Friday, June 04, 2010

என் பெயரை தாங்கி வரும் ஆபாச பின்னூட்டங்கள் குறித்து




இன்று காலையில் துவங்கி பல பதிவுகளிலும் அனானிமஸ் பின்னூட்டமாக ஒரு ஆபாத தளத்தின் சுட்டியுடன் ஒரு பின்னூட்டம் பேஸ்ட் செய்யப்படுகிறது.

மஜா மல்லிகாத்தனமான சுட்டி ஒன்றுடன், என்னுடைய பெயரை எழுதி..

நான் பல ஆண்டுகளால இணையத்தில் செந்தழல் ரவி என்ற பெயரில் மொக்கை போட்டுவருவதை தவிர நான் ஒன்றும் அவ்வளவு பெரிய ஆள் கிடையாது.

ஒரு கருத்து சொல்வேன். ஆறுமாதத்தில் அது தவறு என்று உணர்ந்தால் மாற்றிக்கொள்வேன். அவ்வளவு ப்ளக்ஸிபிள் ஆன ஆள் நான்.

எனக்கும் உங்களுக்கும் வாய்க்கா வரப்பு தகறாறு என்று எதுவும் இருந்துவிடப்போவதில்லை. என்னுடைய கருத்துக்கள் தான் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் அது எது எது என்று பின்னூட்டத்தில் சுட்டினால் அதனை உடனே திருத்திக்கொள்ள முடியாவிட்டாலும் முயற்சியாவது செய்கிறேன்.

ஸ்மார்ட் என்பவரும் இதனை தன் பெயரிலேயே செய்துவருகிறார். திருவாளர் நோ என்பவருக்கும் என்னுடைய பெயரினை எழுதவில்லை என்றால் உறக்கம் வராத நிலை.

அப்படி இல்லை என்றால். !!!

முதலில் கீழே உள்ள சுட்டியை படிக்கவும்.

http://dondu.blogspot.com/2009/12/20122009.html

போலி டோண்டு என்பவர் இணையத்தில் இது போல ஆபாசமாக பின்னூட்டம் ஆரம்பித்து, பதிவு ஆரம்பித்து, பிறகு காவல் நிலையத்துக்கு செல்லவேண்டியதாக ஆயிற்று. தொழில் நுட்பத்தில் கில்லாடியான அவர் டவுசரே கிழிந்தபிறகு, முந்தா நாள் பதிவுலகை பார்க்க ஆரம்பித்த நீங்கள் எம்மாத்திரம் ?

ஸ்கைப், கூகிள், வேர்ட் ப்ரஸ், யாஹூ என்று அனைத்து இணைய தளங்களும் சென்னை சைபர் க்ரைம் பிரிவினர் அனுப்பும் மின்னஞ்சல்களுக்கு 48 மணி நேரத்தில் பதில் அனுப்பிவிடுகிறார்கள். ஏர்டெல், வோடாபோன், மற்றும் இணைய இணைப்பை தரும் லோக்கல் நிறுவனங்களை சொல்லவே வேண்டாம்.

அதில் உங்கள் ஜாதகமே கிடைத்துவிடுகிறது காவல்துறையினருக்கு.

உங்கள் கெட்டநேரம் அதிகமாக இருந்தால், நான் புகார் கொடுக்கும் நேரத்தில் வரும் தாம்பரத்தில் தாலியறுத்த கேஸும் உங்கள் தலையில் விடிய வாய்ப்பு உண்டு. ஆகவே ஜாக்கிரதை. நோ நோ என்கிறேன். ஸ்மார்ட்டாக முடிவெடுத்துக்கொள்ளுங்கள்.

29 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

உங்கள் பெயரில் ஓராண்டுக்கு முன்னர் எனக்குக் கூட பின்னூட்டங்கள் வந்தன. அதில் ஆபாசப் பின்னூட்டம் இல்லை. விமர்சனம், அது நீங்கள் தான் என்று நினைத்துவிட்டேன். பின்னர் ஒரு நண்பர் சொன்னார் அது நீங்கள் இட்டதல்ல என்று. உங்கள் தளம்/முகவரியிட்டு வந்திருந்தது.

இப்போதும் சில நண்பர்களில் பெயரில் பின்னூட்டம் போடப்படுவதாக அறிகிறேன்! குறிப்பாக வோர்ட் பிரஸில்...

யார் என்று கண்டுபிடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை!

குழலி / Kuzhali said...

அய்ய்ய் நான் வெளிநாட்டுல தானே இருக்கேன் என்னை புடிக்க முடியாதே என்று நினைத்தால் நீங்களாகவே ஓடிவந்து சைபர்கிரைம் வாசலில் உட்காரவைக்கும் நம் காவல்துறையின் திறமையை நம் பதிவுலகம் ஏற்கனவே கண்டுள்ளது...

வினவு said...

வினவு பெயரில் smart tamil என்னும் வோர்ட்பிரசு தளத்தில் போலியாய் பின்னூட்டம் வருவது தெரிய வந்துள்ளது. வினவு இதுவரை அந்த தளத்தில் எந்த பின்னூட்டமும் எழுதியது இல்லை, விதிவிலக்கான சில சந்தர்ப்பங்களைத்தவிர நாங்கள் எங்குமே பின்னூட்டம் எழுதுவது இல்லை. வினவு தள முகப்பில் தெரியும் எங்கள் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தியே இந்த கயமைத்தனம் நடந்திருக்கிறது

மேலும் அந்த தளத்தில் பல பதிவர்களுடைய பின்னூட்டங்களும் காணக்கிடக்கின்றன, அதுவும் போலியாகயிருக்குமோ என சந்தேகம் எழுகிறது. எனவே இது குறித்து பதிவர்கள்-வாசகர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தோழமையுடன்
வினவு

மின்னுது மின்னல் said...

இது மாதிரி யார் செய்தாலும் கண்டிக்கபடவேண்டிய செயல்

மின்னுது மின்னல் said...

பின்னூட்ட மட்டுறுத்தல் நீக்கப்பட்டுவிட்டது. உங்கள் மனதுக்கு தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்.
/

:::::::))))))

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

நீ்ங்க ஒரு சிறந்த வலைப்பதிவர் ஆகிவிட்டீங்க, என்பதைத் தான் இந்த நிகழ்ச்சி காட்டுகிறது.,.

அன்பாய் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளீர்கள். இனியாவது அவர் திருந்தட்டும்.

நசரேயன் said...

கண்டிக்க படவேண்டிய விஷயம்

வால்பையன் said...

அடங்க மாட்டிகிறானுங்களே!

Unknown said...

வீடாதீர்கள் ரவி இந்த கயவர்களை.

வினவுக்கு சொல்லி ஒரு அதிரடி பதிவுக்கு ஏற்பாடு செய்யுங்க.

ஒரு பயலும் நமக்கு எதிரா கருத்து சொல்லக்கூடாது.

smart said...

உங்கள் நல்லவராக காட்டிக்கொள்ள எடுக்கும் முதல் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள். நான் எங்கே உங்களை தவறாக குறிப்பிட்டேன் என கூறினால் அதற்கு பதிலளிக்க என்னால் முடியும் வீணாக எனது பெயரை கலங்கப்படுத்தவேண்டாம்

இதற்கு கடுமையான கண்டனங்கள் .

ஜோதிஜி said...

நோக்கம் புரிந்தாலும் அதை தெரிவித்த விதம் சபாஷ் போட வைக்கின்றது ரவி.

smart said...

// முந்தா நாள் பதிவுலகை பார்க்க ஆரம்பித்த நீங்கள் எம்மாத்திரம் ?//
This sentence is openly prove that your disability. As I am the blogger from past three months, I do commented on your posts as the way which you criticize other.

Frankly speaking there is nothing to write illegal against you. Here by I request you to provide me the suspected sentences against you.

And I put forth my strong condemnation on this post.

Thanks
L.Smart

smart said...

வினவுக்கு நான் கொடுத்த வசவுக்கு நீங்கள் ஏன் பெயரைக் களங்கப் படுத்தாதீர்கள் மீறி செய்தால் நானும் புகார் அளித்தால் தாம்பரத்தில் தாலியறுத்த கேஸும் உங்கள் தலையில் விழய வாய்ப்பு உண்டு. ஆகவே ஜாக்கிரதை.

ஸ்மார்ட்டாக முடிவை மட்டுமாவதுயெடுங்கள்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

//
ஒரு கருத்து சொல்வேன். ஆறுமாதத்தில் அது தவறு என்று உணர்ந்தால் மாற்றிக்கொள்வேன். அவ்வளவு ப்ளக்ஸிபிள் ஆன ஆள் நான்.
//

இது சூப்பர் சார்.. எனக்கு என்ன சொல்வதென தெரியவில்லை..

கலக்குங்க..
( நாம குஷ்பு பிரச்சனைய பேசி 2 மாசம் ஆச்சு...நான் இன்னும் நான்கு மாதம் பொறுத்து இருக்கேறேன்.. பை..பை.. சார்..)

Unknown said...

அய்யோ ......... அண்ணே ரவி அண்ணே .... போலிசு பூச்சாண்டி கட்டதிங்க அண்ணே! இனிமே எல்லா பயலுவளும் சரியகிடுவான்க.
எங்கே எல்லோரும் சொல்லுங்க.... நவீன நாட்டமை ரவி அண்ணன் வாழ்க!
பன்னாடைகள் ஸ்மார்ட் மற்றும் நோ ஒழிக!

smart said...

ரவி அண்ணே, அப்படியே ஒரு கம்ளைண்ட மங்களூர் சிவா மற்றும் சில பதிவருக்காக வினவு மீது கொடுக்க வேண்டி வரும் உங்க திறமைய அவுங்களுக்கும் காட்டலாம்.

காட்டுவீங்கனு நினைக்கிறேன் -வாழ்த்துக்கள்

priyamudanprabu said...

உங்கள் பெயரிலும் போலியா


/////

நோ நோ என்கிறேன். ஸ்மார்ட்டாக முடிவெடுத்துக்கொள்ளுங்கள்.
//////////////

ஹா ஹா உள்குத்து? வெளிகுத்து?

Unknown said...

//போலி டோண்டு என்பவர் இணையத்தில் இது போல ஆபாசமாக பின்னூட்டம் ஆரம்பித்து, பதிவு ஆரம்பித்து, பிறகு காவல் நிலையத்துக்கு செல்லவேண்டியதாக ஆயிற்று.//

அவங்கதான் போலிரவின்னு எப்படி கண்டுபிடிச்சீங்க?>

Unknown said...

//பின்னூட்ட மட்டுறுத்தல் நீக்கப்பட்டுவிட்டது. உங்கள் மனதுக்கு தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்...நீங்கள் அளிக்கும் பின்னூட்டங்களுக்கு நீங்களே பொறுப்பாளி...நிர்வாகம் பொறுப்பல்ல...//

என்னடி மீனாட்சி.நீ சொன்னது என்னாச்சு. நேத்தோடு நீ சொன்ன வார்த்தை காத்தோட போயாச்சு

Sanjai Gandhi said...

//பின்னூட்ட மட்டுறுத்தல் நீக்கப்பட்டுவிட்டது. உங்கள் மனதுக்கு தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்...நீங்கள் அளிக்கும் பின்னூட்டங்களுக்கு நீங்களே பொறுப்பாளி...நிர்வாகம் பொறுப்பல்ல...//

//Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.//

6 மாசத்துல மாறுவதெல்லாம் இருக்கட்டும்.. 6 செண்டி மீட்டர்ல இருக்கும் மாற்றத்தை கொஞ்சம் கவனிங்க ராசா.. :)

smart said...

எனது கண்டனப் பதிலை ஏன் வெளியிட வில்லை? சூழ்ச்சிகள் செய்து நல்லவராக காட்ட வேண்டாம் நான் எங்கே போலியாக விட்டேன் என்று ஆதாரம் காட்டவும். எனது கண்டனப்பதிவையும் இதனுடன் காட்டவும் அப்போதுதான் உங்கள் வாசகருக்கு உங்கள் யோக்கிதைத் தெரியும். உங்களைப் போல பச்சோந்தியாக மாறுவதற்குப் பதில் பச்சையாக உண்மைகளை போட்டுடைக்கலாம்.

ரவி said...

ஸ்மார்ட், இவ்வளவு முட்டாள்தனமான கண்டன பதிவை இப்போது தான் பார்க்கிறேன்.

எந்த நடிகை படத்தையும் காட்டக்கூடாது என்று டிவியில் சினிமாவில் சென்று கண்டனம் செய்வீர்களா ?

ஏன் பதிவு உலகில் இருப்பவர்கள் நடிகைகள் படம் போடக்கூடாது என்று எந்த சட்டம் சொல்கிறது ?

ஷாகுல் said...

ஒரு கருத்து சொல்வேன். ஆறுமாதத்தில் அது தவறு என்று உணர்ந்தால் மாற்றிக்கொள்வேன்//

அப்போ அடுத்த நாள் தெரிங்சா மாத்த மாட்டீங்களா?

ஷாகுல் said...

உங்கள் கெட்டநேரம் அதிகமாக இருந்தால், நான் புகார் கொடுக்கும் நேரத்தில் வரும் தாம்பரத்தில் தாலியறுத்த கேஸும் உங்கள் தலையில் விடிய வாய்ப்பு உண்டு. ஆகவே ஜாக்கிரதை. நோ நோ என்கிறேன். ஸ்மார்ட்டாக முடிவெடுத்துக்கொள்ளுங்கள்//

பக்கத்துல போய்டீங்க போல இருக்கு

ஷாகுல் said...

உங்கள் மனதுக்கு தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்...// லக லக லக லக

smart said...

நீங்கள் படம் போட்டது தப்புன்னு சொல்ல நான் போட்ட கமெண்ட்கள் அதை மையமாக வச்சுனு சொல்லவாறேன். அதை மீறி எந்த ஆபா கமெண்டும் இடவில்லை என்கிறேன். சமாளிப்பதற்காக இந்த பதிலைச் சொல்லவேண்டாம். நான் இட்டதாக சொல்லும் கமென்ட் எவை எனக்காட்டவும் அதில் நமது சட்டம் தலையிடுகிறதா என நானும் காட்டுகிறேன்.

Unknown said...

ரவி, இப்படி சொல்லி கொண்டிருப்பதை விட, ஒரு புகாரை கொடுத்துட்டு போக...

இது, கண்டிப்பா கண்டிக்கதக்கது.

பிரபலமாயிட்டாலே இதெல்லாம் சகிச்சுதானே ஆகனுமோ :P

ரவி said...

///நீங்கள் படம் போட்டது தப்புன்னு சொல்ல நான் போட்ட கமெண்ட்கள் அதை மையமாக வச்சுனு சொல்லவாறேன். அதை மீறி எந்த ஆபா கமெண்டும் இடவில்லை என்கிறேன். சமாளிப்பதற்காக இந்த பதிலைச் சொல்லவேண்டாம். நான் இட்டதாக சொல்லும் கமென்ட் எவை எனக்காட்டவும் அதில் நமது சட்டம் தலையிடுகிறதா என நானும் காட்டுகிறே///

சைபர் கிரைம் அழைக்கும்போது நீங்கள் விளக்கம் கொடுத்தால் போதும் இங்கே நடுங்கவேண்டாம்.

ரவி said...

///அய்ய்ய் நான் வெளிநாட்டுல தானே இருக்கேன் என்னை புடிக்க முடியாதே என்று நினைத்தால் நீங்களாகவே ஓடிவந்து சைபர்கிரைம் வாசலில் உட்காரவைக்கும் நம் காவல்துறையின் திறமையை நம் பதிவுலகம் ஏற்கனவே கண்டுள்ளது.//

சில புதிய ஆபாச தாக்குதல் நபர்களுக்கு இது தெரியாமல் போவதால் அவர்களுக்கு தான் நட்டம்.

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....