வாழ்க்கை வட்டம்டா !!!ரஜினிபட டயலாக் மாதிரி இருந்தாலும் இது தான் உண்மை. மேல இருக்க வீடியோவ பார்த்தீங்களா ? இந்த பத்துல சிம்பாக்கிட்ட (அதான் குட்டி லயன்) பெரிய சிங்கம் சொல்லும். நாம செத்தா புல்லாவறோம். புல்ல திங்கற மான நாம திங்கறோம். அப்படீங்கும்.பதிவுலகுக்கு கொஞ்சம் ப்ரேக் விட்டாலும் நம்ம கடமைய செய்யறதுக்கு வந்திருக்கேன். ஒவ்வொன்னா பார்ப்போமா ? வால்ஸ். லேட்டான பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஜோதிஜி. திருப்பூர் சாயப்பட்டறைகள் குறித்த அருமையான பதிவு வினவு தளத்தில். ஹேட்ஸ் ஆப். இணையத்தில் 'புரச்சி' செய்வதாக ட்விட்டரு, பஸ்ஸு, ரயிலு என்று குதித்துக்கொண்டு, காமெடி செய்துகொண்டு இருப்பதை பார்த்தேன். சிப்பு வந்துது சிப்பு. ஒரு பக்கம் பார்ப்பணீயத்தை கடுமையாக எதிப்பது. ஆனால் அதே பார்ப்பணீயத்துடன் நேரம் வரும்போதெல்லாம் கூட்டணி சேர்ந்துகொள்வது. நல்ல ஸ்டேட்டர்ஜி. பிழைப்புவாதம் என்றும் சொல்லலாம்.

ஒரு படத்தில் குட்டி சுவத்தில் உட்கார்ந்திருக்கும் இளைஞர்கள் 'பூமி மாதா சிரிக்கப்போறா, எல்லாரும் உள்ள போவப்போறீங்க' என்று சொல்லும் காமெடி பீஸை தூண்டி விட்டுவிட்டு, விழிப்பார்கள். ஒரு தகரத்தட்டை பார்த்தால் அந்த நியாபகம் தான் வருகிறது. உண்மையில் ஒரு விஷயத்துக்கு ஆதரவு தெரிவிப்பது, அல்லது எதிர்ப்பு தெரிவிப்பது, எல்லாவற்றுக்கும் ஒரு சார்பு நிலை நியாயம் இருக்கும். நாம் ஒரு சார்பு. அவன் ஒரு சார்பு. இவர்கள் க்ராஸ் ஆகாமல் இருப்பது நல்லது. இந்த சார்பு நிலை தாண்டி நட்பு பாராட்டலாமா, தேவையற்றதை ஒதுக்கி நல்லதை கொடுக்கலாமா என்று ஒரு மனக்குழப்பம். ஆனால் இந்த கூடா நட்பு தேவை இல்லை என்று தான் தோன்றுகிறது. இவர்களுடன் வைக்கும் தொடர்பு நாளை மன உளைச்சலைத்தான் கொடுக்கும்போல இருக்கிறது. இத்தனை கள்ளத்தனத்துடன் இருக்கும் இவர்கள் நாளை பாருக்கு அழைத்து சென்று மூக்கில் / முதுகில் குத்தமாட்டார்கள் என்பது என்ன உறுதி ?

ஹமாம் விளம்பரத்தில் சுட்டிக்காட்டிய ஒரு விஷயம், இப்போது வருவதில்லை. சோப்பு யாரு மாத்தினா என்பதை போல அந்த விளம்பரத்தை யாரு மாத்தியிருந்தாலும் அவர்களுக்கு நன்றீஸ்.

நேத்து ஒரு உயர்தர கடையில் கிறிஸ்டீன் சிஸ்டர்ஸு இருவர் ஷாப்பிங் வந்தார்கள். நான் பாட்டுக்கு என் வேலையை பார்த்துகொண்டு போயிருக்கலாம் தான். இருந்தாலும் அன்னை தெரசா கத்த்துக்கொடுத்த ஏழ்மை, எளிமை ஆகியவற்றை பின்பற்றுகிறார்களா என்று பார்க்க அவர்களை நான் பின்பற்றினேன் (கடையில்தான்). அவர்கள் பில்:

- பியாமா சோப்
- மற்ற உயர்தர பேர்னஸ் க்ரீம்ஸு
- லேய்ஸ் சிப்ஸு
- ஆப்பிள் ட்ரிக்ஸ், இம்போர்ட்டட் ஐஸ் க்ரீம்ஸ்

எவன் அப்பன் ஊட்டு காசு ? மேலும் இங்கே பெங்களூரில் ஒரு கிறிஸ்தவ சிஸ்டர் குழுமத்தின் நிலத்தை 25 கோடிக்கு ஐடி கம்பேனிக்கு விற்பனை செய்து நிதி திரட்டி. என்னத்தை சொல்ல. இவங்களை கேட்டா நாங்க சிறுபான்மை அது இது என்று அடித்து விடுவார்கள். லெட்ஸ் ஸீ.

ரொம்பநாளாக ஆல் இன் ஆல் அழகு ராஜா கடைக்காக ஒரு இடுகையை தயார் செய்ய முயன்றுவருகிறேன். நேரம் தான் சிக்கமாட்டேங்குது.

அடுத்த எரிச்சல், ஜோடி நம்பர் ஒன் ஜூனியர் என்று ஒரு ப்ரொக்ராம். அதில் சின்ன குழந்தைகளை நேத்து ராத்திரி யம்மா ரேஞ்சுக்கு ஆடுவதை என்னால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. செக்ஸ் கல்விக்கு ஆதரவு கொடுக்கும் என்னால் குறைந்த வயதுள்ள குழந்தைகள் ஜோடி பாட்டுக்கு டேன்ஸ் ஆடுவதும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டு ஆவது அதை பெற்றவர்களே கை தட்டி ரசிப்பதும் ! யாராவது இந்த நிகழ்ச்சி தயாரிப்பாளரின் போன் நம்பர் கொடுக்கமுடியுமா ? நித்தி மேட்டரிலேயே டிவிக்கு தணிக்கை தேவை என்ற கருத்தையும் விவாதிக்கவேண்டிய நிலை இருந்தது. ஆனால் மன்னரின் (கலைஞர்) உறவினர்களின் தொலைக்காட்சி பெட்டியிலேயே இவ்வாறான நிகழ்வுகளின் ஒளிப்படத்தை காட்டியதால் நம்மால் எதுவும் செய்ய இயலவில்லை. பட்டத்து இளவளின் (ஸ்டாலின்) ஆட்சியிலாவது நாம் இந்த கோரிக்கையை எழுப்பி பார்ப்போம்.

திருச்சியில் அம்மாவுக்கு கூடிய கூட்டம் அவரை வேடிக்கை பார்க்க வந்தவர்கள் என்று குஸ்பு சொல்லியிருக்கிறார். கழகத்தில் இணைந்தவுடன் குஸ்புவின் கன்னி (?) ஸ்டேட்மெண்ட் இது. வரும் காலத்தில் குஸ்பு மத்திய கல்வி மந்திரியாகி, தமிழகத்தின், இந்தியாவின் தலையெழுத்தை மாற்றி
அமைப்பார். மச்சான் புகழ் நமீதா, ஐநா சபையில் பேசுவார் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் சாதாரண தமிழன் நான். நீங்க சொல்லுங்கம்மா கேட்டுக்கலாம்.

அமெரிக்க பதிவர்களுக்கு ஒரு வருத்தமான செய்தி. விரைவில் இந்த ரெட்ப்ளேம் உங்கள் ஏரியாவில் லந்தை கூட்ட வருகிறது. ! அப்புறம் என்ன ? அமெரிக்காவில் இருந்து தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றும் நடவடிக்கை விரைவில் ஆரம்பமாகும். (சும்மா ஜோக்குபா. குஜமுகவில் தான் இணைவேன் முதல்ல).

Comments

ரவி

நீங்க சொல்ற வர்ற விசயங்களை பகிர்தல் என்று தனித்தனியாக பகிரலாம்.

ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல்?
//ரொம்பநாளாக ஆல் இன் ஆல் அழகு ராஜா கடைக்காக ஒரு இடுகையை தயார் செய்ய முயன்றுவருகிறேன். நேரம் தான் சிக்கமாட்டேங்குது. //

உங்களுக்கும் ஒரு கெடாவெட்ட போட்டுருவோம். எல்லாம் சரியாயிரும். :-)
இது விஜய் டயலாக் ரவி அண்ணா பகிர்வுக்கு நன்றி .. ..
கும்மி. நான் ப்யூர் வெஜ். சிக்கன் மட்டும்தான் சாப்பிடுவேன்.
புதிய மனிதா நன்றி !
// சிக்கன் மட்டும்தான் சாப்பிடுவேன். //

சாப்பிடப்போறது நாங்கள்ல.

(நான் சிக்கன், பீப் மட்டும் சாப்பிடற lacto-ovo-chicko-beefo-vegetarian)
சீனு said…
//கழகத்தில் இணைந்தவுடன் குஸ்புவின் கன்னி (?) ஸ்டேட்மெண்ட் இது//

:))
//அமெரிக்க பதிவர்களுக்கு ஒரு வருத்தமான செய்தி. விரைவில் இந்த ரெட்ப்ளேம் உங்கள் ஏரியாவில் லந்தை கூட்ட வருகிறது.//

வருக வருக
நமது நடிகர்களின் படங்களை பார்த்துவிட்டு, அனிமேசன்களை பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது. அந்தப் படத்தில் வரும் பும்பா, டிமோன் பகுதி அருமையாக இருந்தது. தனித் தொடராக கூட வெளிவந்து பெரிதும் வரவேற்பு பெற்றது.

குஸ்பு இல்லாமல் தி.மு.க மேடைகளே இல்லை என்ற நிலை வந்துவிட்டது. அவரைப் பற்றி எழுதினிங்கன்னா ஆட்டோ வரும்...

Popular Posts