கிருபாநந்தினியின் தமிழ்நதி அவதூறு எதிர்வினைகிருபாநந்தினி என்பவர், தமிழ்நதி அவர்களை பற்றி அவதூறு செய்து எழுதியிருப்பதை பார்த்தேன். அவர் எவ்வளவு முட்டள்தனமாகவும், குழந்தைத்தனமாகவும் எழுதியிருந்தாலும், அதை புறக்கணித்தாலே போதுமானது என்று நினைத்தேன். ஆனால் இதுபோன்ற முட்டாள்தனங்களை வெகுஜன எழுத்துத்தாளர்களுக்கு பதிவுலகில் இருந்து கொடுப்பது தவறு என்று தோன்றுகிறது. என்னால் கிருபாநந்தினியை திருத்தமுடியாது. ஆனால் எதிர்வினையாற்ற முடியும். அதை இந்த இடுகை செய்யும். ஆணாதிக்கம், அது இது என்று யாராவது வந்து வம்பு செய்யுங்கள். அதற்கு முன் கிருபாமந்தினியின் இரண்டு இடுகைகளையும், அதில் அவர் எவ்வளவு முட்டாள்தனமாக எழுதியுள்ளார் என்பதையும் படித்துவிட்டு வாருங்கள்.

முதலில் படுத்தாதீங்க தமிழ்நதி


ஆனால் பாவம் இந்த தமிழ்நதி. வேலை மெனக்கெட்டு இவருக்கு பதில் சொல்லி தன்னுடைய நேரத்தை தான் வீணடித்துள்ளார்கள். எங்கோ ஒரு வேலையாக போயிருக்கும் நேரத்தில் மின்னஞ்சலை திறக்க, அதில் இந்த அவதூறு கண்டு ஆங்கிலத்தில் (அவர் உபயோகப்படுத்தும் எழுத்துரு இல்லாத நிலையில்) பதில் சொல்ல, அதையும் கிருபாமந்தினி கிண்டல் செய்துள்ளார். 

////இந்த வார குமுதத்துல ‘இங்கு ஈழம் விற்கப்படும்’கிற தலைப்புல ஈழக் கவிஞர் தமிழ்நதி எழுதியிருந்ததைப் படிச்சேன். என்ன சொல்றாங்கன்னா... புத்தகக் காட்சிக்குப் போயிருந்தாங்களாம். அங்கே பல பதிப்பகங்கள் ஈழத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட புத்தகங்களைத்தான் முன்னிலைப்படுத்தி இருந்துச்சாம். இது இனம்புரியாத கசப்பு உணர்வை அவங்களுக்குத் தந்துச்சாம்.

அது என்ன ‘இனம்புரியாத’ன்னு புரியலை. இனம் புரிஞ்ச கசப்பு உணர்வுதான் அது. அவங்களே பின்னாடி ஒரு இடத்துல சொல்றாங்க, ‘காசு பார்ப்பதை மட்டுமே பிரதான நோக்கமாகக் கொண்டு, ஈழத் தமிழர்களின் இழப்பையெல்லாம் பிழைப்பாக மாற்ற எத்தனிக்கும் கயமைத்தனங்கள் எரிச்சலூட்டுகின்றன’ன்னு. ஆள் உயர சைஸ் டம்ளர்ல, ஜூஸோ காபியோ குடிச்சுக்கிட்டே சிரிச்சபடி போஸ் கொடுத்துக்கிட்டே இதை அவங்க சொல்றதுதான் எனக்கு எரிச்சலா இருக்கு////

இனம்புரியாத, இனம்புரிந்த, ஏதோ ஒரு கசப்பு உணர்வு அவர்களுக்கு தோன்ற பல காரணங்கள் உண்டு கிருபாமந்தி. அதே ஈழத்தில் இருந்து தமிழ்நாட்டிலேயே அகதி வாழ்க்கை வாழும் பலர் அவரது சகோதர சகோதரிகளாக இருக்கக்கூடும். முள்வேலியில் அகப்பட்டு அழுக்குநீரை குடிக்கும் ஒரு அக்கா அவருக்கு இருக்கக்கூடும். இந்திய அமைதிப்படையாலோ, சிங்கள குரங்குப்படையாலோ பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டு அடிவயிறு வலிக்க கதறிய ஒரு தங்கச்சி இருக்கக்கூடும். உங்களுக்கு அப்படி யாருமுண்டா ? டெல்லிக்கு வேலை விஷயமாக போன கிருபா உண்டு. அவர் ஒருவேளை அங்கிருந்து ரசகுல்லா வாங்கி வரக்கூடும். ரசகுல்லா பிடிக்கும்தானே ? இனிப்பாயிருக்கும்.

///ஜூனியர் விகடன் பத்திரிகையைக் கண்டாலே எனக்குப் பிடிக்காதுன்னு நான் ஏற்கெனவே சொல்லியிருக்கேன். அதுக்காக, ஈழத்தைப் பத்தி அது புஸ்தகம் போடுறதை எழுத்து வியாபாரம்னு சொல்றதை எப்படிங்க ஏத்துக்கறது?

போட்டாலும் இப்படி, எழுத்து வியாபாரம், கயமைத்தனம்னு பேசுறது; போடலேன்னாலும், ஈழத்து மக்களின் கண்ணீர் இந்தத் தமிழகப் பத்திரிகைகள் இதயத்தைக் கரைக்கலையான்னு கேட்க வேண்டியது!///

எழுத்து வியாபாரம் இல்லாமல் வேறென்ன மந்தினி ? ஜூனியர் விகடன் என்ன இலவசமாகவா கிடைக்கிறது ? அவர்கள் பத்திரிக்கை நிறுவனம் நடத்துகிறார்கள். சர்க்குலேஷன், இத்யாதி, எழுத்தாளர், நிருபர் சம்பளம், டீ செலவு, காமிரா சார்ஜ் செய்ய கரண்ட் செலவு என்று இருக்கும். அதனால் பத்திரிக்கையை பணத்துக்கு விற்கிறார்கள். விற்கும் எதுவும் வியாபாரம் தானே ? ஏன் உங்களுக்கு ஜூனியர் விகடன் பிடிக்காது, நக்கீரன் பிடிக்கும் என்ற கேள்வியை நாங்கள் கேட்கலாம் தானே ? தமிழ்நதிக்கு ஈழத்தை கூறுகட்டி விற்பது பிடிக்கவில்லை. செத்து மடிந்த சொந்தங்களின் ரத்தம் மண்ணில் காயும் வரையாவது கூட இவர்கள் பொறுக்க மறுக்கிறார்களே என்பதாக பிடிக்கவில்லை. அவரது சொந்த விருப்பு வெறுப்புகளைக்கூடவா அவர்கள் எழுதக்கூடாது ? 

///ந்தக் கட்டுரைக்குத் ‘தமிழ்நதி’யின் படத்தைப் போடலாமேன்னு இணையத்தில் தேடினப்போ, எழுத்தாளர் ஷோபாசக்தியின் இணையப் பக்கத்தில் இந்தக் கட்டுரை கிடைச்சுதுங்க. அதிலிருந்து சில வரிகளை இங்கே கொடுத்திருக்கேன். அதுக்கு மேல நீங்களாச்சு, ஷோபாசக்தியாச்சு! நான் ஒதுங்கிக்கிறேன். ஆள விடுங்க!///

ஷோபா சக்தியின் ஒரு இணைய பக்கத்தில் இருந்து சில வார்த்தைகளையும், ஒரு சுட்டியையும் தந்துள்ளீர்கள். இதற்கு முன் ஷோபா சக்தி ஆணா பெண்ணா என்று கூட தெரியாதவர் நீங்கள். தமிழ்நதி என்று கூகிளில் டைப்பினால் கிடைப்பது அந்த சுட்டி. ஆஹா. தமிழ்நதியை வேறொருத்தன் திட்டியிருக்கான் என்று உங்களுக்கு ஆதரவான சுட்டியாக அதை மாற்று வன்மத்தோடு (இந்த வன்மத்தை பின்னூட்டத்தில் செல்வேந்திரன் சுட்டிக்காட்டிருப்பார்) வெளியிட்டுள்ளீர்கள்...

இந்த முதல் அவதூறு பதிவில் இருக்கும் சில பின்னூட்டங்கள் மிகவும் முட்டாள்தனமானவை. ஒரு சில நானும் போட்டேன்ல, நீயும் போடு என்பது போல மொ(ய்)த்தனமாக இருந்தாலுல் குப்பன் யாஹு பின்னூட்டத்தை மட்டும் சொல்லலாம்.

//என் பார்வையில் நான் பழகிய பல ஈழத் தமிழர்களிடம் , சிங்களர்களிடம் உணர்ந்த ஒன்று, ஈழ தமிழர்களுக்கு மற்றும் சிங்களர்களுக்கும் பரந்த மனப்பான்மை, எண்ணம் இல்லை என்பதே.

சிறிய நாடு என்பதால் மனமும் சிறியதாக இருக்கிறது என்று எண்ணுகிறேன்.//


இவ்வளவு முட்டாள்தனமான பின்னூட்டத்தை இணையத்தில் தேடிதான் எடுக்கவேண்டும். அப்படி பார்த்தால் தைவான் நாடு இலங்கையை விட சிறியது. தைவான் காரர்கள் தலையை பிச்சிக்கொண்டும், மாலத்தீவுக்காரர்கள் மண்டையை ங் ங் ங் ங் என்று சுரண்டிக்கொண்டும், தைமூர்க்காரர்கள் ப்ளாட்பாரத்தில் சட்டையை கிழித்துக்கொண்டும் தான் அலையவேண்டும். நல்லா கெளப்புராங்கப்பா பீதிய. குப்பன் யாஹூ ? யாஹூவே அவுட்டேட்டட். இப்போ எல்லாம் ஜிமெயில். நல்ல டாக்டரை பாருங்க.


அடுத்து மனநல மருத்துவர் ருத்ரன், கீப் ரைட்டின் என்ற பின்னூட்டத்துக்கு கண்களில் நீர் துளிர்த்து உச்சி குளிர்ந்துதது கிருபா மந்தினி.

///ஐயா! மன நல மருத்துவர் டாக்டர் ருத்ரனுங்களா! ஐயோ! என்னால நம்பவே முடியலீங்களே! நீங்க எவ்ளோ பெரியா மனுஷன்.. இந்தச் சாதாரண மனுஷியின் வலைப்பூவுக்கு வந்து படிச்சுப் பார்த்ததோடல்லாம பாராட்டிப் பின்னூட்டமும் போட்டிருக்கீங்க. ரொம்ப நன்றிங்கய்யா! (என் கண்கள்ல துளிர்க்கிற நீரை இங்கே பதிவு பண்ண முடியலை!///


 எனக்கு தெரிந்து அதே மனநல மருத்துவரிடம் சிகிச்சை எடுத்தால் தான் இவருக்குள்ள இம்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ், சுப்பீரியாரிட்டி காம்ளக்ஸ், தாழ்வு மனப்பான்மை, அடுத்தவங்க புகழோடு இருப்பது கண்டு பொறாமை, இத்யாதி, இத்யாதி எல்லாம் தீரும்.

//ஹை! வாங்க தமிழ்நதி! ரொம்பக் கடுப்பாயிட்டீங்க போல! நீங்க பெரிய எழுத்தாளர். கவிதாயினி! உங்களுக்கு உங்க கருத்துக்களைச் சொல்ல குமுதம், விகடன் மாதிரியான பெரிய களம் இருக்கு. என் எழுத்துக்களையெல்லாம் எங்கே சீந்துறாங்க? //


இந்த பின்னூட்டத்தில் இருந்தே தெரியவில்லையா ? இவரது உண்மையான நோக்கம், தமிழ்நதியின் மீது ஜீனியர்விகடன் மீது ஏற்பட்டது போன்றதொரு பொறாமை, காம்ப்ளக்ஸ் இத்யாதி என்று.

தமிழ்நதியின் படத்தை இணையத்தில் இருந்து சுட்டு பதிவு எழுதியிருக்கீங்க. யார் அனுமதி கொடுத்தது ? இதுவே மிகப்பெரிய குற்றம். உங்கள் படத்தை போட்டு பதிவு எழுதினால் அனுமதிப்பீர்களா ? பின்னூட்டத்தையே அனுமதிக்க மறுக்கும் நீங்கள் எப்படி பதிவை ?

இந்த அவதூறுகளுக்கும், பின்னூட்டத்தில் செய்யப்பட்ட அவதூறுகள் மற்றும் முட்டள்தனங்களுக்கும் தமிழநதியின் பதில் கீழே:


ஒரே பின்னூட்டத்தில் இவ்வளவையும் வலைப்பூ ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் இரண்டாகப் பிரித்துப் போடுகிறேன். மீண்டும் சொல்கிறேன்..... வரலாறு சம்பந்தப்பட்டவர்களை மன்னிக்காது. பூமராங் போல ஒருநாள் திருப்பியடிக்கும். அதை நீங்களும் பார்க்கத்தான் போகிறீர்கள். அப்போது இந்த நக்கல், குத்தல், நையாண்டி, ஏளனம் எல்லாம் எங்கு போகுமென்று பொறுத்திருந்து பார்க்கத்தான் போகிறோம்

செந்தழல் ரவி ஈஸ் ஈக்குவல் டு வரலாறு. ஓக்கே க்ரேஸ் கவ். grace cow என்று தன்னை அழைக்குமாறு அவர் எழுதிய அடுத்த முட்டாள்தனத்துக்கு பதில் சொல்ல நாங்க என்ன அவ்ளோ வெட்டியாவா இருக்கோம் ? போய் புள்ளக்குட்டிகள பாருங்க. உங்களைப்போல நாங்களும் புள்ளவளக்கறோம், சோறு ஊட்டறோம். babycenter.uk போனீங்கன்னா எப்படி கம்பூட்டர்ல நேரத்தை வீணடிக்காமல் புள்ளை வளர்ப்பது என்று சொல்வார்கள். அதை செய்யவும். அதை விடுத்து ஈழப்பிரச்சினை நடந்தபிறகு ஏன் தமிழ்நதி காப்பி குடித்துக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தார் என்று அடுத்தவரின் பர்சனல் வாழ்க்கையில் தலையிடும் வேலை வேண்டாம். 

நமக்கு வந்தா ரத்தம், அடுத்தவருக்கு வந்தா தக்காளி சூஸா ? 

படித்துறை என்ற அழகான பெயரில் பதிவெழுதும் ஷன்முகப்பிரியனை காப்பியடித்து பதிவு வைத்துக்கொண்டு அடுத்தவரை தூற்றிக்கொண்டு ? உங்களது எழுத்து நடை நன்றாக உள்ளது. கலர் கலராக அடித்து நன்றாகத்தான் எழுதுகிறீர்கள். சமையல் குறிப்பு, குழந்தை வளர்ப்பு, கல்லூரி கலாட்டா, சிறுகதை, கவிதை, பதிவர் வட்டம்,  போன்றவற்றை எழுதலாமே ? ஈழம், உலக அரசியல், உள்ளூர் அரசியல் பற்றி ஆழ்ந்து வாசித்துவிட்டு பிறகு எழுதலாமே ? குறைந்தபட்சம் பிரபாகரனாவது யார் என்று தெரிந்துகொண்டு ? வாட் யூ சே ?

டிஸ்கி : பெண்ணியவியாதிகள், பெருவியாதிகள், பெரியாரியவியாதிகள், பின்னூட்ட மொய்வியாதிகள், டாவுவியாதிகள் என்று அனைவருக்கும் சொல்வது. நீங்கள் இங்கே பின்னூட்டம் போடுமுன், ஒரு அவதூறை எதிர்த்து கேள்வி கேட்டுவிட்டு பிறகு வாருங்கள். 

Comments

நல்ல எதிர்வினை!

இனிமேலாவது பொறுப்பாக எழுதக் கற்றுக் கொள்ளட்டும்!
நன்றி நாமக்கல்ஸ். ஓட்டு போட்டுட்டு போ.
SanjaiGandhi™ said…
தல சுத்துது
கீப் ரைட் ;)))
சுத்தவுட்டா சுத்ததான செய்யும்.
ரவி தமிழ்நதி சொன்னதில் தப்பே இல்லை,ஈழம் இங்கே வியாபாரப்பொருளாகிவிட்டது அரசியல்வாதிகளில் இருந்து கவிஞர்கள் வரை, ஒரு ,மானமிகு தமிழர் தலைவர் வாய் மற்றும் இன்ன பிற இடங்களை அடைத்துக்கொண்டிருந்துவிட்டு நேற்று பேசுகிறார் ஈழத்துல தமிழர்கள் கஷ்டப்படுறாங்களாம்... ஏன் காங்கிரஸ் கூட்டணி புட்டுக்க போகுதோ என்னமோ? இதைவிட பெரிய நாடகக்காரனுங்க இந்த கவிதை ஆட்கள், யாருக்கும் வலிக்காம கவிதை எழுதற பொறுக்கிகள்... சண்டை நடக்கும்போதெல்லாம் முக்கால்வாசி ஆட்கள் மூடிக்கொண்டிருந்துவிட்டு இப்போ போடுறானுங்க பாருங்க பொஸ்தகம் பொஸ்தகமா... தூ...
ஈழத்தீ அடிவயிற்றில் எரிந்தபோது கவிதை எழுதி சமையல் குறிப்பு வாசித்து ட்ராவல் அண்டு லிவ்விங்கும் பார்த்து பொழுதை ஓட்டியவர்களை கண்டபோது எவ்வளது எரிச்சல்.

இன்னும் அதே கோஷ்டி சுத்திக்கொண்டுதானிருக்கிறது.
சென்ஷி. இப்பத்தான் உன்னைப்பற்றி ஒரு கமெண்டை மாதவராஜ் பக்கத்தில் போட்டேன்.
Anonymous said…
ரவி, அவங்க குழந்தைக்கு 2 வயசு, அவங்க மூளை வளர்ச்சிக்கு வயசும் அவ்வளவுதான்.. என்ன சொல்ல :(
நன்றி ரவி!

அக்கினி என்ற பதிவரின் இடுகையும்..

தமிழ்நதி மீது குழந்தைத்தனமான தாக்கு - http://akkini.blogspot.com/2010/02/blog-post_17.html
மயில். வருகைக்கு நன்றி. அவர்கள் தவறை உணரத்தான் இந்த இடுகை. என்ன செய்ய சிலசமயம் பிள்ளைகளை குட்டவேண்டியிருக்கு வாத்தியார்.
நன்றி முல்லை. டாக்டர் ருத்ரன் கூட நேரமின்மையால் கொஞ்சமே கொஞ்சம் படித்துவிட்டு நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு கமெண்டியுள்ளார். என்ன செய்ய ?
எதிர்வினை அருமை.

- பொன்.வாசுதேவன்
ஓட்டை போட்டு வருகையை பதிவு செய்துகிறேன்
VISA said…
பிரிச்சு மேயுறீங்க ரவி.
எப்படி இவ்வளவு விஷயங்களை திரட்டி கோர்த்தீர்கள்.
உங்களது பதிவுகளை படித்து புரிந்துகொள்ள அதை சுற்றி இன்னும் பல பதிவுகளை
படித்து தெரிந்Tஹுகொள்ள வேண்டியிருக்கிறது. அவ்வகையில் நிறைய விஷயங்கள் தெரிந்துகொள்ள முடிகிறது.

அப்புறம் பாப்பா செம கியூட்.
இந்திய மீடியாக்கள் எல்லாவற்றையும் கூவிகூவி விற்கின்றனவே. இவர்கள் பணத்திற்காக பறக்கிறார்கள். மந்தினி பின்னூட்டத்திற்காக எழுதுகிறார். ஓடிஓடி வாழ்த்து சொல்கிறார்.
VISA said…
VOTE poatachu.
நன்றி அகநாழிகை சார்
நசரேயன் சார் உங்க பதிவுகளை பல பணிச்சுமைகளுக்கு இடையேயும் வாசிச்சுட்டு தான் இருக்கேன். பின்னூட்டம் போடலைன்னு கோச்சுக்காத சரியா. இது விசாவுக்கும் பொருந்தும்.
நன்றி குட்டிப்பிசாசு. நல்ல பெயர். ஆவி அமுதாவோடு பழக்கம் உண்டா ? கனகா புருசன் முத்துக்குமார் எங்கே என்று கேட்டு சொல்லவும்.
ஆட்டம் ஆரம்பிச்சாச்சா?
Dr.Rudhran said…
இன்னமும் அந்தப் பெண் நீங்கள் கோபிக்கும் அளவுக்கு யோசித்து ஒரு பார்ப்பனீயக் குயுக்தியுடன் எழுதவில்லை என்றே நினைக்கிறேன்.
அங்கே நான் இன்னும் எழுத ஊக்குவித்ததற்கு அந்தப் பெண் உணர்ச்சிவசப்பட்டது அதிகம்தான் என்றாலும் அதையும் ஒரு விஷயமாககே குறிப்பிட்டு தமிழ்நதி கூறிய பதில் மட்டும் அதிகபட்சமான மறுமொழி இல்லையா?
Dr.Rudhran said…
இது குறித்து இன்னும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இது ஒரு பதிவின் தொடர்வினையா இல்லை இன்னும் வேறு அர்த்தங்கள் உண்டா?
Peppin said…
your son is cute!
கபீஷ் said…
This comment has been removed by the author.
ஓட்டுப் போட்டுட்டேன். அங்க போய் ரெண்டு மூணு பின்னூட்டமும் போட்டுட்டேன்.

அப்புறம் எதுக்கு இந்த மாதிரி அரை வேக்காடுகளுக்கெல்லாம் நீங்க விளம்பரம் தேடித் தர்றீங்க ரவி?
நான் கூட அங்கே பின்னூட்டியதாய் நினைவு, ஆனால் எனது பின்னூட்டங்களை காணவில்லை, அனுமதிக்கவில்லையோ என்னவோ!

நானும் கூட டாக்டர் ருத்ரனின் கருத்தோடு ஒத்துப் போகிறேன்.விஷமத்தனமான நோக்கில் அவர் எழுதியிருக்கவில்லை என்றே நம்புகிறேன். அவரின் முந்தைய பதிவுகளிலும் அத்தகைய தொணி இல்லை.

ஆனாலும் மந்தினி என்கிற வார்த்தை பிரயோகத்தினை தவிர்த்திருக்கலாம்.
என் மனதில் இருந்தவற்றை சொல்லி விட்டீர்கள். நன்றி ரவி. நிச்சயம் சில நேரம் தமிழனாக பிறந்ததற்கு வெட்கப்பட வேண்டி உள்ளது.
வருண் said…
I think the reason for Dr. Rudran's encouragement is that he wants women to write more and controversial issues as well. Speak what they feel. Not getting scared for attacks like this.

When they write more just like you and me they make small "mistakes" as well and misundertood and misinterpreted.

If you go on attack them like this, some might get scared and run away!

We are all having opinions. So is kirubaa nandhi. You can criticize her, of coursse TO ACHIEVE whatever you are trying to achieve. Let me hope she does not stop writing her opinions because of these Kind of attacks from people like you!

What will some people do if they dont come up with posts like this (your attack I mean)?? They get nowhere. Yeah "athirvinai" is the way to go for getting "popular"!
Ravi,

ungaLOda "thani thamizhnaadu" paRRiya "madurai kindal" - latest Ananda vikatan-la vanthirukku!
Indian said…
Neither the blogger nor the renowned doctor seem to realize that this writing is seen by Eelam Tamils as poking their wound.

//I think the reason for Dr. Rudran's encouragement is that he wants women to write more and controversial issues as well. Speak what they feel. Not getting scared for attacks like this.//

Wonderful! தூங்கற மாதிரி நடிக்கறவங்கள எழுப்பவே முடியாதுறா சாமி!
தண்டோரா சார். ச்ச்சும்மா..லூலூவாயிக்கு...

டாக்டர் சார். பார்ப்பன குயுக்தி எக்ஸக்ட்ரா போன்ற வார்த்தைகளுக்கே அவங்களுக்கு அர்த்தம் தெரியுமா என்பது சந்தேகமே. தமிழ்நதியை இரண்டு இடங்களில் நீங்கள் கவிதாயினி எழுத்தாளர் உங்களுக்கு குமுதம் ஆவி மேடை அமைத்து தருகிறது போன்ற வார்த்தைகளை உபயோகப்படுத்தியிருக்கிறார். பொ டேஷ் டேஷ் என்று சொல்லலாம்.. அல்லது பொறாமை என்று டீசண்டாக சொல்லலாம். ஆனால் அதனை அவர்களை பொது வெளியில் வலையில் கிடைத்த கருத்து சுகந்திரத்தை பயன்படுத்தி புண்படுத்துதல் போன்றதை செய்தமையே எம்மையும் புண்படுத்தியது. அதனால் தான் தக்காளி சூசு எப்படியிருக்கும் என்று தெரிவித்தோம்.
கபீஷ் நோட்டிபைடு.

முகிலன் சார். தமிழ்நதியின் மீது அவதூறு செய்கிறார். பின்னூட்டத்தில் ஒரு சொம்பு தூக்கி சென்று மேலே உள்ள பத்தியில் கலர் சரியில்ல மேடம் என்று சொல்கிறது. அது தான் முழுமையான (??)அரைவேக்காடு..
ஆனாலும் மந்தினி என்கிற வார்த்தை பிரயோகத்தினை தவிர்த்திருக்கலாம்.

Thursday, February 18, 2010///

இதனை தமிழ்நதியை டமில் ரிவர் என்று சொன்னபோது நீங்கள் அவருக்கும் சொல்லியிருப்பீர்கள் என்று நம்புகிறேன்..
Sangkavi said…
ஆஹா களம் களைகட்டுது...
அன்பு ரவி, நீங்கள் சொன்ன அந்த சொம்பு தூக்கி நாந்தான்.. உண்மையில் எழுத்தின் நிறம்தான் நான் குறிப்பிட்டது வேறு எதுவும் இல்லை. எனக்கும் ஒரு பக்கம் இருக்கிறது என் வேக்காடுகளை அங்கு மட்டுமே வேகவைக்கிறேன். நான் அறிந்தவர்ளின் மூக்கு மட்டுமே என் விரல்கள் தொடும் மற்றவர்கள் வெந்தவர்களா, வேகாதவர்களா என்பதை நான் ஆராய்வதில்லை. இது அதற்கன விளக்கம் மட்டுமே, பதிவுகளுக்கல்ல.மிக்க நன்றி.:)
ரவி,

மன்னிக்க.இது பதிவைப் பற்றியல்ல.
உங்கள் மதுரையப்பற்றி பதிவு இந்த வார ஆ.விகடனில் வந்துள்ளது.உங்கள் குசும்புத்தனத்தை ரசித்துகே.ஜெயப்பிரகாஷ்,விழுப்புரம்-21 என்பவர் எழுதி உள்ளார்.

விவரம்:
பக்கம் 29.நானே கேள்வி நானே பதில்! dated 24-02-10.திரிஷா அட்டைப்படம்.

வாழ்த்துக்கள்.
Anonymous said…
கொளலி

மருத்துவர் கொய்யா ஈழம் தொடர்பா தேர்தலப்போ தெறந்துகிட்டிருந்தது போல இப்போவும் ஸூத்தை திறந்துகிட்டிருக்காரா என்று கேட்டு சொல்லவும்.
Dr.Rudhran said…
ஒரு புதிய இளம் எழுத்தாளரை ஊக்குவித்தாள் அது இப்படி அநாகரீக அசிங்கங்களுக்குப் பதில் சொல்லும் அவலத்திற்கு வரும் என்று நினைக்கவில்லை.
தமிழ்நதி பற்றி எனக்குத் தெரியாது, கிருபானந்தினி பற்றியும். ஆனால் ஈழத்தமிழர்களின் வலியும் வேதனையும் தெரியும். இன்றல்ல இங்கே பதிவெழுதும் பலர் சிறுவயதினராக இருந்திருக்கக்கூடிய 1984 முதல். மீனம்பாக்கத்தில் வந்திறங்கிய 'அகதிகளை' விடவும் படகில் வந்து இன்னும் பரிதாபமான நிலைக்குடிஎச் தள்ளப்பட்டவர்களைப் பற்றித்தான் எனக்கு அக்கறை அதிகம். அதேபோல் அங்கே தலைவனிடம் பயமோ நம்பிக்கையோ வைத்து உயிரையும் உடைமைகளையும் இழந்தவர்களைப் பற்றித்தான் எனக்கு கவலை. எந்தப் பிரயோசனமும் இல்லை என்று தெரிந்து பாதுகாப்பாக ஈழத்துக்கு வெளியே இருந்து கொண்டு காஸ்பர் போன்றவர்களையெல்லாம் நம்பிய அல்லது அப்படிக் காட்டிக்கொண்டவர்களைவிடவும் மலிவான பிரச்சாரத்தையும் பரபரப்பையும் மூலதனமாகக் கொண்டு தொழில் நடத்தும் பத்திரிகைகள் மோசமில்லை- இவர்கள் வெளிப்படையாகவே கேவலமாகத் திரிக்கிறார்கள்.

ரவி..இது இன்னும் எவ்வளவு வளரப்போகிறது என்று தெரியவில்லை, யாருக்கு என்ன பயன் என்றும் புரியவில்லை.
ரவி,

மன்னிக்க.இது பதிவைப் பற்றியல்ல.
உங்கள் மதுரையப்பற்றி பதிவு இந்த வார ஆ.விகடனில் வந்துள்ளது.உங்கள் குசும்புத்தனத்தை ரசித்துகே.ஜெயப்பிரகாஷ்,விழுப்புரம்-21 என்பவர் எழுதி உள்ளார்.

விவரம்:
பக்கம் 29.நானே கேள்வி நானே பதில்! dated 24-02-10.திரிஷா அட்டைப்படம்.

வாழ்த்துக்கள்.////


அட. மீண்டும் சன்மானம் வரப்போகிறதா...சூப்பர்...(இந்த ஆனந்தவிகடன் காரர்கள் அனுப்புகிற பணத்தை சரியாக அனுப்புவிடுவார்கள். அந்த வகையில் அவர்களை பாராட்டத்தான் செய்யனும்.)
வாழ்த்துக்கள் ரவி...

இவ்வார விகடனில் வெளிவந்த கேள்வி பதிலில் உங்கள் பதிவை பற்றி..
---------------------------
''குசும்பு என்றால் என்ன?''

''தனித் தெலுங்கானா, தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்றெல்லாம் குரல்கள் ஆங்காங்கே ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. மதுரையைத் தலைநகராக வைத்து தமிழ்நாட்டைப் பிரித்தால் என்ன நடக்கும் என்று 'தனித்திரு விழித்திரு பசித்திரு' என்னும் வலைப்பதிவில் கட்டுரை ஒன்று படித்தேன். அதன் சில வரிகளைப் படியுங்கள், குசும்பு என்றால் என்ன என்ற உங்கள் கேள்விக்குப் பதில் தெரியும்.

'மதுரை ஆதீனத்துக்கு அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஏற்பாடு செய்யப்படும். அப்படிக் கிடைக்க வில்லை என்றால், பாண்டிய அரசே நோபல் என்ற பரிசை உருவாக்கி அவருக்குத் தரும். அவர் சிக்ஸ்பேக் பாடியுடன் இருப்பதால், அட்லீஸ்ட் உடற்பயிற்சிக்கான நோபல் பரிசாவது கிடைக்க வழி செய்யப்படும்.

தேர்தல் அறிவிப்பதற்கு முன்பே அனைவருக்கும் அமவுன்ட் செட்டில் செய்யப்பட்டு, வேட்பாளர்கள் அன்னப்போஸ்டாக வெற்றிபெற ஏற்பாடு செய்யப் படும்.

வறுமை மற்றும் பஞ்சத்தால் அதிகக் கடன்காரர்கள் உள்ள தொகுதி எம்.எல்.ஏ-க்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை போட்டுத்தள்ளப் பட்டு மறு தேர்தலுக்கு ஏற்பாடு செய்யப்படும்.

மதுரை மைந்தன் கேப்டன் விஜயகாந்த் தலைமையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஒழிக்க தனி அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, அவர்கள் எந்த முட்டிக்கால் அளவு தண்ணீர் இருக்கும் டன்னலில் ஒளிந்திருந்தாலும், அவர்களைச் சுழட்டிச் சுழட்டி அடிக்கவும் மேலும், ஹிந்திக்கார தீவிரவாதிகளைத் தமிழில் புத்திமதி சொல்லித் திருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். வசனகர்த்தா திரு.லியாகத் அலிகான்.
இந்தப் பிரச்னைக்காக முதலில் குரல் கொடுத்த டாக்டர் சேதுராமனுக்கு, காமராஜர் பல்கலைக்கழகம் மூலமாக மேலும் ரெண்டு மூணு டாக்டர் பட்டம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்!' ''

- கே.ஜெயப்பிரகாஷ், விழுப்புரம்-21.
-------------------------
ரவி..இது இன்னும் எவ்வளவு வளரப்போகிறது என்று தெரியவில்லை, யாருக்கு என்ன பயன் என்றும் புரியவில்லை------------------

டாக்டர், யாருக்கும் பயனில்லைதான். ஈழம் சம்பந்தமான தன்னுடையை கருத்துக்களை வெகுஜன ஊடகத்தில் பதிந்துவரும் தமிழ்நதி போன்றவர்களை தூற்ற நினைப்பவர்கள் கொஞ்சம் யோசிக்கலாம் இல்லையா ? அப்படி தூற்றுபவர்கள் கொஞ்சம் போல வரலாறு புவியியல் அரசியல் பற்றி தெரிந்துகொண்டு பிறகு செய்யலாமே ?

குறைந்தபட்சம், செல்வேந்திரன், ரதி என்பவரை தவிர வேறு யாரும் தன்னுடைய மனநிலையை கொஞ்சம்போல யோசிப்பவர்கள் இல்லை என்று தமிழ்நதி நினைத்துவிட ஏதுவாகாதில்லையா ?
அன்புள்ள ஷங்கர்.

இதுபோன்ற கருணையற்ற தாக்குதலை பார்த்து நீங்கள் குறைந்தபட்சம், இது தவறு என்று சொல்லியிருந்தால் அவர்மீது உங்களுக்கு உண்மையான நட்பிருக்கிறது என்பேன். அது நீங்கள் செய்யாத பட்சத்தில் நீங்களும் அவருக்கு எதிராகவே இயங்குகிறீர்கள்.
செந்தழல் , அங்க சொன்னது தான் இங்கயும், பெயர் கேலி வேண்டாம் ... அங்கேயாவது ஆங்கிலபடுத்தல் மட்டும் .. அதே சகிக்கவில்லை
இது இன்னமும் ....
அப்புறம் எல்லாம் கருத்து பதிவு தான் ... விவாதத்திற்கு உள்ள சரக்கில்லை என்றால் விதண்டா வாதம் தான் ... பதிவர்களுக்கு
பின்னூட்டம் , அவர்களுக்கு வாழ்க்கை ...
1983 ல் கொடுமைகளை கேட்டு / பார்த்தவனுக்கு இருந்த பற்று , கொஞ்சம் கொஞ்சமாக நம் அரசியல் கோமாளிகளால் எப்படி குறைந்து
போய் உள்ளது .... மேலும் மேலும் உணர்ச்சி வசப்பட்டு அவர்களது வாழ்க்கை எவ்வளவு சீரழிக்கப்பட்டுள்ளது ? என்பதை எண்ணி பார்த்து
விட்டு ... பின்னுட்டத்திற்கு வேறு இலகுவான பொருள் பிடித்துக்கொள்வோம் .... உண்மையான அக்கறை இருந்தால் குறைந்தபட்சம் ஒரு
ஈழ குழந்தைக்கு வாழ்வு அளிப்போம் .

(( அப்புறம் செந்தழல் . நடுவில் உள்ள SCRIPPLING வார்த்தைகளை மறைக்கிறது .. என் திரையில் மட்டுமா தெரியவில்லை ))
ஒருவேளை உங்கள் ஸ்க்ரீன் ரெஸலூஷன் சரியில்லையோ என்னமோ ? பதிவை மாக்ஸிமைஸ் செய்து பாருங்களேன் ?
King Of Mars. said…
இந்த மாதிரி புழுகப்பதிவுக் கூட்டங்களை கண்டு கொள்வதுதான் தவறு அப்டியே விட்டுரணும் பேசாம குடும்பத்துக்குள்ளயே படிச்சுட்டு கும்மி அடிச்சுப்பாங்க. ஏன்னா சும்மா இருக்கிறதும், சும்மா கிடைக்கிற நேரமும், நான் எழுதுறேன் நான் எழுதுறேன்கிற மனோநிலையும் இருக்கிற நந்தினிகள் இணையத்துல இப்ப அதிகம் ரவி.
மிகுந்த நாகரிகமான யோசிக்க வைக்கும் எழுத்து நடைக்கு உங்கள் அக்கறைக்கு வாழ்த்துகள்.
கபீஷ் said…
Deleting my comment, quoting Dr.Rudran's comment
V R said…
ரவி அண்ணே,

உங்கள் கருத்தோடு நான் உடன்படுகெரீன். அனாலும் கிருபா நந்தினி போன்ற அரை லூசுகளை ஏன் பெரிய ஆளா ஆக்கணும்?
நான் உங்கள் ப்ளொக்ஸ் ரெகுலரா பார்பேன். நல்லா எழுதுரீங்க அண்ணே. உங்க எழுத்துகளை புக்குல பார்க்க ஆசை.
செந்தழல் , எனது மடிக்கணினி யில் தெளிவாக தெரிகிறது வார்த்தைகள் .... இப்பொழுது சில அனாவசிய அநாகரீக வார்த்தைகள் தெரியாவிட்டாலும் பரவாயில்லை என்று தோன்றுகிறது ... யாராக இருந்தாலும் வலையில் எதற்கு மோசமான வார்த்தைகள்
''நாங்கள்ளாம் பாவம் ''' என்று சொன்ன தமிழ் நதியாகட்டும் , ''கருத்து சொன்னதற்கு பண்பாடற்ற அசிங்கமான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்களே ''என்று சொன்ன கிருபாநந்தனி யாகட்டும் இருவருமே நமது சகோதிரிகள் தானே .. முடிவு காட்டுங்கள்
முற்றுப்புள்ளி வையுங்கள் .. ஆக்கபூர்வமாக வலையில் எதாவது பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்யமுடியுமா என்று பார்ப்போம் ....
பெரிய பெரிய விசயமெல்லாம் சொல்றீங்க..எனக்குதான் ஒன்னும் புரியவில்லை..

Popular Posts