காக்கா டெயில் 2 !!!!!!!!!!!!!!!!!

காக்டெயில் ரெண்டு !!!!!!!!!!!!!!!!

நான் ஒரு பொய்யன்...! ( ஏன் அப்படீங்கறதை பதிவு கடைசியில பாருங்க)
மற்ற திரட்டிகள் பற்றி...தமிழ்வெளி நல்லாருக்கு.....டிஸைன் ஆப்ஷன்ஸ், பிரபலமானவர்களின் பேட்டிகள்...குட்...கீப் கோயிங்... தமிழ்மணம் மற்றும் தேன்கூட்டில் இருக்க நல்ல ஆப்ஷன்ஸ் எல்லாம் எடுத்து செய்திருப்பது நல்லா இருக்கு...

தமிழ்ப்பதிவுகள் கூட அருமை...பதிவுகள் எல்லாம் படிக்கனும்னு நினைக்கிறவங்களுக்கு (தனி வெப் பேஜ் ஓப்பன் செய்யாமலேயே - எடுத்து காட்டுவது அருமை...) ஆனா வெறும் பத்து பதிவுகள் மட்டும் காட்டாம இன்னும் நிறைய காட்டலாம்...ஆனா பதிவு மட்டுமில்லாம பின்னூட்டமும் காட்டினா இன்னும் சூப்பரா இருக்கும்...(டெக்னிக்கலா முடியுமான்னு கேக்கனும் முகுந்த் கிட்ட)...ஆனா மெதுவான இணைய இணைப்பு மற்றும் சோம்பேறிகளுக்கு தமிழ்ப்பதிவுகள் நல்ல சாய்ஸ்...(நோகாம நோம்பு கும்பிடலாம்)...

தமிழ்பாரதி, திரட்டி அப்படீன்னெல்லாம் வந்திருக்காமே...நான் இன்னும் பார்க்க நேரம் கிடைக்கல
******************************************************************************
பெங்களூரில் ஏன் சூரியன் எப்.எம் இல்லை என்று மொக்கையா கேட்டு பதிவிட்டிருந்தார் ஒருத்தர்...சென்னையில் / தமிழ்நாட்டில் "அனிசிதரு" அப்படீன்னு கன்னடா பாட்டு ஓடுதுங்களா என்று நான் பின்னூட்டம் போட்டிருந்தேன்...அப்படியே தமிழ் எப்.எம் வெச்சிட்டாலும் வாட்டாள் நாகராஜ் அறிக்கை விட்டு வரவேற்ப்பானா என்ன ? பொளந்துறமாட்டான் ? அங்கே அனானி ஒருத்தர் கொடுத்த சூப்பர் ஐடியாப்படி ஓசூர்ல வெக்கலாம்....ஆனா சுச்ச்சீத்துரா ஓசூர்ல வந்து பேசுவாளா ?
********************************************************************************
நதிகள் இணைக்கறது பத்தி ஏன் இன்னும் ரஜினி முச்சு விடலை ? ஒரு கோடி கொடுக்கறேன்னு சொன்னாரே அப்படீன்னு சொல்றாங்க....ரஜினி இதுவரைக்கு தமிழ்நாட்டுக்கு கன்ஸ்ட்ரக்டிவ்வா எதுவும் செய்யலைங்கறது ஒரு ஆதங்கம் இருந்தாலும் ஏன் சினிமாக்காரங்களை நம்பி தமிழக அரசியல் ஓடுதுன்னு வெறுப்பா இருக்கு...ரஜினி நினைச்சா, களத்துல இறங்கி, ரசிகர்களை திரட்டி, தமிழ்நாட்டுல இருக்க நதியை எல்லாம் குழி வெட்டி இணைக்க முடியாதா ?

எங்க ஊர்ல தென்பெண்ணை ஆறு ஓடுது...வருஷத்துல ரெண்டு முறை புல்லா தண்ணி போயி கடல்ல கலக்குது....ஆத்துல மணலை அள்ளி அள்ளி ஆத்தையே கிணறு மாதிரி ஆக்கிட்டானுங்க...கண்ணுக்கெட்டிய தூரத்துல பிரவாகமா ஆத்து தண்ணி ஓடிக்கிட்டிருக்கம்போதே நிலத்தடி நீர் 200 அடி முன்னூறு அடிக்கு போறமாதிரி மணல் கொள்ளையனுங்க செஞ்சுட்டானுங்க...லாரியில மணல் அள்ளுறது இல்லாம கொறைஞ்ச லோன் அமவுண்டுல "ஆப்பே" ஒரு சின்ன யானை விட்டிருக்கானுங்க...

தெருவுக்கு ஒருத்தன் அதை வாங்கி வச்சிக்கிட்டு, எல்லா நதிகளையும் நிர்வாணமாக்கிக்கிட்டு இருக்கானுங்க...அதை முதல்ல கேக்கட்டும் அந்த தாவரம்...அப்புறம் ரசினியோன வாய் சவடால் என்ன ஆச்சின்னு கேக்கலாம்...

**********************************************************************************டாட்டாவோட ஒரு லட்ச ரூபாய் கார் வருதாம்...இந்த ஜனவரி பத்தாம் தேதி டெல்லியில நடக்கற கார் எக்ஸ்ப்ப்போவுல ப்ரோட்டொடைப் வெக்கப்போறாங்களாம்...

டெல்லிப்பதிவர்கள் மங்கை அக்கா, முத்துலச்சுமி அக்கா - போய் ஒரு எட்டு பாருங்க...(ஏற்கனவே பெங்களூர்ல ட்ராபிக் தொல்லை...இதுல இவனுங்க வேற...சரி நாம இனிமே காரை வீட்லே நிறுத்திட்டு சைக்கிள்ள ஆபீஸ் வரவேண்டியது தான்...)....

ஒரு கியர் சைக்கிள் வாங்கலாம்னு இருக்கேன்...சின்ன வயசுல ஆசைப்பட்டேன்...இப்பவாவது வாங்கி மெதிச்சா டயபட்டீஸாவது குறையும்...தேசிகன், மவுல்ஸ் எல்லாம் இந்த ட்ராபிக்ல எப்படி கார் ஓட்டிக்கிட்டு இருக்காங்கன்னு தெரியல...அட்வைஸ் கேக்கனும்...

*********************************************************************
எம்.எஸ்.விக்கு விருது கொடுக்காததுக்கு சர்வேசன்,வவ்வால்,கானாபிரபா,நான் எல்லாரும் டென்ஷனாகி பதிவு போட்டிருந்தோம்...

அவர் காதுக்கு அது கண்டிப்பா எட்டியிருக்கு...ப்ரகாஷ் ராஜ் படவிழாவுக்கோ / பட பூஜைக்கோ வந்திருக்கார் எம்.எஸ்.வி...(அவரோடு இணைந்து இசையமைச்ச ராமமூர்த்தியும் வந்திருந்தார்)...

அதில எனக்கு ஜனாதிபதி விருது வேனாம், மக்கள் விருதே போதும்னு சொல்லிட்டார்....உங்களுக்கு மக்கள் மனதுல என்னைக்கும் இடம் இருக்கும் எம்.எஸ்.வி அய்யா....நீண்ட ஆயுசோட நல்லா இருங்க...

*******************************************************************************
ஓசை செல்லா அண்ணனை நக்கல் விடுறதுக்காக நாளைக்கு பதிவு எதுவும் கிடையாதுன்னேன்...பட் இன்னைக்கு போட்டுட்டேன்...நான் பொய்யன் தானே ? நல்லா திட்டுங்க...முடிஞ்சா ஒரு மைனஸ் ஓட்டு போடுங்க ப்ளீஸ்...
*********************************************************************************

Comments

12324 Test Message ( remembering Hariharan #4353405987340578839475)
தணிஞ்ச தழல் said…
// முடிஞ்சா ஒரு மைனஸ் ஓட்டு போடுங்க ப்ளீஸ்... //

எங்கே?
Baby Pavan said…
அப்பாடி எங்க கும்மிய பத்தி ஒன்னும் இல்ல
theevu said…
//நக்கல் விடுறதுக்காக நாளைக்கு பதிவு எதுவும் கிடையாதுன்னேன்...பட் இன்னைக்கு போட்டுட்டேன்.//

நாளைக்கு பதிவு கிடையாது என்று சொல்லி சொல்லியே தினமும்பதிவு போட்டுடலாம்.:)
//தேசிகன், மவுல்ஸ் எல்லாம் இந்த ட்ராபிக்ல எப்படி கார் ஓட்டிக்கிட்டு இருக்காங்கன்னு தெரியல...அட்வைஸ் கேக்கனும்//

பெஸ்ட் ஒரு டிரைவர் வெச்சுட்டு, ரிலையன்ஸ்/டாடா இண்டிகாம் டேடா-கார்ட் வாங்கறதுதான். எனக்கு பதிவுகள் படிக்க கிடைக்கும் நேரம் இந்த டிரைவிங் டையம்தான்.
SurveySan said…
//அதில எனக்கு ஜனாதிபதி விருது வேனாம், மக்கள் விருதே போதும்னு சொல்லிட்டார்....உங்களுக்கு மக்கள் மனதுல என்னைக்கும் இடம் இருக்கும் எம்.எஸ்.வி அய்யா....நீண்ட ஆயுசோட நல்லா இருங்க...
//

:( - இருந்தாலும், நம்ம முயற்சிய கைவிடாம பண்ணுவோம். யாராவது ஏதாவது பண்ணாமலா போயிடுவாங்க?

-சௌக்கியம்தானே?

Popular Posts