முதலில் மகாலட்சுமி கல்விக்கு உதவிய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்...மனது நிறைவாக உள்ளது...இதுபோன்ற பல உதவிகளை பின்னாளில் நான் ஆர்கனைஸ் செய்யவும், மற்ற பதிவர்கள் ஆர்கனைஸ் செய்யவும் இந்த முயற்சி (என்றென்றும் அன்புடன் பாலாவுக்கு அடுத்து) எடுத்துக்காட்டாக இருக்கும் என்பதில் ஐயம் சிறிதும் இல்லை எனக்கு...
இந்த முயற்சியை முன்னெடுத்து செல்ல உதவியவர்களுக்கு நான் நன்றி என்று சொன்னால் அது முறையாகவோ பொருத்தமாகவோ இருக்காது...வேறு ஏதாவது வார்த்தை இருக்கிறதா என்று அகராதியில் தேடித்தான் சொல்லவேண்டும்...அந்த அளவுக்கு சிறப்பாக உதவினார்கள்...
பண உதவி செய்ததோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியமான விவாதத்துக்கும், இந்த விஷயம் பலருக்கு தெரிவதற்கும் உதவியவர் பொன்ஸ்...அவர் பதிவில் கேள்வி எழுப்பி இருந்த பலருக்கு (எல்லேராம் உட்பட- என்ன காரணமோ தெரியவில்லை, இவர் என்னிடம் ஒன்றுமே கேட்கவில்லை) சிறப்பாக பதில் அளித்து நாங்கள் கையில் எடுத்திருப்பது உருப்படியான விஷயம் என்று புரியவைத்தார்...
அடுத்ததாக ஞானவெட்டியான் ஐயா அவர்கள்...இளைஞர் போல களப்பணி ஆற்றினார்...அந்த மாணவியின் சர்டிபிக்கேட் எல்லாம் வெரிபை செய்ததில் இருந்து, பணத்தை கொண்டு சென்று கல்லூரியில் கட்டியது வரை, சிரமம் பார்க்காமல் எல்லாவற்றை தோளோடு தோள் நின்று நிறைவேற்றினார்..
அடுத்ததாக நான் நன்றி சொல்லவேண்டியது நிலாவுக்கு...ஒரு ஏழைத்தமிழன் தன்மானத்தை ஆழம் பார்க்க அவர் கேள்விகள் உதவியது என்றால் அது மிகையாகாது....எங்களுக்கு இலவசம் வேண்டாம்..கடனாக கொடுங்கள், நாங்கள் திருப்பிவிடுகிறோம் என்று அந்த ஏழைத்தகப்பனும், அவர் மகள் மகாலட்சுமியும் கரைந்தபோது, தமிழன் தன்மானம் காற்றில் போய்விடவில்லை என்று உச்சந்தலையில் உறைத்தது...நிலா கூறியது தவறானது அல்ல என்று எங்களுக்கும் புரிந்தது...நிலா சொல்கிறார்...நீங்கள் ஒரு சுவருக்கு வெள்ளை நிறம் பூசவேண்டும் என்று கூறுகிறீர்கள்...நான் நீல நிறம் பூசவேண்டும் என்று கூறுகிறேன்...நமது பார்வையில் தான் வேறுபாடு என்று....ஒரு வகையில் சரிதான்....ஆழியூரான் பதிவி இதற்கு பதில் இருந்தது...மலைநாடன் அதனை எடுத்து இயம்பி இருந்தார்...
பசியால் துடிப்பவனுக்கு முதலில் ஒரு துண்டு மீனைக் கொடுத்து அந்த வேளை பசியாற்றுங்கள்.அப்போதுதான் நீங்கள் மீன் பிடிக்கும் டெக்னிக்கை கற்றுத்தரும்போது அதைக் கற்றுக்கொள்வதற்கான சக்தியாவது அவனுக்குக் கிடைக்கும் என ஆழியுரான் தனது பதிவில் கருத்தாளர்களும், களமாடிகளும், புரிதலில் வேறுபடும் புள்ளியினை, அருமையாகச்சுட்டியுள்ளார்.
இப்போது இந்த விஷயம் குறிந்து பதிவிட்டவர்கள், உண்மையில் மிக அருமையான உதவியை செய்தார்கள் என்றால் அது மிகையான ஒரு விஷயமாக இருக்க முடியாது...!! பாருங்களேன் யார் யார் என்று !!!
பதிவர்கள்
நிலா
பொன்ஸ்
ஆழியூரான்
யாழிசைச்செல்வன்
கோவி.கண்ணன்
நட்சத்திரமாயிருந்த வெட்டிப்பயல்
தருமி அய்யா
பாஸ்டன் பாலா
தேவ் (Dev)
ஓசை செல்லா
லக்கிலூக்
மற்றும்
ரிச்மாண்ட் தமிழ் சங்கம்..
(யாருடையதாவது பதிவாவது விடுபட்டிருந்தால் தெரிவிக்கவும்)......
இறுதியாக, உதவி செய்தவர்கள் மற்றும் ஊக்கப்படுத்தியவர்கள் விவரம் தருகிறேன்...
எஸ்.கே அய்யா..
தான் உதவியதோடு மட்டும் இல்லாமல் தனக்கு தெரிந்தவர்களிடமும் சொல்லி மிகப்பெரிய உதவியை செய்தார்..
ராமச்சந்திரன் உஷா...
உடனடியாக உதவி செய்வதாக மடல் அனுப்பியதோடல்லாமல் அவர் சொல்லிய வார்த்தைகள் மிகவும் நம்பிக்கை அளித்தது.." ஊர் கூடி தேர் இழுப்போம் வாருங்கள்"....இது தான் அந்த வார்த்தைகள்...!!!
என்றென்றும் அன்புடன் பாலா, அவர் ஏற்க்கனவே மருத்துவ மாணவிக்காக சேர்த்த தொகையிலிருந்து மற்றவர்கள் அனுமதியுடன் குறிப்பிட்ட தொகையை அளித்தார்..
மற்றும் வெட்டிப்பயல், புதுமைக்கவிஞன் அருட்பெருங்கோ, அறிவியல் தமிழன் செந்தில் குமரன், துபாய் தம்பி, ராஜபாட்டை வெங்கட்ராமன், மகேஷ், ஷங்கர், மலைநாடன், பெயர் வெளியிட விரும்பாத இருவர் ( அனானி), அப்பாண்டி ராஜ், மற்றும் பலர்...இங்கே பார்த்தால் மேலும் தெரியும்
சில பெயர்கள் விடுபட்டிருக்கலாம். அவை அனைத்தும் இன்று இரவு அப்டேட் செய்கிறேன்...
ஆக மொத்தம் நாங்கள் கலெக்ட் செய்தது 58,000 (எஸ்கே ஐயா சேகரித்து வெட்டிப்பயல் மூலமாக இன்னும் வர இருப்பதையும் சேர்த்து). முப்பதாயிரத்தை கல்விக்கட்டணமாக ஞானவெட்டியான் ஐயா மூன்றாம் தேதி கட்டிவிட்டார்...மீதி இருப்பது இருபத்தெட்டாயிரம்..எட்டாயிரத்தை தேர்வுக்கட்டணம், புத்தகங்கள் ஆகியவற்றுக்காக நிறுத்திக்கொண்டு, மீதமுள்ள இருபதாயிரத்தை என்றென்றும் அன்புடன் பாலா, ரஜினி ராம்கி, ஷங்கர் ஆகியவர்கள் தற்போது இறங்கி இருக்கும் முயற்சியாகிய குழந்தை லோகநாயகியின் மருத்துவ செலவுக்கு தந்துவிடலாம் என்று அபிப்ராயம் உள்ளது...உங்கள் கருத்தை இந்த விஷயத்தில் அறிய ஆவல்..
இந்த விஷயத்தில் எனக்கு முழுமையான ஆலோசனை தந்த பொன்ஸ் மற்றும் ஞானவெட்டியான் அய்யா, மற்றும் கவிஞர் பாலபாரதி ஆகியவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன்...அனைவருக்கும் எளிமையான வகையில் பிரச்சினையை மீண்டும் எடுத்து சொல்லியது சரியான புரிந்துகொள்ளலுக்கு உதவியது...
இன்னுமொருமுறை கல்விக்கண் தந்த அனைவருக்கும் நன்றிகூறி விடைபெறுகிறேன்...!!!!
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
ஆனந்த விகடனில் தி.மு.க / அ.தி.மு.க ரெண்டு கட்சிக்காரங்களும் அயோக்கியர்கள் என்பது போல பேசிய விஜியகோந்துவை பகரைனில் இருந்து சுரேஷ் என்ற வாசகர்...
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
வலையுலகில் காமெடியில கலக்கிய / கலக்கிக்கிட்டு இருக்கிற மக்கள்ல எனக்கு தெரிஞ்ச பட்டாசுகள் லக்கிலுக், இளவஞ்சி , கைப்புள்ள , வெட்டிப்பயல் , கொங...
39 comments:
யாராவது இந்த பதிவுக்கு இலவச விளம்பரம் தந்தால் மகிழ்வேன்..
வாழ்த்துக்கள் அனைவருக்கும்!!
//யாருடையதாவது பதிவாவது விடுபட்டிருந்தால் தெரிவிக்கவும்//
நிலா.. ப்ளீஸ்..
அப்புறம் இன்னுமொரு நண்பர் மூலமாக ரூ 5000/- என் கணக்கிற்கு வந்திருக்கிறது. அதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு இன்றைக்கே அனுப்பி விடுகிறேன்.
எடுத்த பணியை சிறப்பாக முடித்தமைக்கு வாழ்த்துக்கள் ரவி!
ராம் இப்போது தொலைபேசி செய்து காசு அனுப்பறேங்கறாரு...அவர் அனுப்புவதையும் + பொன்ஸுக்கு அனுப்பப்பட்ட 5 K வையும் ரிஸர்வ் அமவுண்டோடு சேர்க்கவிருக்கிறேன்...
நாங்கள் ஆயிரம் தான் கிறுக்கினாலும் செயல் ஆற்றி முடித்த நீங்கள் தான் இந்த ஆண்டின் நட்சத்திர வலைப் பதிவர்!எனவே உங்களுக்கு வலைப்பூ திலகம் 2006 என்ற பட்டத்தை வழங்கி பெருமிதம் கொள்கிறேன்!
நாங்கள் ஆயிரம் தான் கிறுக்கினாலும் செயல் ஆற்றி முடித்த நீங்கள் தான் இந்த ஆண்டின் நட்சத்திர வலைப் பதிவர்!எனவே உங்களுக்கு வலைப்பூ திலகம் 2006 என்ற பட்டத்தை வழங்கி பெருமிதம் கொள்கிறேன்!
இரவி,
ICICI இன்னிக்கு காலையிலிருந்தே தகராறு பண்ணிக்கிட்டு இருக்கு...
என்னாச்சுன்னு பார்த்து சொல்லுங்க...... :-))))))))))))))))
//வலைப்பூ திலகம் 2006 என்ற பட்டத்தை வழங்கி பெருமிதம் கொள்கிறேன்! //
வழிமொழிகிறேன்...!
காலத்தால் தாங்கள் ஆற்றிய உதவிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள், செந்தழலாரே!
வளர்க உங்கள் தொண்டு மனம்!
வாழ்த்துக்கள் ரவி!
வலைப்பதிவுகள் தரும் சமூக கூட்டமைப்பை (Social networking) நல்ல பணிக்கு திறந்து விட்ட நீவிர் வாழ்க !! வாழ்த்துக்கள் அனைவருக்கும் !
வாழ்த்துக்கள் ரவி!
மணியன் அவர்களே !!!
ஏற்கனவே என்றென்றும் அன்புடன் பாலா நிறைவாக செய்துள்ளார்...அதன் தொடர்ச்சிதான் இது...ஆனால் அவர் இந்த செயலாற்றும்போது தகுந்த விளம்பரம் இல்லை...பல பதிவர்களும் தமிழ்மணத்தில் இணைந்தில்லை...ஏன், நானே இல்லை...இப்போது ஊர்கூடி தேர் இழுக்க பல கரங்கள் உண்டு இங்கே...ஆகவே, இன்னும் பலர் இதுபோன்ற முயற்சிகளில் இறங்கலாம், ஊர்கூடி தேர் இழுக்க நானும் ஒரு கை வைப்பேன்...
முல்லை, உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி !!!
பொன்ஸ், நிலா பற்றி முன்பே சொல்லி லிங்க் கொடுத்தாச்சே...
பாருங்களேன்....பின்னூட்டத்துக்கு நன்றி !!!
லக்கி, நன்றி உங்கள் கருத்துக்கு...!!!
செல்லா அவர்களே, உங்கள் பட்டத்துக்கு நன்றி, கொஞ்சம் கூச்சமாக இருக்கு, :))
சிந்தா நதி, நன்றிங்க !!!
நன்றி எஸ்.கே அய்யா...முயற்சிக்கு இவ்வளவு சிறந்த ஆதரவு உங்களிடம் இருந்து கிடைத்தது, உங்கள் பங்களிப்பு இன்றி எங்கள் முயற்சி வெற்றி பெற்றிருக்காது என்பதை சொல்லிக்கொள்கிறேன்...
நன்றி என்பது சிறிய வார்த்தை என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்...!!!
நன்றி கொத்தனார் அவர்களே !!!!
ராம், நன்றி....ஐசிஐசியை வங்கியைத்தான் கேக்கனும் !!!!
செந்தழலரே, பட்டியலில் உஷா ராமசந்திரன் நான் என்றால் ராமசந்திரன் உஷா என்று மாற்றிவிடவும். இல்லை
உஷா ராமசந்திரன் என்று வேறு யாராவது இருந்தால் மன்னிச்சிக்குங்க :-)
//ராம், நன்றி....ஐசிஐசியை வங்கியைத்தான் கேக்கனும் !!!! //
இப்போதான் கேட்டேன். இந்தா சரி பண்ணிருவோமின்னு சொன்னாங்க...
சொன்னமாதிரியே செஞ்சிட்டாங்க.
மனமார்ந்த வாழ்த்துக்கள் ரவி,
தொடங்கிய முயற்சியை வெற்றிகரமாக முடித்து வைத்தமைக்கு!!!
மாற்றியதற்கு நன்றி ரவி
காலம் கடந்து கண்டேன் இவ்விடுகையை.
காலத்தே உதவிசெய்த அனைத்துக் கருணை உள்ளங்களுக்கும் நன்றி.
இப்பணி தொடர இறையருள் பொழியட்டும்.
அனைவருக்கும் நன்றி.
அருட்பெருங்கோ, தம்பி, வெங்கட்ராமன், ஷங்கர், மகேஸ் பெயர் எல்லாம் விடுபட்டிருந்தது....நானே கண்டறிந்து எழுதிவிட்டேன்...!!!!
வாழ்த்துகள் இரவி. உங்களின் எல்லா சமூகக் கடமை நடவடிக்கைகளுக்கும் என்னுடைய தலை தாழ்ந்த வணக்கங்கள். தொடர்ந்து செய்து வாருங்கள்.
நெஞ்சார்ந்த நன்றி குமரன்...!!!!!!
ஒன்றூ பட்டால் உண்டு வாழ்வு. சிறப்பாக இப்பணி செய்து முடித்தமைக்கு பாராட்டுகள். வெற்றிகரமாக்க உதவிய நண்பர்களுக்கு நன்றி.
மஹாலட்சுமி நன்றாகப் படிக்கட்டும்.இதே போல எல்லோருக்கும் உதவும் மனப்பான்மையும் பெறட்டும்.
வாழ்த்துக்கள் ரவி.
செந்தழல் ரவி,
உங்களுக்கும், "இந்த விஷயத்தில்" உங்களுக்கு "முழுமையான ஆலோசனை தந்த பொன்ஸ் மற்றும் ஞானவெட்டியான் அய்யா, மற்றும் கவிஞர் பாலபாரதி ஆகியவர்களுக்கு" என் மனமார்ந்த பராட்டுக்களும் வாழ்த்துக்களும். எமது பாட்டன் 3000 ஆண்டுகளுக்கு முந்தியே சொன்னது போல்,
காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது
தேவையறிந்து, காலமறிந்து நீங்களும், பொன்ஸ், ஞானவெட்டியான் ஐயா, பாலபாரதி ஆகியோர் செய்த உதவி அந்தத் தமிழிச்சியின்[மகாலட்சுமி] வாழ்வில் ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிகோலும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை.
தமிழ்மணத்தில், சும்மா பதிவுகள் எழுதுவதோடு மட்டும் நில்லாமல், இப்படியான பல நல்ல காரியங்களைச் செய்யவும் உங்கள் முயற்சி முன்னுதாரணமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
/* யாருடையதாவது பதிவாவது விடுபட்டிருந்தால் தெரிவிக்கவும்)...*/
ரவி, முக்கியமான ஒருவரை விட்டுவிட்டீர்களே! அண்ணன் விடாது கறுப்பு அவர்களும் இது பற்றி ஒரு பதிவு போட்டிருந்தார் என நினைக்கிறேன்.
Very well done Ravi.
உதவியவர்களுக்கும், ஞானவெட்டியானுக்கும் special நன்றிகள் பல!
நேரம் கிடைக்கும்போது அந்தப் பெண்ணின் progress எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொண்டு ஊக்கப் படுத்தினால் இன்னும் நல்லது.
படிப்பு முடிந்தவுடன் அவருக்கு வேலையை ஏற்பாடு செய்யவும் நம் குழுவில் யாராவது ஒருவர் முயற்சி செய்ய வேண்டும்.
புத்தாண்டில் நல்ல ஒரு தொடக்கம் இது.
வாழ்த்துக்கள்!
(
மகாலட்சுமியால் நம் குழுவில் வந்த கருத்து வேறுபாடுகள் இரண்டும் ஆக்கபூர்வமானவை. ஒன்று பசிக்கு மீன் துண்டு கொடு என்றது. இன்னொன்று வலையை கொடு என்றது.
நீங்கள் இப்பொழுது மீன் துண்டை கொடுத்திருக்கிறீர்களா இல்லை வலையை கொடுத்திருக்கிறீர்களா என்பது போகப் போக தெரியும்.
)
உதவியவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ரவி,
இதுபோன்ற சமூக பணிகள் வலைப்பதிவர்கள் தொடர்ந்து செய்யவேண்டும்.
ரவி,
வெற்றிகரமாக செய்து முடித்த அனைவருக்கும் உதவிய நண்பர்களுக்கும்...ஊக்கமளித்த சக பதிவர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்...மேலும் இது போல் சிறப்பான பணி தொடரட்டும் இந்த புது வருடத்திலும்...இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
Friends
Good work done, you can extend this support to many other deserving students from economicall challenged community.
There are lots of corporates who are willing to provide monetary support for these kind of efforts.
Kindly please refer
www.focpune.blogspot.com
We want to initiate these efforts in Tamilnadu, If you can make a group of volunteers and start such activities definitly we would be able to get you contacts who would provide the monetary support.
Thanks
Friends of Children Team
any status update? what is she doing now?
Post a Comment