இனியெல்லாம் இலவசமே !!!

சமத்துவபுரத்தில் இலவசமாக கிடைத்த என்னுடைய வீட்டில் இலவசமாக கிடைக்கும் டி.வி சேனல்களில் ஒன்றை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தேன். இலவச அரிசிச்சோறை மனைவி பொங்கிப்போட்டாள்..சாப்பிட்டுவிட்டு சென்ற ஆண்டு பொங்கலுக்கு கொடுத்த இலவச வேட்டியை அப்படியே விரித்து, இலவச சேலையை தலைக்கு முட்டு கொடுத்து சாய்ந்தேன்..பக்கத்தில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மகனின் இலவச சைக்கிள்..குடும்பக்கட்டுப்பாடு இலவசம் என்று சொன்னபோதே செய்திருக்கலாம்..கொஞ்சம் அசட்டையாக இருந்ததில் நாலு பசங்க...சின்ன பெருமூச்சோடு அப்படியே உறங்கிப்போனேன்..

கொஞ்சநேரத்தில் தடதடவென யாரோ ஓடிவரும் சத்தம்..உலுக்கு உலுக்கென்று உலுக்கி எழுப்புறான் சின்ன மகன்...அப்பா அப்பா ஏந்திரு ஏந்திரு என்கிறான்..என்னடாவென எழுந்து பார்த்தால்...வா...வெளியே என்று கையை பிடிச்சு தெருவுக்கு இழுக்கிறான்...இருடா வர்ரேன் அப்படி என்னடா என்று சொல்லிக்கொண்டே வெளியே வந்தால்...வாசலில் புதிய டொயட்டோ இன்னோவா நிக்குது..டேய் யாருடைய வண்டி இது என்றால்...மூத்தவன் வண்டியை சுற்றி வந்து சொல்கிறான்..இது நம்ம வண்டிதாம்பா..நம்ம இலவச டீவியில் வந்த "காசுமேல" புரோகிராமில வந்த ஒரு கேள்விக்கு என்னோட செல்பேசியில் இருந்து சரியான விடையோட ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன்..என் செல்பேசியில் தான் குறுஞ்செய்தி வசதி இலவசமாச்சே...அதில் பரிசு விழுந்து இப்போத்தான் டீவிக்காரன் வண்டியை வீட்டுல கொண்டுவந்து கொடுத்திட்டு போறான்...

ஆகா...இதுவல்லவோ டீவி நிகழ்ச்சி என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது அடுத்தமகன் புதிய எமஹா எண்டைஸர் வண்டியில் வந்து இறங்குறான்..டேய் உனக்கேதுடா வண்டி என்று கேட்டதற்க்கு, எங்க கல்லூரியில் வகுப்புக்கு காலையில் சீக்கிரமாக வரும் மாணவருக்கு ஒரு டூ வீலர் இலவசம் என்று போட்டி வைத்திருந்தாங்களாம்பா..நான் நேற்று கல்லூரிக்கு போகலை...இன்னைக்கு காலையில் போனவுடன் பிரின்ஸிபால் காலையில் நின்று வரவேற்றார்...நான் போட்டியிலே ஜெயிச்சிட்டேன் என்று இந்த வண்டியை கொடுத்திட்டார் என்றான்...

அய்யோ...இப்படிகூடவா நம்ம மகனுக்கு அதிஷ்டம் அடிக்கனும்..என்று நினைத்துக்கொண்டிருந்தபோது கடைக்குட்டி ஒரு மேங்கோ ஸ்லைஸ் கொண்டுவந்து கொடுத்தான்..ஏதுடா இது என்றதுக்கு...அப்பா, மளிகைக்கடையில் இன்னைக்கு காலையில் பொருள் வாங்குறவங்களுக்கு எல்லாம் ஒரு மேங்கோ ஸ்லைஸ் கூல்டிரிங் இலவசமா கொடுக்கிறார் கடை ஓனர் என்றான்...அட...இவனுமா...

ஆச்சர்யத்தோடு பார்த்துக்கொண்டிருந்த எனக்கு அதை விட மாபெரும் இன்ப அதிர்ச்சி...மனைவி ஒரு இளநீரோடு வெளியே வந்து, இந்தாங்க, ஸ்லைஸ் வேண்டாம், இளநீர் குடிங்க என்றாள்...இளநீர் ஏது...என்றதுக்கு என்னங்க அதுக்குள்ள மறந்துட்டீங்க...நேற்றுதானே அரசாங்கம் நிலமில்லாதவங்களுக்கு 25 ஏக்கர் கொடுக்கிறதா செய்தி வெளியிட்டிருந்தாங்க...காலையில் கிராம நிர்வாக அதிகாரி எல்லாருடைய வீட்டுக்கும் வந்து வீட்டு பத்திரத்தை கொடுத்திட்டு போயிட்டார்...நீங்க தூங்கிக்கிட்டிருந்ததால நானே வாங்கிட்டேன்...கையெழுத்து போட உங்களை சமுதாய கூடத்துக்கு சாயந்திரம் வரச்சொன்னார்...நம்ம நிலம் மாரியம்மன் கோவில்ல இருந்து மெயின் ரோடு வரைக்குங்க..எத்தனை தென்னை மரம்..காலையிலேயே பெரியமகன் போய் இளநீர் வெட்டிக்கிட்டு வந்தான்...என்றது எனக்கு தலை சுற்ற ஆரம்பித்தது...

இலவசம் இலவசம் இலவசம்...எல்லாமே இலவசமா...இனியெல்லாம் இலவசமா...ஆகா...இலவசம்...

ஏங்க...ஏங்க..என்னாச்சு உங்களுக்கு...ஏந்திருங்க...ஏங்க...என்ன ஏதோ தூக்கத்துல பொலம்பிக்கிட்டு இருக்கீங்க...ஏதாவது வேலைக்கு போனாதானே...சாப்புட்டு தூங்கவேண்டியது...ஏங்க...ஏந்திருங்க..

ஒரு சொம்பு தண்ணீரை புளிச் என்று முகத்தில் அடித்தாள்.....போன பொங்கலுக்கு வாங்கிய இலவச வேட்டி நனைந்தது...

Comments

தேன்கூடு போட்டிக்கு.
சூப்பர் தலை.... கலக்கிட்டீங்க.... தூள்....

வெற்றிபெற வாழ்த்துக்கள்....
ஷைலஜா said…
ஹீரோ தூங்கப் போவதா சொன்னதுமே பின்னால வர்தெல்லாம் கனவா இருக்கும்னு யூகிச்சாலும் கதைய கொண்டுபோன விதத்துல அசத்திட்டீங்க ரவி! பரிசுக்குத் தேர்வாக எனது விலைமதிப்பான பாராட்டுகள்!
ஷைலஜா
வாங்க ஷைலஜா..நீங்கல்லாம் ஆதிகாலத்துல இருந்து எழுதறீங்க..நாங்க எல்லாம் ஏதோ ஒப்பேத்துறோம்..:))) நன்றி...
C.M.HANIFF said…
Vetri pera vaashthukkal, nalla kathai ;)
ரவி, சூப்பரா வந்துருக்கு. ஆனா... இந்த இலவச டிவி, இலவசப் பசுமாடு, இலவச மளிகைசாமான் எல்லாம்
விட்டுப்போச்சு போல இருக்கேப்பா:-))))
வாங்க டீச்சர்...கொஞ்சம் யோசிச்சு எழுதியிருந்தா சேர்த்திருக்கலாம் இல்லையா...நான் சும்மா அப்படியே கைக்கு வந்தபடி டைப் செய்யுறது...5 நிமிடத்தில் முடிச்சிட்டேன் இந்த கதை..:))
//ஒரு சொம்பு தண்ணீரை //
தண்ணியை இலவசமா கொடுக்காம விட்டுட்டாங்களே!! :((

போட்டிக்கு வாழ்த்துக்கள் :))
Pot"tea" kadai said…
அடங்கொக்காமக்கா...இன்னும் இந்த போட்டி முடியலையா?

கதை நல்லா இருந்தது. வெற்றி பெற வாழ்த்துக்கள் :-D

அதுசரி திவ்யா அக்கா மேட்டெர் அப்படியே நிக்குதே? அதையும் கொஞ்சம் கவனிக்கரது...
நன்றி பொட்டீ'கடையாரே..
மனசு... said…
அப்போ இலவசம்னு சொல்றதெல்லாம் வெறும் கனவுதானு சொல்றீங்க... எல்லாரும் புரிஞ்சுக்கோங்கப்பா.... சும்மா வெட்டியா கனவு கானாதீங்க...

அன்புடன்,
மனசு...
போனமுறை லக்கி, இந்த முறை நீங்களா??

கல்லக்குங்க, போட்டிக்கு வாழ்த்துகள்
நன்றி முத்துக்குமரன்....!!!!
அருமையான பதிவு, சொன்ன விதம் சிறப்பாக இருந்தது.
தொடருங்கள்................>
நன்றி ஒண்டிப்புலி....இதென்ன பேரு...
Anonymous said…
4 பசங்கள்ல ஒன்னாவது பொண்னுன்னு சொல்லி இலவசக் கல்யாணக் கனவும் கண்டிருக்கலாம். எவ்ளோ செலவு மிச்சம். பெரிதினும் பெரிது கேள்!! :))
Anonymous said…
Its a Nice story. wishes.
எல்லாமே கனவு தானா???

ம்ஹும்...

சரி சரி போட்டியில வெற்றி பெறும் கனவு கண்டிப்பாக பலிக்கும் :))
கனவுகளில் எனக்கு நம்பிக்கை !!! (இருக்கா இல்லையா சொல்லித்தொலை)

ஆனால் உங்க சுரிதார் + தாவனி = கவிதை.

கவிதை பிரமாதம்..காலையில் இருந்து எல்லாரிடமும் சொல்லிக்கொண்டிருக்கேன்...
......நன்றி ஒண்டிப்புலி....இதென்ன பேரு.....
------------

அவரு எங்க போனாலும் ஒண்டியாக( தனியாக) போவாரு. அதான் இந்த பேரு.
நன்றி கார்மேகராஜா..
கலக்கல்...


வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!
Divya said…
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள், கதை அருமையாக இருக்கிறது.
நல்லா இருக்கு ரவி! வெற்றி பெற வாழ்த்துக்கள்!!
மங்கை said…
ரவி...

5 நிமிசத்துல முடிச்சிடீங்களா?.. இப்படி ஒரு ஆள் இருக்கிறத தமிழ்நாடு கவணிக்காம இருக்கே

நிஜமாவே வெற்றி பெற வாழ்த்துக்கள்

மங்கை
பரவாயில்லை கண்ட கனவில் கட்டியிருந்த வேட்டியாவது மிஞ்சியது!
மிஸ்டர் ரவி உங்கள் கட்டுரையைப் படித்தவுடன் முன்பு கவிஞன் ஒருவன் எழுதிய இர்ண்டு வரிக்கவிதைதான் எனக்கு நினைவிற்கு வருகிறது!

"இலவச வேட்டி வாங்கப் போனேன்
இடுப்பு வேட்டியைக் காணவில்லை!"
பரவாயில்லை கண்ட கனவில் கட்டியிருந்த வேட்டியாவது மிஞ்சியது!
மிஸ்டர் ரவி உங்கள் கட்டுரையைப் படித்தவுடன் முன்பு கவிஞன் ஒருவன் எழுதிய இர்ண்டு வரிக்கவிதைதான் எனக்கு நினைவிற்கு வருகிறது!

"இலவச வேட்டி வாங்கப் போனேன்
இடுப்பு வேட்டியைக் காணவில்லை!"
செந்தயலு
கட்சிலா எல்லாமே கனா தான்னு கலாச்சிட்டியேப்பா
எல்லா இலவசத்தையும் ஓரே இடத்தில் பார்க்க முடிந்தது. :) வாழ்த்துக்கள்.
//குடும்பக்கட்டுப்பாடு இலவசம் என்று சொன்னபோதே செய்திருக்கலாம்..//

யோவ்...!
சரியான லொள்ளய்யா நீர் !
போட்டியில் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள் !
யாரோ என்னை இலவசமாக சிங்கைக்கு வண்டியில் ஏத்தி அனுப்பிட்டாங்க.இனிமேல் தான் எல்லாம் தேட வேண்டும்- இலவசமாக ஏதாவது கிடைக்குமா என்று?
நல்லா இருக்குங்க கதை!
வாழ்த்துக்கள்!
வாத்தியார் அவர்களே...நன்றி...!!!
நன்றி நாமக்கல் சிபி.
பின்னூட்ட நாயகர் கோவி.கண்ணன் மற்றும் வடுவூர் குமார்...நன்றி...!!
thunder nambi said…
தல எப்டி இருக்கீங்க. இந்த முறை நமது பதிவிற்கு சற்று வந்துட்டு போங்க விஷயம் இருக்கு.
Anonymous said…
its good da. i m voting for u.

Popular Posts