Sunday, February 19, 2012

பயோ டிஸ்க் - அடுத்த MLM காந்தபடுக்கை மோசடி



Amezcua Bio Disc - தயாரிப்பது க்வெஸ்ட் நெட் என்ற நிறுவனம், இந்த பயோ டிஸ்க் உபயோகப்படுத்தி வாட்டரை (குடிநீர்) எனர்ஜைஸ் செய்வதை டெமோ காட்டுகிறோம் என்று அப்பார்ட்மெண்ட்டில் இருக்கும் இன்னொரு தமிழ் பேமிலி அழைத்து நாங்கக் போனோம்.


வாட்டர் ரீசைக்கிளிங் ப்ளாண்ட் என்பது ஏதோ பெரிசாக இருக்கும் (35 ஆயிரம் விலையாம்) என்று நினைத்தபோது, ஏமாற்றமே மிஞ்சியது. ஒரு பெரிய ப்ளாஸ்டிக் டப்பா, அதில் ஒரு சிறிய மோட்டர். வட்ட வடிவத்தில் ஒரு கண்ணாடி. கைப்பிடியை கழட்டிய பெரிதாக்கும் ஆடி (ஜூமிங் லென்ஸு) மாதிரி இருந்தது. சுவிட்சை போட்டால் மோட்டர் இயங்கி, தண்ணீரை லென்ஸு மேல் ஊற்றுகிறது. (அதுக்கு தனியாக ஒரு ஸ்டேண்ட்). லென்ஸில் பட்டு தண்ணீர் மீண்டும் ப்ளாஸ்டிக் பட்டாவிலேயே ஊற்றிவிடுகிறது. இது போல ஆறு முறை தண்ணீரை எனர்ஜைஸ் செய்தால் அந்த தண்ணீர் மிகச்சிறந்த தண்ணீரா மாறிவிடும் என்றார்கள்.

நான் பார்த்த ப்ளாண்டை பெயிண்ட் ப்ரஷ் உதவியுடன் வரைந்திருக்கிறேன். (படம் சிறப்பாக வர நான் ஒன்றும் கார்ட்டூனிஸ்ட் பாலா அல்ல, ஏதோ என்னால் முடிந்தவரை கோடுகளை இழுத்து விட்டிருக்கிறேன்)

இந்த தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் பயன்களாக அவர்கள் சொல்லியவை

- அந்த தண்ணீரை குடித்தால் நாட்பட்ட நோய்கள், டயபட்டீஸ், இதய நோய் எல்லாம் ஓடிவிடும்.
- சாதாரண சளி, சுரம் போன்ற நோய்கள் குடும்பத்தில் இருக்கவே இருக்காது
- சாதாரணமாக இருக்கும் அசதி, மறதி போன்றவை நீங்கிவிடும்.

அப்படி என்னப்பா இந்த பயோ டிஸ்க் வேலை செய்கிறது ? என்ற கேள்விக்கு,

பதில் கேள்வியாக அவர்கள் கேட்டது

அதாவது மலை காடுகளில் வரும் தண்ணீர் மூலிகை தண்ணீர் என்று ஒத்துக்கொள்கிறீர்கள் அல்லவா...

ஆமாம்ங்க, ஒத்துக்கொள்கிறேன், காரணம் மலையில் இயற்கையாக தோன்றி வரும் போது அவை பல்வேறு மூலிகைகளில் பட்டு வருகிறது, அதனால் அந்த தண்ணீர் நல்ல தண்ணீர் என்று நம்ம முன்னோர்கள் சொல்லிவைத்தார்கள்..

அப்படியே பாய்ண்ட்டை பிடித்துவிட்டதுபோல உற்சாகமாக பேச ஆரம்பித்தார்...

அதாவதுங்க, மலை காடுகளில் வரும் தண்ணீரை போல நம்ம போர்வெல் வாட்டர் சத்து உள்ளது அல்ல. 

ஆமாம் நீங்க சொல்றது சரிதான் சார், என்று சொல்லிவைத்தேன்...

அதனால ஜெர்மனியில இருக்க மருத்துவர் தன்னோட ஆராய்ச்சி மூலமா கண்டுபிடிச்சது தான் இந்த பயோ டிஸ்க். அதாவது இந்த பயோ டிஸ்க்ல பயர் ப்யூஷன் முறையிலயும், நானோ டெக்னாலஜி முறையிலயும் பதினாலு மினரல்ஸை புகுத்தி, அதன் மூலமா பலரோட வாழ்க்கைக்கு ஒளியேத்தினார் மருத்துவர் இயான் லியோன்ஸ். (மேலே படத்தில் இருப்பவர்கள். படம் உதவி கூகிள் அண்ணாச்சி)

அதனால அந்த பயோ டிஸ்க்கை உபயோகப்படுத்தி நாம பயன் அடையுறோம். இந்த பயோ டிஸ்க் மூலமாக தண்ணீர் பாயும்போது அந்த மினரல்ஸ் நம்ம தண்ணீர்ல உடைஞ்சு போன, ஓஞ்சு போன மினரல்ஸை சரிப்படுத்தி உருப்புடியா மாத்துது. அதன் மூலமா நாம குடிக்கிற தண்ணீர் நமக்கு டாக்டரா செயல்படுது என்று மிகப்பெரிய லெக்சரை முடித்தார்.

இந்த பயோ டிஸ்கோட சேர்த்து ஒரு பெண்டண்ட் ஒன்றையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். கழுத்தில் போட்டிருந்த அந்த பெண்டண்டை எடுத்து காட்டினார். 


அதாவது பயோ டிஸ்க் 22 ஆயிரம், இந்த பெண்டண்ட் ஒரு பதினைந்தாயிரம், இரண்டும் சேர்ந்த ஒரு பேக்கேஜ் ஆக 35 ஆயிரம். இந்த பெண்டண்டை கழுத்தில் போட்ட பிறகு, நீண்டகாலமாக இருந்த முட்டிவலி (????) குணமாயிட்டதாம். காலையில் ஆறு மணியில் இருந்து இரவு 12 மணி வரை வேலை செய்தாலும் உடல் சோர்வடைவதே இல்லையாம்..

இந்த பொருளுக்கு CE போன்ற தர சான்றிதழ் கிடைத்துள்ளதா என்று ஒரு புத்திசாலித்தனமான கேள்வியை எழுப்பினேன். அதை மிகுந்த கான்பிடன்ஸோடு எதிர்கொண்டவர், இது ஒரு ஹெல்த் ப்ராடக்ட் அல்ல, ஒரு வெல்னெஸ் ப்ராடக்ட், இதற்கு அது போன்ற சர்ட்டிப்பிக்கேட் எதுவும் தேவை இல்லை என்றார்.

இரண்டு அரை எலுமிச்சை பழங்களை ஒன்று இடது கையிலும் ஒன்று வலது கையிலும் கொடுத்து, இரண்டையும் சுவைத்து பார்க்க சொன்னார்கள். ஒன்று பயோ டிஸ்க் மூலம் எனர்ஜி செய்யப்பட்டது, ஒன்று பயோ டிஸ்க் இருக்கும் இடத்தில் இருந்து தூரத்தில் வைக்கப்பட்டது. இரண்டும் எனக்கு எலுமிச்சை சுவையாக தெரிந்தது, பெரிதாக எதுவும் வித்யாசம் தெரியவில்லை. ஆனால் பக்கத்தில் சோபாவில் அமர்ந்திருந்த அம்மையாரோ, ஆஹா, பயோ டிஸ்க் மூலம் எனர்ஜைஸ் செய்யப்பட்ட எலுமிச்சை சுவையோ சுவை என்று கூற, நானும் சபை நாகரீகம் கருதி, ஆமாங்க அப்படித்தான் என்று மையமாக தலையாட்டி வைத்தேன்...

இந்த ஸ்டோரியில் ஒரு சப் ஸ்டோரியாக, இந்த டெமோ ஒரு பக்கம் நடக்க, யாழினி அப்போது லொக் என்று ஒரு இருமல் விட, இதை நான் ரெய்க்கியில் குணமாக்குகிறேன் என்று அந்த வீட்டு அம்மையார் ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு அல்லேலூயா கும்பல் ஆசீர்வதிப்பது போல தலையில் கை வைக்க, யாழினி அதை விரும்பாமல் கையை தட்டிவிட, சரி அப்ப நான் டிஸ்டன்ஸ் ரெய்க்கி கொடுக்கிறேன் என்று கொஞ்சம் தூரத்தில் இருந்து மொன மொன என்று ஏதோ சொல்லி ஆசீர்வதித்தார்கள். (அன்னாரது மாமியார் அவர்கள் தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்க கலிபோர்னியா வரை டிஸ்டன்ஸ் ரெய்கி கொடுக்கிறாராம். இது வேறொரு ஆராய்ச்சி தலைப்பு. 

இந்த பயோ டிஸ்க் என்பது தண்ணீயை மட்டும் சுத்திகரிக்காதாம். அதை சுத்தி அஞ்சு அடிக்கு உள்ள பொருட்களை எல்லாம் சுத்திகரிச்சுவிடுமாம். அதாவது சமையல்கட்டில் உள்ள எலுமிச்சை, குளிர்சாதன பெட்டியில் உள்ள முள்ளங்கி, அப்புறம் தாளிக்க வைத்துள்ள கடுகு உளுத்தம்பருப்பு என்று அனைத்தையும். மேற்படி பத்தியில் சுவைக்காக கொடுக்கப்பட்ட எலுமிச்சை பழங்கள் கூட பயோ டிஸ்க் டெமோ செய்வதற்காக பயோ டிஸ்கில் இருந்து வெகுதொலைவில் (அதாவது சமையல் அறையில் இருந்து படுக்கை அறையில்) வைக்கப்பட்டதாம்.

கடைசியாக, இந்த பயோ டிஸ்கை வாங்க வேண்டும் என்றால் அவரது ரெபரன்ஸ் ஐடி மூலம் வாங்கினால் நல்ல டிஸ்கவுண்ட் கிடைக்கும் என்று சொன்னார். எல்லாத்தையும் மெயில்ல அனுப்பிடுங்க, வாங்கிடலாம் என்று சொல்லிவிட்டு, பயோடிஸ்க் மூலம் டிஸ்டன்ஸ்ல வைத்து எனர்ஜைஸ் செய்யப்பட்ட ஆரஞ்சு பழரசத்தை அருந்திவிட்டு நடையை கட்டினோம்.

இந்த பயோடிஸ்க் பற்றி இணையத்தில் ஆரய்ச்சி செய்யும்போது இதன் ஏமாற்று வேலைகள் பற்றி பல ரெபரன்ஸ்கள் கிடைத்தன. கேரளாவில் மருந்துவர்கள், டெண்டிஸ்டுகள் கூட இந்த பயோடிஸ்கை வாங்கி போட்டுவிட்டு, அதன் பின்னால் மற்றவர்கள் தலையில் கட்டுகிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. நன்று கற்று அறிந்த கல்வியாளர்கள், பேராசிரியர்கள் கூட இந்த வலையில் விழுந்துள்ளதும் தெரிகிறது. ஏன் இந்த பயோடிஸ்கை என்னிடம் விற்க முயன்ற தோழர் கூட தகவல் தொழில்நுட்ப துறையில் உயர்ந்த பதவி வகிப்பவர்தான்.

ஏற்கனவே காந்த படுக்கை என்று ஒரு MLM மோசடி (MLM என்பது மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் என்பதின் சுருக்கமாகும் - அதாவது சங்கிலி தொடர் விற்பனை). அதாவது நீங்கள் ஒரு பொருளை பத்து ரூபாய்க்கு வாங்கினால், அதே பொருளை நீங்கள் பத்து பேருக்கு விற்று கொடுத்தால் உங்கள் பொருள் உங்களுக்கு இலவசம். இது போல பல வகையாக விற்பார்கள்.

காந்த படுக்கை பற்றி இணையத்தில் தேடினால், காவல்துறை வழக்கு விவரங்கள், ஏமாந்த சோனகிரிகள் பற்றிய தகவல்கள் என அனைத்தும் கொட்டும். நேரம் இருப்பவர்கள் தேடிப்பாருங்கள்.

பல ஆண்டுகளுக்கு முன் திருப்பதி ஏழுமலையானுக்கு / ஜீசசுக்கு என்று தபால் கார்டுகள் வரும். அந்த தபால் கார்டை படித்து அதை போலவே இருபது பேருக்கு எழுதி போட்டால் உங்கள் வீட்டு கூரையை பிய்த்துக்கொண்டு பணம் கொட்டும் - சில பயனாளிகளின் தகவல்கள் காணப்படும். ஆனால் அந்த தபால் கார்டை புறக்கணித்தாலோ, கால் உடைந்து விடும். ஆண்மை குறைந்துவிடும். எயிட்சு வரும் என்று கிலி ஏற்படுத்துவார்கள். அதே போன்றதொரு மின்னஞ்சல் சமீபமாக எனக்கு வந்து சேர்ந்தது. இந்தமுறை ஏழுமலையானோ ஜீசசோ இல்லை. வினாயகர். 

ஆக, ஏமாற்றுபவர்கள், எம்.எல்.எம் கும்பல், ரெய்க்கி, வாஸ்து, மக்களின் மூட நம்பிகைகளை வைத்து பணம் செய்பவர்கள், கடிதம் மூலம் ஏழுமலையானை மார்க்கெட்டிங் செய்பவர்கள், மணியார்டர் மூலம் காசை வாங்கிக்கொண்டோ அல்லது வி.பி.பி மூலமோ விலங்குகளை பயமுறுத்தும் துப்பாக்கிக்கு பதில் செங்கல்லை வைத்து அனுப்புபவர்கள், நைஜீரியா கும்பல், ஆப்ரிக்க நாட்டின் செத்துப்போன நிதி மந்திரிக்கு பிறந்த கருப்பு மகளிடம் இருக்கும் இரண்டு மில்லியனை வைத்து ஏமாற்றுபவர்கள் என்று அன்றிலிருந்து இன்றுவரை ஏமாற்றுபவர்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். நாம் தான் ஏ(கோ)மாளிகளாக ஆகாமல் தப்பித்துக்கொள்ளவேண்டும்.

இதை எழுதவேண்டும் என்று தோன்றியது ஏன் என்றால், இந்த கான்ஸெப்ட் இப்போது தான் வட இந்தியாவில் பரவி வருகிறது. இதை பற்றி மெயின் லைன் பத்திரிக்கைகள், நீயா-நானா மாதிரி அவேர்னஸ் க்ரியேட் செய்யும் ப்ரொக்ராம்ஸ், புதிய தலைமுறை செய்தி சேனல் இவர்கள் எல்லாம் அவேர்னஸ் க்ரியேட் செய்து, நம் தமிழ் மக்கள் ஏமாந்து காசை வீணடிக்காமல் உதவவேண்டும்.


Tuesday, January 31, 2012

அட முட்டாள் தலிபான்களா ?

நண்பர்களே! ஒரு அவசர உதவி. இஸ்லாமிய நண்பர் ஒருவர் கடையநல்லூர் பகுதியில் இருக்கிறார். அவர் இறையில்லா இஸ்லாம் என்கிற தளத்தில் இருந்து நாத்திகம் பேசும் கட்டுரையொன்றை பேஸ்புக்கில் ஷேர் செய்தார் என்பதற்காக, அவரை ஊர்விலக்கம் செய்திருக்கிறது ஜமாத். இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜமாத் கூட்டத்தின் முடிவில் அவருக்கெதிராக ‘பத்வா’ அதாவது அவரை அங்க ஹீனம் செய்யும் முடிவை எடுக்க இருக்கிறது. அவரது மனைவியையும் அவரை விவாகரத்து செய்யும்படிச் சொல்லியிருக்கிறது ஜமாத். தென்காசிக்கு அருகேயுள்ள கடையநல்லூர் பரசுராமபுரம் ஜும்மா பள்ளிவாசலில் நடக்கிறது கூட்டம். இந்த காட்டுமிராண்டித்தனத்துக்கு எதிராக யாராவது அவருக்கு உதவ முடியுமா? என்னால் முடிந்த வரை பத்திரிகையாளர்களுக்குத் தகவல் தந்திருக்கிறேன். பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சமூக அமைப்புகள், இயக்கங்கள் அனைவருக்குமான வேண்டுகோள் இது.


பேஸ்புக்கில் கவின்மலரின் வேண்டுகோள் இது. இதை கேள்விப்பட்டவுடன் எனக்கு தோன்றிது இந்த தலைப்புதான். அது எப்படி எல்லாரையும் அப்படி சொல்லப்போச்சு என்று கிளம்பவேண்டாம். இது பத்வாவை நிகழ்த்திக்கொண்டிருக்கும் காட்டுமிராண்டிகளுக்கு மட்டும்தான் பொருந்தும்.


அடப்பாவிகளா இது என்ன ஆப்கானிஸ்தானா ? அங்க ஹீனம் செய்யறானுங்களாமுல்ல ? 


சர்ச்சைக்குள்ளாக்கப்படும் தளம் இது தான் : http://iraiyillaislam.blogspot.com/



இவனுங்கள எல்லாம் கும்பலா ஒரு வண்டியில ஏத்தி ஆப்கானிஸ்தான்ல கொண்டுபோய் விட்டுடுங்கப்பா.

Tuesday, December 27, 2011

ஆனந்த தொல்லை

பால்வீதி நாயகன், பச்சைக்குழந்தை முக அழகன், சுட்டும் விழியில் சூரியன், பவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசனின் ஆனந்த தொல்லை ட்ரைலர் அல்லது முன்னோட்டம் இங்கே காட்டப்படும்.



முழுப்படத்தையும் பார்த்து செத்து தொலைபவர்களுக்கு கம்பெனி பொறுப்பல்ல.

Monday, November 21, 2011

SMS செத்துபோச்சுங்க (Nimbuzz)

எஸ்.எம்.எஸ் பரபரவென அனுப்புற ஆளா நீங்க ? எஸ்.எம்.எஸ் காஸ்ட் 1 பைசாவா இருந்தா பரவால்ல. ஆனா நேஷனல் எஸ்.எம்.எஸ், இண்டர் நேஷனல் எஸ்.எம்.எஸ் (5 ரூபா வரைக்கும் இதுக்கு நான் செலவு பண்ணியிருக்கேன்.). ஆகியவற்றை அனுப்பனும்னா கொஞ்சம் செலவு பிடிக்குமில்லையா ?



ஓக்கே இன்னொரு கொஸ்டின். ஒரு மாசம் முழுமையும் உங்களோட எஸ்.எம்.எஸ் செலவு என்ன ? 100 ரூபாய் இருக்குமா ? அப்படி இருந்தா மேல படிங்க.

யாருக்கு வேண்டும்னாலும் இலவசமா ஆயிரக்கணக்கா அனுப்பிக்கலாம் என்று நாங்க கெளம்பி வந்திருக்கோம்ல ? (இந்தியாவில் ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்ஸுக்கு மேல அனுப்ப முடியாதுன்னு ஒரு தடை இருக்குங்க, அது கம்பெனிகள் அன்லிமிட்டெட் எஸ்.எம்.எஸ் ஸை மிஸ் யூஸ் பண்ணதால வந்தது).

எப்படி ?

உங்க மொபைல்ல (ப்ரி பெய்ட் அல்லது போஸ்ட் பெய்ட்), மாத இண்டர்நெட் பேக்கேஜ் போட்டுக்கோங்க. 99 ரூபாய் மேக்ஸிமம் ஆகும்னு நினைக்கிறேன்.

அப்புறம் நிம்பஸ் அப்ளிக்கேஷன டவுன்லோட் பண்ணி போடுக்கோங்க.

நிம்பஸ் எங்க கிடைக்கும் ?

http:// get.nimbuzz.com என்ற முகவரிக்கு உங்க மொபைல்ல இருந்து போகலாம். (மொபைல்ல இண்டர்நெட் ஆக்டிவேட் செஞ்ச பிறகு)

http://market.android.com (அண்ட்ராய்ட் மொபைல் ஆக இருந்தால்)

itunes (ஐபோனுக்கு)

http://store.ovi.com நோக்கியா மொபைல் ஆக இருந்தால். ஓவி ஸ்டோர் அப்ளிக்கேஷனும் போடலாம்.

ப்ளாக்பெரியும் அப்வேர்ட் வச்சிருக்கு. அங்கேயும் போகலாம்.

இப்ப டவுன்லோட் செய்த பிறகு, உங்களோட ஜிமெயில், யாஹூ, பேஸ்புக், எம்.எஸ்.என் ஆகிய அனைத்து மெசஞ்சரையும் கூட இணைத்துக்கொள்ளலாம்.

உங்க மொபைல் நம்பரை வெரிபை செய்யறதுக்கு கேக்கும், அதையும் கரெக்ட்டா கொடுத்துருங்க.

உங்களோட போன் புக்ல இருக்க நம்பர்களில் இருப்பவர்கள் யாராவது நிம்பஸ் உகயோகப்படுத்தினால் அதையும் நிம்பஸ் கண்டுபிடித்து உங்கள் நட்பு லிஸ்டில் இணைத்துக்கொள்ளும்.

இப்ப உங்களோட நட்பு / தோழர் எந்த நாட்டில் இருந்தாலும் அவர்களுக்கு இலவசமாக மெசேஜ் அனுப்பலாம்.

அவர்கள் ஜிடாக்கில் அல்லது யாஹூவில் ஆன்லைனில் இருந்தால் கால் பட்டனை அழுத்தி 24 மணி நேரம் கால் போட்டே பேசலாம்.

அவர்கள் ஆன்லைனில் இல்லை என்றாலும் நிம்பஸ் பிங் என்ற வசதியை உபயோகப்படுத்தி அவர்களை ஆன்லைனில் வருமாறு சொல்லலாம். (நிம்பஸ் அவர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பும்.)

கிரிக்கெட் ஸ்கோர், அஸ்ட்ராலஜி, ஜோக்ஸ் என்று எல்லாவற்றுக்கும் அங்கே அப்டேட்ஸ் வந்துகொண்டே இருக்கும்.

டைரக்டாக ட்விட்டருக்கும் அப்டேட் செய்யலாம், பேஸ் புக் சாட்டில் இருப்பவர்களுடனும் பேசலாம்.

நிம்பஸ் மொபைலுக்கு மட்டும் இல்லாமல் PC க்கும் MAC க்கும் கூட இருக்கிறது. குறைந்த வசதியுள்ள மொபைல்கள், ஜாவா மொபைல்கள் கூட நிம்பஸை உபயோகப்படுத்தலாம்.


நிம்பஸ் தமிழ் பாண்டை டிஸ்ப்ளே செய்கிறது, அதனால் உங்கள் நன்பர்கள் தமிழில் உங்களுடன் உரையாடினால் / குறுஞ்செய்தி அனுப்பினால், அது தமிழிலேயே உங்களுக்கு தெரியும்....

இம்புட்டு வசதியை அள்ளித்தரும் நிம்பஸ்ஸை உபயோகப்படுத்திப்பாருங்க.

எஸ்.எம்.எஸ் என்று காசு செலவு செய்வதை மொத்தமாக நிறுத்திடுவீங்க...


Tuesday, October 18, 2011

பூந்தியும் புளியோதரையும் உங்கள் மீது நிலவுவதாக...


அன்புள்ள தமிழ்மணம் நிர்வாகிக்கு, எல்லாரும் உங்களை திட்டுகிறார்கள். நான் இந்த கூகிள் பஸ் பக்கம் வந்து கொஞ்ச நாள் ஆவதால் தமிழ்மணத்தில் என்ன நடக்குது என்று தெரியவில்லை. இருந்தாலும் நீங்கள் என்ன செய்தாலும் அதில் ஒரு நியாயம் இருக்கும் என்று நினைப்பதால் உங்கள் மேல் பூந்தியும் புளியோதரையும் உண்டாவதாக என்று வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். 

Friday, June 24, 2011

லிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி

எழுத்தாளர் பாமாவின் சிறுகதை நாடக வடிவில்..

நெறியாள்கை :ஸ்ரீஜித் சுந்தரம்

சாதியின் பேராலும் வர்க்கத்தின் பேராலும் ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்ப்புக்குரலாய்..வருகிறோம்.
அனைவரும் வருக!

இடம் :
ஸ்பெசஸ், 1 , எலியட்ஸ் கடற்கரை சாலை பெசன்ட் நகர், சென்னை

நாள் : 25, 26 ஜூன் இரண்டு நாட்களும் மாலை 6 மணி...

அரங்கில்:

அ. அமுதா
ஏஞ்சல் கிளாடி
பிரம்மா
ஜீவா ரகுநாத்
கவின் மலர்
லிவிங் ஸ்மைல் வித்யா
நளினி ஜமீலா
பூங்குழலி
சக்தி சரவணன்
செந்தில் குமார்
சாரதி கிருஷ்ணன்
செந்தில் குமார்
சௌமியா
சுரேந்தர்
தமிழ் அரசன்
தாயம்மா ரம்யா
எஸ்.உஷா

பாடல்கள் : இன்குலாப்

பின்னணி இசை : சித்திரை சேனன்

இசை அமைப்பு : சாரதி கிருஷ்ணன், கவின் மலர்

மேடை பொருட்கள்:
பரணிதரன்
கமலஹாசன்
சோலைராஜ்
ஆனந்த குமார்
ராம்குமார்

ஒளியமைப்பு : விக்டர், அஸ்வினி காசி
உடைகள் : அ.மங்கை, உதவி : செந்தில் குமார்

தயாரிப்பு மேலாண்மை & விளம்பரங்கள் வடிவமைப்பு : சுரேந்தர்

தயாரிப்பில் உதவி : செந்தில் குமார், சோமசுந்தரம்

நெறியாள்கை : ஸ்ரீஜித் சுந்தரம்

உதவி நெறியாள்கை : அற்புதன் விஜய்

பின் அரங்கில் :
அமலா மோகன்
பானு
தர்ஷினி
தினேஷ் குமார்
ஜெனிஃபர் மார்ஷல்
பிரவீன் குமார்
ரூபன் பால்
ஸ்ரீராம்
வைஷ்ணவி
வின்சென்ட் பால்

நன்றி:
அ.மங்கை
சதானந்த் மேனன் (ஸ்பேசஸ்)
பேராசிரியர்.சரஸ்வதி
கொளத்தூர் மணி
பழனிச்சாமி
ஜீவா ரகுநாத்
உமா சத்தியநாரயணா
பிரளயன்
திருமுருகன்
சுதா ஸ்ரீதர்
சிவா
சங்கரி & அனுசுயா சுந்தரம்

”தூரிகையில் சிறகு விரிக்கும் கானகப்பட்சி’’ - லிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி நடைபெறுகிறது

Sunday, May 29, 2011

UAE தமிழ் சங்கத்தின் குறும்பட போட்டி


UAE Tamil Sangam's Short Film Competition

Please don't miss the great opportunity of participation in this competition.
Last Date for Registration 1st June 2011, 9PM.

Thank you very much for all those who have already registered for this.

1st week of June registered participants will be called for discussion. Time & Venue will be SMSed only to those who register.
Registration is compulsory. Online Registration: http://www.uaetamilsangam.com/utsshortmovies.asp

Dear Directors you have to choose your Teams Talented members for Acting, Dancing, Singing, Editing, Music, Script writing... from UAE Tamil Sangam only.
Any one can participate but the Participants should be a Member of UAE Tamil Sangam
Become Member : http://www.uaetamilsangam.com/becomemember.asp

The Best Movie, Director, Actor, Actress, Editor, Musician, Singer will be selected by Famous Tamil Movie Directors.
Your Movie will be telecasted during one of UTS Mega Event.
If your Movie gets selected as best movie it will have a big chance of being telecasted in any Major Tamil Channel in Chennai.

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....