FETNA வும் முட்டுச்சந்து முருகேசனும் !!

முருகேசன் மப்படித்துவிட்டு, அவனது வழக்கமான இடமான முட்டுச்சந்து (தண்ணி பைப் பக்கத்துலங்க) அருகில் நின்று இப்படி கவிதையாக கூவிக்கொண்டிருந்தான்.

ஏ அமெரிக்க ஒபாமாவே
உனக்கு தில் இருந்தால்
நெஞ்சில் மஞ்சா சோறு இருந்தால்
ஆப்கானிஸ்தானில் மோதாமல்
இங்கே அமிஞ்சிக்கரைக்கு வந்து பார் !
ங்கொய்யா தட்னா தாராந்துடுவ.
யார்க்கிட்ட மோதுற ?
பின்லேடனையே பீஸ் பீஸாக்கிடுவேன்.
வாடா வாடா வடா டேய் !!!

ரொம்ப எதுகை மோனையோடு இருந்ததால அப்படியே கொஞ்ச நேரம் அதையும் ரசிக்கவேண்டியதா போச்சு. இருந்தாலும் முருகேசன் இதை அவுந்து விழுந்த வேட்டியை கட்டிக்கொண்டு சொல்லியிருந்திருக்கலாம். இட்ஸ் ஓக்கே.

சரி நாம் வேற ஒரு விஷயம் பார்ப்போம். ஏதோ பெட்னாவாம் வட அமெரிக்க தமிழ் சங்கமாம். அவங்க அங்கிட்டு இருக்க தமிழர்களை அழைச்சு விழா எடுக்கறாங்களாம். இதை ஒவ்வொரு வருசமும் நடத்தறாங்களாம். தமிழ்நாட்டில் இருந்து கவிஞர்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகள், இசைமேதைகள் அப்படீன்னு அழைச்சு, அவங்களை கவுரவிக்கறாங்களாம்.

இது ஒரு தமிழ்விழாவா மட்டும் செய்யாம, வட அமரிக்காவில் பரந்து வாழும் தமிழர்கள் எல்லோரும் குடும்பமா சந்தித்தல், பழகுதல், தேவை இருக்கறவங்களுக்கு உதவுதல் என்று செய்யறாங்களாம்.

அமெரிக்க மேடைகளில் தமிழும், இலக்கியமும், நாடகமும், இசையும், கவிதையும், அங்கேயே வளர்ர குழந்தைகளுக்கு தமிழ், தமிழகம், தமிழ் கலை, இலக்கியம் ஆகியவற்றில் அறிமுகம் தருவதோட, பெரியவங்களும் அவர்களின் இயந்திர வாழ்க்கையில் கொஞ்சம் ரெஸ்ட், வெளியில் நன்பர்களை பார்ப்பது போன்றவைக்கு இதனை உபயோகப்படுத்துதல், தமிழ் சம்பந்தமான இனிஷியேட்டிவ்ஸ் ஆகியவை எடுக்கிறாங்களாம்.

சரி இதுல உனக்கு என்ன பிரச்சினை என்று கேட்கிறீங்களா ? இதில் ஈடுபாட்டோடு செயல்படும் தோழர் பழமைபேசி மிகுந்த மன வருத்தத்தில் இருக்காராம். ஈழத்தில் இவ்வளவு அனர்த்தங்கள் நடந்தபிறகு தமிழகத்தில் செம்மொழி மாநாடு தேவை இல்லை என்று கூவும் அமெரிக்க தமிழர்களுக்கு பெட்னாவின் தமிழ்விழா தேவையா, அதில் தமிழ்நாட்டில் கலை துறையில் இருக்கும் லச்சுமிராய்க்கும் பிரியாமணிக்கும் என்ன வேலை ? ஏன் வடிவுக்கரசியை கூப்பிடாமல் பிரியாமணியை கூப்பிடுகிறீர்கள் ?இப்படியாக இந்த விழாவையும், அதன் நோக்கங்களையும், அதில் கலந்துகொள்பவர்களை பற்றியும் கேள்விகளை அவரது வலைப்பதிவில் சந்திக்கிறார். அவரும் எவ்வளவு பொறுமையாக அமைதியாக விளக்கங்கள் முன் வைத்தாலும் (அது தேவையே இல்லை என்ற நிலையிலுங்கூட) அதனை ஏற்பாரில்லை, மேலும் அனானிமஸாகவும், ஐடியுடனும் மேலும் தேவையற்ற, பயன் அற்ற, கேள்விகளையே வைக்கிறார்கள் என்று சொன்னார் பழமைபேசி.

என்னுடைய புரிதல் படி சில விளக்கங்களை நானும் தருகிறேன்.

1. தமிழ் செம்மொழி மாநாடு கூடாது என்று சொன்னவர்கள் பெட்னா விழா நடத்துகிறார்கள்.

இவ்வாறு டார்கெட் செய்யப்படுபவர்கள் ஒரு சில அமெரிகக பதிவர்கள். அவர்களுக்கும் இந்த பெட்னாவுக்கும் என்ன சம்பந்தம் என்று இதனை கேட்பவர்கள் விளக்கலாம். நான் புரிந்துகொள்வதுக்கு.

2. லட்சுமிராயிக்கும் பிரியாமணிக்கும் பெட்னாவில் என்ன வேலை ? ஏன் கஸ்தூரியையும் வடிவுக்கரசியையும் அழைக்கவில்லை.

தமிழகத்தில் கலைத்துறையில் இருந்து அவர்கள் அழைப்பின்பேரில் செல்கிறார்கள். அவர்கள் வீட்டு விழாவில், அவர்கள் ஊர்மிளா மடோந்கரையோ, இல்லை அமீஷா பட்டேலையோ அழைத்தாலும் நான் கேள்விகேட்கமாட்டேன். இப்படி அழைக்கப்படுபவர்கள் தமிழ்நாட்டில் தானே
கலைத்துறையில் இருக்கிறார்கள் ? மிக முட்டாள்தனமான கேள்வி இது.

கஸ்தூரி பீல்ட் அவுட் ஆகி ஒரு மாமாங்கம் ஆன நிலையில் இன்னும் இவர்கள் கஸ்தூரியிலேயே குந்தியிருப்பவர்கள். ஜிமெயில் சக்க போடு போடும் நிலையில் யாஹூவில் குந்தியிருப்பவர்கள்.

விட்டுத்தள்ளுங்க !!

பழமைபேசிக்கு.

இது போன்ற கேள்விகளை புறந்தள்ளுங்கள். இது உங்கள் நேரத்தை வீணடிக்கும் ஒன்று. ஆக்கப்பூர்வமான பணிகளில் தொடர்ந்து ஈடுபடுங்கள்.

சில பேர், என்ன நடந்தாலும் ஒரு சலிப்போடு அணுகுவார்கள். தேவை இல்லாமல் பேசி கெடுப்பார்கள்.

என்னத்த கண்ணைய்யாவுக்கு ஏன் அந்த பெயர் தெரியும்தானே ? அதே போல வாய்ஸில் கீழே உள்ளதை படியுங்கள்.

என்னத்த மாநாடு போட்டு என்னத்த பேசி
என்னத்த லஷ்மிராய கூட்டு என்னத்த பிரியாமணிய கூட்டு
என்னத்த நடகம்போட்டு என்னத்த நடிச்சு

Comments

புரிதலுக்கு நன்றிங்க குத்தூசியார்... நான் இன்னும் சிறிது நேரத்தில் வெளியூர்ப் பயணம்.... மீண்டும் சந்திப்போம்.
வெளியில எங்காவது பேசினாலோ, எழுதினாலோ விட்டுடலாங்க குத்தூசியார்... நேரிடையாகக் கேட்கும் போது பொறுப்பா சொல்லித்தானே ஆகணும்.... அதுவும் மஞ்சூரார் நான் பெரிதும் மதிப்பவர்களுள் ஒருவர்!
திரு.ரவி,

பழமைபேசிக்கு ஆதரவாக பதிவிட்டுள்ள நீங்கள் தயவுசெய்து இந்த கேள்விக்கு பதில் வாங்கி தாருங்கள் .

எனக்கு அமரிக்காவையோ பெட்னாவையோ தெரியாது , ஆனால் பழமைபேசியின் இந்த பதிவு தெரியும் , கலைஞர்களை கண்டு கொள்வதில்லை என்று சொன்னாதால் ஜெயமோகனை ”அல்லது உங்களுக்குத் தேவையானதைச் செய்து தரலையா?” என்று கேவலமாக கேட்டவர் இந்த பதிவர் ,

ஜெ எழுதி ஒரு வருடம் ஆகிறது , அடுத்த வருடமும் ஆட்டக்காரிகளை அழைத்ததைதான் விளம்பரபடுத்தியுள்ளார்கள், எந்த கலைஞர்களையும் அழைத்ததாக தெரியவில்லை , கேட்டால் இலக்கியவாதி என்று பர்வீன் சுல்த்தானாவை (?) காட்டுகிறார் .

ஜெயமோகன் சொன்னதில் என்ன தவறு ? பழமைபேசி எழுதியது சரியா ?

பார்க்க http://maniyinpakkam.blogspot.com/2009/08/blog-post_10.html
பழமைபேசி said... எனக்கு ஒரே ஒரு பதில் பிளீஸ்
பழமைபேசி said... எனக்கு ஒரே ஒரு பதில் பிளீஸ்
கமெண்டு பாலோ அப்புக்கு...
அட விடுங்க ரவி எவன் செத்தா நமக்கு என்ன.. வாங்க நம்ம தமிழை வளர்ப்போம்...அதுவும் எப்படி பெரும்பாலான தமிழ்சங்கங்கள் செய்யுற மாதிரி..சினிமா டிக்கெட் விப்போம், வலை தளங்களை ஆங்கிலத்தில் அமைப்போம் (including fetna),தமிழ் சங்க கூட்டங்களில் ஆங்கிலத்தி உரை ஆற்றுவோம்,பண்டிகளை வார இறுதிகளில் கொண்டாடுவோம், லட்சுமி ராய் போன்ற “உண்மை தமிழ் கலிஞர்களை” அழைத்து தமிழையும் தமிழ்கலாச்சாரத்தையும் தமிழையும் எப்படியாவது வளர்ப்போம்..விடுங்க பாஸு...

அமெரிக்க தமிழ்சங்கங்களும் தமிழ்வளர்ப்பும் செம காமெடி போங்க..

Popular Posts