தேடுங்க !

Tuesday, January 25, 2011

லிப்ட் - குட்டிக்கதை

மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசே நடத்தும் பந்த். செண்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்திரங்கிய பாவனா கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வந்து பொறியியல் படிக்கும் மாணவி.

சாலைகளில் சிற்சில தனியார் வாகனங்களை தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆட்டோ, டாக்ஸி எல்லாம் முடங்கி, துடைத்துவிட்டது போல சாலைகள்.ஸ்கூட்டி வைத்திருக்கும் தோழியின் மொபைலோ நாட் ரீச்சபுள். செய்வதறியாது தவித்தாள்..

செந்நிற சாண்ட்ரோவில் வந்த இளைஞன் சுகுமார், அழகிய இளம்பெண் லிப்ட் கேட்கும்போது நிறுத்தாமலா போய்விடுவான் ?

ப்ளீஸ். உட்காருங்க. எங்கே போகனும் சொல்லுங்க. நான் ட்ராப் பண்ணிடுறேன். என்றான்.

தேங்ஸ். எப்படி வீட்டுக்குக்கு போறதுன்னு தெரியாம ரொம்ப பயமாயிருச்சு..

ஐந்தே நிமிடங்கள் தான்.

நான் இந்த ஜங்ஷன்ல இறங்கிக்கறேன் சார். நிறுத்துங்க. என்றாள் பாவனா.

அண்ணா நகர் போகனும்னு சொன்னீங்களே மேடம். நான் அங்கயே ட்ராப் பண்றேன்.

நோ தேங்ஸ்.

குழப்பத்துடன் புறப்பட்டது சாண்ட்ரோ !

வேறு ஒரு தோழிக்கு அலைபேசியில் அழைத்து, அவளுடைய வண்டியில் ஹாஸ்டலுக்கு வந்து சேர்ந்தவுடன், கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருக்கும்போது டைரியில் இப்படி எழுதினாள்.

கார் ஏஸியில் இருந்து ம்யூஸிக் வரை அடுத்தவரின் உணர்வுக்கு மதிப்பளிக்காத ஒரு முட்டாளின் காரில் ஒரு கிலோமீட்டர் லிப்ட் கேட்டு வந்தேன். முற்றுப்புள்ளி.

6 comments:

Chitra said...

கடைசி பத்தியில் - speaks volumes!

சர்பத் said...

சிறிய கருத்தை கதையாய் கையாண்டுள்ள விதம் அருமை. simply superb!

செந்தழல் ரவி said...

நன்றி சித்ரா

செந்தழல் ரவி said...

நன்றி சர்பத்...

சே.குமார் said...

குட்டிக்கதையாக இருந்தாலும் 'நச்' சிறுகதை.

சதுக்க பூதம் said...
This comment has been removed by the author.