Saturday, April 25, 2009

கடைசி பக்கம்...25 ஏப்ரல் 2009

ஈழப்பிரச்சினையில் என்ன ஆகும் என்று நினைத்து நினைத்து, வேறு எதுவும் செய்யத்தோன்றவில்லை...எப்போதும் ஒரு குழப்பமான மன நிலை....மலையாள துரோகிகளின் துரோகம், காங்கிரசு கட்சியின் துரோகம், இத்தாலி அம்மையின் கொலைவெறி, பதவி ஆசையில் நயவஞ்சகம்...அதே பதவி ஆசையில் நாடகம்...

ஆனால் அவன் வீரன்...தமிழன்....அவன் போரஸ் அல்ல...ஹெர்க்குலிஸ்...பொறுத்திருந்து பார்ப்போம்.....

முத்துக்குமார் ஏற்றிவைத்த நெருப்பு புலம்பெயர் நாடுக்களில் கொழுந்துவிட்டு எரிகிறது...அந்த தலைவன் இதனை எதிர்ப்பார்த்துத்தான் காத்திருந்தான் என்று நினைக்கிறேன்..

****************

கார்க்கி பெங்களூர்ல ப்ளீச்சிங் பவுடர பார்த்தாராமே ? யோவ் உண்மைய சொல்லு, அது பெங்களூர் அருண் தானே ?

****************

ஈழப்பிரச்சினையில் மக்களை திசைதிருப்பும் செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வரும் தினமலர் அலுவலகம் மேல யாராவது கொத்து குண்டுகளை வீசினால் பரவாயில்லை...

****************

அண்ணன் சர்க்கரை, சரத்பாபு நிச்சிய வெற்றி, கலக்கல் அலசல் என்று எழுதிய ஸ்பெல்லிங் மிஸ்டேக் பதிவு பார்த்து நொந்தேன்...

அதை ஓட்டி லக்கி, அதிஷா, மற்றும் வெட்டிப்பயல் எழுதியிருந்தார்கள். கவிதா ஆதரவு தெரிவித்திருந்தார்.

ஆனால் சர்க்கரை அண்ணன் அதிஷாவுக்கு போட்ட பின்னூட்டங்களில் கொண்டையை மறைக்க முடியாமல் போனது ஏனோ ?

*****************

அண்ணன் உண்மைத்தமிழனின் புனிதப்போர் குறும்படத்தை மீண்டும் பார்த்தேன். ஆறு மாதத்துக்கு ஒருமுறை பேதி ஆனால் வயிற்றுக்கு நல்லதாமே ?

*****************

தமிழ்வெளி அலெக்ஸா ரேட்டிங்கில் ஒரு லட்சம் தளங்களுக்குள் வந்துவிட்டதே ? நிர்வாகத்தினருக்கு வாழ்த்துக்கள்...தமிழ்ஷ் இதை எல்லாம் எப்பவோ கடந்துடுச்சு...இருந்தாலும் தமிழின் முன்னணி திரட்டியாக உருவெடுத்துள்ள தமிழ்ஷ்க்கும் இந்த நேரத்தில் வாழ்த்துக்கள்..

******************

தலையில் கொஞ்சம் குறைவாக முடியுள்ள, கோவையை சேர்ந்த, தொழில் அதிபர் ஒருவர், காங்கிரசு கட்சிக்காக தேர்தல் வேலை செய்கிறார். காங்கிரசு கட்சி தமிழகத்தின் எல்லா தொகுதிகளிலும் தோற்க எல்லாம் வல்ல மகர நெடுங்குழைகாதன் அருள்புரிவாராக....

*****************

தமிழ்மணத்தில் தேர்தல், சினிமா என்று ஓரங்கட்டிவிட்டார்கள், அதனால் பல பதிவுகள் முகப்புக்கே வராமல் போனது என்று நினைக்கிறேன். அதனால் கொஞ்சம் அல்ல, ரொம்பவே டல் அடித்தது முகப்பு. இப்போது மறுபடி ரிவோக் செய்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்......இன்னும் தமிழ்மண கதை போட்டியில் ஜெயிச்சதுக்கு பரிசை அனுப்பவே இல்லை...உடனே அனுப்பவும்...ஆமாம் சொல்லிப்புட்டேன்..

*****************

அடிக்கடி மலையாளிகள் கொழும்பு செல்வதை அடுத்து, தேங்காய் எண்ணை சமையல் கிடைக்காமல் அவதிப்படுவதை தடுக்க இந்திய அரசு சார்பில் நாயர் சாயா கடை மற்று டிப்பன் செண்டர் கொழும்பில் திறக்கப்படுகிறதாம்...

****************

சைல்ட் அப்யூஸ் பற்றிய அவேர்னஸ் வர கிழக்கு பதிப்பகம் உதவியுடனும் டாக்டர் எஸ்கே, டாக்டர் புருணோ ஆகியவர்களின் முயற்சியாலும் நடைபெறும் டாக்டர் ருத்ரன், டாக்டர் ஷாலினி வாசகர்களை சந்திக்கும் நிகழ்ச்சி ஒரு டாப் நாட்ச். வாழ்த்துக்கள்.

*****************

இலங்கையில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களை வெளியே விடாமல் காவல் காக்கின்றார்கள் சிங்கள காடையர்கள். ஏன் ? பொது மக்களை பட்டியில் மாடு ஆடு போல் அடைத்து அவர்களின் மனோ பலத்தை சிதைத்து, ஒரு தலைமுறையை மந்தைகளாக உருவாக்க முயல்கிறார்களா ? இதனை வட இந்திய மீடியாக்கள் காட்டவே மாட்டார்களே ? ஆரியப்பேய்கள், கண்டி காலே சுற்றுலாவின் இனிமை இன்னும் மனதினை விட்டு அகலவில்லையோ ?

******************

தமிழ்ஷ் ஒட்டளிக்கவும்...தமிழ்மண கருவிப்பட்டை கோளாறு...

*******************

Friday, April 17, 2009

திருமா நீ வெறுமா


இனி அந்த காங்கிரஸ் கட்சியோடு ஒருநாளும் கூட்டணியில்லை என்று உண்ணாவிரத மேடையில் நீ முழங்கியபோது...

அட...இவனல்லவா என் தலைவன்...என்று இதயத்தில் உன்னை வைத்தேன்...

ஆனால் இன்றைக்கு...

மிஸ்டர் தங்கபாலு, ஐயாம் Sorry...

காங்கிரசோடு என்றைக்கும் எனக்கு மோதல் இல்லை..

மூப்பனார்தான் என்னை அரசியலுக்கு அழைத்துவந்தார்...

காங்கிரசு உதவியோடு மூன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன்...

என்றெல்லாம் சொல்கிறாயே ?

நீயும் சராசரி அரசியல்வாதிகளில் ஒருவன் தானோ ??

ஆகட்டும்...

ரத்தம் தோய்ந்த அந்த "கை" உன்னை எவ்வளவு தூரம் கூட்டிச்சென்றாலும் பரவாயில்லை...

இனி அரசியல் ஸ்டேட்மெண்டுகள் விடுவதை நிறுத்திக்கொள்..!!!

Tuesday, April 14, 2009

மூன்றாம் ஆண்டில் தமிழ்வெளி

தமிழ்வெளி மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. புதிய லே-அவுட் அருமை.

நீங்களே பாருங்களேன்..

வாழ்த்துக்கள் !!!!!!

Monday, April 13, 2009

அபிஅப்பா, உடன்பிறப்பு மற்றும் தமிழ் ஓவியாவின் பதிலடிக்கு பதிலடி



//மூத்த வலைவதிவரும் இயக்க முன்னோடியுமான தோழர் ஒருவர் சொன்னார். முதலில் ஆதரவாக பின்னூட்டம் இடுவார் அப்புறம் கொச்சைப்படுத்தி பின்னூட்டம் இடுவார். அவரிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று சொன்னார்.///



முதலில் தமிழ் ஓவியா அவர்களின் அல்லது So Called மூத்த வலைப்பதிவரின் அவதூறான செய்தியை என்னை இத்தனை காலம் அறிந்த அபி அப்பா, உடன்பிறப்பு போன்றவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா இல்லையா என்று தெரியவேண்டும்.

//ஓரளவு ஜெயலலிதாவை விட சரியாகவே கலைஞர் செயல்படுகிறார் //

இன்னாபா இது ஓரளவு ? அந்தம்மா அஞ்சு மார்க்கு இவர் பதினைஞ்சு மார்க்கா ? என்ன காமெடி இது ?

ஓரளவு சரியா செயல்பட்டு கொஞ்சமா பிரேக்கில் கால் வைத்தால் வண்டி ஆக்ஸிடெண்ட் ஆகாம ஓரளவு மோதுமா ? ஓரளவு உயிர் போகுமா ?

காங்கிரஸ் கட்சி தமிழினத்துக்கு துரோகம் இழைத்துள்ளதா இல்லையா ? ஆம் அல்லது இல்லை என்று அபி அப்பாவும் உடன்பிறப்புவும் சொல்வார்களா ??

ஜெயலலிதாவுக்கு இல்லையப்பா. நான் விஜயகாந்துக்கு ஆதரவு தரேன். அதை பற்றியா பேச்சு இங்கே ?? ஜெயலலிதா பற்றி எந்த பேச்சும் என்னுடைய பதிவில் இல்லாதபோது சுப தமிழ்ச்செல்வன் கதையை இழுத்து வந்து திசைத்திருப்பல் எதையும் செய்யவேண்டாம். வெறும் கவிதை வெற்று காகிதம்.

கண்மூடித்தனமான வீரமணி கலைஞர் பக்தியைத்தானே இங்கே கேள்வி கேட்கிறோம் ??

கலைஞரின் முரட்டு வலையுலக பக்தர் மடிப்பாக்கம் மாபியாவே கம்முனு கீது...




இலங்கைக்கு அனுப்பிய டாங்கியை தமிழ்நாட்டை நைட்லேயே க்ராஸ் பண்ணி கேரளா போயிரு அப்படீன்னாராம் ஒரு மேனன் டெல்லியில. ஆனா பாருங்க கூட்ஸ் வண்டி ட்ரைவர் குடிச்சுட்டு ஓட்டினதால வண்டி காலையில பெரியாரு பொறந்த ஈரோட்டுல நிக்கிது. அதுல குண்டை போட்டு ரொப்பி அடிச்சுத்தானேய்யா இன்னைக்கு இத்தனை உசுரு போச்சு ?



காங்கிரசு ராணுவ மந்திரி ஏக்கே ஆந்தோனிக்கு தெரியாம இலங்கைக்கு ஆயுதங்கள் அனுப்பினாங்களா ?



சிவசங்கர மேனனுக்கு தெரியாம தாம்பரத்துக்கு விமானப்படை வீரர்கள் பயிற்சிக்கு வந்தாங்களா ?



நாராயணனுக்கு தெரியாம பஞ்சாப் ரெஜிமெண்ட் இலங்கையில சண்டைக்கு நிக்குதா ?



இதை எதையும் தட்டிக்கேட்காமல் "தாயே, பிச்சை போடு" என்று வயதை கூட கருதாமல் தன்மானத்தமிழர் கலைஞர் 'கொடுத்த காசுக்கு மேல' கூவுவதை எந்த உணர்வாளரால் சகித்துக்கொள்ளமுடியும் ?

வேட்பாளர் பட்டியலை தூக்கிக்கொண்டு டெல்லிக்கு காவடி எடுக்கும் காங்கிரசின் பதிமூனே சொச்சம் கோஷ்டிகளை விட இத்தாலி அண்ணைக்கு விசுவாசமாக இருப்பது தி.மு.கவும் தி.கவும் தான் என்பதுபோல அல்லவா இருக்கிறது வீரமணியாரின் பேச்சு ?

அங்கே தினமும் கொத்து குண்டுகளை வீசி கொத்துக்கொத்தாக மக்கள் மடியும் வேளையில் மன்மோகன்சிங் கண்மணி, அன்போட, கலைஞர், நான், எழுதும், கடிதம், இல்ல கடுதாசின்னு வெச்சுக்கோ, இல்ல எது வேனா வெச்சுக்கோ என்று கடிதம் எழுதிக்கொண்டிருப்பதன் மூலம் கலைஞர் என்ன சாதித்துவிட்டார் ?

காங்கிரசை வீழ்த்துவதன் மூலம் மட்டுமே இந்த பிரச்சினையில் காங்கிரசுக்கு பாடம் புகட்டமுடியும் என்று மொத்த உணர்வாளர்கள் கூட்டமும் நம்புகிறது...

நீங்கள் ஒரு அமைப்பில் அசோசியேட் ஆகியிருக்கிறீர்கள் என்பதாலேயே அந்த அமைப்பின் அத்தனை கொளுகைகளையும் அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டியதல்ல...

ஒரு நிமிடம் யோசித்து பார்த்து முடிவுசெய்யுங்கள்.

Sunday, April 12, 2009

என்னைவிட பாப்பா ரொம்ப ரசிக்குது இந்த பாட்டை...



http://www.youtube.com/watch?v=lPT_3PEjnsE

என்னைவிட பாப்பா ரொம்ப ரசிக்குது இந்த பாட்டை...நீங்களும் கேளுங்க / பாருங்க..

தமிழ் ஓவியா, போதும் நிறுத்துங்கள்


தமிழ் ஓவியா அவர்கள், விடுதலையில் இருந்து கட் அண்டு பேஸ்டு செய்கிறார். வாசகர் பரிந்துரையில் எப்படியோ இமெயில் பார்வெர்டு செய்து இடம் பிடிக்கிறார். அதை எல்லாம் நாம் கண்டுகொள்ளப்போவதில்லை என்றாலும் இவர் கிழிந்த டவுசருடன் கிடக்கும் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்கு வக்காலத்து வாங்க முயல்வதை தான் தாங்கமுடியவில்லை.

காங்கிரஸ் கட்சியும் திராவிட முன்னேற்றகழகமும் கலைஞரும் தமிழர்களுக்கு தூரோகம் இழைத்துவிட்டது வெள்ளிடை மலை. அட்லீஸ்ட் இந்த கட் பேஸ்டுகளை இவர் நிறுத்தினால் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம்.

எந்த அடிப்படையில் இவர் கன்வின்ஸ் ஆகி தி.க + தி.மு.க + காங்கிரஸை ஆதரிக்கிறார் என்று சொன்னால் தேவலை.

பெரியாரின் புத்தகங்களை இன்னும் நாட்டுடைமை ஆக்காத தி.க கம்பேனி மக்களை ரொட்டி திங்க சொல்வதுடன், எதாவது ஒரு திராவிட கட்சிக்கு மங்கி போல தாவி தாவி சேவை செய்துவருகிறது. பேசாமல் பெரியார் திராவிட கழகத்தில் சேர்ந்து மணியண்ணன் சொன்னது ஏதாவது கட் பேஸ்டு செய்யுங்கள், உணர்வாளர்களாவது உம்மை மதிப்பார்கள்...

Wednesday, April 08, 2009

தட்ஸ்தமிழில் நான் : பொருளாதார பெருமந்தம்: சமாளிப்பது எப்படி?


2000ம் ஆண்டு. இப்போது உள்ளது போல அந்த வருடமும் தகவல் தொழில் நுட்ப துறையினருக்கு ஒரு கடினமான ஆண்டு தான்.

ஒய் டூ கே பிரச்சினை தகவல் தொழில்நுட்பத் துறையை அடித்து துவைத்து காயப்போட்டு அயர்ன் செய்திருந்தது.

எனக்குத் தெரிந்த சென்னையை ஒரு எம்.பி.பி.எஸ் படித்த மருத்துவர் ஜாவாவை அப்டெக்கில் பழகிவிட்டு டாலர் கனவுடன் அமெரிக்கா சென்றது இதற்கு முந்தைய ஆண்டு. அவர் உட்பட என்னுடைய நன்பர்கள் பலர் அமெரிக்கா ரிட்டர்ன்களானார்கள்.

மருத்துவர் மறுபடியும் ஸ்டெத்தை எடுத்தார். வேறு தெழில் தெரியாதவர்கள், உப்புமண்டி வைக்கலாமா, உறைந்த தயிரை பாக்கெட்டில் அடைத்து விற்கலாமா என்று யோசிக்க ஆரம்பித்திருந்த நேரம்...

அந்த ஆண்டு படித்து முடித்து வேலையில் சேரும் கனவுடன் நிறுவனங்களின் கதவை தட்டினால் வாட்ச்மேனை தாண்டி உள்ளே போக முடியவில்லை.

காஸ்ட் கட்டிங், லே ஆப் என்ற புதிய வார்த்தைகளுக்கான அர்த்தங்களை டிக்சனரியில் தேட ஆரம்பித்திருந்தார்கள் சென்னையை சேர்ந்த தகவல் தொழில்நுட்பவியலாளர்கள்...

நான் அப்போது அம்பத்தூரில் இருந்து திருவாண்மியூர் வரை 47D யில் அலைந்து பல கம்பெனிகளுக்கு என்னுடைய ரெஸ்யூமை பிட் நோட்டீஸ் போல விநியோகித்தும் பலனில்லை.

ஒரு கம்பெனி வரும் ரெஸ்யூம்களை பழைய பேப்பர் கடையில் போட்டு டீ செலவை பார்த்துக் கொள்ளும்படி வாட்ச்மேனை சொல்லிவிட்டது. அதனால் அந்த வாட்ச்மேன் மட்டும் ரெஸ்யூம் கொடுத்தால் அன்போடு வாங்குவார். மற்றவர்கள் பற்றி சொல்லவும் வேண்டுமா..

அந்த சூழ்நிலையை இப்போது உள்ள உலகளாவிய பொருளாதார பெருமந்த சூழ்நிலையினை அப்படியே பொருத்திப்பார்க்கலாம்.

படித்து முடித்துவிட்டு வேலை தேடி வெறுத்துப்போன ஒரு சூழலில்...அமைதி தேடி ஒருமுறை திருவண்ணாமலை ரமணாஷ்ரம் சென்றிருந்தேன்...

மாலை நேரம். ரம்மியமான அந்த சூழலில் ஒரு சிறிய படிக்கட்டில் அமர்ந்திருந்தேன். பக்கத்தில் காவி உடை அணிந்த ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார்.

வாட்டமான என்னுடைய முகத்தை கண்டு "என்ன தம்பி கவலை" என்று விசாரித்தார்.

என்ன இது திடீரென்று ஒருவர் வந்து நம்மிடம் பேசுகிறாரே, அதுவும் அதிரடியாக நமக்கு உள்ள கவலையை கேட்கிறாரே என்று கொஞ்சம் கூச்சப்பட்டேன்.

அப்புறம் அவர் அழுத்தி கேட்கவும்...பதில் எதுவும் சொல்லாமல் அமர்ந்திருந்தேன்.

அப்புறம் அவர் பேச்சை மாற்றி, "என்ன பண்றீங்க" என்றார்...

"சும்மாத்தான் இருக்கேன்" என்றேன்...

"சும்மா இருக்கேன்னு சொல்லாதீங்க தம்பி...வேலை தேடிக்கிட்டிருக்கேன்...அல்லது தொழில் செய்ய முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன்...அல்லது படிச்சுக்கிட்டிருக்கேன்...என்று சொல்லுங்க..."

உங்களை போன்ற இளைஞர்களின் வாயில் இருந்து "சும்மா இருக்கேன்" என்ற வார்த்தை வரக்கூடாது தம்பி...என்றார்...

சுர்ர்ர்ர்ர்ர்...என்று கோபம் வந்து, விருட்டென அங்கிருந்து எழுந்து வந்துவிட்டேன்.

திரும்ப ஊருக்கு வரும்போது அவர் சொன்னது மனதை விட்டு அகலாமல் சுற்றிச்சுற்றி வந்தது.

அதனால் எழுந்த சுய தேடலில் விளைவாக ஒரு சிறிய நிறுவனத்தில் சம்பளம் இல்லாமல் பணியில் சேர்ந்து, அதன் பிறகு சில நல்லவர்களின் உதவியால் வேறு நல்ல வேலைக்கு மாறி, என்னுடைய சொந்தக்கதை இப்போது வேண்டாம்...

இருந்தாலும் கிட்டத்தட்ட ஒரு ஆண்டில் நிலைமை சீரடைந்து, நிறுவனங்கள் மீண்டும் அழைக்க ஆரம்பித்தன, உலக பொருளாதாரமும் உயர ஆரம்பித்தது.

எனக்கு தெரிந்தவரை, இப்போது அதுபோன்றதொரு நிலைதான் இருக்கிறது என்பேன்.

படித்து முடித்தவர்கள், இளம்பொறியாளர்களுக்கு நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரவில்லை..

ஏற்கனவே வேலைக்கான உத்தரவை கொடுத்த நிறுவனங்களில் இருந்துகூட பணி வாய்ப்பை பெற்றவர்களை அழைக்கவில்லை.

நிறுவனங்கள் இரண்டு மாத சம்பளத்தை கொடுத்து, வேறு வேலை தேடிக்கொள்ளுங்கள் என்கிறார்கள்.

ஆக, நிலைமை அவ்வளவு சுகமாயில்லை என்று எல்லோருக்கும் தெரிகிறது.

சரி, இந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும்? எப்படி இந்த பெரு மந்தத்தை எதிர்கொள்வது? என்ன வகையான தயார்ப்படுத்துதல்களை செய்ய வேண்டும்?

1. ஒரு குறிப்பிட்ட துறையில் இருப்பவர்கள், வேறு துறையில் உள்ள நுட்பங்களை பழகவேண்டும். வெப்சைட் டிசைனிங் துறையில் பணியில் இருந்தவர்கள், இருப்பவர்கள், பைத்தான், பெர்ல், சிஜிஐ போன்றவற்றை பழக வேண்டும். மேனுவல் டெஸ்டிங் துறையா? ஆட்டோமேஷன், சில்க் டெஸ்ட், க்யூடிபி, ரேஷனல் ரோபோ போன்றவற்றை பழக வேண்டும்.

2. சி, ஜாவா? இன்ஸ்டால்ஷீல்ட், யூஎமெல், ஆக்சுவேட், க்ரிஸ்டல் ரிப்போட், பிஸினஸ் ஆப்ஜெக்ட், காக்னோஸ் என்று கரிக்குலத்தை பெரிதாக்குங்க..

3. டேட்டாபேஸ்? டேட்டா மாடலிங், மற்ற ரிப்போட்டிங் டூல்ஸ், எம்.எஸ் ப்ராஜக்ட்ஸ், ஓஓஏடி என்று பழகுங்கள்.

4. டெலகாம் டொமைன்? வீலேன், வைமேக்ஸ், டிசிபி ஐபி, யூஎஸ்பி, ஏடி கமேண்ட்ஸ் என்று விரிவடைந்து கொள்ளுங்கள். கூகிள் அன்ட்ராய்ட், ஜே2எம்.இ எஸ்டிக்கே, ஆப்பிள் எஸ்டிக்கே, சிம்பியன் எஸ்டிக்கே என்று உங்கள் ரெஸ்யூமை கலர்புல்லாக்குங்க...

5. டெக்ட்ரீ போன்ற இணைய தளங்களில் இருந்து இன்றைய நாளைய தொழில்நுட்ப விடயங்களை அறிந்துகொள்ளுங்கள்..

6. குறைந்தது இரண்டு அல்லது மூன்று மணிநேரம்- பயனுள்ள விஷயங்களை- மறுபடி சொல்கிறேன் - பயனுள்ள விஷயங்களை பார்ப்பதில் மட்டும் இணையத்தை செலவிடுங்கள்...

இளம்பொறியாளர்கள், மற்றும் வேலை தேடுபவர்கள், நிறுவனங்களை மட்டும் நம்பியிராமல் மைக்ரோ லெவல் ப்ராஜக்ட்ஸ் தரும் இணைய தளங்களில் ப்ராஜக்ட் எடுக்கலாம்.

கெட் எ ப்ரீலேன்ஸர், ப்ராஜக்ட்ஸ்பார்கையர், ஓடெஸ்க் போன்ற தளங்களில் இருந்து இந்த ப்ராஜக்ட்ஸ் எடுக்கலாம்.

இங்கே ஒரு முக்கிய விஷயத்தை சொல்லவேண்டும். இந்த தளங்களில் வெப் டிசைனிங், லோகோ டிசைன் போன்ற சிறிய ப்ராஜக்ட் எடுக்க புகுந்தீர்கள் என்றால் அவ்வளவு எளிதல்ல. ஏன் என்றால் ஏற்கனவே இந்த தளங்களில் உறுப்பினர்களாக உள்ளவர்கள், மிகுந்த அனுபவத்துடன் ப்ராஜக்டுகளை தட்டிச் செல்வார்கள்.

நீங்கள் இங்கே ப்ராஜக்ட்ஸ் எடுக்கவேண்டும் என்றால் உண்மையில் சரக்கு இருந்தால் தான் முடியும். அதுவும் நீங்கள் மொபைல் அப்ளிக்கேஷன் அல்லது ஆப்பிள் ஐபோனுக்கான டெவலப்மெண்ட் அல்லது கூகிள் எஸ்டிக்கேவான ஆண்ராயிடு பழகியிருந்தீர்கள் என்றால் போட்டி குறைவு..

எளிதாக உங்களது திறமையால் ப்ராஜக்ட்டுகளை தட்டிவிடலாம். மேலும் இந்த தளங்களில் பணம் ஏதும் செலுத்தாமலேயே நீங்கள் பிராஜக்ட் எடுக்கலாம்..

ஒரு சில நல்ல சாம்பிள்கள், அப்ளிக்கேஷன்கள் டெவலப் செய்திருந்தீர்கள் என்றால் அதனை காட்டி உங்கள் திறமையை நிரூபிக்கலாம்..

இருக்கும் வாய்ப்புகளை எப்படி பயன்படுத்துவது என்பதை அறிந்து வெற்றி பெறுங்கள்...

அன்பான உறவுகளே...எந்த நிலையிலும் மனம் தளரவிடாமல் உறுதியோடு போராடினால் வெற்றி உங்களுக்குத்தான்...

பல ஆண்டுகளுக்கு முன் அமரர் சுஜாதா அவர்கள் ஜாவா, லினக்ஸ் பழகுங்கள் என்று ஒரு வெகுஜன வார இதழில் எழுதி அது பல இளைஞர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது...

இன்றைக்கு இந்த பொருளாதார பெருமந்த சூழ்நிலையில் புதிய விஷயங்களை தொலைநோக்கு பார்வையுடன் செய்வதால் மட்டுமே நம்மால் இதில் இருந்து மீண்டு வரமுடியும்...

அம்மாவுடன் ரசத்தில் உப்பில்லை என்பதற்கு சண்டை, டி.வி சீரியலை மாற்றி கிரிக்கெட் வைப்பதற்கும் போட்டி, அப்பாவிடம் ஊர் சுற்ற பைக் பெட்ரோலுக்கு தகறாறு என்பதை எல்லாம் மறந்துவிட்டு, இளையோர்களே, உங்கள் பார்வையை அகலமாக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது...

ஆங்கில அறிவை விரிவாக்குங்கள். ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே என்று ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை விட்டுவிட்டு, என்ன என்ன தகவல்களை தெரிந்து கொள்ள முடியுமோ அத்தனையும் உங்கள் விரல் நுனியில் கொண்டு வாருங்கள்..

இன்றைக்கு தொழில்நுட்ப உலகம் கணிப்பொறியை சுருக்கி கை அகலத்தில் கொண்டுவர முயல்கிறது. அதனால் தொலைதொடர்பு சம்பந்தமான, அலைபேசி சம்பந்தமான துறைகள், அலைபேசிக்கான விளையாட்டு, அலைபேசிக்கான மென்பொருட்கள் என்று எதையாவது தயாரியுங்கள். குழுவாக தோழர்கள் தோழிகள் இணைந்து இது போன்ற முயற்சிகளில் இறங்குங்கள்.

பொருளாதாரம் ஆறு மாதத்தில் அல்லது ஒரு ஆண்டில் சீரடையும்போது, நேர்முக தேர்வில் "கடந்த ஆண்டு என்ன செய்துகொண்டிருந்தீர்கள்" என்ற கேள்விக்கு " வேலை தேடிக் கொண்டிருந்தேன்" என்பதைவிட கூகிள் அல்லது சிம்பியான் அலைபேசிக்கான ஒரு மென்பொருளை/ விளையாட்டை ஒரு குழுவாக இணைந்து தயாரித்துக் கொண்டிருந்தேன் என்று சொல்வது எவ்வளவு அற்புதமானதாக இருக்கும்?.

கட்டுரையில் பயன்படுத்திய டெக்னிக்கல் விஷயங்கள் தளங்களுக்கான கீ வேர்டுகளை ஆங்கிலத்தில் கீழே தருகிறேன். நீங்களே கூகிள் 'ஆண்டவரிடம்' கேட்டு பார்த்துக் கொள்ளுங்கள்...

தொழில்நுட்ப சமாச்சாரங்கள்:
1. Google Android
2. Apple SDK
3. Symbion SDK - carbide C++
4. J2ME SDK
5. Python / Perl
6. Ubundu Linux

பணிகள் பெற இணைய தளங்கள்:
1. www.getafreelancer.com
2. www.odesk.com
3. www.projects4hire.com
4. www.elance.com

தொழில்நுட்ப பொது அறிவு தளங்கள்:
1. www.techtree.com
2. http://news.cnet.com/
3. http://www.geeknewscentral.com/

வாழ்த்துக்கள்...

தட்ஸ்தமிழில் வந்தது. அதன் சுட்டி

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....