்தர ராமசாமி ? என்னைய வச்சு காமெடி கீமடி பண்ணலையே நீங்க ?

அப்றம் வரேன்.


************

Comments

Bee'morgan said…
craigslist is very nice.. thanks for the info..
theevu said…
//அய்யா, என்னுடைய வலைப்பூவை பார்த்து கருத்து சொல்லுங்க என்று எல்லா பதிவுலயும் ஒருத்தர் கேட்டிருக்கார்//

இவருக்கும் ஹாப்லாக் அண்ணாவிற்கும் 7 வித்தியாசம் கண்டுபிடிக்க.:)
///இவருக்கும் ஹாப்லாக் அண்ணாவிற்கும் 7 வித்தியாசம் கண்டுபிடிக்க.:)

Thursday, June 19, 2008
///

ஆஆஆஆஆ

அவனா நீ ????????
//ஜே.ஜே சில குறிப்புகள் ஒரு வாழ்க்கை வரலாறுன்னு நினைச்சு தான் இதுவரைக்கும் படிச்சிக்கிட்டு இருக்கேன்...ஆனா திடீர்னு வால்பையன் ஒரு குண்டை தூக்கி போடுறாரு...ஜே.ஜேன்னு யாருமே இல்லையாமே ? அது ஒரு கதையாமே ? அமரர்.சுந்தர ராமசாமி ? என்னைய வச்சு காமெடி கீமடி பண்ணலையே நீங்க//

ஜே.ஜே வின் மனைவியின் பேட்டி,
அவரின் டைரி குறிப்புகள் அனைத்தும் புனைவு மாமே!
நேக்கே லேட்டா தான் தெரியும்

வால்பையன்
//ஏன் சார், மீதிப்பேர் எல்லாம் காட்ட ஆள்றதுக்கா கட்சி ஆரம்பிக்கறாங்க...//
ஏன் இதையே முன்னேற்ற கழகங்கள் கிட்ட கேக்க வேண்டியது தானே? மத்தவங்க எல்லாம் பின்னேற்ற கட்சி ஆரம்பிச்சவங்க இவிங்க மட்டும் தான் முன்னேற்ற ஆரம்பிச்சவங்க இல்ல?
//www.craigslist.com பத்தி உங்களுக்கு தெரியுமா ?//

2 வருஷம் முன்னே craigslist.com ஒரு porn site. craigslist.org தான் சரியான சைட். நல்லவேளை இப்போ .com போனாலும் .orgக்கு redirect ஆகுது.

Popular Posts