காக்டெயில் !!!!!!!!!!!!!!

முன்னோட்டம் : நாளைக்கு பதிவு எதுவுமில்லை....!!!

காக்கா உக்கார பனம்பழம் விழுந்த கதை தெரியுமா யாருக்காச்சும் ? தெரியும்னே வெச்சுக்கறேன்...யாராவது காக்கா பனை மரத்துல உக்கார்ந்து பார்த்திருக்கீங்களா ? எனக்கு தெரிஞ்சு எந்த காக்காயும் பனைமரத்துல உக்காருவதில்ல...ஏன் இதை இங்க சொல்றேன்னு பாக்குறீங்களா ? இது என்னோட பதிவு..நான் இப்படித்தான் சம்பந்தா சம்பந்தம் இல்லாம என்னைப்பத்தி எழுதுவேன்...

சரி விஷயத்துக்கு வருவோம்...(வந்துட்டான்யா வந்துட்டான்...!!!!)
சமீபத்தில் பார்த்த படம் கல்லூரி...பார்த்த இடம் திருட்டு டி.வி.டி ( திருட்டு வி.சி.டி என்று எழுதுவதை தினத்தந்தி மாற்றிக்கொள்ளவேண்டும்)...
கடந்த ஒருமாதமாக நான் அலுவலகம் முடிந்து வீட்டுக்கு செல்லும் நேரம் மணி 12க்கு குறையாமல் இருந்துவருகிறது...(இந்த லட்சணத்துல கல்யாணம் வேற...அது வேற கதை அதை விடுங்க)...சனி, ஞாயிற்றுக்கிழமையும் அலுவலகம் வந்து ஆணி புடுங்கியதன் விளைவு, ஒரு படத்தையும் பார்க்க முடியல...

அவ்வப்போது வலைப்பூக்களை எட்டிப்பார்த்து ரெக்ரியேஷன் ஆகிக்கறதொட சரி...இருந்தாலும் வீட்டில் மனைவி வாங்கி வைத்துள்ள டி.வி.டிக்களை அவ்வப்போது (பார்ஸ்ட் பார்வர்ட் செய்து) பார்த்துவருகிறேன்...
அப்படி நேற்று பார்த்த படம் தான் கல்லூரி...தமிழ்சினிமாவை உலகத்தரத்துக்கு கொண்டு போகிறேன் என்றெல்லாம் பாலாஜி சக்திவேல் படம் எடுக்கவில்லை என்று தோன்றுகிறது....

மக்களின் உணர்வுகளோடு விளையாடி காசு பார்க்கும் 'சீப்பான' மணி ரத்தினம் உத்திதான் என்பது தெளிவாக தெரிகிறது...அது என்ன மணி ரத்தினம் உத்தி ? மணி தேற்றுவது தான் அவன் உத்தி...மும்பை கலவரத்தை வைத்து காசு பார்த்த பம்பாய், இலங்கை பிரச்சினையை தொட்டு ரூவா தேத்திய (அதிகமா தேத்தமுடியல பாவம்) கண்னத்தில் முத்தமிட்டால் (டேய் - சமூக உணர்ச்சியோட படம் எடுக்க உனக்கெதுகுடா சிம்ரன் ? ஏன் கொல்லங்குடி கருப்பாயிய வெச்சு எடுக்கறது ? ), காஷ்மீர், முஸ்லீம், தீவிரவாதம் என்று துட்டு தேற்றிய ரோஜா என்று எடுத்தால் மணி ரத்த்தினத்தினத்தின் உத்தி வெள்ளிடை மலைபோல் விளங்கும்...(உன் பொண்டாட்டிக்கு மொதல்ல நல்லதா நாலு ட்ரஸ் வாங்கிக்கொடுங்க மணி.....செயா டிவியில ட்ரான்ஸ்ப்ரண்டுல வருது கிழவி...)

புதிய கிராமத்து முகங்கள், குடும்ப பிரச்சினைகள், அட்டு பிகர் தோழி போன்ற பல டெக்குனிக்கு சமாச்சாரங்களை படத்தில் வைத்துள்ள பாலாஜி சக்திவேல், படத்தை பார்ப்பவர்களின் கல்லூரிக்காலத்தை நினைவுபடுத்துவதில் வெற்றிபெற்றுவிடுகிறார் என்றுதான் சொல்லவேண்டும்...

ஸ்கூட்டியில் கல்லூரி வரும் ஹீரோயினின் இடது பக்கத்தில் இருந்த யூக்கலிப்டஸ் மரங்கள் ஒன்றே போதும்...என்னுடைய கல்லூரிக்காலத்துக்கு தரதரவென என்னை இழுத்துச்செல்ல...அதெல்லாம் எப்படி சொல்றது.....ஹும்...அதெல்லாம் ஒரு காலம்.....!!!!

******************************************
வலைப்பதிவுலகில் புதிய பதிவர்கள் பலர் நன்றாக எழுதிவருகிறார்கள்...ஆனால் வரும்போதே மொக்கையே தாரக மந்திரம் என்று சாரி சாரியாக கிளம்பி வருவது ஏற்கனவே உள்ள சக மொக்கை பதிவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு உள்ளது...இருந்தாலும் வலைப்பதிவுலகின் நீங்காத பண்பான கூட சேர்ந்து கும்மி அடித்தல், பின்னூட்ட மொய், ஒரு மொக்கையை வைத்து இன்னொரு மொக்கை என்று சிறப்பாகவே செயல்படுகிறார்கள்...அனைத்து மொக்கை பதிவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்...!!!!!
*********************************************
கோவை.ரவி பதிவை யாரும் க்ளிக் செய்யல்லியே என்று அவர் வருத்தத்தில் உள்ளார்...அதனால் அவருடைய பதிவை வைத்து ஒரு மொக்கை போட்டு, அந்த பதிவை பேபஸ் ஆக்குமாறு அமீரக கும்மிகளான அபி.அப்பா, குசும்பன், தம்பி ஆகியோரை கேட்டுக்கொள்கிறேன்...
*********************************************
எங்கள் கல்லூரி காலத்தில் நெஞ்சை நக்குதல் என்று ஒரு டெர்ம் சொல்வோம்...அதாவது (ஜஸ்ட் உதாரணம் தான் - கோச்சுக்கவாணாம்) அபி.அப்பா இப்போது "வலைப்பதிவர்களே, நீங்க எல்லாரும் அண்ணன் தம்பி மாதிரி, உங்கவீட்டு கல்யாணத்துக்கு நான் வந்துதான் தட்டு மாத்துவேன் என்பது போல வாசகங்களை பார்த்தால் "நல்லா நெஞ்சை நக்குறாங்கப்பா" என்ற உணர்வு வருவதை தடுக்க இயலவில்லை...!!!
*********************************************
நச்சென்று ஒரு கதை எழுதலாம் என்று நினைத்தேன், ஒரு தீம் கூட யோசித்தேன்...அப்புறம் வெட்டிப்பயலோட கதையை படித்தேன்...பிறகு தான் யோசித்தேன்...இந்த கதைக்கு அப்புறம் நாம எந்த கருமத்தை எழுதினாலும் பரிசு இந்த கதைக்குத்தான் என்று எழுதுற முடிவை கைவிட்டுவிட்டேன்...அருட்பெருங்கோவோட சென்னைக்காதல் - திருச்சிக்காதல் என்ற கதை கூட சூப்பர்...தலைப்பு தான் இன்னும் கொஞ்சம் "கேட்சி" யா வெச்சிருக்கலாம்...
*********************************************
தமிழ்மணி - அசுரன் - ஓசை செல்லா என்ற பதிவுகளை (தலைப்பை) பார்த்தாலே அலர்ஜியா இருக்கு....ஏன் இந்த தமிழ்மணிக்கு இந்த கொலைவெறி... ? ( ஆமா, யாரு தமிழ்மணி ? )
*******************************************
தமிழரங்கம், சிந்திக்க உண்மைகள் இரண்டு பதிவுகளும் படிக்க நல்லா இருக்கு...நெறைய சரக்கு உள்ள பதிவுகள்....அதுக்காக நீங்க அதை படிங்கன்னு சொல்லவர்ல...கலாகாம் மத் கர்...குச்.குச்.ஹோத்தா.ஹே...அப்படீன்னா சிங்கம் சிங்கிளாத்தான் வரும்னு அர்த்தம்...(நன்றி : மோகன்ந்தாஸ்) ( இதுக்கு பி.கே.எஸ் பின்னூட்டம் போடுவாரா ?)
*********************************************
இதை எல்லாம் தனித்தனி பதிவா போட்டு கும்மி அடிக்க நேரம் இல்லாததால் காக்டெயியுலுறேன்...காக்காவுக்கு டெயில் கருப்பு...டிசம்பருக்கு மொத்தம் பதிமூனு நாள் லீவு போட்டிருக்கேன்...என்ன செய்யறதுன்னு தங்கமணி கிட்ட தான் கேக்கனும்...வர்ட்டா...............
***********************************************

Comments

ரவி!
நலமா இருக்கிறீங்களா??
OSAI Chella said…
சே..எப்படிப்பா... உன்னால ... மட்டும்.. இப்படி... (நெஞ்சு அடைக்குது.. கண்களில் தண்ணீர்.. ச்சே வெண்ணீர்.. ஆனந்த கண்ணீர்...

ஆமா கல்யாணம் ஆனா நண்பர்களை மறந்துடுவாங்கன்னு சொல்வாங்க.. வலையுலக நண்பர்களுக்கும் இது பொருந்துமான்னு நம்ம புலவர் பெருமானார் ஒருங்குறி நாயனார் கிட்ட கேட்டு சொல்லுப்பா தம்பி!
//
காக்காவுக்கு டெயில் கருப்பு...
//
சூப்பர்.

//
மொக்கையே தாரக மந்திரம் என்று சாரி சாரியாக கிளம்பி வருவது ஏற்கனவே உள்ள சக மொக்கை பதிவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு உள்ளது...
//
என்ன பன்றது எல்லாரும் அதுல எக்ஸ்பர்ட்!!
வாங்க செல்லா !!!!!!!!! தோழர்கள மறப்பேனா ? அப்புறம் பெங்களூர் பக்கம் கொஞ்சம் ஸ்டிக்கர் அனுப்பறது ? ( வாட்டாள் அவர்களுக்கு தெரியாம ஒட்டனும்)
சிவா...வாங்க...எப்படிப்போகுது ? சுகம்தானே ?
தலைவா,
எப்டி இருக்கீங்க?
நீங்க நூறு வருசம் நலமோட இருந்து எல்லாரையும் சிரிக்க வைக்கனும்

வாழ்த்துக்கள்!!!

சினேகபூர்வம்
முபாரக்
அது யாரு தங்கமணி?
//காக்கா உக்கார பனம்பழம் விழுந்த கதை தெரியுமா யாருக்காச்சும் ? தெரியும்னே வெச்சுக்கறேன்...யாராவது காக்கா பனை மரத்துல உக்கார்ந்து பார்த்திருக்கீங்களா ? எனக்கு தெரிஞ்சு எந்த காக்காயும் பனைமரத்துல உக்காருவதில்ல...//
காக்கையின் கால் அமைப்பு பனைமரத்தின் எந்த பகுதியும் உக்கார ஏத்ததாக இல்லை மேலும் பனம்ரத்தின் எந்த பாகங்களும் நிலையாக இல்லாத்தால் கூடுகட்ட கூட காகம் பனை மரத்தினை தேர்வு செய்வதில்லை. அவ்வளவு உயரத்தில் உக்கார்ந்து அதர்க்கு பயன் ஏதும் அந்த இடத்தில் இல்லை.
theevu said…
//( வாட்டாள் அவர்களுக்கு தெரியாம ஒட்டனும்)//

:)

Popular Posts