
இலங்கைத்தமிழர் இந்தியாவில் தங்குவதற்கு விசா அளிக்க மறுத்த உள்ளதுறை அமைச்சகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம்கேட்டு நோடீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இலங்கைத்தமிழரான ஜெகநாதபிராபன் என்பவர் கடந்த 2007ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு சுற்றுலா விசா பெற்று வந்தார்.
தமிழ்நாட்டில் சென்னை வலசரவாக்கம் போலீசில் இலங்கை அகதி என்று கூறி பதிவு செய்துகொண்டார். பின்னர் பவானிசாகர் பகுதிக்கு சென்ற அவர் அங்கு உள்ள காவல்துறையில் வெளிநாட்டவர் என்று சான்று அளிக்கப்பட்டது. மேலும் அவரின் விசா காலமாக ஏப்பிரல்29,2009க்கு மேல் இந்தியாவில் இருக்கக்கூடாது அப்படி இருக்கவேண்டுமானால் விசா நீடிப்பு பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
எனவே ஜெகநாதபிரதாபன் விசா நீடிப்பு கேட்டு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மனு அளித்தார். ஆனால் விசாவை நீடிக்க முடியாது என்று கூறி உள்துறை அமைச்சகம் அவரை உடனே நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டது. இதை எதிர்த்து உள்துறை அமைச்சக உத்தரவுக்கு தடை கோரியும், விசா நீடிப்பு வழங்க உத்தரவிடக்கோரியும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை ஏற்ற நீதிபதி வேணுகோபால் இதுகுறித்து இன்று விசாரணை நடத்தினார். மனுதாரா தரப்பில் வாதாடிய வழக்குரைஞர் ராதாகிருஷ்ணன் .... மனுதாரர் உள்துறை அமைச்சகத்துக்கு விசா நீடிப்பு அளிக்க மனு அளிக்கும்போது போலீசார், தமிழக அரசின்பொதுச் செயலாளர் அளித்த என்த குற்றச்சாட்டும் இல்லாதவர், விசா நீடிப்பு அளிக்கலாம் என்ற பரிந்துரையையை சேர்த்து அனுப்பியுள்ளார் ஆனாலும் அவருக்கு விசா நீடிப்பு அளிக்காமல் அவரை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ள உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்,
விசா நீடிப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் என்று வாதித்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி நாட்டைவிட்ட வெளியேற கோரிய உள்துறை அமைச்சக உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்தார். இதுகுறித்து விளக்கம் அளிக்கக்கோரி உள்துறை அமைச்சகத்துக்கு நோடீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.
Source : http://www.thenaali.com/thenaali.aspx?N=5100
No comments:
Post a Comment