நேற்று
தஞ்சை மாவட்டம்...பத்தூர் மேல்கரை கிராமம்...வருடம் 1960....வீட்டில் இருந்தேன்...தாத்தா ஹெட் மாஸ்டர்...நான் பி.யூ.சி முடித்துவிட்டு அரசாங்க வேலைக்கான உத்தரவுக்காக காத்திருந்தேன்...குபு குபுவென இருகரையும் நிரம்பி பொங்கி வரும் காவிரியில் கைகளை வீசி நீச்சலலடித்து குளிப்பதும், அத்தை மகள் மல்லிகாவை சுற்றி சுற்றி வருவதும், அம்மா செய்யும் பொன்னாங்கன்னி கீரை குழம்பை மிளகாய் வற்றலுடன் இணைத்து நன்றாக சாப்பிடுவதுமாக பொழுது ஓடியது....
எப்போதும்போல் அன்றும் காலையில் அம்மா கொடுத்த பசும்பாலை மடக்கு மடக்கென்று குடித்துவிட்டு, காவேரி ஆற்றுப்பக்கம் கிளம்ப எத்தனித்து துண்டை எடுத்து தோள் மேல் போட்டேன்....
வீட்டு வாசலில் "அய்யோ அம்மா என்று யாரோ குய்யோ முறையோ என்று கத்தும் சத்தம்..."...வெளியே ஓடினேன்...எனக்கு முன்பாக அம்மா வெளியே ஓடிக்கொண்டிருந்தாள்...என்ன சத்தம் என்று பார்க்க...
அங்கே நானும் அம்மாவும் பார்த்தது அதிர்ச்சியான அதிர்ச்சி....எந்த விஷயத்துக்கும் கோபப்படாத ஊர்ப்பெரியவர், ஊர் பஞ்சாயத்தில் அமர்பவர், பள்ளி தலைமை ஆசிறியர், என் அப்பா, ஒரு தாழ்ந்த சாதி பயலை செருப்பால் அடித்துக்கொண்டிருந்தார்...
"ஏ உனக்கு அவ்வளவு திமிராகிடுச்சா.."
என்று அவன் தலை மயிரை பிடித்து அடித்துக்கொண்டிருந்தார்...
அவனோ, அய்யா, விட்டுடுங்க, இனிமே செய்யமாட்டேன் என்று கூவிக்கொண்டிருந்தான்...
விஷயம் பார்த்தவுடன் எனக்கு விளங்கி விட்டது...அம்மாதான் எதுவும் புரியாமல் நின்றுகொண்டிருந்தாள்...
புதிய ரப்பர் காலனி ஒன்று அருகில் கிடந்தது...இந்த பயல் அதை அணிந்து வந்திருக்கவேண்டும்...அதை வீட்டு திண்னையில் உட்கார்ந்திருந்த அய்யா பார்த்துவிட்டிருக்கவேண்டும்....அதுதான் விஷயம்....
அய்யா அனுப்பி பட்டனத்துக்கு போனவன் சும்மா வராமல் அங்கே விற்ற ரப்பர் காலனியை வாங்கி மாட்டிக்கொண்டு வந்திருக்கிறான்....இடுப்பில் துண்டை கட்டி சேவகம் செய்யும் பயலுக்கு அவ்வளவு ஏத்தம் என்று அவர் செருப்பால் அடித்துக்கொண்டிருக்கிறார்...
என்ன செய்ய, காலம் இப்படி கிடக்கு...
இன்று
நான் தனியாத்தான் பெங்களூர்ல கேள்பிரண்டோட லிவ்விங் டுகெதரா இருக்கேன்......அப்பாம்மா சென்னைல...போனதரம் மச்சான் கல்யாணத்துக்கு தஞ்சாவூருக்கு போனப்ப தாத்தாகிட்ட ப்ராமிஸ் பண்ணேன்...
தாத்தா ஹெட் மாஸ்டரா இருந்து ரிட்டயர் ஆனவரு...இருந்தாலும் தமிழ்நாட்டைத்தாண்டி எங்கேயும் போனதா எனக்கு தெரியல...அதும் இல்லாம ஒரு ஏழெட்டு வருஷமா கொஞ்சம் உடம்பு சரியில்லாம கிராமத்துல தான் இருந்தார்...
இப்போ ஆப்பரேஷன் பண்ணதுல இருந்து கொஞ்சம் தேறி இருக்கார்....ம்ம்ம்...தாத்தாக்கிட்ட நான் சொன்னது என்னன்னா...."தாத்தா, உன்னைய பெங்களூர் சுத்திக்காட்றேன்னு"...அர்ச்சு செல்லம் ( அதான் என்னவள், என் மனம் நிறைந்தவள் - கவித கவித) ஊருக்கு போயிருக்கா..அவ அக்கா மேரேஜ்...ஒரு டெண் டேய்ஸ்..வரமாட்டா......
ஊர்ல அத்தை பையன் ப்ரபாட்ட சொல்லி ட்ரெயின் ஏத்தி விடச்சொன்னேன்....நேத்து நைட் வந்திட்டார்.....சாட்டர்டேதானே...பத்து மணிக்கா எழுந்தேன்...இன்னைக்கு மல்டிப்ளக் த்யேட்டருக்கு கூட்டிப்போயி கிழவனை அசத்திடனும்...மக்கா...அங்க வர்ர பிகருகளை பாத்து ஆடனும் கிழவரு.....
அப்படியே போனைப்போட்டு ஒரு ரெண்டு டிக்கெட் வீட்ல கொண்டுவந்து கொடுக்கச்சொன்னேன்...
மத்தியானம் கார்ல தூக்கிப்போட்டேன் தாத்தாவ...அப்படியே இந்திரா நகர் அடையாறு ஆனந்த பவன்ல ஒரு மினி மீல்ஸ வாங்கிக்கொடுத்தேன்...இவ்ளோ கூட்டமா அப்படீன்னு வாய பிளந்தாரு...
வாய விட்டு கேட்டுட்டாரு...
சின்னவரே, என்ன இவ்வளவு கூட்டமா இருக்கு...
என்னா தாத்தா, கண்ணு தெரியலைன்னாலும் நல்ல பிகருங்களை அப்படியே ஐடெண்டிபை பண்ணிடுற...என்று சிரித்தேன்...
சத்தம் போட்டு பேசாதடா...இவங்கள்ளாம் இதே ஊர்க்காரங்களா...என்றார்...
இல்ல தாத்தா...கன்னடாக்காரங்கதான் இங்க அதிகமா இருக்காங்க....நம்ம தமிழ்காரங்க,டெல்லிக்காரங்க,ஒரிசாக்காரங்க,மலையாளீஸ்,
தெலுங்குக்காரங்க எல்லாரும் இருக்காங்க தாத்தா...
நெறைய வெளிநாட்டுக்காரங்க கூட இருக்காங்க...
தாத்தா பொளந்த வாய மூடவே இல்லை...
அப்படியே மல்ட்டிப்ளக்ஸ் த்யேட்டர்...அங்கே கொஞ்சம் ஷாப்பிங் சைடு கூட்டிப்போனேன்...வெள்ளைக்காரனையோ, கருப்பனையோ பார்த்தா, இவன் எந்த நாட்டுக்காரன், அவன் எந்த நாட்டுக்காரன், என்று வாய் ஓயாம கேட்டார்...நானும், அவன் கென்யா ஸ்டூடன்...இவன் சைனீஸ் மாதிரி இருக்கான்...இவன் யூரோப்பியன்....என்று சொல்லிக்கிட்டிருந்தேன்...
அப்புறம் அப்படியே த்யேட்டருக்கு கூட்டிப்போயி நான் டிக்கெட் எடுத்திருந்த ப்ளட் டைமண்ட் படத்தை காட்டினேன்...சவுண்ட் எபக்ட்டை பார்த்துட்டு மீண்டும் தெறந்த வாயை மூடலை கிழவர்...
இங்கே எல்லாம் இருக்கவங்க என்ன சாதிக்காரங்க என்று கேட்டார்...நான் லைட்டாக முறைத்தேன்....அதெல்லாம் இங்கே பாக்குறதில்லை...எவன் எந்த ஜாதின்னு கேட்டா அது எங்கப்பன் காலத்தோட முடிஞ்சுருச்சுன்னு சொல்வாங்க...என்றேன் சூடாக...
அர்ச்சுவும் நானும் வேற வேற சாதியாச்சே.....
நாளை
வருடம் 2106...
என்னோட குட்டிப்பேத்தியை ஜப்பான் இறக்குமதி ஜுமோங் வி.2 எழுப்பும்போது மணி காலை எட்டு...என்னோட ஆயுளை ஜீன் தெரபி மூலம் இருநூறாக அதிகரித்து ஐம்பது வருடங்கள் ஓடிவிட்டன....
என்னுடைய மூவிங் சேரை அவள் அறைக்கு நகர்த்திக்கொண்டு போனேன்....வணக்கம்...என்று சிரித்தாள்...மற்றவர்கள் இதை கேட்டால் ஆச்சர்யத்தில் உறைவார்கள்..ஆங்கிலத்தை உலக மொழியாக்கி பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டதே...இவள் தமிழ் பேசுவது என்னிடம் மட்டும்தான்...
மூன்றாம் உலகப்போருக்கு பின்னால் உலகம் முழுமையும் பல நாட்டு பிரதிநிதித்துவம் கொண்ட ஒரு கவுண்ஸில் கீழ் வந்து, சீன மொழியா, ஆங்கில மொழியா உலக மொழி என்ற போட்டியில் ஆங்கிலம் வெற்றி பெற்று ஆங்கிலம் உலக மொழியானது.....விடுங்கள் அது பழைய கதை...
ஏய் பாப்ஸ்...மானேஜ்மெண்ட் ஸ்கூல் போகலியா...என்றேன்...
படு சமத்து...தமிழை கூட பேசுவாள்...தமிழ் என்ன, பதினைந்து மொழிகளை பேசும்/புரிந்துகொள்ளும் நேனோ டேட்டாஷீட்டை அவளிடம் கொடுத்திருந்தேன்...
அவளுடைய ட்ராபிக் பஸ்டர் ஹெலிகார் காலையில் எட்டுமணிக்கே வந்திடுமே...
நோ தாத்ஸ்.....இன்னைக்கு என்னோட 6G போன்ல வீடியோ காஸ்ட்...என்னோட அங்கோலா டியூட்டர் நடத்தப்போறா என்றாள்...
அங்கோலா டியூட்டரா....அந்த சோமாலியாக்காரி என்ன ஆனாள் ? என்றேன்...
அவளா...அவளோட J2C இண்டியன் வொர்க் பர்மிட் முடிஞ்சு போச்சு..அவள் கிளம்பி போயிட்டா...போவும்போது ரொம்ப புலம்பினா...அவ இண்டியன் யெல்லோ கார்ட் வாங்கி இங்கேயே செட்டில் ஆகலாம்னு நினைச்சாளாம்...இம்மிக்ரேஷன்ல ஏதோ ப்ராப்ளம்...அதான் கிளம்பிட்டா...
இந்த க்ரோயிங் கண்ட்ரீஸ்ல தான் நிறைய எம்ளாயீஸ் இருக்காங்களே...உடனே எங்க ஸ்கூஸ் மெயின் ரோபோ அடுத்த ட்யூட்டரை ஸர்ஸ் மோடில் காட்டி கொடுத்திருச்சி......நேத்துல இருந்து இவங்கதான் எங்க ட்யூட்டர்.....இன்னைக்கு செக்கண்ட் க்ளாஸை 6G வீடியோ காஸ்ட்ல வெக்கிறேன்னு சொல்லிட்டாங்க தாத்ஸ்...
தாத்ஸ்...நேத்து நான் கேட்டது என்னாச்சு...என்றாள்...
செல்லக்குட்டி...ஸாரிடா..நீ என்ன கேட்டேன்னு மறந்துபோச்சு...என்றேன் அவஸ்தையாய்.....பேசாம ஒரு ஹெட் மெமரி சிப் வாங்கி ஆப்பரேட் பண்ணிக்க வேண்டியதுதான்...முக்காவாசி பேர் இப்போ அதைத்தானே செய்துக்கிறானுங்க...
தாத்ஸ்....என்ன தலையில ட்ரீம் சிப் ஏதாவது மாட்டிங்கிட்டீங்களா...என்ன யோசனை...என்றாள் வெடுக்கென்று...
இல்லை செல்லம்...நான் மறந்துட்டேன்...நீ ஒரு முறை சொல்லு...என்றேன்...
தாத்ஸ்....வீடியோவிலயும், வால் நெட்லயும் ( சுவற்றிலேயே இணையம்), பார்த்து பார்த்து எனக்கு போரடிச்சுருச்சு....ஆப்ரிக்காவில லைவ் ட்ரீ இருக்காமே...மரம்னு நீ சொல்லுவியே....அதை நீ காட்டு...இண்டியாவில இருந்து ட்ராவல் தர்ட்டி மினிட்ஸ் தானே...போலாம் தாத்ஸ்...
ஓ எஸ்...மறந்துட்டேண்டி செல்லம்...நாளைக்கே போலாம்....ஆமாம் உன்னோட சைனீஸ் பாய் பிரண்ட் என்ன ஆனான்...என்றேன்...
ஓ அவனா...அவன் ஏதோ நெட்ல தமிழ்மணம்,தேன்கூடுன்னு எதையோ பார்த்திட்டானாம்...அந்த லாங்குவேஜ் என்னன்னு ரிசர்ச் பண்ணிக்கிட்டிருக்கான்...
என் ப்ரேக்பாஸ்ட் அலாரம் பீப்ப்ப்ப்பியது...
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
'கள்' உண்ணாமை வேண்டும் அப்படின்னு காந்தி சொன்னதா கேள்வி..ஆனா அவர் கிட்ட கள் பத்தி யாரோ கதை விட்டு இருக்கனும்...கள் ரொம்ம போதை..உடம்ப...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...
27 comments:
டிஸ்கி, நாப்பது பின்னூட்டத்துக்கு மேல போடாதீங்க..:)))
நல்லாருக்குங்க ரவி!
விஞ்ஞானமெல்லாம் வெச்சி கதை எழுதறிங்களே!
நல்ல கற்பனை ரவி..
//ஓ அவனா...அவன் ஏதோ நெட்ல தமிழ்மணம்,தேன்கூடுன்னு எதையோ பார்த்திட்டானாம்...அந்த லாங்குவேஜ் என்னன்னு ரிசர்ச் பண்ணிக்கிட்டிருக்கான்...//
இது அல்டிமேட் :))
தலைவா...
அருமையான கற்பனை...உண்மையில் இது நடக்க தான் போகுகிறது...
எப்படி இந்த மாதிரி எல்லாம் தலையில ஏதாவது creative chip வச்சிருக்கிங்களா???
test
kadai super da.
ரவி.. நல்லாயிருக்குய்யா...
கத நல்லாக்கீது மாமே...ஆனா கொள்ளு தாத்தா சுஜாதா கடையில சுட்டுகினு வந்தது மாதிரி இருக்கே...
சுஜாதா ஆம்பளையா பொம்பளையா ?
செந்தழல் ரவி
உங்க தாத்தாகிட்ட கேளு...தாத்தான்னா ஆம்பளையா பொம்பளையான்னு...
இந்த மாரி பொசகெட்ட தனமா கேள்வி கேக்காத
-தாய்லாந்து ரவி
ரவி, சத்தியமா உனக்கு தெரியாதா?
அறிவியல் கதை எழுதறவன் எல்லாரும் சுஜாதா ஆகமுடியாது.
அப்புறம் சொல்லுங்க புலிப்பாண்டி...
எப்படி இருக்கீங்க....பேமிலில எல்லாரும் சவுக்கியமா ?
செந்தழல் ரவி
எந்த ஊர்ல இருக்கற பேமிலிய கேக்கறீங்க?
இங்க இருக்கறதா இல்ல ஓவர்சீஸா?
-புலிப்பாண்டி
அட்மின் சார், அட்மின் சார் இந்த பையன் வலைப்பதிவுல சாட் பன்றான் சார்...இவனுக்கு 30 கும்புடுங்க சார்
என்னாப்பா நடக்குது இங்க? உங்களயெல்லாம் ஓராயிரம் தமிழ்மண அட்மின்கள் வந்தாலும் திருத்த முடியாது.
ஹலோ..ஹலோ.. யாரது. நாறுது.
kadai super thala
பிக்ஷன் கதை எல்லாம் கூட வருமா. சூப்பர்.
எனிவே, 'வ'ல ஒரு பாட்டு பாடி அனுப்புங்க.
enna da, kathai ellaam ezutha aarambichitta. kallaaalllkku
நல்லாயிருக்கு ரவி. இன்னும் 100 ஆண்டு கழிச்சு தமிழுக்கு அந்த நிலைமை வரும்னு சொல்கிறீர்களா? வராதுனு நினைக்கிறேன்.
2106 ல் உங்க பேத்தியோட பாட்டி பேர சொல்லவே இல்லையே ஏன்?
இன்று பெண்கள் தினம் சாரே!
இன்னிக்குக்கூட பேர இருட்டடிப்பு
செய்றீங்களே....ஒரு வேளை...
அந்த தாத்தாவை ஏன் சார் தொல்லை செய்யனும் ? வேணுமின்னா கேட்டு சொல்றேன்...
//டிஸ்கி, நாப்பது பின்னூட்டத்துக்கு மேல போடாதீங்க..:))) //
சரி போடலை
//சுஜாதா ஆம்பளையா பொம்பளையா ?//
எந்த சுஜாதா?
கத சுப்பரு ..அது சரி .
2106 -ல அர்ச்சு செல்லம் ... எப்படி இருந்தாங்க ! !!!!
சிலிக்கானுக்கு முன் தோன்றி,சிலிகான் வேலியிலே வளர்க்கப்பட்டு,தமிழ்மணத்தில் னெட்டேரி சந்திரனில்,செவ்வாயில் டிஸ்க் போட்டு அண்டமெல்லாம் சன் னெட்டில் காதல் பாடி ஆண்(on)பெண்(off)ஆடும் வரை தமிழ் வாழும்!
Post a Comment