சென்னை: விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருத்துச் சொல்வதோ, பிரச்சாரம் செய்வதோ சட்டப்படி குற்றமில்லை என்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கருத்துரிமை இயக்கம் சார்பில் இயக்குநரும் பத்திரிகையாளருமான புகழேந்தி தங்கராஜ் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அம்மனுவில், "கடந்த அக்டோபர் மாதம் விடுதலைப்புலிகள் மீதான தடையை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்து இருந்தனர். பனகல் மாளிகை முன்பு இந்த இயக்கத்தை நடத்த போலீஸ் கமிஷனரிடம் அனுமதி கேட்டோம். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது.
தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. கமிஷனரின் உத்தரவை ரத்து செய்து கையெழுத்து இயக்கம் நடத்த அனுமதிக்க வேண்டும்," என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சந்துரு முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணை முடிவில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், "தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதோ, பிரச்சாரம் செய்வதோ குற்றமாகாது என்று வைகோ மீதான பொடா வழக்கில் உச்சநீதி மன்றமே தீர்ப்பளித்துள்ளது. எனவே விடுதலைப் புலிகள் மீது இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்துவது தவறு அல்ல.
இதுதொடர்பாக, புலிகளுக்கு ஆதரவுக் கருத்துக்களைச் சொல்லவும் தடை இல்லை. இவை அரசியல் சட்டத்துக்கு எதிரான செயல்கள் அல்ல. இதனால் கமிஷனர் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் கையெழுத்து இயக்கம் நடத்த போலீஸ் அனுமதிக்க வேண்டும்," என்று கூறப்பட்டுள்ளது.
நன்றி - தட்ஸ்தமிழ்..
13 comments:
முதல் ஓட்டு நான் போட்டுட்டம்பா.
கும்மியாரோ நானும் ஆவலுடன் காத்திருக்கின்றேன்.
ஓட்டுக்கு நன்றி மக்கள்ஸ். இம்புட்டு நாளா பூச்சாண்டி காட்டினவங்க எங்கப்பா ?
ரவி,
பகிர்ந்தமைக்கு நன்றி.
**
அருந்ததிராய் காஷ்மீர் பற்றி பேசியதுகூட இறையாண்மையின்கீழ் பரீசிலிக்கப்பட்டது.
**
இதற்கான தீர்ப்பின் பிரதி மேலும் பொடா தீர்ப்பின் பிரதி இருந்தால் பிடிஎஃப் கோப்பாக போடவும். மக்கள் சட்டம் நடராஜனிடம் கெட்கலாம். அனைவருக்கும் உதவியாக இருக்கும்.
.
சோ வாட்.... பேசி என்னாக போகுது .. ஈழத்தமிழர் வீட்டில அடுப்பெரிக்க முடியுமா? ஈழத்தமிழ் பசங்களுக்கு கல்வி கிடைக்குமா ? ஏன் ஈழத்துக்கு போறீங்க .. தமிழ்நாட்டு முகாம்ல இருக்க ஈழத்தமிழருக்கு என்னத்த பிடுங்கப் போராங்க இந்த தமிழ் தேசியவாதிகள் ..ஒன்னியும் இல்லை ...
இவ்ளோ நேரம் பஸ்ல மட்டும் இருந்ததால் பதிவை கவனிக்கல. இப்பதான் பஸ்ல கும்மி கமெண்டை பாத்துட்டு அவசரமா ஓடியாந்து ஓட்டு போடுறேன்.
அவங்க எல்லாம் இப்ப வரமாட்டங்க பாஸ்
இனியென்ன அரசியவாதிகளுக்குத்தான் திண்டாட்டம் .....இதைச் சாட்டா வைத்து ஜெயிலுக்குப் போய் வீர வசனம் பேச முடியாதே !!!!!!!!!!!!
இது குறித்து நேற்று பதிவு போட நினைத்தும் இயலவில்லை.எனது சார்பாக பதிவுக்கு நன்றி.
பகிர்ந்தமைக்கு நன்றி.
போர்க்குற்றவாளி ராஜபட்சே - எனது அனுபவம்.
http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_2462.html
பகிர்வுக்கு நன்றி.ஓட்டும் போட்டாச்சு நண்பரே!
பகிர்வுக்கு நன்றி!
Post a Comment