தேடுங்க !

Tuesday, November 07, 2006

வலைப்பதிவாளர்களே..சந்திக்கலாமா பெங்களூரில் ?

அன்பு வலைப்பதிவு நன்பர்களுக்கு வணக்கம்...

பெங்களூர் பேலஸ் கிரவுண்ட்ஸ்ல புக் பேர் நடக்கப்போகுது...10 ஆம் தேதி ஆரம்பம் என்று ஷைலஜா சொல்றாங்க...ஜி.ராகவன் வரப்போறார்...தனிமடலில் தெரிவித்தார்...

சனி ஞாயிறு இரண்டு விடுமுறை நாட்களில், சனிக்கிழமை வைத்துக்கொள்ளலாம் என்று சொல்கிறார் ஷைலஜா..காரணம் ஞாயிறு கூட்டம் அதிகமா இருக்கும் என்கிறார்..

சென்ற ஆண்டு ஆஸ்திரேலியாவில் இருந்ததால் தவற விட்டுவிட்டேன்..ஆனால் அதற்க்கு முந்தைய ஆண்டு சென்று "பொன்னியின் செல்வன்" எல்லா தொகுதிகளையும் குறைந்தவிலைக்கு வாங்கினேன்..அப்போதே முழுவதும் படித்துவிட்டேன் என்றாலும், மீண்டும் வந்தியத்தேவன் வீரநாராயண ஏரி மதகுகளை எண்ணுவதை நேற்றில் இருந்து படிக்க ஆரம்பித்தேன்...

என்னோட டார்கெட், சாண்டில்யனின் "கடல்புறா"..அப்புறம் எங்க அம்மாவுக்கு மைக்ரோ அவன் குங்கிங், வேறு ஏதாவது சமையல் புத்தகம்..(பாப்கார்ன் செய்யுறேன்னு பிளாஸ்டிக் பாத்திரத்தை கருக்கிட்டாங்க..), பிறகு பாப்பாவுக்கு படிக்காமலேயே ஐ.ஏ.எஸ் ஆவது எப்படி, கல்லூரிக்கு கட் அடித்து வீட்டில் உறங்குவது எப்படி என்றெல்லாம் ஏதாவது புத்தகத்தை பிரசண்ட் செய்ய ஆசை..சொந்தக்கதைய விடுங்க...

நீங்க வர்ரீங்களா ?? பின்னூட்டமா கொடுங்க...தொலைபேசியில் அழைத்து டார்ச்சர் செய்யுறேன்..

பதிலை எதிர்நோக்கும்...

47 comments:

செந்தழல் ரவி said...

ஆங்..மரத்தடி, குண்டாந்தடி குழுமத்தில எழுதினவங்க கூட வரப்போறாங்களாம்...ஹைலஜா சொல்றாங்க..

செந்தழல் ரவி said...

அங்கேயே சாப்பிட பெரியசைஸ் அப்பளம், பாணி பூரி எல்லாம் கிடைக்கும்.

மனதின் ஓசை said...

தமிழ் புத்தகங்கள் இங்கு கிடைக்குமா?

செந்தழல் ரவி said...

கிடைக்கும்...பதிவில் சொன்னேனே, பொன்னியின் செல்வன் வாங்கினேன் என்று !!!1

செந்தழல் ரவி said...

அருட்பெருங்கோ வருவதாக வாக்களித்திருக்கிறார்...

அவர் பதிவு

Anonymous said...

what is your number ?

செந்தழல் ரவி said...

9880597061

மதுரையம்பதி said...

செந்தழலாரே...நானும் வர மூயற்சிக்கிறேன்.

செந்தழல் ரவி said...

///
நானும் வர மூயற்சிக்கிறேன்.
///

நீங்க வரலைன்னா உங்களை யாரு விட்டா ?? நீங்க கண்டிப்பாக வரவேண்டும்..

Anonymous said...

at what time we can meet ?

செந்தழல் ரவி said...

நேரம் தனிமடலில் அல்லது தொலைபேசியில் சொல்கிறேன்...காலையில் போனாத்தான் சரியா இருக்கும்...

ப்ரியன் said...

இந்த வார இறுதியில் பெங்களூர் வருகிறேன் ரவி.ஆனால் சந்திப்பில் கலந்துக்கொள்ள இயலுமா என்பது பெரிய கேள்விக்குறி!எதற்கும் வந்ததும் உங்களின் செல்பேசிக்கு அழைக்கிறேன்

செந்தழல் ரவி said...

முயற்ச்சி செய்யுங்கள் ப்ரியன்...

செந்தழலார் பாமரர் பாசறை said...

மெட்ராசுலேர்ந்து பெங்களுருக்கு வர்றதுக்கு டிரெயின் டிக்கெட் எவ்வளவு நைனா?

லாரி புடிச்சும் வரலாமா? வந்தா எவ்ளோ நேரம் ஆகும்?

போலிஸ்காரன் said...

மொத்த 13 கமெண்டுகளில் 8 கமெண்டு செந்தழல் ரவி போட்டது. பின்னூட்ட கயமைகளில் முதலிடம் வகிப்பவர் செந்தழல் ரவி.

செந்தழலார் கொலைப்படை said...

//மொத்த 13 கமெண்டுகளில் 8 கமெண்டு செந்தழல் ரவி போட்டது. பின்னூட்ட கயமைகளில் முதலிடம் வகிப்பவர் செந்தழல் ரவி.//

தலைவர் மீது கயமை சொல்லும் களவாணிகளின் பின்னூட்டத்தைக் கூட வெளியிடுவதை கடமையாக கொண்ட தலைவர் வாழ்வாங்கு வாழ்க

-செந்தழலார் கொலைப்படை
செம்பரம்பாக்கம்

செந்தழல் ரவி said...

///மெட்ராசுலேர்ந்து பெங்களுருக்கு வர்றதுக்கு டிரெயின் டிக்கெட் எவ்வளவு நைனா?/

நாமெல்லாம் எப்போ டிக்கெட் எடுத்திருக்கோம்...டி.டி. வந்தா எப்படி அப்பீட் ஆகுறதுன்னு ஒரு புத்தகமே போடலாம் இல்லையா...

///லாரி புடிச்சும் வரலாமா? வந்தா எவ்ளோ நேரம் ஆகும்? ////

லாரி மேலேயும் வரலாம்...அது லாரி டிரைவர் ஏத்துற சரக்கை பொறுத்து...பறந்து கூட வருது லாரி...சில லாரி உருண்டு கூட வருது...ஒரு மண்டையோட்டை டாஸ்மார்க்கிலிருந்து வாங்கி இடுப்பில் சொருகிக்கொள்வது நல்லது...

ஷைலஜா said...

ரவி! மரத்தடி தெரியும் அதென்னப்பா குண்டாந்தடி?:) யாராவது இது அடிதடி கும்பல்னுநினைக்கப் போறாங்க:)செந்தழலார் கொலைப்படைவேறயா ஐயோ? புத்தகக் கண்காட்சிக்கு என்கூட இந்தமாதிரி வால்தனமெல்லாம் செய்யாம சமத்தா வரணும் என்ன?:)
விகடன் பிரசுரம் இந்தமுறை இங்க ஸ்டால் போட்றாங்க..இதுக்கு முன்னாடி நடந்த காட்சிகளில் இவங்க வந்தமாதிரி தெரியல..சுஜாதா மதன் எஸ்ராமக்ருஷ்ணன் மற்றும் விகடன் எழுத்தாளர்களின் படைப்புகளை அள்ளலாம்! கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுமாம்!
ஷைலஜா

குடிகாரன் said...

//லாரி மேலேயும் வரலாம்...அது லாரி டிரைவர் ஏத்துற சரக்கை பொறுத்து...பறந்து கூட வருது லாரி...சில லாரி உருண்டு கூட வருது...ஒரு மண்டையோட்டை டாஸ்மார்க்கிலிருந்து வாங்கி இடுப்பில் சொருகிக்கொள்வது நல்லது...//

இது சூப்பரு.

நோண்டு said...

//சுஜாதா மதன் எஸ்ராமக்ருஷ்ணன் மற்றும் விகடன் எழுத்தாளர்களின் படைப்புகளை அள்ளலாம்! கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுமாம்!//

அதெல்லாம் ஓக்கே. சாப்பிட போண்டா கிடைக்குமா? நான் மட்டும் போண்டா + பாசந்தி + மசால் தோசை சாப்பிடுவேன். பில் மட்டும் ஈக்குவல். ஓக்கேவா?

திருமால் said...

எல்லாம் பெரியாளுங்களாஆ.... இருக்கிங்க.. நானும் வரலாமா? 9986183936

செந்தழல் ரவி said...

வாங்க திருமால்...வரவேற்க்கிறோம்...

ILA(a)இளா said...

தோ வந்துட்டேன்

Anonymous said...

Nanum Varen.

போண்டா மாதவன் said...

வலைப்பதிவு சந்திப்பில் போண்டா உண்டா?

போண்டா உண்டு என்றால் கண்டிப்பாக வருவேன்.

என் கடன் போண்டா தின்று கிடப்பதே!

போண்டா மாதவன் said...

வலைப்பதிவு சந்திப்பில் போண்டா உண்டா?

போண்டா உண்டு என்றால் கண்டிப்பாக வருவேன்.

என் கடன் போண்டா தின்று கிடப்பதே!

போண்டா மாதவன் said...

வலைப்பதிவு சந்திப்பில் போண்டா உண்டா?

போண்டா உண்டு என்றால் கண்டிப்பாக வருவேன்.

என் கடன் போண்டா தின்று கிடப்பதே!

போண்டா மாதவன் said...

வலைப்பதிவு சந்திப்பில் போண்டா உண்டா?

போண்டா உண்டு என்றால் கண்டிப்பாக வருவேன்.

என் கடன் போண்டா தின்று கிடப்பதே!

போண்டா மாதவன் said...

வலைப்பதிவு சந்திப்பில் போண்டா உண்டா?

போண்டா உண்டு என்றால் கண்டிப்பாக வருவேன்.

என் கடன் போண்டா தின்று கிடப்பதே!

செந்தழல் ரவி said...

மாதவன், என்ன உங்களுக்கு மூனு போண்டா வேனுமா ? ஏன் மூனு பின்னூட்டம் ? போண்டா கண்டிப்பாக கிடைக்கும்...நீங்கள் வந்தால் என் செலவில் ஒரு உருளைக்கிழங்கு போண்டா இலவசம்..அப்புறம், உருளைக்கிழங்கு போண்டாவுக்குள்ள எப்படி உருளைக்கிழங்கு வந்தது என்று மட்டித்தனமா கேக்க கூடாது ஆமாம்...உங்கள் தொலைபேசி எண்ணை பின்னூட்டமாக கொடுங்க, நேரம் காலத்தை அப்டேட் செய்கிறேன்..

செந்தழல் ரவி said...

எண் கிடைத்துவிட்டது. நன்றி.

Anonymous said...

I am also wanted to come. but I am going to my native on 10th.

செந்தழல் ரவி said...

///I am also wanted to come. but I am going to my native on 10th. ///

நீங்க வரமுடியாம போனதுல வருத்தம்தான்..ஆனா யாரு நீங்கன்னு சொல்லாமே போய்ட்டீங்க பாருங்க..அதுக்கு பேர் என்ன காமெடியா ?

Anonymous said...

I am also planing to come. please tell me the time.

செந்தழல் ரவி said...

சனிக்கிழமை மதியம் 3 மணி சரியான நேரம் என்று அனைவரும் நினைக்கிறார்கள்..

செந்தழல் ரவி said...

சில தகவல்கள்.

90 மொழிகளில்
260 ஸ்டால்கள்
10 லட்சம் புத்தகங்கள்..
மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள்.

விழியன் said...

அடியேன் கலந்து கொள்ளலாமா?
9886217301

மு.கார்த்திகேயன் said...

உங்க பெங்களூரூ சந்திப்பு நல்லபடியா அமைய வாழ்த்துக்கள் ரவி

செந்தழல் ரவி said...

என்னுடைய மொபைல் எண் 98805 97061...

தொலைபேசியில் அழைத்து வருவதை உறுதி செய்யவும்...

மாலை மூன்று மணிக்கு பேலஸ் கிரவுண்ட்ஸ்...

மறக்காதீங்க...

ஆப்பு said...

ஆப்பு இந்த வாரம் படித்து விட்டீர்களா?

விறுவிறுப்பான செய்திகளுடன்!!!

முற்றிலும் புதிய தகவல்களுடன்!!!

யார் அந்த என்னார்?

யார் அந்த நேசக்குமார்?

அரசியல் சமூக விழிப்புணர்வு வலைப்பூவிதழ்!!!

செந்தழல் ரவி said...

my Number 98805 97061...

Anonymous said...

சற்றுமுன் தொலைபேசியது நான்!

யார் என்று கண்டு பிடித்ததும் மெயில் போடுங்கள்!

செந்தழல் ரவி said...

Yaaruppaa Phone Panni Kalaichathu - Sollunga.. :))

கருந்தழல் கவி said...

என்ன அண்ணே.

சந்திப்பெல்லாம் எப்படி இருந்தது?

சந்திப்பைப் பற்றி ஒண்ணுமே எழுதலை

Resume said...

Well, the article is actually the freshest on this worthy topic. I agree with your conclusions and will eagerly look forward to your forthcoming updates. Saying thanks will not just be adequate, for the exceptional lucidity in your writing.

Resume Writing

H S Consultants said...

If you want to see the mind blowing article with real facts and figures, this has really tremendous impacts on readers.

Study in UK|Study Agent

Job Interview Questions said...

I am also wanted to come...Thanks.

Jobs in Bangalore