Wednesday, July 08, 2009

ஒளிவட்டம் சுமக்கும் வலைப்பதிவர்கள்



சமீபத்தில் ஒளிவட்டம் சுமக்கும் அரசு ஊழியர்கள் என்ற பதிவை பார்த்தேன்..

நீங்களோ நானோ, அல்லது எல்லோருமோ, ஒரு வகையில் அரசு ஊழியர்களால் பாதிக்கப்பட்டிருப்போம்...

இதற்கு அரசு ஊழியர்களின் பிள்ளைகள் கூட விதிவிலக்கல்ல...இந்தியாவில் வாழ்ந்துகொண்டு, வாழ்க்கையில் ஒரு முறை கூட லஞ்சம் கொடுக்காதவரை சல்லடை போட்டு தேடினாலும் கிடைக்கமாட்டார்.

இந்தியன் தாத்தா ஒரு விதிவிலக்கு. இருந்தாலும், அது ஒரு திரைப்படம் என்பது உங்களுக்கு தெரியும்.

இருந்தாலும் பிச்சைப்பாத்திரம் எழுதும் எதுவும் எனக்கு பிடிக்காது, இதுவும் எரிச்சலைத்தான் கொடுக்கும் என்ற மிகுந்த நம்பிக்கையில் திட்டி ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டு இடத்தை காலிசெய்துவிட்டேன்.

இருந்தாலும், ஒரு உண்மை உரைத்தது. அதனால் இந்த பதிவு.

சுயதொழில் செய்யும் ஒரு சில வலைப்பதிவர்களை தவிர, ஒரு பத்து சதவீதம் இருக்குமா ?, மீதி தொண்ணூறு சதவீதம் பேர், வலைப்பதிவுகளை அலுவலகத்தில் வைத்து பார்க்கிறீர்கள்.

ஒரு நிறுவனத்தில் கூலிக்கு நின்று, சம்பளம் பெறும் நாம், நிறுவனத்திற்கு உழைப்பதை விட்டுவிட்டு, சொந்த மின்னஞ்சலை திறந்து பார்ப்பது கூட குற்றம். இதுல வலைப்பதிவில் வேறு மொக்கை. என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.

நானும் திருடன். நீரும் திருடன். இதில் அவன் சரியில்லை, ஆட்டுக்குட்டி சரியில்லை என்று என்ன நொள்ளை நொட்டை ? முதலில் உன் முதுகில் உள்ள அழுக்கை சொறி. அதன் பின் அடுத்தவன் முதுகில் உள்ள அழுக்கை சொறியலாம். என்ன நான் சொல்றது ?

இந்த பதிவுக்கு அலுவலகத்தில் இருந்து பார்க்கும் யாரும் பின்னூட்டம் போடாதீங்க என்று சத்தியமாக நான் சொல்லமாட்டேன். ஹி ஹி...முடிஞ்சா ஓட்டு போடு, இல்லன்னா நெகட்டிவ் ஓட்டுபோடு...!!

சிந்தாநதி....போய்வா...நதியலையே.....


ஒருமுறை வலைச்சரம் தொடுக்க அழைத்திருந்தார்...நான் தமிழ் பார்க்க வாய்ப்பில்லாத ஒரு கணியில் இருந்து பார்த்ததால் அதனை பார்க்க முடியவில்லை. ஆங்கிலத்தில் எழுதி அனுப்புமாறு கேட்டிருந்தேன், பதில் இல்லை.

நேரில் சந்திக்கும்போது அலைபேசி ஒன்று கொடுடா என்று கட்டளை இட்டிருந்தார். கடந்த டிசம்பரில் சந்திக்கலாம் என்று எண்ணி அது கைகூடாமல் போனது..

ஜிமெயில் சாட்டில் கடந்த ஆறுமாதங்களாக அதிகம் புழங்காததால் அவர் ஆன்லைனில் இருக்கிறாரா இல்லையா என்று தெரியாது, அதனால் அதிகம் தொடர்பில்லை...

அவர் ஒரு போட்டி வைத்து பரிசாக சில புத்தகங்கள் ஸ்பான்ஸர் செய்ய சொல்லியிருந்தார், செய்தேன்...ரொம்ப நாளாக தொடர்பில்லையே, விரைவில் பேசலாம் என்று எண்ணியிருந்தேன்..

வலைப்பதிவில் காலையில் பார்த்ததும் ஒரே ஷாக்...

இணையத்தில் என்னுடைய உடல் நலனை விசாரித்தவரின் உடல் நலனை மீள் அஞ்சல் அனுப்பி கூட விசாரிக்காமல் இருந்திருக்கிறேன். என் பணி நேரம் என் நட்புகளை கூட தின்றிருக்கிறது...வருந்துகிறேன்...ஆழமாக வருந்துகிறேன்...


சிந்தாநதி ☆

to me
show details 10/31/07
அன்பின் ரவி
வணக்கம்
இருவாரங்களாக உங்களை இணையத்தில் காண முடியவில்லை?
உடல்நிலை எப்படி இருக்கிறது?
மறுபடியும் ஏதாவது பிரச்சினையா? நன்கு ஓய்வெடுத்து குணமடைந்து வாருங்கள்.
--
அன்புடன்

۞ சிந்தாநதி
http://valai.blogspirit.com/
☆ எண்ணச்சுழலில் எதிர்நீச்சலிட்ட எழுத்துப்படிமங்கள்...!
☯ Views, News, Thoughts and Writings in Tamil.

*
தமிழ்.கணிமை.காம்
http://tamil.kanimai.com
இது திரட்டிகளின் திரட்டு, தமிழ்ச் செய்திகளின் தொகுப்பு

Monday, July 06, 2009

பேச்சை குறைப்போம்...செயலில் இறங்குவோம்..!!!


பெங்களூர்: பெங்களூர் எலஹங்காவில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் குழந்தைகளுக்கான பள்ளியில் போதிய அளவில் ஆசிரியர்கள் இல்லாததால் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பள்ளிக்கு உடனடியாக 6 ஆசிரியர்களும், வாரம் முழுவதும் ஒவ்வொரு மாணவ, மாணவிக்கும் 16 கூடுதல் உணவும் தேவைப்படுகிறதாம்.

தற்போது இலங்கையில் போர் முடிந்துள்ள நிலையில் இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் நிலையை மேம்படுத்த பள்ளி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக பெங்களூரைச் சேர்ந்த பெரும் தொழில் நிறுவனங்களின் பேராதரவைப் பெறவும் யோசித்து வருகிறது.

ஆசிரியர்களுக்கும், சாப்பாட்டுக்கும் ஸ்பான்சர்களைப் பெறவும் அது உத்தேசித்துள்ளது.

தற்போது இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் ஒன்றாவது முதல் பத்தாவது வகுப்பு வரை எடுக்க வேண்டியுள்ளது. இங்கு மொத்தம் 210 பேர் படிக்கின்றனர். இது 250 ஆக உயரும நிலை உள்ளது.

இதுகுறித்து பள்ளி நிர்வாக அதிகாரி லட்சுமி கோபிநாத் கூருகையில், பன்னாட்டு நிறுவனங்கள், பெரிய பெரிய நிறுவனங்கள் ஆசிரியர்களுக்கு ஸ்பான்சர் செய்தால் நரமாக இறுக்கும். அது இங்குள்ள ஆசிரியர்களுக்கு ஊக்கம் தருவதாக அமையும்.

எங்களுக்கு தற்போது கணிதம், இயற்பியல், வேதியியல், கம்ப்யூ்ட்டர் அறிவியல், சமூக அறிவியல், ஆங்கிலம் ஆகிய படிப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவைப்படுகிறாரக்ள்.

இங்குள்ள மாணவ, மாணவியர் தாய் மொழியில் (தமிழ்) படிக்க விரும்புகிறார்கள். அது நல்லதுதான். அதேசமயம், ஆங்கில அறிவையும் மேம்படுத்த வேண்டியது அவசியம். இதற்காக ஆங்கிலப் புலமை மிக்க ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள்.

முழு நேர ஆசிரியர்கள் கிடைத்தால் நலமாக இருக்கும். ஆனால் அவர்களை பிடிப்பதுதான் சிரமமாக உள்ளது. அதேசமயம், பகுதி நேர ஆசிரியர்கள் கிடைத்தாலும் அவர்களையும் வரவேற்கிறோம்.

இதுதவிர பாடங்களைப் படிக்க மாணவர்களுக்கு உதவ தொண்டர்களும் தேவைப்படுகிறார்கள்.

கர்நாடக அரசின் அக்ஷய பாத்திரம் திட்டம் எங்களுக்கு உதவிகரமாக உள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை மதிய உணவு இதன் மூலம் கிடைத்து விடுகிறது. இருப்பினும் வாரம் முழுவதும் மூன்று வேளை உணவு தர வேண்டியுள்ளது. ஒவ்வொரு மாணவ, மாணவியருக்கும் வாரத்திற்கு 21 வேளை உணவு தர வேண்டியுள்ளது.

ஆனால் இதில் சிரமம் உள்ளது. ஸ்பான்சர்கள் யாரேனும் ஒவ்வொரு மாணவன் அல்லது மாணவிக்கு காலை அல்லது இரவு நேர உணவை ஸ்பான்சர் செய்ய முன்வந்தால் பெரும் நிம்மதியாக இருக்கும் என்றார் அவர்.

அதேபோல, பள்ளிக் கட்டடம் புதுப்பிக்கப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பள்ளிக்குத் தேவையான இடம் உள்ளபோதிலும் போதிய கட்டடம் இல்லை. தற்போதுள்ள கட்டடம் மிகவும் பழமையாக உள்ளது. குளியலறைகள், ஜன்னல், கதவுகள் உள்ளிட்டவற்றை புதுப்பிக்க வேண்டியுள்ளது. குடிநீர்க் குழாய்கள் பழுது பார்க்கப்பட வேண்டியுள்ளது.

இவ்வளவு சிக்கல்கள் உள்ளபோதிலும் மின்சாரம் கிடைப்பதில் இதுவரை எந்த சிக்கலும் இல்லை. அதேபோல பெங்களூர் குடிநீர் வாரியம், எந்தவிதக் கட்டணமும் வசூலிக்காமல் தொடர்ந்து தண்ணீர் சப்ளை செய்வதாக லட்சுமி கோபிநாத் நன்றியுடன் கூறுகிறார்.

இந்தப் பள்ளிக்கு சிஸ்கோ நிறுவனம் கம்ப்யூட்டர்களை தானமாக அளித்துள்ளது. பள்ளிச் சுவர்களுக்கு கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் இலவசமாக பெயின்ட்டிங் செய்து தந்துள்ளது.

இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு நேரடியாக உதவி செய்ய முடியாத வருத்தத்தில் உள்ளவர்கள் அந்தத் தமிழ் மக்களின் வாரிசுகளுக்கு உதவ முன்வரலாம்.

அப்படி முன்வர உதவுவோர் லட்சுமி கோபிநாத்தை 9902421091 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம்.

நன்றி தட்ஸ் தமிழ்...இதுபோல இன்னும் பல செய்திகளை உலகுக்கு தெரியப்படுத்துங்கள்...!!!

Friends...!! Its Time to get into Action...!!!!

Friday, June 19, 2009

உரையாடல் அமைப்புக்கு கதை அனுப்பியவர்களுக்கு - என் விமர்சனங்கள்...



அறிவியல் கதையில் கொஞ்சம் ஆங்கில வார்த்தைகள் கலந்திருந்தால் நேட்டிவிட்டி டச் கிடைத்திருக்கும்...சைன்ஸ் பிக்ஷனிலும் பணம், கடன், கூகை, பகிர்தல் என்று எளிமைப்படுத்தியது நன்று...கதையின் முடிவு யாரும் எதிர்பாராதது...

என்னுடைய மதிப்பெண் 60 / 100



கதையின் கேரக்டருக்கு எழிலரசி என்ற அழகு பெயர்...நன்று....கதை முழுதும் நல்ல தமிழ்...கொஞ்சம் அமெச்சூரான நடை...விறுவிறுப்பு குறைவு கதையில்...முடிவு அவ்வளவாக கவரவில்லை...

என்னுடைய மதிப்பெண் 35 / 100


நசரேயனுக்கே உரிய நகைச்சுவையான மற்றும் அமெச்சூரான நடை...கொஞ்சம் எழுத்துப்பிழைகள்...சந்திப்பிழைகள்...கதையின் மேட்டர் சூப்பர். சொன்ன விதத்தில் கொஞ்சம் வளவளா. உண்மைக்கதையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை...

என்னுடைய மதிப்பெண் 40 / 100


கல்கியை கிண்டல் செய்ய ஆரம்பிக்கும் முதல் வரியிலேயே புன்னகையை வரவைக்கிறார் மணிப்பயல்...கதையின் நடுவில் வரும் ஒரு ட்விஸ்ட் கண்டிப்பாக சிரிக்கவைக்கும்...அப்புறம் இன்னோரு ட்விஸ்ட் இன்னோரு புன்னகை...கடைசியில் இன்னொரு சூப்பர் ட்விஸ்ட் என்று சுவையான கதை...எதிர்பார்ப்பு இல்லாமல் படித்தால் நிச்சயம் ரசிக்கலாம்...

என்னுடைய மதிப்பெண் 65 / 100



எளிமையான நகைச்சுவை நடையில் அதிரடியாக ஆரம்பித்துவிடுகிறது கதை...நாலு பாராவுக்கு ஒரு புன்னகை நிச்சயம்...கதையில் வரும் கேரக்டர்களின் பெயர்களுக்காகவே ரூம் போட்டு யோசித்திருப்பாரோ என்று தோன்றுகிறது...மெயின் கேரக்டர் மணிப்பயலின் தேர்தல் உரை வயிற்று வலியை வரவைக்கும்...சிரிச்சுதாங்க...கடைசி கட்ட க்ளிமாக்ஸும் கண்டிப்பாக சிரிப்பை வரவழைக்கும்..கதையில் முடிவு என்று ஒன்றும் இல்லை...

என்னுடைய மதிப்பெண் 65 / 100


கதையை படித்தவுடன் நீங்கள் எப்போதோ தின்ற நமுத்த முறுக்கு உங்கள் நியாபகத்துக்கு கண்டிப்பாக வரும்...வாத்தியாருக்கு குண்டுசவுரி சொன்ன பதில்கள் சூப்பர்...அடிக்கடி நமக்கு வெடிச்சிரிப்பு வருவதற்கான வானிலை தெரிகிறது கதையில்..முடிவு என்று பெரிதாக எதுவும் இல்லை...ஆனால் சிரிப்புக்கு க்யாரண்டி...

என்னுடைய மதிப்பெண் 68 / 100



கலவையான எண்ணங்களை கதையின் ஆரம்பத்தில் எழுப்புகிறார்...சொந்த அனுபவத்தை எழுத்தில் வடித்தது போல் இருக்கிறது...ஆங்காங்கே இருக்கும் உவமைகள் புதியவை...மகன் கேட்கும் கேள்வியாக கதையில் வருவது நெஞ்சை தொடுகிறது...கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் கவனித்திருக்கலாம்...கொஞ்சம் எடிட் செய்தால் போதும்...தரமான கதை ஒன்று ரெடி...இந்தா புடி..(பரிசு)

என்னுடைய மதிப்பெண் 70 / 100





முதலில் பதிவில் வரும் படம், அதில் வரும் குழந்தையின் முகம், அது சொல்லும் செய்தி (அதில் நூறு சிறுகதைகள் உண்டு), பெண்ணின் சிரிப்பு...சூப்பர்...நெஞ்சார பாராட்டவேண்டும்..

கதையின் முடிவு நச். நீட்டி முழக்காமல் சிக்கென்ற ஒரு பக்க சிறுகதை..

என்னுடைய மதிப்பெண் 65 / 100



எளிமையான வார்த்தைகளில் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை அணுகும் கதை. அன்றாட வாழ்வியல் சார்ந்த நிகழ்வுகளை அற்புதமான நடையில் சொல்கிறது கதை...குறையொன்றும் இல்லை க்ருஷ்ணா...பரிசு கிடைக்கும் என்பதை தனியாக சொல்லவும் வேண்டுமா என்ன ?

என்னுடைய மதிப்பெண் 70 / 100


கொஞ்சம் குழப்பமான ஆரம்பம்...நல்ல நடை...கதையில் வரும் சம்பவங்களை படிக்கும்போது நாமே நேரில் பார்ப்பதுபோன்ற உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை...

கடைசி பஞ்ச் வரிகளை படித்தவுடன் ஏதோ இனம்புரியாத சோகம் நெஞ்சில் வந்து அப்பிக்கொள்வதை தவிர்க்க இயலவில்லை...

வெற்றிபெற வாழ்த்துக்கள் கூட சொல்லத்தோன்ற இயலவில்லை...உண்மைக்கதையாமே ?

என்னுடைய மதிப்பெண் 72 / 100



எளிமையான கதை...சாதாரணமான வார்த்தை பிரயோகங்கள்...ஆனால் அழுத்தமான கதை...தாய்க்கும் பிள்ளைக்கும் உரையாடல் நடைபெறும் வசனங்கள் லைவ்லியாக உள்ளது...பெரிய தீம் இல்லையென்றாலும் சொல்லப்பட்ட விதத்தில் ஸ்கோர் செய்கிறது..

என்னுடைய மதிப்பெண் 55 / 100



புதிய உத்தி...தமிழுக்கு புதிது...ஆனால் புரிந்துகொண்டு ரசிக்கப்படுமா என்பது கேள்விக்குறி...கொஞ்சம் பின்னவீனத்துவம், கொஞ்சம் சர்ரியலிஸம்...பாரதி வரிகள்...ஆங்கில கலப்பு...

பிராக்கெட் பிராக்கெட்டாக போட்டு விளக்கவேண்டாம் என்று தோன்றியது...ரசிகர்களின் கற்பனைத்திறனை, அவர்கள் பார்வை விரிவடைவதை அது தடுத்துவிடுகிறது...

மற்றபடி கதை வாசிக்க நன்றாகத்தானிருக்கிறது...கொஞ்சம் குழப்பமான முடிவும்..

என்னுடைய மதிப்பெண் 60 / 100



எளிமையான நடை. இயல்பான கதை. கதை எதை நோக்கி போகிறது என்பது கொஞ்சம் யூகிக்க முடியும்படி இருந்தாலும், முடிவு நன்று....கொஞ்சம் அமெச்சூர்த்தனத்தை தவிர்க்கவேண்டும்...

லாஸ்ட் பஞ்ச் கூட நல்லாத்தான் இருந்தது...!!!

என்னுடைய மதிப்பெண் 50 / 100




எழுத்துப்பிழைகளை தவிர்க்கவேண்டும். கதையை முடித்தவுடன் ரிவ்யூ அவசியம்..ஆங்கில வார்த்தைகளை ஆங்கிலத்திலேயே உபயோகப்படுத்துவதை தவிர்த்திருக்கலாம்...இன்னும் கொஞ்சம் நடையை செதுக்கியிருந்திருக்கலாம்..

ஆழமான சமூக பிரச்சினைதான், இருந்தாலும் எளிமையகவே முடிந்துவிட்டது...அவை எவையையும் அலசாமல்...கொஞ்சம் நான் கடவுள் சாயல்..முடிவு நன்று.

என்னுடைய மதிப்பெண் 50 / 100


முதல் வரியிலேயே எழுத்துபிழை 'பளீர்' என்று அடிக்கிறது..கடைசி வரியிலும் அதையே ஸ்வாசிக்க வேண்டியுள்ளது...

சின்ன சம்பவம், அதை டேக்கிள் செய்த விதம் கதையாகியுள்ளது...கொஞ்சம் சுவாரஸ்யமற்ற நடை. இருந்தாலும் ஒரு முறை கண்டிப்பாக படிக்கலாம்..

என்னுடைய மதிப்பெண் 45 / 100



எளிமையான அழகான நடை. அதற்காகவே எழுத்துப்பிழைகளை மன்னித்துவிடலாம். லாஜிக் பார்க்காமல் படித்தால் ரசிக்கலாம்..

கதையின் முடிவு எதிர்பாராதது, இரண்டொரு முறை படித்தால் புரிந்துவிடும்...

என்னுடைய மதிப்பெண் 60 / 100




அசோகமித்திரன் டைப் பார்ப்பன பாஷைக்கதை. கொஞ்சம் குழப்பமாக இருந்தாலும் கதையில் எதோ சொல்ல வருகிறார்கள் என்று மட்டும் தெரிகிறது..

இயல்பாக அங்கே இங்கே பார்க்கக்கூடிய மனிதர்களை வைத்து பின்னப்பட்டது. சொல்வதற்கு பெரிதாக எதுவுமில்லை என்றாலும், கதையின் உள்ளடக்கத்தை வைத்து ஒரு விவாதத்துக்கு இட்டுச்செல்லக்கூடிய அளவுக்கு விஷயம் உண்டு..

என்னுடைய மதிப்பெண் 50 / 100


அற்புதமான நடை. எழுத்தாளரின் ஆழ்ந்த வாசிப்பனுபவம் ஒரு அழகியலோடு வெளிப்படுகிறது..ஆங்காங்கே புன்முறுவலோடு இந்த கதையோடு நீங்கள் பயணிக்கலாம்...

'பசங்க' படத்துக்கு நான் விமர்சனம் எழுவும் எழுதவில்லை...அதற்கு காரணம் அது விமர்சனத்தை தவிர வேறு விதமான சிந்தனையை கிளப்பியது...அதே போல இந்த கதையும்..வாசியுங்க...அனுபவிங்க..

இறுதியில் வரும் கவிதையின் முரண் அழகியல் அற்புதமானது...மீள் வாசிப்பு செய்ய தூண்டும் கதை இது...

என்னுடைய மதிப்பெண் 80 / 100


இதுபோன்ற கேவலமான கதைகளை எல்லாம் எப்படி போட்டிக்கு எடுத்துக்கொள்கிறார்கள் என்று தெரியவில்லை...

மட்டரகமான வார்த்தைப்பிரயோகம்...விளிம்புநிலை பற்றி எழுதும்போது 'ங்கோத்தா' ' தெவிடியா' என்று எழுதினால் அது கதையோடு ஒன்றி வரும்..

ஆனால் தேவை இல்லாமல் இணைக்கப்பட்ட புணர்ச்சி சம்பந்தமான வார்த்தைப்பிரயோகங்கள் அருவருப்பை தருகிறது...

எழுதியவனை பிஞ்ச செருப்பால அடிக்கலாம் என்று தோன்றுகிறது...

என்னுடைய மதிப்பெண் -200 / 100 (மைனஸ் எரநூரு)


சாதீயம் குறித்த ஒரு ஸ்னாப்ஷாட் கதை. ஈகிள்ஸ் ஐ வியூ என்று கூட சொல்லலாம்...

ஏற்கனவே படித்திருந்தாலும் மீள் வாசிப்பு செய்ய தூண்டிய கதை...இன்னும் கொஞ்சம் போல உற்சாக நடை இருந்திருக்கலாம்...

முடிவு கூட சிறப்பாகத்தான் இருக்கிறது...ஒரு நல்ல கதைக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத ஒன்று...

என்னுடைய மதிப்பெண் 60 / 100

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஒவ்வொருவரும் ஒரு படைப்பை உருவாக்க உழைப்பை சிந்துகிறார்கள்...அதை எளிமையாக விமர்சனம் செய்திருக்கிறேன்..ஒவ்வொருவரின் படைப்பும் அவர்களை பொறுத்தவரை சிறப்பானதே...இது முழுக்க முழுக்க என்னுடைய பார்வை மட்டுமே...!!!

மற்ற கதைகளை நேரம் கிடைக்கும்போது விமர்சிப்பேன்...!!!! உங்கள் ஓட்டுகள், ப்ளஸ் கருத்துக்களை சொல்லிவிட்டு போங்க...!!!

Thursday, June 18, 2009

டேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்


ஜூன் 18, வியாழன் அன்று பிற்பகல் 2.00-4.00 இந்திய நேரத்தில் தமிழ்வெளி தளத்தின் உரையாடியில்(chat) டேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடுகிறேன்... டேட்டா எண்ட்ரி தொழில் மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றிய உங்கள் சந்தேகங்கள், விபரங்களை என்னிடம் கேட்கலாம்...

http://news.tamilveli.com/2009/06/blog-post.html

Wednesday, June 17, 2009

டேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்


ஜூன் 18, வியாழன் அன்று பிற்பகல் 2.00-4.00 இந்திய நேரத்தில் தமிழ்வெளி தளத்தின் உரையாடியில்(chat) டேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடுகிறார்... டேட்டா எண்ட்ரி தொழில் மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றிய உங்கள் சந்தேகங்கள், விபரங்களை என்னிடம் கேட்கலாம்...

http://news.tamilveli.com/2009/06/blog-post.html

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....