மொக்கை விருதுகள் 2007

செந்தழல் ரவியுடன் வழக்கமாக சுண்டக்கஞ்சி அருந்தும் சுகுணா, வரவணை, லக்கி ஆகியோருடன் புதிய நன்பராக முட்டம் சின்னப்பதாஸ் மற்றும் ஸ்டாஸி ஏழுமலை....மெரினா பீச்சில் சுண்டல் சாப்பிடுவதாக முடிவு செய்யப்படுகிறது...

எல்லாருக்கும் போன் பண்ணிச் சொல்லிய பிறகும் ஆறு மணிக்கு வரவேண்டிய மொக்கைக்கு ஏழுமலை மட்டுமே வந்திருக்க, லைட்டாக பேச்சுக்கொடுக்கிறேன்...

செந்தழல்: வாங்க ஏழு...ஏது இந்தப்பக்கம் ? சேலத்துல சேவை செய்யறதா கேள்விப்பட்டேனே ? என்ன முதியோர் இல்லம் ஏதாவது ஆரம்பிச்சிருக்கீங்களா ?

ஏழுமலை: ம்ஹும்...அனில் சேமியா டிஸ்ட்ரிபூட்டரா இருக்கேன்...முதியோர் இல்லம் நடத்துறேன்னு சொன்னவன் மனிதனா மிருகமா ?
செந்தழல்: என்ன சார்...ஏழுமலைன்னு சாமி பேர் வெச்சிருக்கீங்க...மிருகம் பட டைரக்டர் 'சாமி' மாதிரி அடிக்கடி சூடாகறீங்களே ? நீங்க டிஸ்டிபூட்டர் இல்ல...பொறுக்கி...

ஏழுமலை: டேய்...நீ கொழைந்தை...ஏழாவது படிக்கும்போது ஈமெயில் அணுப்பினவன் நானு...என்னையா பொறுக்கிங்கறே ?

செந்தழல்: சார்...ஏன் சார் டென்ஷனாகிறீங்க...ச்ச்ச்சும்மா...ஒரு எதுகை மோனைக்கு சார்...உங்களுக்கு இப்பவே நாப்பது வயசு இருக்கும்...நீங்க ஏழாவது படிக்கும்போது ஈமெயிலே வரலையே ? ஏதாவது "டெக்னிக்கல் பால்ட்" மேட்டர்ல 'குசும்பா' டூப்படிக்கறீங்களோ ??

ஏழுமலை: டாடாடாய்....என்னை மிருகமாக்கிராத...

செந்தழல்: நீங்க இப்பவே அப்படித்தான் இருக்கீங்க :)))))) (ஸ்மைலி) - சரி வாங்க சார் மீதி பேரை தேடுவோம்...

ஏழுமலை : இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல...ஒட்டுற வரைக்கும் ஓட்டுங்க...அப்புறம் பொது விஷயம் பேசுங்க...தலைவலிடா சாமியோவ்...

(டங்கென எண்ட்ரியாகிறார் லக்கி...!!!)

லக்கி : நான் டெல்லிக்கு போனேனா...அங்க எனக்கு ஒரு விருது கொடுத்தாங்க...நான் வாங்காம வந்துட்டேன்...

செந்தழல் : என்ன வந்ததும் வராததுமா விருது பேருந்துன்னுக்கிட்டு...என்ன மேட்டர்...தலையும் புரியல வாலும் புரியல...

லக்கி : என்ன வவ்வால் புரியலையா ?

கொய்யனார்: இதுக்கு நான் பின்னவீனத்துவ பாணியில ஒரு கதை எழுதட்டுமா ?

செந்தழல்: யோவ் யாருய்யா நீ ? சம்மன் இல்லாம ஆஜராகுற ?

கொய்யனார் : சுண்டல் வாங்குறீங்களா சார் ?

செந்தழல் : அதெல்லாம் ஒன்னும் வேனாம்...ஏழுமலை சார்...உங்களுக்கு சுண்டல் ?

ஏழுமலை: இல்ல வேணாம்..இப்பத்தான் குக்கர் நிறைய இடியாப்பம் சாப்பிட்டுட்டு வந்தேன்...

வரவணை: எச்சக்கையால காக்கா ஓட்டாதவனுங்க எடது கையால ஏரோப்பிளேனா ஓட்டப்போறானுங்க ?

செந்தழல் : வரவணை, எப்ப வந்தீங்க ? நாங்க கும்பல(a) உக்காந்திருக்கோம், பின்னால என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க ?

வரவணை : என்னுடைய சமையல் கட்டு பதிவுக்கு போட்டோ எடுத்துக்கிட்டிருக்கேன்...தூய்மையான இடமே இல்ல...

அதுக்கு தோதா நீங்க பீச்சுக்கு கூப்டீங்க...வந்துட்டேன்...பொட்டிக்கடை கூட பாண்டிச்சேரில மாஸ் ஹோட்டல்ல தான் இருக்காராம்...நம்ம மொக்கை கூட்டம் முடிஞ்சதும் அப்படியே ஈஸியார் ரோட்ல காரை திருப்பப்போறேன்...

செந்தழல்: என்னது ? இன்னும் பொட்டிக்கடை பாண்டிச்சேரிய உட்டு போவலியா ? பட்டறை ஒம்போதாந்தேதி...பதினெட்டாந்தேதி வரைக்கும் ரூம் போட்டு குடிக்குறானா ?

சுகுணா திவாகர்: அவன் ரூம் போட்டு குடிக்கறது இருக்கட்டும்...என்னை எதுக்கு போன் போட்டு வரச்சொன்னே ? ஒரு மாசமா போனையும் கானோம் ஆளையும் கானோம்...எங்க போன...

செந்தழல் : வாங்க சுகுணா, வந்துட்டீங்களா....எல்லாரும் வரட்டும் மேட்டர சொல்லலாம்னு பார்த்தேன்...

லக்கி: இன்னும் யார் வரனும் ?

செந்தழல்: நாப்பதாயிரம் ரூபா கேமரா வெச்சிருக்க சின்னப்பதாஸ் வரனும்...அவர் இப்பத்தான் கடல் அலையை அலை மேல நின்னு ஜூம்ல போட்டோ புடிக்க போயிருக்கார்...

ஏழுமலை: யோவ்...உன்னை எல்லாம் மதிச்சு இவ்ளோ தூரம் வந்ததே பெரிய விஷயம்....இப்ப என்ன விஷயம்னு ஒழுங்கு மரியாதையா சொல்லல...கடிச்சு வெச்சுருவேன்...

செந்தழல்: இன்னும் அஞ்சு நிமிசம் பார்க்கலாமே ப்ளீஸ்...

லக்கி: சலோ சலோ, டீக்கே...

வரவணை : பரவால்ல சொல்லு ரவி...

செந்தழல் : ஆக்சுவலி மொக்கை அவார்ட்ஸ் 2007 அப்படீன்னு தரலாம்னு இருக்கேன்...அதுக்கு நடுவர்களா நீங்க எல்லாரும் இருக்கனும்...

எல்லாரும் கொலைவெறியுடன் ரவியை பார்க்க...!!!!! ( தொடரும் )

பி.கு : டேய் இந்தமாதிரி எத்தனை முறை தொடரும் போட்டு ஏமாத்துவ...எப்பத்தான் முழுசா எழுதப்போற...என்று கேட்பவர்கள் மன்னிக்க...ஆணித்தொல்லை...!!!

Comments

:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
Back to the form! :-))))))))))
OSAI Chella said…
ha ha.. thambi illama thamizhmanamee dull adichidichu!
அதெல்லாம் சரிடா பங்காளி ! எப்போ எங்க வீட்டுக்கு விருந்துக்கு வரப்போற....
:))

தல உண்மையில் ஆணித்தொல்லை தானா!??

(இதில் உள்குத்து எதுவும் இல்லை)
ILA(a)இளா said…
கொஞ்சமில்லை. நெறையவே இடத்தில "ஒவரோ ஓவரு".
Vaaaa Raaassaaa Senshi...how are you...............
vanga chellaa...where is the car tips ?

- do i need to take a license ?
Anonymous said…
ஏப்பா, ஏதோ ஆசப்பட்ட பொண்ணையே கல்லாணம் கட்டிகிட்டேன்னு கேள்வி பட்டேனே...நெசமா?
Pot"tea" kadai said…
//என்னது ? இன்னும் பொட்டிக்கடை பாண்டிச்சேரிய உட்டு போவலியா ? பட்டறை ஒம்போதாந்தேதி...பதினெட்டாந்தேதி வரைக்கும் ரூம் போட்டு குடிக்குறானா ?//

மிஸ்டேக் யுவர் ஆனர்...18ம் தேதி மதியம் சண்டிகர் புளு ஐஸ்சிலும் இரவு டில்லி பிக்காடிலியிலும் தான் மொய் கட்டினேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் இவ்வாரம் சனிக்கிழமை இரவு பெங்களூரூ பர்ப்புள் ஹேஸிலும் குடிப்பேன்...ஞாயிற்றுக்கிழமை "ஹிண்ட்"டிலும் குடிக்கிறேன்.

போதுமாஆஆஆஆஆஆஆஆ

Popular Posts