தேடுங்க !

Thursday, February 25, 2010

தமிழ் ஹிந்து தளத்தில் Taken (2008) விமர்சனம்...


“I don’t know who you are. I don’t know what you want. If you are looking for ransom, I can tell you I don’t have money. But what I do have are a very particular set of skills; skills I have acquired over a very long career. Skills that make me a nightmare for people like you. If you let my daughter go now, that’ll be the end of it. I will not look for you, I will not pursue you. But if you don’t, I will look for you, I will find you, and I will kill you”
taken-posterபடத்தில் கதாநாயகன் (ப்ரையான்) கடத்தல்காரனிடம் சொல்லும் இந்த வசனமே கிட்டத்தட்ட முழுக்கதையயும் சொல்லி விடுகிறது.
விபச்சாரத்துக்கு ஆள்கடத்தி விற்கும் ஒரு ஆர்மீனிய இஸ்லாமியக் கும்பலிடம் பிடிபட்டுள்ள தனது மகளை சர்வதேச நெட்வொர்க்குகளில் உள்நுழைந்து மீட்டுக்கொண்டுவரும் ஒரு தகப்பனின் கதை இது என ஒரு வரியில் சொல்லலாம்.
லாஸ் ஏஞ்சலஸின் வசிக்கும் அப்பா சொல்லச் சொல்லக் கேட்க்காமல் அம்மா கொடுத்த செல்லத்தில் அமெரிக்காவில் இருந்து நண்பியுடன் பாரீசுக்குத் தனியாகச் செல்கிறாள் பெண். விவகாரத்து செய்யப்பட்டு விட்ட மனைவியிடம் இருக்கும் மகளிடம் ஓரளவுக்கு மேல் தன் செல்வாக்கு எடுபடாத அப்பா வேறு வழியின்றி அனுமதிகிறார். பாரீசில் பெண் இறங்கியதுமே கடத்திச் செல்லப்படுகிறாள். உலகச் சந்தையில் ஏலம் போட்டு அவளை விற்று விடுகிறார்கள். அதிர்ந்து போகும் அப்பா பாரீசுக்குப் பறந்து போய் கடத்தியவர்களையும், ஏலம் விட்டவர்களையும், ஏலத்தில் எடுத்து அனுபவிக்க இருந்தவர்களையும் ஒருவர் விடாமல் தேடிப் பிடித்துக் கொன்று மகளை மீட்டு வருகிறார். அமெரிக்காவின் ரகசிய ஏஜெண்ட்டாக, ஒரு ப்ரிவெண்டராக இருக்கவேண்டியவர், தன் மகள் அருகில் இருக்க வேண்டும் என்ற ஆசையில் தன் ரகசிய வேலையைத் துறந்துவிட்டு இதை சாதிக்கிறார். தன் பெண்ணுக்காக தன் தொழில் ரகசியங்களைப் பயன்படுத்தி வேலையில் இறங்க நேர்ந்து விடுகிறது. ஆரம்பம் முதல் இறுதி வரை நம்மை படத்துடன் கட்டிப் போடும் திரைக்கதை, விறுவிறுப்பு, கூர்மையான வசனங்கள் நிறைந்த ஆக்‌ஷன் படம்
டிஸ்கி : விமர்சனத்தின் மற்ற அரசியல்கள் பற்றி அக்கறையில்லை, ஆனால் இந்த சிறந்த படத்தை அனுபவித்து பார்த்தேன்...விமர்சகருக்கு நன்றி...

10 comments:

பழமைபேசி said...

இந்த வாரஈறுல பாத்திட வேண்டியதுதான் அப்ப!

Thekkikattan|தெகா said...

நானும் பார்த்தேன் இந்தத் திரைப்படத்தை. அருமையா நகர்ந்துச்சு. நிறைய விசயங்களும் தெரிஞ்சிக்க முடிஞ்சிச்சு, சர்வதேச விபச்சார சந்தைகளின் இயக்கங்களையும் ...

Thekkikattan|தெகா said...

ஆஹா, இப்போதான் நீங்க கொடுத்த லிங்க்ல போயி படிச்சிப்பார்த்தேன், வெவகாரமால்ல எழுதி வைச்சிருக்கிதுகள் என்னமோ விபச்சார சந்தை ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டுமே ஊக்குவிச்சு செய்ற மாதிரி... நான் வரலைப்பா இந்த விளையாட்டுக்கு, ரத்த பூமியால்ல இருக்குமாட்டுக்கு :))

செந்தழல் ரவி said...

நன்றி பழம. டோண்ட் மிஸ்...

செந்தழல் ரவி said...

தெ.கா. நன்றி.

டிஸ்கி போட்டிருந்தேனே பாக்கலயா ?

Thekkikattan|தெகா said...

டிஸ்கி பார்த்தேன், சரியா புரிஞ்சிகிடலன்னு நினைக்கிறேன்... ;)

நாஞ்சில் பிரதாப் said...

நான்கூட இதுக்கு விமர்சனம் போட்டிருந்தேன் பாஸ்... படத்தில் சில காட்சிகள் நம்ம மகாநாதியை நினைவுப்படுத்துகிறதுபோல் உள்ளது.

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

செந்தழல் ரவி said...

hjhjh

செந்தழல் ரவி said...

tets