தேடுங்க !

Saturday, August 30, 2008

எதையும் செய்யவேணாம் பாஸு...பொ$$ மூடிக்கிட்டு இருந்திடலாம் பாஸு...!!!

லக்கிலூக் எதையாவது செய்யனும் பாஸு என்று பதிவு எழுதி இருக்கிறார்..பதிவர் நரசிம் உடைய தூண்டுதல் இந்த பதிவுக்கு காரணம்...

பரிசல் / வெண்பூ / வால்பையன் மாதிரி மொக்கை கோஷ்டிகள் எல்லாம் இதை படித்துவிட்டு, ஆஹா, வாங்கடா கிளம்பி உலகத்தை திருத்தலாம் என்று கிளம்பினீர்கள் என்றால் அதைவிட அட்டர் வேஸ்ட் எதுவும் இல்லை...

ஏதாவது மொக்கை போட்டோமா, நாலு நன்பர்களோடு அரட்டை அடித்தோமா, எப்பவாவது பார்க்கும்போது - டாஸ்மாக்கில் போய் மப்பை போட்டோமா என்று உருப்புடியாக இருக்கவும்..

அதை விட்டு விட்டு, வாருங்கள் குழுவாக உக்காந்து ரூம் போட்டு யோசிச்சு, சமூகத்தை திருத்தலாம் என்று தனியாளாக உங்களது நேரம் பணம் ஆகியவற்றை செலவு செய்தால் முதலுக்கு கொஞ்சம் மோசமாகும்...

இதுவரை நேரத்தை தின்று உங்கள் பிழைப்பை கெடுத்துவரும் வலைப்பூ அடிக்-ஷன் உங்கள் பாக்கெட்டிலும் வேட்டு வைக்கக்கூடும்..

எங்கிட்ட கோடிகளும் - லட்சங்களும் குவிஞ்சிருக்கு, இல்லை நான் ஏற்கனவே நாலு கம்பேனிக்கு சி.இ.ஓ என்னை எவனும் கேள்விகேட்க முடியாது அப்படீன்னா கெளம்புங்க...நரசிம் சாரோட பதிவுக்கு டைரக்ட் ஆடியன்ஸ் நீங்க தான்...ஏன்னா உங்ககிட்ட இழக்கறது ஒன்னுமில்லை...

ஆனா வாழ்க்கையில் பெருசா எதுவும் சாதிக்காத ஆளு என்று நீங்கள் நினைச்சீங்கன்னா, உங்கள் துறையில் பெரிய அளவில் சாதிச்சுட்டு அதுக்கப்புறம் இதுமாதிரி சமூகத்தை திருத்த கிளம்பலாம்...

போன வருஷம் 2006 அப்போ மகாலட்சுமி கல்விக்கு உதவுங்கள் என்று ஒரு பதிவிட்டு, இன்றைக்கு அந்த பெண் ஒரு டீச்சர். ஆனால் இதன் மூலம் நான் அடைந்ததை விட இழந்தது அதிகம்...

என்னுடைய பதவி உயர்வு
நான் விரும்பிய நாட்டில் இரண்டு மூன்று வருடங்கள் தங்கும் வாய்ப்பு
எப்போதும் வலைப்பதிவையே பார்த்துக்கொண்டிருந்து என்னுடைய சொந்த வேலைகளை கூட சரியாக செய்யாத நிலை

என்று திருப்பி எடுக்கவே முடியாத பல இழப்புகள்...

அடைந்தது...எங்கோ ஒரு கிராமத்தில் வசித்த ஒரு பெண்ணை அரசாங்க ஆசிரியை ஆக்க உதவியது...

இந்த சேட்டிஸ்பேக்சன் மட்டுமே நான் இழந்தை அனைத்துக்கும் சமம் ஆகுமா ?

நான் என்ன அவ்வளவு பெரிய தியாகியா ?

என் குடும்பம் என் மனைவி என் சொத்துக்கள் என்று சுயநலம் உடைய ஒரு மனிதன்...

திரும்பி பார்க்கும்போது தான் தெரிந்தது, இந்த வலைப்பதிவு, இதன் அரசியல்கள், இதன் நட்புகள், இதில் நான் செலவிடும் நேரம் என்னுடைய 50% பேண்ட்விட்த் ஐ தின்று இருக்கிறது..

இன்றைக்கும் - பொழப்ப பாருங்கடே என்று ஒரு பதிவு எழுத நேரத்தை தின்றுகொண்டிருக்கிறது...

ஓக்கே...

அவதார புருஷர்கள் : எதையாவது செய்யுங்க பாஸு...
சுயநலவாதிகள் : மூடிக்கிட்டு போங்க பாஸு..

37 comments:

Anonymous said...

dont try to discourage people when they are trying to do something really good. you better be bit optimistic rather then the way u wrote the post.

யட்சன்... said...

மெத்தச்சரியான பதிவு !

பதிவினை வழிமொழிகிறேன்...

பழமைபேசி said...

//இதுவரை நேரத்தை தின்று உங்கள் பிழைப்பை கெடுத்துவரும் வலைப்பூ அடிக்-ஷன்
//
சிந்திக்கக் கூடிய விசயம்....

பழமைபேசி said...

//அதை விட்டு விட்டு, வாருங்கள் குழுவாக உக்காந்து ரூம் போட்டு யோசிச்சு, சமூகத்தை திருத்தலாம் என்று தனியாளாக உங்களது நேரம் பணம் ஆகியவற்றை செலவு செய்தால் முதலுக்கு கொஞ்சம் மோசமாகும்...
//
யாராவது பூனைக்கு மணி கட்டித்தான ஆகணும்.....

Anonymous said...

என்னுடைய பதவி உயர்வு
நான் விரும்பிய நாட்டில் இரண்டு மூன்று வருடங்கள் தங்கும் வாய்ப்பு
எப்போதும் வலைப்பதிவையே பார்த்துக்கொண்டிருந்து என்னுடைய சொந்த வேலைகளை கூட சரியாக செய்யாத நிலை

என்று திருப்பி எடுக்கவே முடியாத பல இழப்புகள்...

why dont you remove this from post as this may be used against you.
No need go give all details.
Just say that you wasted time
at blogs at the cost of so many
things dear to you.Never admit
your faults, weaknesses and
mistakes in an open forum like
this.Your own colleagues who
may not be well wishers may
be reading this unknown to
you.This is a friendly advice.

Anonymous said...

'திரும்பி பார்க்கும்போது தான் தெரிந்தது, இந்த வலைப்பதிவு, இதன் அரசியல்கள், இதன் நட்புகள், இதில் நான் செலவிடும் நேரம் என்னுடைய 50% பேண்ட்விட்த் ஐ தின்று இருக்கிறது..

இன்றைக்கும் - பொழப்ப பாருங்கடே என்று ஒரு பதிவு எழுத நேரத்தை தின்றுகொண்டிருக்கிறது...'

Well said, beyond a point blogs become exercises in unprodutive
usage of time,energy and bandwith.
20 minutes a day for blogs (to read,write and respond) is the
optimum time.

narsim said...

தலைவா..

ஒரே ஒரு பதிவு.. மனதில் தோன்றும் அல்லது தோன்றிய திட்டம் மட்டுமே கேட்டேன்.. எத்தனையோ எழுதுகிறோம்.. ஒரு பதிவு..அது மிக நன்றாக இருக்கும் பட்சத்தில் எங்காவது பயன்படுமே என்ற எண்ணமே..

உங்கள் பெயரும் ரவி.. இந்த பதிவு வர காரணமாய் நான் குறிப்பிட்ட அந்த பின்னூட்டம் இட்ட நபரின் பெயரும் ரவி.. அவர் தூண்டினார்.. நீங்கள் ?..

ஐடியா தான் தலைவா.. மற்றபடி பண உதவியோ களப்பணியோ அல்ல..

("செந்தழல்".. என்றால் மாற்றமோ..புரட்சியையோ குறிக்கும் குறியீடு)

நன்றி

நர்சிம்

பரிசல்காரன் said...

//வஞ்சனை பேய்கள் என்பார்.. இந்த மரத்தில் என்பார் அந்த குளத்தில் என்பார்..அஞ்சி அஞ்சி சாவார்...இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே...//

உங்கள் ப்ரொஃபைலில் குறிப்பிட்டிருந்த இந்த முண்டாசுக்கவிஞனின் வரிகளை மிகவும் ரசித்தேன் ரவி!

சூப்பர்!

பரிசல்காரன் said...

//பரிசல் / வெண்பூ / வால்பையன் மாதிரி மொக்கை கோஷ்டிகள் எல்லாம் இதை படித்துவிட்டு, ஆஹா, வாங்கடா கிளம்பி உலகத்தை திருத்தலாம் என்று கிளம்பினீர்கள் என்றால் அதைவிட அட்டர் வேஸ்ட் எதுவும் இல்லை//

ஐயையோ... நான் எழுதீட்டேனே பாஸ்!

வேஸ்ட்தானா?

SurveySan said...

பாஸு, என்ன இப்படி சொல்லிட்டீக?

யாராச்சும் எதயாச்சும் செய்ய முடிஞ்சா செய்யட்டும் பாஸு.
முடிஞ்சத செய்யட்டும், வீட்ட விட்டு வெளீல போயி டோட்டல்-காந்தி எல்லாம் ஆகணும்னு சொல்லலையே.

சின்னதோ பெருசோ, செய்ய முடிஞ்சத செய்யட்டும். அட்லீஸ்ட் நல்லது செய்யணும்னு யோசிக்கவாவது செய்யட்டும்.

மகாலட்சுமி டீச்சர் ஆயிட்டாங்கரது மட்டும் இங்க நடந்த நல்லதல்ல. அவங்க சொல்லிக்கொடுத்து பல நல்லவங்க உருவாகலாம்.
நீங்க கூட்டா செஞ்ச ஒதவியப் பாத்து, இன்னும் கொஞ்ச பேர், ஆகா, நாமளும் இப்படி ஏதாச்சும் செய்யலாம்னு எறங்கலாம்.

butterfly-effectஐ புரியாத மாதிரி நடிக்கும் இந்த மாதிரி மொக்கைப் பதிவுகளை தமிழுலகம் புறக்கணிக்கணும்னு கேட்டுக்கறேன் :)

தமிழ்ப்பறவை said...

//மகாலட்சுமி டீச்சர் ஆயிட்டாங்கரது மட்டும் இங்க நடந்த நல்லதல்ல. அவங்க சொல்லிக்கொடுத்து பல நல்லவங்க உருவாகலாம்.
நீங்க கூட்டா செஞ்ச ஒதவியப் பாத்து, இன்னும் கொஞ்ச பேர், ஆகா, நாமளும் இப்படி ஏதாச்சும் செய்யலாம்னு எறங்கலாம்.
// repeatteeeee....

அதிஷா said...

பத்த வச்சிட்டியே பரட்ட....

செந்தழல் ரவி said...

நன்றி யட்சன்..

செந்தழல் ரவி said...

நன்றி பழமைபேசி..!!!

செந்தழல் ரவி said...

Well said, beyond a point blogs become exercises in unprodutive
usage of time,energy and bandwith.
20 minutes a day for blogs (to read,write and respond) is the
optimum time.///

உங்க பேரைச்சொல்லி சொல்லியிருந்தீங்கன்னா இதை வெச்சே கூட ஒரு பதிவு போட்டிருப்பேன்..

மங்களூர் சிவா said...

/
திரும்பி பார்க்கும்போது தான் தெரிந்தது, இந்த வலைப்பதிவு, இதன் அரசியல்கள், இதன் நட்புகள், இதில் நான் செலவிடும் நேரம் என்னுடைய 50% பேண்ட்விட்த் ஐ தின்று இருக்கிறது..

இன்றைக்கும் - பொழப்ப பாருங்கடே என்று ஒரு பதிவு எழுத நேரத்தை தின்றுகொண்டிருக்கிறது...
/

இத விட்ட ஓபிஸ்ல என்ன பாஸ் பண்றது!?!?

மங்களூர் சிவா said...

/
திரும்பி பார்க்கும்போது தான் தெரிந்தது, இந்த வலைப்பதிவு, இதன் அரசியல்கள், இதன் நட்புகள், இதில் நான் செலவிடும் நேரம் என்னுடைய 50% பேண்ட்விட்த் ஐ தின்று இருக்கிறது..

இன்றைக்கும் - பொழப்ப பாருங்கடே என்று ஒரு பதிவு எழுத நேரத்தை தின்றுகொண்டிருக்கிறது...
/

இதை விட்டா ஓபிஸ்ல என்ன பாஸ் பண்றது!?!?!?

செந்தழல் ரவி said...

ஒரே ஒரு பதிவு.. மனதில் தோன்றும் அல்லது தோன்றிய திட்டம் மட்டுமே கேட்டேன்.. எத்தனையோ எழுதுகிறோம்.. ஒரு பதிவு..அது மிக நன்றாக இருக்கும் பட்சத்தில் எங்காவது பயன்படுமே என்ற எண்ணமே..////////////

எங்க இஸ்கூல்ல கூட நீங்கள் பிரதமரானால் என்ன செய்வீர்கள் என்று ஒரு வெள்ளைத்தாளில் எழுதச்சொல்லி கேட்டாங்க...

1995லயே, நானு நம்ம நாட்டை அமேரிக்காவோட இணைச்சுடனும்னு காமெடி செஞ்சுட்டேன்...

உங்கள் பெயரும் ரவி.. இந்த பதிவு வர காரணமாய் நான் குறிப்பிட்ட அந்த பின்னூட்டம் இட்ட நபரின் பெயரும் ரவி.. அவர் தூண்டினார்.. நீங்கள் ?../////

டிஸ்கரேஜ் செய்கிறேன் என்று நினைக்க வேண்டாம், என்னுடைய மனதில் பட்டதை சொன்னேன்...

///ஐடியா தான் தலைவா.. மற்றபடி பண உதவியோ களப்பணியோ அல்ல..//////

ஏட்டுச்சுரைக்காய்.............

///("செந்தழல்".. என்றால் மாற்றமோ..புரட்சியையோ குறிக்கும் குறியீடு).////

பொண்டாட்டீ ஊத்திய ஒரு வாளி தண்ணீரில் இந்த புரச்சித்தீ அணைஞ்சதுன்னு ஒரு லைன் போட்டுக்கங்களேன்...

நர்சிம்....

நீங்கள் ஒரு கருத்து சொல்லி எழுதியதற்கு என்னுடைய மனதில் பட்டதை எழூதி இருக்கிறேன், இதனால் ஹர்ட் ஆகவேண்டாம், எந்த ஹார்ட் பீலிங்ஸும் வேண்டாம்...

செந்தழல் ரவி said...

வாங்க பரிசல்...

உங்க ஊர் பஞ்சாயத்து அளவிலாவது உங்க கருத்தை படித்து திருந்தினால் சரி...

என்ன சொல்றீங்க...

செந்தழல் ரவி said...

///இதை விட்டா ஓபிஸ்ல என்ன பாஸ் பண்றது!?!?!?///

நைட்டு பண்ணண்டு மணிக்கும் கமெண்ட்டா ? உங்க அறிவுப்பசிய புரிஞ்சுக்கவே முடியலியே :)))))

செந்தழல் ரவி said...

சர்வேசன் அவர்களே...

நெனைக்கிறது ரைட்டு...ஆனா டாலர்ல சம்பாதிக்கறவங்களும், ஏற்கனவே நெறைய டாலர்ல சம்பாதிச்சவங்களும், ஊர் பஞ்சாயத்துலருந்து FIX MY INDIA ன்னு லெட்டர் போடுறவரைக்கு திருத்தட்டும்...

பொழப்ப பாக்கவேண்டிய நேரத்துல அதை பாக்கனும் இல்லையா ?

அப்புறம் வலைப்பதிவர் வேட்டைக்காரன் குடும்பத்துக்கு உதவின்னு பதிவு போடறமாதிரி ஆகிடப்போவுது...

அதைத்தான் நான் சொன்னேன்...

செந்தழல் ரவி said...

அதிஷா எப்படியே சிங்கிள் லைன்ல கமெண்ட் போட கத்துக்கிட்டீங்க...

பேசாம இதை உங்க ட்ரேட் மார்க் ஆக்கிடுங்க ( மங்களூர் சிவாவின் ரிப்பீட்டேய் மாதிரி)

Anonymous said...

அங்கிள் நீங்க நல்லவரா கெட்டவரா

செந்தழல் ரவி said...

தெரியலையேப்பா !!!!!!!!!!!

Anonymous said...

nic3e view ravi, hats off.

கூடுதுறை said...

உங்களை புரிந்துகொள்ளவே முடிவதில்லை...

ஏற்கனவே ஒருத்தர் கேட்டமாதிரி...

நீங்கள் நல்லவரா? கெட்டவரா?

செந்தழல் ரவி said...

நன்பர் கூடுதுறை...

ஏற்கனவே நான் சொன்னமாதிரி, "

தெரியலையேப்பா"

SanJai said...

வயிற்றுக்கு சோறிடல் வேண்டும்...இங்கு வாழும் மானிடர்க்கெல்லாம்..
..... இதை படிச்சிட்டு எல்லோரும் மூடிக்கிட்டு போய்டுங்க.. ரவி சொல்றாருனு யாரும் யாருக்காவது சோறு போடனும்னு களத்துல எறங்கிடாதிங்க? அப்புறம் அதுவே அடிக்-ஷன் ஆய்டும்... அப்புறம் வலைப்பதிவர் ஜமீன்தாருக்கு சோறு போடுங்கனு பதிவு போட வேண்டி இருக்கும்.. என்ன நான் சொல்றது ரவி? :))

Anonymous said...

இதக்கூட எழுதாம பொத்திக்கிட்டு இருந்திருக்கலாம், சமீபத்தில வலைப்பதிவு எழுத ஆரம்ப்பிக்கும் போது பின்னூட்டகயமைத்தனத்தில எவ்வளவு நேரம் செலவாச்சுன்னு புள்ளிவிவரம் இல்லியா ?. முகமூடி இல்லாம வாலெல்லாம் துள்ளிகுதிக்குதுங்க

Anonymous said...

பெயரிலி வழக்கம் போல தனது பதிவில் என்னவோ ஒளறிக் கொட்டியிருக்கிறான். நீங்கள் கேட்ட கேள்விக்கு சம்பந்தமே இல்லாமல் கருப்பை வேறு துணைக்கு அழைத்திருக்கிறான். கருப்பு மேட்டர் முடிந்து போன ஒன்று என்று பெயரிலிக்கு யாராவது அவனுடைய விளங்காத தமிழில் விளக்கி புரியவைஙப்பா. கருப்புக்கு ஆப்படித்த போதே இந்த பெயரிலி நாதாறிக்கும் அடித்திருந்தால் அனைத்தையும் பொத்திக் கொண்டு உட்கார்ந்திருப்பான். விட்டுட்டீங்க பாஸு.

லக்கிலுக் said...

ரவி!

உடம்பு கிடம்பு சரியில்லையா?

அப்புறம்,

டீச்சரான மகாலட்சுமிக்கு வாழ்த்துக்கள். மகாலட்சுமி டீச்சராக உதவிய செந்தழல் ரவிக்கு நன்றிகள்!!

குரங்கு said...

அப்ப என்னதான் செய்றது பாஸு?

செந்தழல் ரவி said...

///அப்ப என்னதான் செய்றது பாஸு?///

தலைப்பை மறுபடி படிக்கவும்...

''ஓம் சதீஷ் '' said...

என்னுடைய பதவி உயர்வு
நான் விரும்பிய நாட்டில் இரண்டு மூன்று வருடங்கள் தங்கும் வாய்ப்பு
எப்போதும் வலைப்பதிவையே பார்த்துக்கொண்டிருந்து என்னுடைய சொந்த வேலைகளை கூட சரியாக செய்யாத நிலை

என்று திருப்பி எடுக்கவே முடியாத பல இழப்புகள்...பதிவினை வழிமொழிகிறேன்...
சிந்திக்கக் கூடிய விசயம்....

Anonymous said...

yes u r rite ravi

ஸ்ரீ said...

பதிவினை வழிமொழிகிறேன்...

லதானந்த் said...

அன்பார்ந்த திரு செந்தழல் ரவி!

உங்கள் கட்டுரை மிகவும் நன்றாக உள்ளது.

அலுவலக நேரத்தில் அரட்டை அடிக்காமல்

அலுவலகக் கணிணியைச் சொந்த அரிப்புகளுக்குப் பயன்படுத்தாமல்

திருட்டு வி.சி.டி பார்க்காமல்

குடும்பத்துக்கு உரிய நேரம் ஒதுக்கிவிட்டு

சுய முன்னேற்றத்தையும் கவனித்துவிட்டு

தாராளமாய் ஜாக்கி வைத்து சமுகத்தைத் தூக்கி நிறுத்தலாம். தப்பே இல்லை.