Sunday, April 12, 2009

தமிழ் ஓவியா, போதும் நிறுத்துங்கள்


தமிழ் ஓவியா அவர்கள், விடுதலையில் இருந்து கட் அண்டு பேஸ்டு செய்கிறார். வாசகர் பரிந்துரையில் எப்படியோ இமெயில் பார்வெர்டு செய்து இடம் பிடிக்கிறார். அதை எல்லாம் நாம் கண்டுகொள்ளப்போவதில்லை என்றாலும் இவர் கிழிந்த டவுசருடன் கிடக்கும் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்கு வக்காலத்து வாங்க முயல்வதை தான் தாங்கமுடியவில்லை.

காங்கிரஸ் கட்சியும் திராவிட முன்னேற்றகழகமும் கலைஞரும் தமிழர்களுக்கு தூரோகம் இழைத்துவிட்டது வெள்ளிடை மலை. அட்லீஸ்ட் இந்த கட் பேஸ்டுகளை இவர் நிறுத்தினால் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம்.

எந்த அடிப்படையில் இவர் கன்வின்ஸ் ஆகி தி.க + தி.மு.க + காங்கிரஸை ஆதரிக்கிறார் என்று சொன்னால் தேவலை.

பெரியாரின் புத்தகங்களை இன்னும் நாட்டுடைமை ஆக்காத தி.க கம்பேனி மக்களை ரொட்டி திங்க சொல்வதுடன், எதாவது ஒரு திராவிட கட்சிக்கு மங்கி போல தாவி தாவி சேவை செய்துவருகிறது. பேசாமல் பெரியார் திராவிட கழகத்தில் சேர்ந்து மணியண்ணன் சொன்னது ஏதாவது கட் பேஸ்டு செய்யுங்கள், உணர்வாளர்களாவது உம்மை மதிப்பார்கள்...

30 comments:

அது சரி(18185106603874041862) said...

பூனைக்கு மணி கட்டிய ரவி அண்ணன் வாழ்க!

(ஆமா, உங்களுக்கு தமிழ்மணத்துல ஓட்டு போடலாம்னா முடியலையே? டெம்ப்ளேட் எதும் பிரச்சினையா?)

வரவனையான் said...

correct


ask him to stop this

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

எனது கருத்துகளையும், எதிர்வினைகளையும் அவரது பதிவுகளில் மறுமொழியாக இட்டிருக்கிறேன்.

ஈழம் தவிர்த்து,

பெரியாரின் கருத்துகளைத் பதிவு செய்வதில் எனக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை.

பழமைபேசி said...

//அது சரி said...
Sunday, April 12, 2009
பூனைக்கு மணி கட்டிய ரவி அண்ணன் வாழ்க!
//

அது சரி அண்ணாச்சி, நாங்க அதுல(பொறி)தான விழுந்துட்டோம்.

தீப்பெட்டி said...

எதுக்கு நாட்டுடமையாக்கணும்? நீங்களும் விடுதலைல
இருந்தும் பெரியார் புத்தகங்களில் இருந்தும் காப்பி பேஸ்ட்
பண்ணலாம்னு நினைக்குறீங்களா

T.V.ராதாகிருஷ்ணன் said...

ரவி....ம்..என்ன சொல்லுவது...ம்...நல்லபதிவு

Adriean said...

ஏன் ரவி அண்ணணே நீங்கள் மட்டும் மக்களிடம் பதுங்கியிருந்து மக்களை பலி கொடுக்கும் புலிக்கு வக்காலத்து வாங்கலாம் ஆனால் தமிழ் ஓவியா மட்டடும் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்கு வக்காலத்து வாங்க முடியாதோ? ஏன் இந்த பாரபட்சம்?
இது தான் உங்க புலி style.

சென்ஷி said...

:-))

இராகவன் நைஜிரியா said...

// அது சரி said...
Sunday, April 12, 2009

பூனைக்கு மணி கட்டிய ரவி அண்ணன் வாழ்க!

(ஆமா, உங்களுக்கு தமிழ்மணத்துல ஓட்டு போடலாம்னா முடியலையே? டெம்ப்ளேட் எதும் பிரச்சினையா?)//

தமிழ் மணத்தில் ரவி, அபி அப்பா போன்றவர்களுக்கு ஓட்டு போட முடிவதில்லை.

காரணம் என்ன என்று புரியவில்லை.

சரியாக சொன்னீர்கள் ரவி.

தமிழ் ஓவியா said...

//பெரியார் திராவிட கழகத்தில் சேர்ந்து மணியண்ணன் சொன்னது ஏதாவது கட் பேஸ்டு செய்யுங்கள், உணர்வாளர்களாவது உம்மை மதிப்பார்கள்...//

செந்தழல் ரவி அவர்களைப் பற்றி மூத்த வலைவதிவரும் இயக்க முன்னோடியுமான தோழர் ஒருவர் சொன்னார். முதலில் ஆதரவாக பின்னூட்டம் இடுவார் அப்புரம் கொச்சைப்படுத்தி பின்னூட்டம் இடுவார். அவரிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று சொன்னார்.

அதற்கு நான் ஊரரிந்த பார்ப்பானுக்கு பூணூல் எதுக்கு என்று சொலவடை உண்டு. அது போல் பெரியார் கொள்கையை என்று ஏற்றுக் கொண்டேனோ அப்போதே இழிவைப்பற்றி கவலைப்படப் போவதில்லை. பெரியாரிடம் கற்ற பாடமே இதுதான். அவர் படாதா இழிவா? என்று கேட்டேன்.

அது போல் இப்போது ரவி அரம்பித்திருக்கிரார்.

நான் எந்த அமைப்பில் சேர்வது என்பதை ரவி முடிவு செய்யக்கூடாது? முடிவு செய்ய வேண்டியது நான். அது மட்டுமல்லாது மரியாதையை எதிர் பார்த்து நான் எதையும் செய்வது கிடையாது. எனக்கு என் புத்திக்கு சரியென்று பட்டதை செய்து வருகிரேன்.

மக்கள் பின் செல்பவர்கள் அல்ல பெரியாரும் பெரியார் தொண்டர்களும்
மக்களைத் தன் பின்னே அழைத்து வருபவர்கள் நாங்கள். எதிர் நீச்சல் போடக்கூடியவர்கள். உண்மையை யாருக்காகவும் மறைக்காது வெளியிடுபவர்கள். எனவே உங்களின் அலோசனை நிராகரிக்கப்படுகிறது.

நான் தான் இந்த வலைப்பதிவுவை நிர்வகிக்கிரேன் என்ற விபரம் வீரமணி அவர்களுக்கு கண்டிப்பாக தெரியாது என்ரே நினைக்கிறேன். உங்களின் பதிவுக்குப் பின் அவருக்கு விபரம் தெரிவிக்க இருக்கிறேன். ஏன்?எதற்கு எனில் வீரமணி அவர்கள் எடுத்த முடிவு சரியானது என்பதை சொல்லுவதற்காக.

//எந்த அடிப்படையில் இவர் கன்வின்ஸ் ஆகி தி.க + தி.மு.க + காங்கிரஸை ஆதரிக்கிறார் என்று சொன்னால் தேவலை.//

அரசியல் பிரச்ச்சனைக்காக ஆத்ரிப்பதை அப்புறம் பார்ப்போம். ஈழப்பிரச்சினையில் யார் சரியாகச் செயல்படுகிரார்கள் என்பதைப் பொருத்தே அதரிக்கிறேன். இங்கு கலைஞரும் ஜெயலலிதாவும் நடந்து கொண்ட முரைகல் பற்ரி விருப்பு வெருப்பின்றி யோசித்துப் பார்க்கையில் கலைஞர் முழுவதும் இல்லலயென்றால் கூட ஓரலவு ஜெயலலிதாவை விட சரியாகவே கலைஞர் செயல்படுகிறார் என்பது எனது கருத்து.

அதற்கு உதாரணம் வேண்டுமானால் சுப.தமிழ்செல்வன் இறப்பின் போது கலைஞர் நடந்து கொண்டதையும், ஜெயலலிதா நடந்து கொண்டதையும் ஒப்பிட்டுப் பாருங்கள் உண்மை புரியும். இன்னும் உதாரணம் வேண்டுமானால் விடுதலையில் இருந்து நான் எடுத்துப் போட்ட கட், பேஸ்டுகளில் நிறையா ஆதாரம் உண்டு.

கொள்கையின் அடிப்படையிலேயே எங்களது ஆதரவும் எதிர்ப்பும். ரவி நீங்கள் நினைப்பது போல் எதையும் எதிர்பார்த்து அல்ல.

ஈழப்பிரச்சினை பற்றி உங்களை விட அதன் தன்மையைப் பற்றி நீங்கள் பிறப்பதற்கு முன்பிருந்தே வீரமணி பேசி வருகிறார்.எனவே வீரமணி அவர்களைப் பற்றி விமர்சிக்கும் போது நிதானமாக சான்ருகளுடன் விமர்சிக்கவேண்டுகிரேன்.

அதுப்போல ஈழப்பிரச்சனை தொடர்பாக நாங்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டோம் என கொளத்தூர் மணிஅண்னன் அவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.

ஈழப்பிரச்ச்சனையில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல நாங்கள்.

----தொடர்வோம்...

ரவி said...

///செந்தழல் ரவி அவர்களைப் பற்றி மூத்த வலைவதிவரும் இயக்க முன்னோடியுமான தோழர் ஒருவர் சொன்னார். முதலில் ஆதரவாக பின்னூட்டம் இடுவார் அப்புரம் கொச்சைப்படுத்தி பின்னூட்டம் இடுவார். அவரிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று சொன்னார்.
//

????

ரவி said...

இதுபோன்ற முன்முடிவுடன் விவாதம் செய்ய முயல்வதை கண்டிக்கிறேன்..

என்னிடம் பழகியவர்கள் யாரிடமாவது விசாரிக்கவும், என்னைப்பற்றி சொல்வார்கள்..

உண்மையில் அந்த தோழர் என்னை அறிந்தவர் அல்ல என்று தான் நினைக்கிறேன்.

என்னுடைய மனதறிந்து நீங்கள் சொல்வதுபோல தேவையில்லாமல் யாரையும் இழிவுபடுத்தியதில்லை...

ரவி said...

அதுசரி, செந்தில்,பழமைபேசி,டி.வி.ஆர், நன்றி...

ரவி said...

//எதுக்கு நாட்டுடமையாக்கணும்? நீங்களும் விடுதலைல
இருந்தும் பெரியார் புத்தகங்களில் இருந்தும் காப்பி பேஸ்ட்
பண்ணலாம்னு நினைக்குறீங்களா//

இல்லை, குஜால் பதிப்பகம்னு ஆரம்பிச்சு சாணி பேப்பர்ல பத்துரூபா புக்கு போட்டு அரசியல் கூட்டத்துல வித்து காசு பாக்கலாம்னு இருக்கேன்,.

ரவி said...

///ஏன் ரவி அண்ணணே நீங்கள் மட்டும் மக்களிடம் பதுங்கியிருந்து மக்களை பலி கொடுக்கும் புலிக்கு வக்காலத்து வாங்கலாம் ஆனால் தமிழ் ஓவியா மட்டடும் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்கு வக்காலத்து வாங்க முடியாதோ? ஏன் இந்த பாரபட்சம்?
இது தான் உங்க புலி style.///

இந்த பதிவுல சம்பந்தம் இல்லாத விஷயமாச்சேடா முண்ட கலப்பை...

இந்த டோமர்த்தனம் எல்லாம் இங்க செல்லுபடியாவாது. வேற எங்காவது போய் செய்..

ரவி said...

வாங்க சென்ஷி, ராகவன்...

டெம்ப்ளேட் பிரச்சினை என்றுதான் நினைக்கிறேன்,.,.,

ரவி said...

///கலைஞர் முழுவதும் இல்லலயென்றால் கூட ஓரலவு ஜெயலலிதாவை விட சரியாகவே கலைஞர் செயல்படுகிறார் என்பது எனது கருத்து.///


இங்கே யார் சரி யார் தவறு என்று ஒப்பிட வரவில்லை.

கலைஞரை குற்றம்சாட்டினால் உடனே ஜெ வை ஆதரிக்கிறாய் என்று இழுப்பது எந்த வகை நுண்ணரசியல் ?

அய்ந்து ஆண்டுகளாக காங்கிரஸ் செய்த துரோகமும், பதவி சுகத்துக்காக கலைஞர் அரசு செய்யும் 'தியாகமும்' தாங்கலைடா சாமீ...

மணிகண்டன் said...
This comment has been removed by the author.
ரவி said...

மணி,

எந்த பிரச்சினைனாலும் கும்மிதானா ?

மணிகண்டன் said...
This comment has been removed by the author.
மணிகண்டன் said...
This comment has been removed by the author.
தமிழ் ஓவியா said...

//இதுபோன்ற முன்முடிவுடன் விவாதம் செய்ய முயல்வதை கண்டிக்கிறேன்..

என்னிடம் பழகியவர்கள் யாரிடமாவது விசாரிக்கவும், என்னைப்பற்றி சொல்வார்கள்..

உண்மையில் அந்த தோழர் என்னை அறிந்தவர் அல்ல என்று தான் நினைக்கிறேன்.

என்னுடைய மனதறிந்து நீங்கள் சொல்வதுபோல தேவையில்லாமல் யாரையும் இழிவுபடுத்தியதில்லை...//

மாற்றம் எண்ர சொல்லை தவிர மாற்ரவைகள் மாறும் என்ர விதியை அறிந்தவன். முன்கூட்டியெ முடிவு எடுத்து எதையும் எழுதுபனுவல்ல நான். கருத்தை கருத்தால் சந்திப்பவன்.

உங்கலைப் பற்றீ தோழர் குழலி சொன்னார். விபரம் அறிந்தேன்.

தமிழ் ஓவியா said...

//கலைஞரை குற்றம்சாட்டினால் உடனே ஜெ வை ஆதரிக்கிறாய் என்று இழுப்பது எந்த வகை நுண்ணரசியல் ?//


என்னுடைய பதிலை சரியாக படியுங்கல் ரவி.

இதோ எனது பதில்;-
அரசியல் பிரச்ச்சனைக்காக ஆத்ரிப்பதை அப்புறம் பார்ப்போம். ஈழப்பிரச்சினையில் யார் சரியாகச் செயல்படுகிரார்கள் என்பதைப் பொருத்தே ஆதரிக்கிறேன்.'
'
இதில் எங்கிருக்கீரது நுண்ணரசியல்.

இந்த பதிவிற்கும் நாட்டுடமையாக்குவதர்கும் தொடர்புண்டா?

உனர்ச்சி வசப்படாமல் சிந்தியுங்கள்.

Anonymous said...

கி.வீரமணியால் பெரியாரியத்திற்கு ஆபத்து!


05.04.2009 அன்று விடுதலையில், "வீரமணி ஒழிக! உன்னைக் கொல்லாமல் விட மாட்டேன்! - தி.க.தலைவர் கி.வீரமணி கூட்டத்தில் கலாட்டா" என்ற தலைப்பில் ஒரு செய்தி வருகிறது :

04.04.2009-அன்று மாலை 7.30-மணிக்கு சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் "நாடாளுமன்றத் தேர்தலும், ஈழப் பிரச்சினையும்" என்ற தலைப்பில் கி.வீரமணி பேசிக் கொண்டிருந்த போது வீரமணி உன்னை கொல்லாமல் விட மாட்டேன் என இரு இளைஞர்கள் கத்திக் கொண்டு ஓடிவந்ததாகவும், கூட்டத்தினர் அவர்களைப் பிடித்துக் கொண்டதாகவும் மானமுள்ள கி.வீரமணி போலீசில் ஒப்படைக்கும்படி சொன்னதாகவும், இருதோழர்களையும் 15-நாட்கள் புழல் சிறையில் அடைக்கும்படி மாஜிஸ்டிரேட் உத்தரவிட்டதாகவும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

தி.மு.கவுக்கும், இ.காங்கிரசுக்கும் ஆதரவாக கி.வீரமணியின் சமீபகால பிரசாரங்களும், பெரியாரியத்திற்கு எதிரான உளறல்களும் எம்மை தொடர்ந்து அதிர்ச்சிக்குட்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில் ஓர் அரசியல்வாதியைப் போல் செயல்படும் கி.வீரமணியின் நடவடிக்கையில் சந்தேகங் கொண்டு பெரியார் திடலில் நடந்தது என்ன? என்று தமிழகத்தில் தோழர்களிடம் தொடர்பு கொண்ட போது அக்கூட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களிடம் இருந்து நாம் தெரிந்து கொண்டது, கி.வீரமணி "இ.காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ஓட்டு போடுங்கள்" என்று பேசிக் கொண்டிருந்த போதிலே இரு தோழர்களும் ஆவேசப்பட்டு எதிர் கேள்விகள் கேட்டதாகவும், அதில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி போலிசில் இரு தோழர்களும் ஒப்படைக்கப்பட்டதாகவும், அங்கு போலிசாரால் பலமாக தாக்கப்பட்டதாகவும் அறிகிறோம். ஆனால் தன்னை கொலை செய்ய முயன்றதாக கதை சொல்கிறார் கி.வீரமணி.

கேவலம் மகா கேவலம்..!


http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=1165

Anonymous said...

////செந்தழல் ரவி அவர்களைப் பற்றி மூத்த வலைவதிவரும் இயக்க முன்னோடியுமான தோழர் ஒருவர் சொன்னார். முதலில் ஆதரவாக பின்னூட்டம் இடுவார் அப்புரம் கொச்சைப்படுத்தி பின்னூட்டம் இடுவார். அவரிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று சொன்னார்.////



வணக்கம் தோழர் தமிழ் ஓவியா

முதலில் செந்தழல் ரவி அவர்களைக் குறித்து உங்களுடைய "யாரோ சொன்னாங்க".... கதையாடல்களுக்கு இங்கே முக்கியத்துவம் கிடையாது. செந்தழல் ரவி எப்படிப்பட்டவர் என்பது அவர்களுடன் பழகும் எங்களுக்கு மிக நன்றாகத் தெரியும். செந்தழல் ரவி குறித்த குற்றச்சாட்டுக்களை முன் வைப்பதாக இருந்தால் யார்? என்ன? எப்போது? சொன்னார்கள் என்பதையும் முன்வையுங்கள். தலீத்தியம், பெண்ணீயம், பெரியாரியம் குறித்த முன்போக்கு சிந்தனை உடைய செந்தழல் ரவி நம்மை விட எந்தவிதத்திலும் குறைந்தவர் இல்லை என்பது 5 வருடங்களாக இணையம் மூலமாக செந்தழல் ரவியின் எழுத்துக்களை வாசிப்பவர்களுக்கு புரியும்.

Anonymous said...

////ஈழப்பிரச்சினை பற்றி உங்களை விட அதன் தன்மையைப் பற்றி நீங்கள் பிறப்பதற்கு முன்பிருந்தே வீரமணி பேசி வருகிறார்.எனவே வீரமணி அவர்களைப் பற்றி விமர்சிக்கும் போது நிதானமாக சான்ருகளுடன் விமர்சிக்கவேண்டுகிரேன்.///

தோழர் தமிழ் ஓவியா அவர்களே,

தோழர் செந்தழல் ரவி அவர்களை நோக்கி நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வாக்கியம் எவ்வளவு மோசமானது என்பதை உணர முடிகிறதா? இளைஞர்களுடன் முதியவர்களை ஒப்பிடும் போக்கும் உனக்கு ஒன்றும் தெரியாது நீ சின்ன பிள்ளை என்று பெரியவர்கள் இளைஞர்களை அடக்குவதும் எவ்வளவு முட்டாள்தனமானது தெரியுமா? இவ்வாக்கியங்களை ஐரோப்பா கண்டத்தில் உபயோக்கித்தால் லூசு என்பார்கள். பெரியாரியலை பரப்பும் நீங்கள் இப்படிப்பட்ட வார்த்தைகளை உபயோகிக்கலாமா?

///வீரமணி அவர்களைப் பற்றி விமர்சிக்கும் போது நிதானமாக சான்ருகளுடன் விமர்சிக்கவேண்டுகிரேன்////

விமர்சனங்கள் எப்படி வெளிப்படுகின்றன தோழரே. நடத்தைகளை வைத்து தானே? நடத்தை சரியில்லை என்னும் போது விமர்சனங்களை நல்லவிதமாக எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

அ.பிரபாகரன் said...

நல்ல பதிவு ரவி ... தமிழ் ஓவியாவின் வீரமணி பக்தி சகிக்கவில்லை ..

அய்யா தமிழ் ஓவியா அவர்களே, நீங்கள் வீரமணிக்கு கோயில்கூட கட்டுங்கள், நாங்கள் ஒன்றும் சொல்லமாட்டோம், ஆனால் தயவுசெய்து பெரியாரை விட்டுவிடுங்கள், அவர் கொஞ்சகாலம் பிழைத்துகொள்ளட்டும்

ரவி said...

//மூத்த வலைவதிவரும் இயக்க முன்னோடியுமான தோழர் ஒருவர் சொன்னார். முதலில் ஆதரவாக பின்னூட்டம் இடுவார் அப்புறம் கொச்சைப்படுத்தி பின்னூட்டம் இடுவார். அவரிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று சொன்னார்.///

முதலில் தமிழ் ஓவியா அவர்களின் அல்லது So Called மூத்த வலைப்பதிவரின் அவதூறான செய்தியை என்னை இத்தனை காலம் அறிந்த அபி அப்பா, உடன்பிறப்பு போன்றவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா இல்லையா என்று தெரியவேண்டும்.

//ஓரளவு ஜெயலலிதாவை விட சரியாகவே கலைஞர் செயல்படுகிறார் //

இன்னாபா இது ஓரளவு ? அந்தம்மா அஞ்சு மார்க்கு இவர் பதினைஞ்சு மார்க்கா ? என்ன காமெடி இது ?

ஓரளவு சரியா செயல்பட்டு கொஞ்சமா பிரேக்கில் கால் வைத்தால் வண்டி ஆக்ஸிடெண்ட் ஆகாம ஓரளவு மோதுமா ? ஓரளவு உயிர் போகுமா ?

காங்கிரஸ் கட்சி தமிழினத்துக்கு துரோகம் இழைத்துள்ளதா இல்லையா ? ஆம் அல்லது இல்லை என்று அபி அப்பாவும் உடன்பிறப்புவும் சொல்வார்களா ??

ஜெயலலிதாவுக்கு இல்லையப்பா. நான் விஜயகாந்துக்கு ஆதரவு தரேன். அதை பற்றியா பேச்சு இங்கே ?? ஜெயலலிதா பற்றி எந்த பேச்சும் என்னுடைய பதிவில் இல்லாதபோது சுப தமிழ்ச்செல்வன் கதையை இழுத்து வந்து திசைத்திருப்பல் எதையும் செய்யவேண்டாம். வெறும் கவிதை வெற்று காகிதம்.

கண்மூடித்தனமான வீரமணி கலைஞர் பக்தியைத்தானே இங்கே கேள்வி கேட்கிறோம் ??

கலைஞரின் முரட்டு வலையுலக பக்தர் மடிப்பாக்கம் மாபியாவே கம்முனு கீது...

இலங்கைக்கு அனுப்பிய டாங்கியை தமிழ்நாட்டை நைட்லேயே க்ராஸ் பண்ணி கேரளா போயிரு அப்படீன்னாராம் ஒரு மேனன் டெல்லியில. ஆனா பாருங்க கூட்ஸ் வண்டி ட்ரைவர் குடிச்சுட்டு ஓட்டினதால வண்டி காலையில பெரியாரு பொறந்த ஈரோட்டுல நிக்கிது. அதுல குண்டை போட்டு ரொப்பி அடிச்சுத்தானேய்யா இன்னைக்கு இத்தனை உசுரு போச்சு ?

காங்கிரசு ராணுவ மந்திரி ஏக்கே ஆந்தோனிக்கு தெரியாம இலங்கைக்கு ஆயுதங்கள் அனுப்பினாங்களா ?

சிவசங்கர மேனனுக்கு தெரியாம தாம்பரத்துக்கு விமானப்படை வீரர்கள் பயிற்சிக்கு வந்தாங்களா ?

நாராயணனுக்கு தெரியாம பஞ்சாப் ரெஜிமெண்ட் இலங்கையில சண்டைக்கு நிக்குதா ?

இதை எதையும் தட்டிக்கேட்காமல் "தாயே, பிச்சை போடு" என்று வயதை கூட கருதாமல் தன்மானத்தமிழர் கலைஞர் 'கொடுத்த காசுக்கு மேல' கூவுவதை எந்த உணர்வாளரால் சகித்துக்கொள்ளமுடியும் ?

வேட்பாளர் பட்டியலை தூக்கிக்கொண்டு டெல்லிக்கு காவடி எடுக்கும் காங்கிரசின் பதிமூனே சொச்சம் கோஷ்டிகளை விட இத்தாலி அண்ணைக்கு விசுவாசமாக இருப்பது தி.மு.கவும் தி.கவும் தான் என்பதுபோல அல்லவா இருக்கிறது வீரமணியாரின் பேச்சு ?

அங்கே தினமும் கொத்து குண்டுகளை வீசி கொத்துக்கொத்தாக மக்கள் மடியும் வேளையில் மன்மோகன்சிங் கண்மணி, அன்போட, கலைஞர், நான், எழுதும், கடிதம், இல்ல கடுதாசின்னு வெச்சுக்கோ, இல்ல எது வேனா வெச்சுக்கோ என்று கடிதம் எழுதிக்கொண்டிருப்பதன் மூலம் கலைஞர் என்ன சாதித்துவிட்டார் ?

காங்கிரசை வீழ்த்துவதன் மூலம் மட்டுமே இந்த பிரச்சினையில் காங்கிரசுக்கு பாடம் புகட்டமுடியும் என்று மொத்த உணர்வாளர்கள் கூட்டமும் நம்புகிறது...

நீங்கள் ஒரு அமைப்பில் அசோசியேட் ஆகியிருக்கிறீர்கள் என்பதாலேயே அந்த அமைப்பின் அத்தனை கொளுகைகளையும் அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டியதல்ல...

ஒரு நிமிடம் யோசித்து பார்த்து முடிவுசெய்யுங்கள்.

ரவி said...

புரிந்துணர்வுக்கு நன்றி தமிழ்ச்சி, பிரபாகரன்

ரவி said...

//ஈழப்பிரச்சினை பற்றி உங்களை விட அதன் தன்மையைப் பற்றி நீங்கள் பிறப்பதற்கு முன்பிருந்தே வீரமணி பேசி வருகிறார்.எனவே வீரமணி அவர்களைப் பற்றி விமர்சிக்கும் போது நிதானமாக சான்ருகளுடன் விமர்சிக்கவேண்டுகிரேன்///

நான் தனிப்பட்ட முறையில் எந்த விமர்சனமும் வைக்கவில்லையே. அவருடைய கொள்கை கோட்பாடு ஸ்டேண்ட் ஆகியவற்றையே கேள்விகேட்கிறேன். அவரை நேரில் பார்த்தாலும் இதே கேள்விகளை நிதானமாகவே கேட்கும் அளவுக்கு 'தில்' 'தில்' உள்ளது.

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....