மிஸ்டர் வைகோ...உங்களுக்கொரு திறந்த மடல்

எனக்கு தெரிந்து ஈழத்தமிழர்களுக்காக பாராளுமன்றத்தில் உரத்து குரல் எழுப்பியது நீங்க தான் மிஸ்டர் வைகோ...

பொதுவாக சினிமா கலைஞர்கள் ரொம்ப உணர்ச்சிமயமாகவே இருப்பாங்க...சட்டுனு கோபப்படுவாங்க...சட்டுனு சந்தோஷப்படுவாங்க...கோபத்துல என்ன பண்றாங்கண்ணே தெரியாம எதையாவது பண்ணிட்டு அப்புறம் வருத்தப்படுவாங்க...அதிமுகவோட கூட்டணி வெச்சு பெருசா எதையும் சாதிக்கலை நீங்க..தேர்தல் டைம்ல உங்களுக்கு ஒதுக்கின நாலஞ்சு தொகுதி மொக்கையானதா இருந்ததுன்னு சொல்லி மாநாட்டுக்கு போகலை நீங்க...அது ஜஸ்ட் ஒரு கோபத்தில் எடுத்த முடிவுதானே ? அப்புறம் வேற வழியில்லாம அம்மாவோட கூட்டணி வெச்சுட்டீங்க...

கட்சிய நடத்தனும்னா ஏதாவது ஒரு கட்சியோட கூட்டணியை வெச்சு தேர்தலை சந்திச்சாத்தான் நடக்கும்னு ஏற்கனவே உங்களோட 'தனியா' நின்ன அனுபவம் சொல்லுச்சு, அதனால அப்படி ஆச்சு...

கலைஞரோட உங்களுக்கு இருந்த மனஸ்தாபம் தான் தீர்ந்துருச்சு இல்லையா ? மம்மி உங்களை பொடாவுல "போடா" ன்னப்ப ஸ்டாலினை ஜெயிலுக்கு எல்லாம் அனுப்பி உங்களை சந்திக்க வெச்சாரு இல்லையா ?

மீண்டும் நீங்க கலைஞரோட சேர்ந்தாத்தான் என்ன ? தேர்தல் நேரத்துலதான் "பேரம்" / "கால்குலேஷன்" எல்லாம் நடக்கும், அப்பத்தான் சேரனும்னும் ஏதாவது ரூல்ஸ் இருக்கா என்ன ?

நாப்பது எம்.பிக்கள் இருந்தும் நாடாளுமன்றத்துல ஒருத்தர் கூட எந்திருச்சு, ஏம்பா, இப்பிடி ஈழத்தமிழர்கள்களை கொல்றாங்க சிங்களனுங்க, மீன் புடிக்க போனா சுடுறானுங்க சிரீலங்கா ஆர்மி, என்ன ஏதுன்னு கேளுங்கப்பான்னு சொல்றாங்களா ?

எந்திருச்சா "காத்து" பிரிஞ்சு கேஸ் ட்ரபுள் வெளிய தெரிஞ்சுரும்ன்ற மாதிரி சும்மா மொன்னையா உக்காந்திருக்காங்களேப்பா ?

ஒருவேளை நம்ம எம்.பிக்களுக்கு "இந்தி" தெரியலியோ ? நீங்களா இருந்தா ஏதாவது "டியூஷன்" வெச்சு படிச்சாவது பேசுவீங்களே சாமி ?

அந்த ஆப்பர்ச்சூனிட்டி எப்ப உங்களுக்கு கிடைக்கும் ? நீங்க அங்கன இருந்தாத்தானே ? மாநில அரசியல்ல கவனம் செலுத்தினது போதும் சாமி...

ஒத்தையாளா நீங்க ஓரே எம்.பியா போய் நின்னு கரடியா கத்தின காலம் எல்லாம் போயி, இன்னைக்கு மத்திய அரசு தி.மு.க தயவுல இருக்கும்போது நீங்க அங்கன இருந்திருந்தா எவ்வளவு அருமையா இருந்திருந்திருக்கும் ?

இங்கன செய்த லோக்கல் அரசியல் போறும்...நீங்க அங்கன போயி ஈழத்தமிழ்களுக்காக, நம்ம வீட்டு பாத்ரூம்ல நாம கை-கால் கழுவக்கூடாதுன்னு சொல்ற ஒக்கேனக்கல் பிரச்சினைக்காக, ரெண்டு அடி அணையை உசத்தி கட்டினா ஊரே முழுவிரும்னு உடான்ஸ் உடுற (ரிசார்ட் அதிபர்களின் அல்லக்கையான) கேரள முல்லைப்பெரியாறு பிரச்சினைக்காக, பாலாறு பிரச்சினைக்காக, எல்லாத்துக்கும் உங்களை மாதிரி ஒரு ஆள் அங்க இப்ப தேவை...

அதுக்கு நீங்க தேர்ந்தெடுக்க வேண்டிய பாதை, தி.மு.க...

நாஞ்சொல்றத கேளுங்க...பா.ம.க கோச்சுக்கிட்டு போயிருச்சு...அதை பத்தி நாம பேசவேண்டாம்...கலைஞரை போய் பாருங்க...

தோஹா மாநாட்டில முழங்கின முரசொலி மாறன் இப்ப இல்லை...அதை இட்டு நிரப்பனும்...நான் மந்திரி பதவி கேக்க சொல்லல...வெறும் எம்.பியாவாவது போகனும் நீங்க அங்க..

அப்படி இருந்தா மத்தியில பா.ஜ அரசாயிருந்தாலும் சரி, காங்கிரஸ் அரசாயிருந்தாலும் சரி, தமிழனுக்கு தேவையான விஷயங்களை நிறைவேற்ற போராடலாம் இல்லையா ?

இங்கயிருந்து மன்மோகன் சிங்குக்கு லட்டர் அனுப்பி எதுக்கு வேஸ்ட்டா பேனா மை, போஸ்டல் சார்ஜ் எல்லாம் செலவு பண்றீங்க ?

பெஸ்ட் நீங்க அங்க போயிருங்க...தமிழனுக்காக குரல் கொடுங்க...

தெரியும் நீங்க செய்வீங்க...நீங்க ஒரு போராளி..!! உணச்சிமயமான போராளி..!!!!

Comments

நீங்க அநியாயத்துக்கு அரசியல்வாதிகளை நம்புறிங்க!
பாராளுமன்றத்துல கேள்வி கேக்க சூட்கேஸ் கொடுக்கணுமாம்
கொடுக்க நீங்க ரெடியா?

வால்பையன்
ஆலோசனை நல்லாவே இருக்கு.சரியான சந்தர்ப்பம் கூட.வை.கோ யோசிக்கலாம்.
எம்.பி. பதவிக்காக கூட்டணி மாறணும்னு யோசனை சொல்றீங்க. ஒரு கூட்டமாதான் சுத்துறாங்க போல தெரியுது..

வைகோ வுக்கு ஓட்டு போடாத யாரும் தயவு செய்து யோசனை சொல்லாதீங்க. மீண்டும் ஒரு தோல்விக் கூட்டணியில் அவரை தள்ளி விட நீங்கள் செய்யும் சதியும், அதனை துவங்கி வைக்கும் உங்கள் நுண்ணரசியலும் படிப்போர் அனைவருக்கும் தெரியும்.
இப்போது பா.ம.க வும் இந்த பக்கம் வந்தாச்சு. கலைஞர் கூட்டணி வரும் தேர்தலில் தோற்கப் போவது உறுதி என்பதை அறிந்து கொண்டு, வைகோ மேல இருக்கும் உங்கள் காண்டை இதன் மூலம் வெளிப் படுத்தியிருக்கிறீர்கள்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐந்து எம்பிக்கள் ம.தி.மு.க.வுக்கு உறுதி. அதில் எதாவது ஒன்றில் அவர் போட்டியிட வேண்டும் என கேட்டிருந்தால் அது நியாயம். உங்களுக்கு அவர் மேல எதாவது கோவம் இருந்தால் அவரை திட்டி ஏதாவது பதிவு போடுங்க. அதை விட்டுட்டு கலைஞரோட ஓட்டை படகில் ஏற்றி விடாதீங்க.
கலைஞர், போனால் எம்பி பதவி மட்டுமல்ல அமைச்சர் பதவி தருவார் என்று நம்பி போன அரசியல் அபலைகள் செஞ்சியும், எல்.ஜி.யும் என்ன ஆனார்கள் என்பது தெரியுமா?

வைகோ எம்.பி. யாக இருந்தா தமிழ் நாட்டிற்க்கு நல்லது. வைகோ முதல்வரானால் தமிழினத்திற்கு நல்லது.. என்னும் உங்கள் கருத்து வரவேற்கத் தகுந்தது.

ஆனால் என்னமோ தி.மு.க. வுக்கு மட்டும் தான் எம்.பி. க்களை உருவாகும் சக்தி இருப்பது போலவும் எம்.பி.யாக வேண்டுமென்றால் தி.மு.க. மட்டுமே கதி என்று சொல்ல வருகிறீர்களா? ம.தி.மு.க.வுக்கு ஏற்கனவே நான்கு எம்பிக்கள் இருப்பதை கவனத்தில் கொள்ளவும். வைகோ எம்பி பதவி மேல் ஆசை இருந்தால் அவரே தேர்தலில் நின்று நால்வரில் ஒருவராக டெல்லி சென்றிருக்க முடியும்.
நம்பி வந்தவர்களை மேலே ஏற்றி பார்க்கும் நல்ல மனம் அவருக்கு உள்ளது..
எம்.பி. பதவிக்காக கூட்டணி மாறணும்னு யோசனை சொல்றீங்க. ஒரு கூட்டமாதான் சுத்துறாங்க போல தெரியுது..
வைகோ வுக்கு ஓட்டு போடாத யாரும் தயவு செய்து யோசனை சொல்லாதீங்க. மீண்டும் ஒரு தோல்விக் கூட்டணியில் அவரை தள்ளி விட நீங்கள் செய்யும் சதியும், அதனை துவங்கி வைக்கும் உங்கள் நுண்ணரசியலும் படிப்போர் அனைவருக்கும் தெரியும்.
இப்போது பா.ம.க வும் இந்த பக்கம் வந்தாச்சு. கலைஞர் கூட்டணி வரும் தேர்தலில் தோற்கப் போவது உறுதி என்பதை அறிந்து கொண்டு, வைகோ மேல இருக்கும் உங்கள் காண்டை இதன் மூலம் வெளிப் படுத்தியிருக்கிறீர்கள்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐந்து எம்பிக்கள் ம.தி.மு.க.வுக்கு உறுதி. அதில் எதாவது ஒன்றில் அவர் போட்டியிட வேண்டும் என கேட்டிருந்தால் அது நியாயம். உங்களுக்கு அவர் மேல எதாவது கோவம் இருந்தால் அவரை திட்டி ஏதாவது பதிவு போடுங்க. அதை விட்டுட்டு கலைஞரோட ஓட்டை படகில் ஏற்றி விடாதீங்க.
கலைஞர் போனால் எம்பி பதவி மட்டுமல்ல அமைச்சர் பதவி தருவார் என்று நம்பி போன அரசியல் அபலைகள் செஞ்சியும், எல்.ஜி.யும் என்ன ஆனார்கள் என்பது தெரியுமா?

வைகோ எம்.பி. யாக இருந்தா தமிழ் நாட்டிற்க்கு நல்லது. வைகோ முதல்வரானால் தமிழினத்திற்கு நல்லது.. என்னும் உங்கள் கருத்து வரவேற்கத் தகுந்தது.

ஆனால் என்னமோ தி.மு.க. வுக்கு மட்டும் தான் எம்.பி. க்களை உருவாகும் சக்தி இருப்பது போலவும் எம்.பி.யாக வேண்டுமென்றால் தி.மு.க. மட்டுமே கதி என்று சொல்ல வருகிறீர்களா? ம.தி.மு.க.வுக்கு ஏற்கனவே நான்கு எம்பிக்கள் இருப்பதை கவனத்தில் கொள்ளவும். வைகோ எம்பி பதவி மேல் ஆசை இருந்தால் அவரே தேர்தலில் நின்று நால்வரில் ஒருவராக டெல்லி சென்றிருக்க முடியும்.
நம்பி வந்தவர்களை மேலே ஏற்றி பார்க்கும் நல்ல மனம் அவருக்கு உள்ளது..
Vijay said…
ஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்.

"கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சுழல்
போராளியின் வெற்றிப்பேரிகை"

http://pugaippezhai.blogspot.com/2008/06/blog-post_3130.html

அன்புடன்,
விஜய்
கோவை
Bala said…
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள இளைஞர்கள் அனைவருமே பாராட்டத்தக்க மிகச்சில தலைவர்களில் வைகோவும் ஒருவர். சில சறுக்கல்களை சந்தித்து இருந்தாலும், ஒட்டுமொத்தத்தில் மிகச் சிறந்த அரசியல்வாதி.அவரை சிறுமைப்படுத்தும் கருத்துக்கள் தவிர்ப்பது நல்லது.
///ஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்.

"கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சுழல்
போராளியின் வெற்றிப்பேரிகை"

http://pugaippezhai.blogspot.com/2008/06/blog-post_3130.html

அன்புடன்,
விஜய்
கோவை///

முடியாது, முடியவே முடியாது...!!!
///நீங்க அநியாயத்துக்கு அரசியல்வாதிகளை நம்புறிங்க!
பாராளுமன்றத்துல கேள்வி கேக்க சூட்கேஸ் கொடுக்கணுமாம்
கொடுக்க நீங்க ரெடியா?///

நான் எதுக்கு நடுராத்திரி பண்ணண்டு மணிக்கு சுடுகாட்டுக்கு போவனும் ?

Popular Posts