மதுரையை தலைநகராக கொண்டு தனி தமிழ்நாடு..!!

தனி தெலுங்கானா குறித்த போராட்டங்களும், அதை எதிர்ப்பவர்களும், ஆதரிப்பவர்களும், ஒசமானியா பல்கலைக்கழக மாணவர்களும், சந்திரசேகர ராவும், சிரஞ்சீவியும், தல்லி தெலுங்கானாவும், விஜய சாந்தியும், சிதம்பரமும், ஐதராபாத்தும் ஆங்கில தமிழ், காட்சி ஊடகங்களுக்கும், செய்தித்தாள்களுக்கும் சரியான தீனிபோட்டு வருகின்றன. உஸ்ஸுன்னு ஒத்துக்கறது அப்புறம் அஸ்ஸுன்னு மறுக்கறது என்று மத்திய அரசும் சிதம்பரமும் மறுக்கா மறுக்கா இதை வைத்து அரசியல் செய்ய....அட அதை விடுங்கள்...

தனி தெலுங்கானாவை பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. தெலுங்கனா ஏதோ ஆந்திர மாநிலத்தின் ஏதோ ஒரு மூலையில் இருப்பதாகவும், அவர்கள் அருணாச்சலம், அஸ்ஸாம், நாகாலாந்து மாநிலத்தவரைப்போல கல்வியில், வேலைவாய்ப்பில் ஒதுக்கப்பட்டதால், ஒதுக்கப்படுவதால், புறக்கணிப்பின் வலியில் எழுந்த போராட்டம் தான் தெலுங்கானா என்று நினைத்திருந்தேன்...

அடங்கொன்னியா, தெலுங்கனா என்பது ஆந்திராவின் இதயப்பகுதி. ஐதராபாத்தும் அதை சுற்றிய பகுதிகளும். வளமான பகுதி. போராட்டம் என்று ஆரம்பித்திருந்தால் அதை கோஸ்டல் ஆந்திர மக்களும் ராயலசீமாவினரும் தான் ஆரம்பித்திருக்கவேண்டும். இவ்வளவு நாளாக இதை வைத்து காமெடி செய்பவர்கள், அவர்களது சுயலாபத்துக்காகவே செய்துவந்துள்ளார்கள் என்பது நன்றாக புரிகிறது. ஆமா. அப்படியே புரிஞ்சுட்டாலும் என்கிறீர்களா ? விடுங்க. மேட்டருக்கு வருவோம்.

தலைப்பை பார்த்து கொஞ்சம் ஷாக், கொஞ்சம் எரிச்சல், கொஞ்சம் கடுப்பு எல்லாம் வருகிறதா ? அப்படியென்றால் நேராக பின்னூட்டப்பகுதிக்கு சென்று எதையாவது திட்டிவிட்டு செல்லவும். இல்லையென்றால் மேற்கொண்டு படிக்கவும்.


மதுரையை பொறுத்தவரை அது மிகப்பெரிய ஒரு கிராமம். சென்னையில் இருப்பதுப்போல அண்ணாநகர் ரவுண்டானாவோ, அல்லது மவுண்ட்ரோடு பாலமோ இல்லை. இதிலிருந்தே தெரியவில்லையா ? மதுரை காலம் காலமாக புறக்கணிக்கப்பட்ட ஒரு நகரம்.

சென்னை சரவணா ஸ்டோர்ஸுக்கும் சரவண பவனுக்கும் வருவதற்கு கிட்டத்தட்ட எட்டு முதல் பத்து மணி நேர பயண நேரத்தையும் பணத்தையும் காலம் காலமாக விரயம் செய்துவருபவன் மதுரை தமிழன். எங்களை எல்லாம் பார்த்தால் இளிச்சவாயர்களாக தெரிகிறதா ?

அது மட்டுமா , மெரினா பீச் இருக்கிறதா, அண்ணா சமாதி இருக்கிறதா, அல்லது கன்னிமரா நூலகம்தான் இருக்கிறதா ? ஏன் வரப்போகும் அணு மின் நிலையம் கூட சென்னைக்கருகில் கல்பாக்கத்தில் தானே வரப்போகிறது ? இதிலிருந்து இனிமேலும் சென்னை மதுரையை புறக்கணிக்கத்தான் போகிறது என்பது தெளிவாக தெரிகிறது.

கோடம்பாக்கத்துக்காரர்கள் துட்டுக்காக சுப்ரமணியபுரம், மதுரை டு தேனி வழி ஆண்டிப்பட்டி, மதுரை சம்பவம், மதுரை முண்டியாண்டி விலாஸ் என்று நூற்றுக்கணக்கில் மதுரையை வைத்து படம் எடுத்து அதன் லாபத்தை தங்கள் முதலை வாயில் போட்டுக்கொள்கிறார்கள். பாட்டு ஹூட்டிங் கூட காஷ்மீரிலோ, மலேசியாவிலோ போய் எடுப்பார்கள். இதனால் மதுரைக்கோ, மதுரையில் இட்லிக்கடை நடத்தும் முருகனுக்கோ என்ன பிரயோஜனம் ?

இனியும் ஏமாற மதுரை தயாராக இல்லை. பாண்டிய நாட்டுக்கு என்ன வரலாறு இல்லையா ? குமரிக்கண்டத்தில் கடல்கோளால் (அதாங்க சுனாமி) அழிந்த தென்மதுரை 72 ஊர்களுக்கு தலைநகர். அதுக்கபுறம் கபாடபுரம். அது 300 ஊருக்கு தலைநகர். அதுக்கும் வந்தது சுனாமி. அதுவும் அழிந்தது. அதுக்கப்புறம் இப்ப இருக்குற மதுரை. மதுரை மீனாட்சி இமயமலை வரை படையெடுத்து வெற்றிபெற்றார். அவர் வம்சம்தானே இந்தியாவையே கட்டி ஆண்ட மவுரியர்கள் ?

மதுரைக்காரகள் வரலாற்றிலும் குறைந்தவர்கள் இல்லை. வீரத்திலும் குறைந்தவர்கள் இல்லை

பண்பெணப்படுவது பாடறிந்து ஒழுகல்..

(பைப்புல தண்ணி ஒழுவுதே அது இல்லை. இது கலித்தொகையில வர்ர ஒழுகல். நடத்தல்னு அர்த்தம். ஆங். எங்க விட்டேன். பண்பு. ஆமாம். பண்பிலும் குறைந்தவர்கள் இல்லை. நீதியிலும் குறைந்தவர்கள் இல்லை

ஐ யம் நாட் டெல்லிங் அபவுட் இந்த காலத்து மதுரை சுப்ரீம் கோர்ட்டு கிளை. நான் சொல்ல வர்ரது கண்ணகிக்கு நீதி வழங்க உயிர்விட்ட பாண்டியன் நெடுஞ்செழியனையும், நீதிக்காக கையை வெட்டிக்கிட்ட பொற்கை பாண்டியனையும் சொல்றேன்.

இராமாயணத்தில், மகாபாரதத்தில், அசோகர் கல்வெட்டுக்களில், சிங்கள மகாவம்சத்தில், மவுரியர் பட்டயங்களில், கிரேக்க வரலாற்றில் எங்கெங்கும் பாண்டியர் பற்றிய செய்தி உண்டு. அது மட்டுமா, அகநாநூற்றில், புறநாநூற்றில், கலித்தொகையில், எல்லா சங்க இலக்கியங்களிலும் பாண்டிய நாட்டைப்பற்றிய மேட்டர் இருக்குதுங்க.

இது மூலமா நீ என்ன சொல்ல வர்ரேன்னு தானே கேக்குறீங்க ? மதுரையை தலைநகராக கொண்டு பாண்டிய நாடு அமைக்க காமராஜர் பல்கலை கழகம் மற்றும் அமெரிக்கன் கல்லூரி மாணவர்களை கொண்டு போராட்ட கமிட்டி அமைக்கப்படும். மதுரையில் ஒரு இட்லிக்கடை இயங்க விடமாட்டோம். அமிர்தம் தியேட்டர் அல்லது மேற்கு கோபுர வீதியில் போராட்ட கமிட்டி அலுவலகம் அமைக்கப்படும்.

ரூல்ஸ் அண்டு ரெகுலேஷன்ஸ் பார் த நியூ ஸ்டேட். (உள்துறை செயலாளர் இதை எழுதி ட்ராப்டில் போட்டு வைத்துக்கொள்ளலாம். அதாவது சேமித்து வைத்துக்கொள்ளலாம். நாளை பின்னே சிதம்பரம் சார் வெள்ளை வேட்டி சட்டை துண்டு அணிந்துகொண்டு, கையில் வெள்ளை பேப்பர் வைத்துக்கொண்டு நைட்டு எட்டுமணிக்கு சோனியாஜி வீட்டு வாசலில் பத்திரிக்கை பேட்டி கொடுக்கும்போது அப்படியே பத்திரிக்கைகளுக்கும் டிவி சேனல்களுக்கும் ரிலீஸ் செய்ய வசதியாக இருக்கும்.)

1. கோலிவுட்டைப்போல மதுரையில் தனி திரைப்பட துறை உருவாக்கப்படும். மாட்டிவுட் என்று அது அழைக்கப்படும். மாட்டுத்தாவணி பஸ்டாண்டு அருகில் அது இருக்கும் என்பதை தனியாக சொல்லவேண்டுமா ?

2. வண்டியூர் தெப்பக்குளத்தில் இருந்து கொடைக்கானலுக்கு நேரடி மேம்பாலம் அமைக்கப்படும். அந்த காண்ட்ராக்ட் கழக உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.3. கங்கை நதியை வைகை நதியுடன் இணைக்க மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் அமைச்சர் அழகிரி மன்னிக்கவும், அழகர் ஆற்றில் இறங்கும்போது நிறைய தண்ணீர் ஓடுவது போல செய்யப்படும்.4. பாத்திமா கல்லூரி, மீனாட்சி கல்லூரி, யாதவா கல்லூரி ஆகிய இடங்களுக்கு வெளியே மாணவர்கள் நிம்மதியாக சைட் அடிக்க வசதியாக நிழல் குடைகள் கட்டப்படும்.

5. வன்முறையற்ற சமுதாயத்தை உருவாக்க காந்தி மியூசியத்தில் நடிகர் நாசர் தலைமையில் இளைஞர்களுக்கு வகுப்பு எடுக்கப்படும். இதில் அட்டாக் ஆறுமுகம், வெடிகுண்டு முருகேசன், சைக்கிள் செயின் கோபு, முட்டை பாபு போன்றவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.6. அனைத்து இட்லிக்கடைகளிலும் இட்லிப்பொடி மற்றும் எண்ணை அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும். பரோட்டாவுக்கு எக்ஸ்ட்ரா சால்னாவுக்கு அரசு மானியம் தரும்.7. வெய்யில் அதிகமாக உள்ள காலங்களில் மக்களுக்கு இலவச ஜிகிர்தண்டா பந்தல் அமைக்கப்பட்டு, அரசு சார்பில் ஜிகிர்தண்டா வழங்கப்படும்.8. மதுரை கேபிள் டிவி அமைக்கப்பட்டு, அனைத்து மக்களுக்கும் சன் டிவி, விஜய் டிவி, கலைஞர் டிவி ஆகியவை இலவசமாக காட்டப்படும். அதில் வாடா...என்று ஒரு ரவுடி ஹீரோவை என்று சண்டைக்கு அழைக்கும் காட்சி மறுபடி மறுபடி காட்டப்பட்டு, மதுரை மக்களுக்கு வீரம் டிவி வழியாக புகட்டப்படும்.9. அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு டியூசன் செண்டர் என்று அரசு சார்பில் ஆரம்பிக்கப்பட்டு, சின்ன சந்தில் உயிருக்கு பயந்து ஓடிவரும் மாட்டின் வாலை பிடித்து தொங்கி அந்த மாட்டை டார்ச்சர் செய்வது எப்படி என்று பயிற்றுவிக்கப்படும். மேலும் மத்திய அரசு மூலம் ஜல்லிக்கட்டை ஒலிம்பிக்கில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.10. திருமலை நாயக்கர் மஹால் காதலர் அமைதிப்பூங்கா என்று மாற்றி அமைக்கப்பட்டு, காதலர்கள் மற்றும் கள்ளக்காதலர்கள் அமைதியாக சந்திக்க ஏற்பாடு செய்யப்படும்.

11. தேர்தல் அறிவிப்பதற்கு முன்பே அனைவருக்கும் அமவுண்டு செட்டில் செய்யப்பட்டு, வேட்பாளர்கள் அன்னப்போஸ்டில் வெற்றிபெற ஏற்பாடு செய்யப்படும். வறுமை மற்றும் பஞ்சத்தால் அதிக கடன்காரர்கள் உள்ள தொகுதி எம்.எல்.ஏக்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை போட்டுத்தள்ளப்பட்டு மறு தேர்தலுக்கு ஏற்பாடு செய்யப்படும்.12. பெண்களுக்கு சம உரிமை வழங்கும்பொருட்டு, சிவகங்கை காளையார் கோயில் போல புதுக்கோட்டையில் கண்ணியார் கோயில் என்று புதிய கோயில் நகர் உருவாக்கப்படும்.13. நடிகர் நாகேஷுக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு சுருளி நீர்வீழ்ச்சி நாகேஷ் நீர்வீழ்ச்சி என்று பெயர் மாற்றம் செய்யப்படும். அதே போல தூத்துக்குடி என்ற பெயர் தலைவர் பேத்தியின் வாயில் நுழையாததால் சாத்துக்குடி என்று பெயர் மாற்றம் செய்யப்படும்.

14. பழமுதிர்சோலை என்ற பெயரில் மதுரையெங்கும் அரசு சார்பில் ஜூஸ் செண்டர்கள் ஆரம்பிக்கப்பட்டு, மக்களுக்கு இலவச லெமன் ஜூஸ் வழங்கப்படும். இதன் மூலம் மக்கள் குற்றாலத்துக்கு செல்லும் பயண செலவும் மிச்சப்படுத்தப்படும்.

15. குழந்தைகள் குஜாலாக இருக்கும்பொருட்டு, பள்ளிகளில் சினிமா பீரியட் என்று ஒரு பீரியட் உருவாக்கப்பட்டு, விஜய், அஜீத், சிம்பு, தனுஷ் நடித்த பல படங்கள் திரையிடப்படும்.16.தியாகராஜபுரம், சென்னை சம்பவம், சென்னை டு செங்கல்பட்டு வழி மதுராந்தகம் போன்ற படங்கள் எடுக்கப்பட்டு, இது நாள் வரை மதுரையை நக்கல் செய்த சினிமா தயாரிப்பாளர்களை நக்கல் செய்வோம்.17. மதுரை மல்லி என்ற பெயரில் இண்டர்நேஷனல் லெவலில் பேடண்ட் வாங்கப்பட்டு, இனி மதுரை மல்லி மதுரைக்கே என்ற கோஷத்துடன் எல்லாரும் மல்லிகைப்பூ சூடிக்கொள்ள அரசு உதவும்.

18. மதுரை மத்திய சிறையில் கைதிகள் குஜாலாக இருக்க தனியார் தொலைக்காட்சிகள், மொபைல் தொலைபேசி வசதி, குளுகுளு ஏசி வசதி போன்றவை செய்து தரப்படும். தமிழக அரசு அறுபது வயதில் கைதிகளை விடுவிப்பதற்கு போட்டியாக நாற்பது வயதிலேயே அனைவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


19. மதுரை ஆதீனத்துக்கு அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஏற்பாடு செய்யப்படும். அப்படி கிடைக்கவில்லை என்றால் பாண்டிய அரசே நோபல் என்ற பரிசை உருவாக்கி அவருக்கு தரும். அவர் சிக்ஸ் பேக் பாடியுடன் இருப்பதால் அட்லீஸ்ட் உடற்பயிற்சிக்கான நோபல் பரிசாவது கிடைக்க வழிசெய்யப்படும்.20. தமிழ்நாட்டில் இருக்கும் மீன்பாடி வண்டிகளை எதிர்த்து மத்திய சுப்ரீம் கோர்டில் வழக்கு தொடரப்படும். மீன் என்பது மதுரை கொடி. அதை வண்டிக்கு வைத்து மதுரை கொடியின் மாடஸ்டியை குலைப்பதை எப்பாடு பட்டாவது தடுத்து நிறுத்தப்படும்.21. நடிகர் முரளி கருப்பாக இருப்பதால் அவரை பாண்டிய நாட்டின் ஆஸ்தான நடிகராகவும், வைரமுத்து பாண்டிய அரசின் ஆஸ்தான கவியாகவும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். தெக்கத்தி பொண்ணு என்ற தொடரை எடுத்து மதுரையின் புகழ் பரப்பும் பாரதிராஜாவை பாண்டிய அரசின் ஆஸ்தான டைரக்டராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் பாண்டிய ஆபத்துதவியாக நடித்த ரீமா சென்னுக்கு சிறந்த நடிகை விருது பாண்டிய அரசின் சார்பில் வழங்கப்படும்.22. மதுரை மைந்தன் கேப்டன் விஜயகாந்த தலைமையில் பாக்கிஸ்தான் தீவிரவாதிகளை ஒழிக்க தனி அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, அவர்கள் எந்த முட்டிக்கால் அளவு தண்ணீர் இருக்கும் டண்ணலில் ஒளிந்திருந்தாலும் அவர்களை சுழட்டி சுழட்டி அடிக்கவும், மேலும் ஹிந்திக்கார தீவிரவாதிகளை தமிழில் புத்திமதி சொல்லி திருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வசனகர்த்தா திரு லியாகத் அலிகான்.23. வைகை புயல் (வைகையில் தண்ணி வரும், புயல் வருமா ?) நடிகர் வடிவேலு மதுரையில் இருந்து கிளம்பி தமிழ் கூறும் நல்லுலகத்தை காமெடியாக்குவதால்,  பெங்களூரில் அனில் கும்ளே சர்க்கிள் இருப்பது போல எஸ்.எஸ் காலனியை வடிவேலு காலனி என்று மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

24. இதுபோன்ற பல ஐடியாக்கள் கன்னாபின்னாவென செயல்படுத்தப்பட்டு, மக்கள் எப்போதும் மகிழ்ச்சிக்கடலில் திளைக்கவைக்கப்பட்டு, மதுரையில் கடல் இல்லாத குறை தீர்க்கப்படும். தமுக்கம் மைதானம் அருகே மெரினா என்ற பெயரில் நீச்சல் குளமும் கட்டப்பட்டு, அதில் கோவணம் கட்டியவர்கள் அனைவருக்கும் அனுமதி அளிக்கப்படும்..

25. இந்த பிரச்சினைக்காக முதலில் குரல்கொடுத்த டாக்டர் சேதுராமனுக்கு காமராஜர் பல்கலைகழகம் மூலமாக மேலும் ரெண்டு மூனு டாக்டர் பட்டம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்...


இனி இல்லை புறக்கணிப்பின் வலி.


வாழ்க மீன்கொடி... வாழ்க பாண்டிய மணி(money)த்திரு நாடு...!!!

டிஸ்கி அதாவது டிஸ்க்ளைமர் :

படங்கள் நெட்டில் சுட்டவை. பதிவு யாரையும் புண்படுத்த அல்ல. அப்படி யாராவது கோச்சுக்கிட்டால் ஆட்டோ அனுப்ப என்னுடைய முகவரியை தருகிறேன். நன்றி. எல்லோரும் வாக்களிக்கவும். வாக்குக்கு அமவுண்டு எதுவும் தரமுடியாத கையறு நிலையில் நான். மேலும் பதிவையோ அதன் பாகங்களையோ, குமுதம் ஆவி குங்குமம் புதிய தலைமுறை புத்தகங்கள் வெளியிட விரும்பினால் அதனை வெளியிட்டுவிட்டு, தக்க சன்மானத்தை என்னுடைய முகவரிக்கு அனுப்பவும். (ஏற்கனவே ஆனந்தவிகடன் சன்மானம் அனுப்பியுள்ளது)..மீண்டும் நன்றி..பதிவை எழுதியவர் செந்தழல் ரவி அட்டு tvpravi.blogspot.com
..
..
..

Comments

மதுரையை தலைநகராக கொண்டு பாண்டிய நாடு அமைக்க ரீமாசென் தலைமையில் குழு ஏற்கனவே அமைத்தாகிவிட்டது. அதை மறைத்து பதிவு எழுதிய நீவிர் மதராஸ் நாட்டு உளவாளி என்பது அனைவருக்கும் வெட்டவெளிச்சம்.
//தலைப்பை பார்த்து கொஞ்சம் ஷாக், கொஞ்சம் எரிச்சல், கொஞ்சம் கடுப்பு எல்லாம் வருகிறதா ?//

எவ்வளவோ பாத்துட்டோம், இதெல்லாம் ஜுஜுபி
:)
மணி, எங்கிட்டு ?
damildumil said…
கொடைக்கானல் ஃபோட்டோவில் இருக்கும் பெண்களை அவர்களின் அனுமதி இல்லாமல் பொது தளங்களில் போடுவது சரியாக படவில்லை.
எறும்பு நன்றி..
சார், கூகிள் தேடலில் வருகிறது. கூகிள் என்ன அனுமதி வாங்கிக்கொண்டா போடுகிறது ?
damildumil said…
கூகிளில தேடுனா பெண்கள் இருக்கும் போட்டோ மட்டும் தான் வருதா?? நம்ம வீட்டு பெண்கள் போட்டோவை மற்றவர்கள் அவர்கள் தளத்தில் வெளியிட்டால் எப்படி எடுத்துக் கொள்வோம்னு யோசிக்கலாம். மற்றபடி இது உங்கள் தளம், நான் என்னுடைய கருத்தை மட்டுமே கூறினேன்.நன்றி.
நீங்க இவ்ளோ நல்லவரா! தெரியாம போச்சே..,
அந்த போட்டோவை மாற்றி வேற எதாவது போட்டா சந்தோஷம் என்றால் அதை செய்ய தயார்...!!!
வாங்க ரவி, வாங்க!
சுரேஷ். பழனியில் இருந்து. அல்லது உங்க வீட்டில் இருந்து.

நன்றி...
ராசா said…
வைகையில் தண்ணி வரும், புயல் வருமா ?

சூப்பர் பன்ச் தல!!
VISA said…
நீரு மதுரைய பிரிப்பீரோ தெலுங்கானாவ பிரிப்பீரோ.
முதல்ல எம்ம தெருவ ரெண்டா பிரிக்கணும்பா.

எதிர் வீட்டு பக்கம் இருக்குற பிகருங்க எல்லாம் அவனுக்கு.
என் வீட்டு பக்கம் இருக்குற பிகருங்க எல்லாம் எனக்கு.

ஹட்டு பிகருங்கள அந்Tஹ பக்கம் வச்சுகிட்டு எங்க சைடு பிகருங்கள
என்னா மா டாவடிக்கிறான். நாங்களும் ஒடுக்கப்பட்டவங்க தான்.
அதனால எங்க சைடு பிகருங்க எங்களுக்கே சொந்Tஹமுன்னு
ஒரு சட்டம் கொண்டு வரணும். எங்க தெருவ இரண்டா பிரிக்கலேன்னா
பிரிக்கலேன்னா.....பிரிக்கலேன்னா.....
எதிர் வீட்டு காரன் குடும்பம் ரெண்டா பிரிஞ்சு போவும்டா....
எங்க சைடு பிகர் வாழ்க....

இப்படிக்கு
பிகரானா முன்னேற்ற பேரவை.
தம்பீ..

மருவாதையா சொல்லிரு.. மண்டபத்துல உக்காந்து எழுதிக் கொடுத்தது யாரு ராசா..?

மதுரைக்கார நேட்டிவிட்டியை எல்லாம் பிட்டு, பிட்டு வைச்சிருக்கியே..!

சூப்பரப்பூ..!
chinnappenn2000 said…
//பிகரானா முன்னேற்ற பேரவை.//

Wrong name.It should be renames as Pandiya dravida figure munnetra kahagam.Only then another set of jokers can start an alternative called Anna periyaar dravida all india pandiya figure munnetra kahagam.
நெல்லைக்கும் ஒரு திட்டம் போடுங்க
ரசித்தேன்,இதுவும் டெக்னிக்கலான பதிவு தான்.
விசா. காந்தல் பிகர் முன்னேற்றக்கழகம் என்று ஒரு ஐடியா இருக்கு...
உண்மை அண்ணே. நான் மதுரை பக்கம் மருந்துக்கு கூட எட்டிப்பார்த்த்தில்லை என்ற உண்மையை கரெக்டா சொல்லிட்டீங்க.

விக்கிப்பீடியா மற்றும் கேள்வி ஞானம் தான்...
சின்னப்பெண் நன்றி முதல்வருகைக்கு. இல்ல சின்னப்பனா _
நசரேயா.

இருட்டுக்கடையை வெளிச்சக்கடையாக்க லைட்டு போட நடவடிக்கை எடுக்கலாம் வாங்க.
ஜெரி ஈஸாநந்தா. நன்றி...
Ravi
Read this post..written by me during oct 2008

http://tvrk.blogspot.com/2008/10/blog-post_2205.html
கலக்கல்...கலக்கல்...கலக்கல்

எக்கச்சக்கமா யோசிச்சிருப்பீங்க போல.. சிரிச்சி மாளலை.. அதிலும் கீழ்க்கண்டவையெல்லாம் கண்ணில தண்ணி வரும் ரகம்

//வன்முறையற்ற சமுதாயத்தை உருவாக்க காந்தி மியூசியத்தில் நடிகர் நாசர் தலைமையில் இளைஞர்களுக்கு வகுப்பு எடுக்கப்படும். இதில் அட்டாக் ஆறுமுகம், வெடிகுண்டு முருகேசன், சைக்கிள் செயின் கோபு, முட்டை பாபு போன்றவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.
//

//தியாகராஜபுரம், சென்னை சம்பவம், சென்னை டு செங்கல்பட்டு வழி மதுராந்தகம் போன்ற படங்கள் எடுக்கப்பட்டு, இது நாள் வரை மதுரையை நக்கல் செய்த சினிமா தயாரிப்பாளர்களை நக்கல் செய்வோம்.
//

// மதுரை மைந்தன் கேப்டன் விஜயகாந்த தலைமையில் பாக்கிஸ்தான் தீவிரவாதிகளை ஒழிக்க தனி அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, அவர்கள் எந்த முட்டிக்கால் அளவு தண்ணீர் இருக்கும் டண்ணலில் ஒளிந்திருந்தாலும் அவர்களை சுழட்டி சுழட்டி அடிக்கவும், மேலும் ஹிந்திக்கார தீவிரவாதிகளை தமிழில் புத்திமதி சொல்லி திருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
//

ஒன் கொஸ்டின் பிளீஸ்.. திருச்சி அப்ப பாண்டிய நாட்டில இருக்குமா?
திருச்சி காவேரி காலேஜ் மட்டும் பாண்டிய நாட்டில் சேர்க்கப்படும்...
//பரோட்டாவுக்கு எக்ஸ்ட்ரா சால்னாவுக்கு அரசு மானியம் தரும்//

முடியல சாமி ! இதுக்காகனாச்சும் பிரிச்சிரணும்....
/*** திருச்சி காவேரி காலேஜ் மட்டும் பாண்டிய நாட்டில் சேர்க்கப்படும் ***/

அப்படி சேர்த்தா திருச்சி பக்கத்துல உள்ள புத்தனாம்பட்டி காலேஜ் பிகரும் பாண்டிய நாட்டுல சேர்க்க சொல்லி போராட்டம் பண்ணுவாங்க. பரவாயில்லையா ?
எங்களுக்காக குரல் கொடுக்க துணிந்த பெண்களூரு சிங்கம், கொரியாவில் ’குடி’யேறி வந்த கோமான் செந்தழராருக்கு மிக்க நன்றி! உங்களுக்கு பாண்டிய அரசு அமைந்ததும் பொற்கிழி பரிசாக வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
பாண்டிய நாட்டு மங்கைகளின் படங்களை இங்கிதம் கருதி வெளியிடாமல் பாகிஸ்தான் நாட்டு மங்கைகளின் படங்களை வெளியிட்ட உங்களது நுண்ணரசியலுக்கு பாராட்டுக்கள்.
அப்படி சேர்த்தா திருச்சி பக்கத்துல உள்ள புத்தனாம்பட்டி காலேஜ் பிகரும் பாண்டிய நாட்டுல சேர்க்க சொல்லி போராட்டம் பண்ணுவாங்க. பரவாயில்லையா ?

Thursday, February 04, 2010

மணி. புத்தனாம்பட்டி கல்லூரி மற்றும் பிகர். இந்த இரண்டு வார்த்தைகளும் சிங்க் ஆகவில்லையே ?
பொற்கிழி நல்ல துணியில் தைக்கவும். இல்லைன்னா டவுசரினை போல அதுவும் கிழியும் வாய்ப்புண்டு
இந்த பதிவுக்கு நெகடிவ் ஓட்டு போடுபவர்களுக்கு எயிட்ஸ் ஊசி போட பாண்டிய அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.
திருப்பரங்குன்றத்தை பத்தி சொல்லாததால் மதுரைதளபதி சார்பில் ஆட்டோ அனுப்பபடும்
//இனியும் ஏமாற மதுரை தயாராக இல்லை. பாண்டிய நாட்டுக்கு என்ன வரலாறு இல்லையா ? குமரிக்கண்டத்தில் கடல்கோளால் (அதாங்க சுனாமி) அழிந்த தென்மதுரை 72 ஊர்களுக்கு தலைநகர். அதுக்கபுறம் கபாடபுரம். அது 300 ஊருக்கு தலைநகர். அதுக்கும் வந்தது சுனாமி. அதுவும் அழிந்தது.
//

இந்தக் காரணத்துக்காகவே மதுரையத் தலைநகராப் போடாமப் போயிரப் போறாங்கப்பு..
மதுரையைக் கேலி செய்யும் வண்ணம் இந்தக் கட்டுரையை எழுதிய உம்மை, கோடை கால வைகையில் இறக்கிவிட உத்தரவிடுகிறேன்..
Anonymous said…
நல்ல நகைச்சுவைப் பதிவு. படங்கள் அருமை. அனைத்துமே.

ரீமா சென் அழகாக நிற்கிறார்: ஆபாசமாகவல்ல.

ஆர் கண்டது? ஒருநாள் இப்படியும் ஒரு எழுச்சி - தென் தமிழ்நாடு கேட்டு --வரலாம். ஆனால் வரின், அது தானே தன்னை அழித்துக்கொண்டதாகும். காரணம், தென் மாவட்டங்களில் பாட்டாளி வர்க்கம் (proletariat) மிகவும் உண்டு. அவ்வர்க்கத்தை சுரண்டி கொழுக்கும் முதலாளி (bourgeoise) வர்க்கம் நன்றாக தழைக்கிறது. எனவே, வர்க்க, ஜாதீய போராட்டங்கள் தென் தமிழ்நாட்டை ஒரு நரகமாக்கிவிடும். ஜாதீய என்பது பார்ப்பனர்-அபார்ப்பனர் என்றல்ல; அபார்ப்பனர் (தலித்து நீங்களாக) vs தலித்துகள் என்பதையே குறிக்கும். இச்சண்டைக்கு தென் தமிழ் நாடு பேர் போனது என்பது அறிந்ததே.

இப்படிப்பார்த்தால் ஒரு பயங்கரமான கற்பனை இவ்விடுகை.
கலக்கலா இருக்கு.

அடிக்கடி வர்லேன்னாலும் வரும்போது பட்டாசாத்தான் வர்ரீங்க..
//பரோட்டாவுக்கு எக்ஸ்ட்ரா சால்னாவுக்கு அரசு மானியம் தரும்//

இலவச புரோட்டாவுக்கு என்று இருக்கவேண்டும்.
நான்கூட உண்மையா சிறிய மாநிலங்கள் நல்லதுன்னு நினைச்சேன், ஆனா அந்த சுயேச்சை முதலைமைச்சர் பெரியா ஆப்பா வெச்சிட்டான்.
Anonymous said…
ஒன்ன மறந்துண்டிங்க அடிக்கடி தலைவர வழ்த்திரதுக்கு சினிமா
விழா எடுக்கனுமே அதில தொலைக்க காட்சில தமிழா கொதற
வடகதியலுக வைச்சு குலுக்கல் டான்ஸ் ஆடனும்
(இந்த பதிவுக்கு குறைந்து 3000 பின்னுட்டம்மாவது விழ என் வாழ்த்துக்கள்)

suresh
ஏற்கனவே எதுக்குடா சொன்னோமுன்னு தெரியாம சேதுராமரே திக்கி திணறிகிட்டு இருக்கும் போது நையாண்டி பண்ணுறது கொஞ்சம் கூட நல்லாயில்ல! கலக்கல் பதிவு மட்டுமல்ல எதிர் காலத்தில் பதவி வெறி பிடித்து அலையும் தறுதலைகளுக்கு அடிவயிறை கலக்கும் பதிவும் கூட!
ப்ரியமுடன் வசந்த் ? திருப்பறங்குன்றம் மதுரையிலயா இருக்கு ?

முன்னப்பின்ன செத்திருந்தாத்தானே சுடுகாடு தெரியும்.
Nallathambi002 said…
Arumai,,

fantastic,,,

excellent,,,


Sirippai adakka mudiyalai,,,

tamilpadam ungalidam thoatru vittathu,,,poanga,,,

Nallathambi
முகிலன், உங்களது முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி......
குஜமுக தலைவர் குடுகுடுப்பை அவர்களே. வருகைக்கும் கருத்துக்கும் நன்றீ.
நன்றி பொற்கோ நன்றி அனானி நன்றி நம்பி
உங்க பதிவுல ஏங்க பாலோயர் ஆப்ஷன் இல்ல?
Anonymous said…
nice.
SanjaiGandhi™ said…
தல்லி தரும்புரிக்கு எதும் ஐடியா கீதா ஆபீசர்?
எப்படிங்க இவ்வளவு பெரிய பதிவெல்லாம் போட்றீங்க.. யப்பா. படங்கள் போடாவிட்டாலும், இது மெகா பெரிய பதிவுதான். நன்றி தல.
ரவி,

இந்த வார ஆனந்தவிகடனில் நானே கேள்வி , நானே பதிலில் இந்த பதிவு வந்துள்ளது , பார்த்தீர்களா ?
யாசவி said…
ravi,

see ur post after long time

keep rocking :)
நான் முன்னரே படித்து சிரித்தேன்.
இந்த வாரம் விகடனிலும் வந்திருக்கிறது வாழ்த்துக்கள்.
இந்த வார ஆனந்த விகடனில் பிரசுரமாகியுள்ளது.. இன்னும் சிறப்பாய் எழுத வாழ்த்துக்கள்..!
நன்றி இளங்கோ.
Virutcham said…
I just laughed and laughed and laughed...

http://www.virutcham.com
AMALRAJ said…
மாப்புள.... எங்ககிட்டயேவா நக்கலு ஒக்காலி மதுரபக்கம் வந்தே வீச்சருவாலுக்கு இறயாயிருவு

Popular Posts