வேணாம் விட்ருங்க அந்த கிளியை

சமீபத்தில் ஒரு தோழர் தொலைபேசினார்...பணி வாய்ப்பு தேடும் முயற்சியில் சமீபத்தில் இறங்கி இருக்கிறார்...அவர் கூறி ஒரு விஷயம் இந்த பதிவுக்கு காரணமாக அமைந்தது..

சமீபத்தில் தான் கிளி ஜோசியம் பார்த்ததாகவும் அந்த கிளி ஜோசியர் தனக்கு இன்னும் ஒரு மாதத்தில் வேலை கிடைக்கும் என்றும் அது வெளிநாட்டு வேலையாக இருக்கும் என்றும் விரைவில் விமானத்தில் பறந்துவிடுவாய் என்று கூறியதாகவும் சொன்னார்...

எனக்கு தோன்றிய எண்ணங்கள் இவை, அதை வெளிப்படையாக சொல்லி அவனை கடுமையாக கலாய்த்தேன்..

* அடப்பாவி...கிளியே ஜோசியக்காரன் கொடுக்குற நெல்லுக்காக வெளிய வந்து சீட்டு எடுக்குது...அது எப்படிடா உன் வாழ்க்கையை தீர்மானிக்க முடியும்...கிளியோட வாழ்க்கையே அதன் கையில் இல்லையே, ரெக்கையை புடுங்கி கூண்டுல இல்ல அடைச்சிட்டானுங்க ?

* கிளி ஜோசியன் நீ கொடுக்குற அஞ்சு ரூபாய்க்காக உன்னிடம் கெஞ்சிக்கிட்டு நிக்குறான் தன்னோட வாழ்க்கையை கணிக்க முடியாம, அவன் பொழப்பு ஒடனுமுன்னு...அவன் எப்படிடா உன் வாழ்க்கை விவரத்தை கணிக்க முடியும் ?

இதில் அந்த கிளி ஐந்து ரூபாய் கொடுத்தால் வாங்கவில்லையாம், பத்துரூபாய் கொடுத்தால்தான் வாங்குவேன் என்று ஒத்தை (?!) காலில் நின்றதாம்...என்ன கொடுமை சரவணன்..

இன்னுமா இந்த ஜோசியத்தை நம்பி வீணாப்போகப்போறிங்க...நான் ஜாதகம்,சோசியம்,ஏவல்,ஓவல்,வவ்வால்,பல்லி விழுந்த பலன் (இது பற்றி தனியாக எழுதுவேன்),சூனியம்,பில்லி,பேய்,பிசாசு,பூதம் எந்த கரும்த்தையும் நம்புறதில்லை...ஏண்டா பிக் பாங் தியரியப்பத்தி பேசிக்கிட்டிருக்க காலத்திலேயும் இதை எல்லாம் நம்பிக்கிட்டிருக்கீங்க என்று வைதேன்..(நன்பரை)...இவங்களை எல்லாம் திருத்த 1000 பெரியார் வந்தாலும் முடியாதுடா...(டயலாக் உபயம்: விவேக்)...

டிஸ்கி : யாரையும், யாருடைய நம்பிக்கையையும், தும்பிக்கையையும், புண்படுத்த அல்ல..இந்த பதிவை காட்டி சிலரை பண்படுத்த...

Comments

நமது கம்பியூட்டர் ஜோசியம் உனக்கு என்ன சொல்கிறது எனில்

" இன்னும் ஒரு மண்டலத்திற்கு உங்களுக்கு இணையத்தில்் கண்டம் உள்ளது.
அதனால் இனிமேல் மெயில் செக்பண்ணக்கூட கம்பியூட்டரை ஓப்பன் பண்ணக்கூடாது."

:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
நமது கம்பியூட்டர் ஜோசியம் உனக்கு என்ன சொல்கிறது எனில்

" இன்னும் ஒரு மண்டலத்திற்கு உங்களுக்கு இணையத்தில்் கண்டம் உள்ளது.
அதனால் இனிமேல் மெயில் செக்பண்ணக்கூட கம்பியூட்டரை ஓப்பன் பண்ணக்கூடாது."

:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
//இந்த பதிவை காட்டி சிலரை பண்படுத்த...//

அது! சூப்பர்.
சிக்கலாரின் ஒத்து said…
ரவீணா,

இங்கன வாசிக்க ஆரம்பிக்கலாமான்னு நம்ம சண்முகசுந்தரம் அண்ணன் கேட்டுட்டு வரச் சொல்லிச்சு...
சார்லஸ் பாபேஜ் said…
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
..
...
...
...
...
...
...
...
...
...
...


ச்சும்ம்மா....

மிஸ்டு கால் மாதிரி..எம்ப்டீ பின்னூட்டம்...

ஹி...ஹி...
மாநகராட்சி அலுவலர் said…
பின்னூட்டங்கள் வழியே வைரஸ் வருகிறதாம். உங்கள் சிஸ்டத்தையே காலியாக்கிவிடக் கூடும் என்று கண்ணீர் சிந்தி புலம்புகிறார் சிந்தாநதி!
///
நமது கம்பியூட்டர் ஜோசியம் உனக்கு என்ன சொல்கிறது எனில்

" இன்னும் ஒரு மண்டலத்திற்கு உங்களுக்கு இணையத்தில்் கண்டம் உள்ளது.
அதனால் இனிமேல் மெயில் செக்பண்ணக்கூட கம்பியூட்டரை ஓப்பன் பண்ணக்கூடாது."

:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

///

இந்த காமெடியில் வரும் சிங்கமுத்துவை உங்களுக்கு பிடிக்குமா ? நான் மிகவும் ரசிப்பவர்களில் ஒருவர்...!!!
///இங்கன வாசிக்க ஆரம்பிக்கலாமான்னு நம்ம சண்முகசுந்தரம் அண்ணன் கேட்டுட்டு வரச் சொல்லிச்சு... ///

கொஞ்ச நேரம் பா.க.ச வுல வாசிச்சிட்டு வாங்கப்பு. கை நீட்டி காசு வாங்கியாசில்லை...
நன்றி நாமக்கல் சிபி.
சார்லஸ் பாபேஜ்...இது க்ரியேட்டிவிட்டி.
சிவகாமி கம்பிட்டர் ஜோசியம் said…
கிளி பிய் சொன்னாலும் சொல்லும்
என் சிவகாமி பொய் சொல்ல மாட்டா!

சிவகாமி சொன்னா சொன்னதுதான்!
சேத்துப்பட்டி குரூப் said…
நங்க வேணா இங்க வாசிக்கிறமே!
சிங்கமுத்து said…
//இந்த காமெடியில் வரும் சிங்கமுத்துவை உங்களுக்கு பிடிக்குமா ? நான் மிகவும் ரசிப்பவர்களில் ஒருவர்...!!! //

எம்மேல இம்புட்டு பாசம் வெச்சிருக்கியேப்பா ரவி.

ரொம்ப பாசக்கார பயலா இருப்பே போலருக்கே!
'ஹை கிளி'ன்னு ஆசையா ஓடி வந்தேன்.

சோசியமா? எனக்கு இன்னிக்கு நேரம் சரியில்லை:-))))
//இந்த காமெடியில் வரும் சிங்கமுத்துவை உங்களுக்கு பிடிக்குமா ? நான் மிகவும் ரசிப்பவர்களில் ஒருவர்..//

எல்லா காமெடியையும் ரசிப்பேன். ஆனா பேர்தான் ஞாகத்தில் வச்சுக்கமுடியல.
சிங்கமுத்துவை தெரியாதா ?

தலை கைப்புவிடம் யோக்கியனுக்கு இருட்ல என்ன வேலை என்ற அபாரமான தத்துவத்தை முன்வைத்தவர் வின்னர் படத்தில்...

சிவகாமி கம்பியூட்டர் சோசியத்தை வைத்துக்கொண்டு விவேக்குக்கு தண்ணியில் கண்டம் என்று சாபம் விட்டவர்...

வேற எதனா தெரிஞ்சா சொல்லுங்கப்பா அடுத்தவங்க...
நன்றி துளசி டீச்சர்...கிளி மெய்யாலுமே பாவந்தான் இல்லையா :)
Anonymous said…
Shall we Start here now?
சை.கோ.(சைதை கோதண்டம்) said…
அய்யோ..

இனிமே என்பேரு நெருப்பு நீலமேகம் இல்லை...சுங்குடி சுப்புரமணினு மத்திக்கிடறேன்...
//நீ கொடுக்குற அஞ்சு ரூபாய்க்காக உன்னிடம் கெஞ்சிக்கிட்டு நிக்குறான் தன்னோட வாழ்க்கையை கணிக்க முடியாம, அவன் பொழப்பு ஒடனுமுன்னு...அவன் எப்படிடா உன் வாழ்க்கை விவரத்தை கணிக்க முடியும் ? ///

நச்சுனு இருக்குது கேள்வி
நன்றி அனுசுயா.
Anonymous said…
தலை, நீ செய்யுற கொடுமை தாங்காம தினமலர்ல உன்னோட பதிவு பற்றி எழுதிட்டாங்க. இன்று.
சேந்தம்பட்டியார் said…
ஆட்டத்தை ஆரம்பிக்கலாமா???
கவுண்டபெல் said…
டேய் நாதரஸ்,ஒரு ரூபாய்க்கு எத்தனை பழம் தந்தான்??
அன்னக்கிளி said…
ஒரு கிளி உருகுது,உரிமையில் பழகுது ஓ மைனா மைனா....

குறும்புகள் தொடரது...அரும்புகள் மலருது...ஓ மைனா மைனா...
வேணாம் விட்டுருங்க செந்தழல..

:)))

//ஒரு கிளி உருகுது,உரிமையில் பழகுது ஓ மைனா மைனா....

குறும்புகள் தொடரது...அரும்புகள் மலருது...ஓ மைனா மைனா...//
இது ஒரு அருமையான பாட்டு.
நான் இன்றைக்கு இத்தோட கிளம்புறேன்..நெக்ஸ்டு மீட் பன்றேன்...!!!
"அன்புள்ள அனானி" said…
இங்கு அனுமதி உண்டா?
silent said…
வணக்கம் ரவி.. சுகமா? உடல் நிலை குறை ஒன்றும் இல்லைத்தானே...

என்ன நிலாப் பக்கம் காணவில்லை... உங்கள் கதை ஒன்று கத்துக் கிடக்கிறது அங்கே வழிமேல் விழி வைத்து.... வந்து விட்டுப் போங்கள்....

சைலன்ட்
டைகர் வரதாச்சாரி said…
கிளிக்கு ரெக்கை மொளச்சிடுத்து...
பறந்துடுத்து....

"பாலூட்டி வளர்த்த கிளி,பழம் கொடுத்து பார்த்த கிளி..."
Anonymous said…
ithu super !
dondu(#4800161) said…
"டேய் நாதரஸ்,ஒரு ரூபாய்க்கு எத்தனை பழம் தந்தான்??"

கவுண்டமணி ஐயா, நீங்க தப்பா கேட்டுட்டீங்க. நான் கேக்கறேன் பாருங்க செந்தில் தம்பிகிட்டே.

டோண்டு ராகவன்: ஏம்பா செந்தில் ரூபாய்க்கு ரெண்டு பழம் கொடுத்தானில்லே?
செந்தில்: ஆமாங்க டோண்டு ஐயா
டோண்டு ராகவன்: இன்னொண்ணு இங்கே இருக்கு. ஒண்ணு எங்கேப்பா?
செந்தில்: அதைத் தின்னுட்டேங்க

கவுண்டமணி அடேய் என்று கத்திக் கொண்டே செந்திலை துரத்திச் செல்கிறார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Popular Posts