சவால் சிறுகதை போட்டிக்கான என் விமர்சனங்கள் ‍‍பார்ட் 2

டைமண்ட் வாசனை : பலாபட்டறை சங்கர்
அல்டிமேட்டான கதை. முடிவை கடைசிவரை ஊகிக்கமுடியாமல் போனதே ஷங்கருக்கு எந்திர வெற்றி. ஆதியும் பரிசலும் கொடுத்த வாசகங்கள் அங்கங்கே பச்சக் என்று பொருந்துகிறது. பயபுள்ள பிச்சு உதறுது. நல்ல ஷேப்பில் வந்திருக்கும் கதை, குமுதம் ஆவி குங்குமம் தர கமர்ஷியல் கதைகளின் க்வாலிட்டியை கூட மிஞ்சுகிறது. பரிசை எப்படியாவது தட்டிடனும்னு எப்படியெல்லாம் ஓட்டல் ரூம் (இல்லை ஓட்டலே) போட்டு யோசிங்கறாங்கபா !!

என் மதிப்பெண் 7.5 / 10 : கலக்கிப்புட்ட ஷங்கர்.

ஆப்பரேஷன் ப்ளூ டைமண்ட் : கார்த்திகைப்பாண்டியன்.தொண்ணூறுகளின் மத்தியில் படித்த ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார், சுபா,நாவல்களின் வாசனை மூக்கை துளைக்கிறது. கதையும் மின்னல் வேகத்தில் ஓடுகிறது. பெரிய மீனை சின்ன ஜாடியில் அடைத்ததுபோல ஒரு முழு நீள
நாவலுக்கான ஸ்கோப் உள்ள கதை. பாவம் சிறுகதையாக ருங்கிவிட்டது.
வித்யாசமாக எதுவும் யோசிக்கவில்லை கார்த்திகை பாண்டியன். எக்மோரில் கார் எடுத்து மதுரையில் யு.டர்ண் போடுவது நம்பக்கூடியதா ? அதே போல ஏர்போர்ட் இம்மிக்க்ரேஷன் செக்ஸை கடந்து எப்படி வந்தார், இரு லாஜிக் மீறல் என்று யோசித்தபோது கதையின் முடிவு கிட்டத்தட்ட கொஞ்சம் யோசித்தால்
ஊகிக்கமுடிவதாக இருப்பது மைனஸ். நீல வைர கடத்தலில் ஆரம்பித்து காமினியின் சிவந்த முக லவ்ஸில் முடியும் கதை. வொர்த் ரீடிங்.

என் மதிப்பெண் 6/10. வாழ்த்துக்கள் கார்த்திகைப்பாண்டியன்.

காமினியின் கண்கள் ! (சவால் சிறுகதை) : கவிதா கெஜானனன்

கொஞ்சம் இலக்கில்லாமல் பயணிக்கிறது. வர்ணனைகளுக்கு அதிக வார்த்தைகள் செலவிட்டமாதிரி தெரிகிறது. மும்பை, கோவா ரோடு, என்று புதிய இடங்கள். ஏசிபியை ஜொள்ளு பார்ட்டியாக காட்டியது போல தெரிகிறது. ஆனாலும் ஒருசில இடங்களில் டீட்டெயிலிங் மிஸ் ஆகிறது. சிறந்த ப்ரொபஷனில் இருக்கும் காமினி குற்றம் செய்வதற்கான மோட்டிவ் என்ன ? கதையின் முடிவு என்று எதுவும்
இல்லாமல் போகிறதே ? ஏசிபியின் துப்பாக்கியை தட்டிவிட்டு காமினி ஓட்டம் எடுப்பது ஓக்கே. அப்புறம் ஏசிபி வியாழன் கிரகத்துக்கா போயிருவார் என்று திடீர் என்று தோன்றியது. சில கதைகளை போல, கொடுக்கப்பட்ட வார்த்தைகள் வலிந்து திணித்துவிட்டதை போலிருக்கிறது. உரையாடல் கதைப்போற்றியில் வென்ற எழுத்தாளர் என்பதால் இன்னும் எதிர்ப்பார்ப்பு அதிகம் இருக்குங்க. ப்பீ கேர்புல்.

என்னுடைய மதிப்பெண் : 5/10. கீப் டூயிங் இட் !

மணிகண்டன் விஸ்வநாதன்

மூன்று டேக்லைனையும் கோர்த்து இது தான் கதை என்று காமெடி செய்துள்ளார் மணி. ட்விட்டரில் திவிரவாதியாக இருப்பதால் நறுக் சுருக் என்று வேண்டும் போலிருக்கிறது. போடா மடையா. உக்காரடா சோம்பேறி. என்று சர்தார்ஜி சொல்வது நியாபகம் வருகிறது. இந்த பரிசல் பயபுள்ள இதையும் சீரியஸா டுத்துக்கிட்டு இந்த கதையையும் போட்டியில சேர்த்துருக்கு பாருங்க.

என் மதிப்பெண் : <<ப்ளாங்க் வேல்யூ>>

காமினி என் காதலி - ஆசியா உமர்

அழகான ஓவியத்தின் ஓவியம் ஒன்று நம்மை கதைக்குள் வரவேற்கிறது. கதையின் தீம் நன்றாக இருக்கிறது. ஆனால் வர்ணணைகளிலோ, விளக்கங்களிலோ பெரிதாக அக்கறை எடுக்காமல் இருந்துவிட்டார். சவால் போட்டிக்கு கொடுக்கப்பட்ட தீம் வசனங்கள் கதையில் ஒட்டாமல் துருத்துகின்றது. பிட்டு பிட்டாக படத்தை
பார்த்தது போல (அதாவது இடைவெளி விட்டுங்க), கதை ஜெர்க் அடிக்கிறது. இருந்தாலும் நல்ல முயற்சி. ப்ரசண்ட்டேஷனில் கவனம் செலுத்தினால் இன்னும் சூப்பரான படைப்புகளை எதிர்பார்க்கலாம் ஆசியா உமரிடம் இருந்து
.
என்னுடைய மதிப்பெண் : 5/10 வாழ்த்துக்கள் ஆசியா உமர்.

கதைகளின் சுட்டிகளை பார்க்க‌ http://www.parisalkaaran.com/2010/10/1.html

Comments

முதல்ல நன்றி.. ரொம்பத்தான் மெனக்கெட்டு எல்லாத்தையும் படிச்சி அதுக்கு விமர்சனம் வேற எழுதறீங்க.. ம்ம்ம்ம்ம் என்னத்த சொல்றது. .:))

// ஏசிபியை ஜொள்ளு பார்ட்டியாக காட்டியது போல தெரிகிறது. //
போல இல்ல..ஆமாம் :)

//சிறந்த ப்ரொபஷனில் இருக்கும் காமினி குற்றம் செய்வதற்கான மோட்டிவ் என்ன ? கதையின் முடிவு என்று எதுவும்
இல்லாமல் போகிறதே ?//
பரிசு வந்தா வாங்கிட்டு வந்துட்டு பதில் சொல்றேன் :))

//ஏசிபியின் துப்பாக்கியை தட்டிவிட்டு காமினி ஓட்டம் எடுப்பது ஓக்கே. அப்புறம் ஏசிபி வியாழன் கிரகத்துக்கா போயிருவார் என்று திடீர் என்று தோன்றியது.//
இங்லீஷ் படத்தில் காட்சிகள் கட் செய்து காட்டினால் கேள்வியே கேட்காம பாப்பீங்க..நான்னா உங்களுக்கு இளக்காராம்மா போச்சி.. ம்ம்..

//உரையாடல் கதைப்போற்றியில் வென்ற எழுத்தாளர் என்பதால் இன்னும் எதிர்ப்பார்ப்பு அதிகம் இருக்குங்க. ப்பீ கேர்புல்.//

அட ஏன்ப்பா..இதை வேற அப்பப்ப எல்லாரும் சொல்லிக்கிட்டு.. :)) நான் கதை எழுதினால் அடுத்தவங்க இல்ல கேர் புல் லா இருக்கனும் நான் ஏன் இருக்கனும்? :))

//என்னுடைய மதிப்பெண் : 5/10. கீப் டூயிங் இட் !//

மிச்சம் 5 மார்க் எப்ப தருவீங்க? ஏன் பாதி பாதியா மார்க் தரீங்க நீங்க? :)
V.Radhakrishnan said…
நல்ல விமர்சனம். சில கதைகள் படிக்கவில்லை.
சிரத்தையுடன் விமர்சனம் எழுதுவது பாராட்டத்தக்கது...
முதல்ல நன்றி.. ரொம்பத்தான் மெனக்கெட்டு எல்லாத்தையும் படிச்சி அதுக்கு விமர்சனம் வேற எழுதறீங்க.. அதுக்கே உங்களுக்கு நன்றி சொல்லணும்... உங்கள் விமர்சனம் அருமை.

Popular Posts