ஏற்கனவே உரையாடல் போட்டியின்போதே கதைகளுக்கு விமர்சனம் எழுதி அனுபவம் இருக்கு. அதனால் சவாலையும் படித்து எழுதுகிறேன். இது முழுக்க முழுக்க என்னுடைய பார்வையே. ஷங்கர் எடுக்கும் படத்துக்கு ஆனந்தவிகடன் விமர்சனம் எழுதுவதில்லையா ? அது போலத்தான். பப்ளிக் டொமைனில் இருக்கும் உங்கள் கதையை நான் படித்து ரசித்து, நல்லவைகளையும் அல்லவைகளையும் சொல்கிறேன்.யாரும் கோச்சுக்கவேண்டாம் ப்ளீஸ். படிக்க நிறைய கதைகள் இருக்கு. நேரமோ
குறைவா இருக்கு. ஸீ யூ. பலாபட்டறை ஷங்கர்
போட்டிக்கு வந்துள்ள படைப்புகளின் பட்டியலில் முதல் கதையாக
பட்டியலிடப்பட்டிருக்கிறது. சில இடங்களின் புன்முறுவல் பூக்கவைத்தாலும் "கொசுவ அழிக்க மருந்து இல்ல, இதுல கொரங்க வெச்சி பிசைஞ்சிருக்கானுவ." ஓவர் ஆல் ஆக ஒரு குழப்பமே மிஞ்சுகிறது. இன்னும் கொஞ்சம் ஷார்ட் & ஸ்வீட் ஆக இருந்திருக்கலாமோ என்றும் தோன்றுகிறது. ரோபோ எதிர்காலத்தை கணிச்சு சொல்லும் என்று சொல்லப்படுவது அப்பட்டமான லாஜிக் மீறலாக தெரிகிறது.
அல்லது கன்வின்ஸிங் ஆக இல்லை. அதிகமான பஸ் வேர்ட் எல்லாம் ஆங்கிலத்தில் உபயோகப்படுத்தபடுவதால், ஜனரஞ்சக எழுத்தில் இருந்து கொஞ்சம் தள்ளியே நிற்கிறது பலாபட்டறையாரின் படைப்பு. கடைசியில் குழப்பமே மிஞ்சுகிறது. இன்னும் கொஞ்சம் சுருக்கமாக, எளிமையாக முயற்சி செய்திருக்கலாம்.
என்னுடைய ஸ்கோர் 5/10 ! நல்ல முயற்சி, வாழ்த்துக்கள் ஷங்கர்.
2. உனக்காக எல்லாம் உனக்காக........துவாரகன்.
எளிமையாக ஆரம்பிக்கும் கதையில், பேஸ்புக், ப்ரொபைல் என்று ஆங்கில
வார்த்தைகளை அப்படியே பயன்படுத்துவதை தவிர்த்திருக்கலாம்.. ஹைவே என்பதை பெருந்தெரு என்று அழகாக எழுதியிருப்பவருக்கு இது ஒன்றும் பெரிதல்ல. கதையை மூன்றாமவரிடம் இருந்து ஆரம்பிப்பதாக இருக்கிறது. பிறகு பேசினோம், பேசினேன் என்று சுயமாக சொல்வது போல இருக்கிறது. ஏதாவது ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்திருக்கலாம். நைட்டு 12 மணிக்கு நீ ஏண்டா சுடுகாட்டுக்கு போனே என்ற கதையாக டேட்டிங் செய்யப்போகும் பெண்ணின் மேல் எப்படி ஆசிட் விழுந்தது ? இது ஒரு லாஜிக் மீறல். போட்டியில் கொடுக்கப்பட்டிருந்த வரிகளை கதையில் திணிக்க முயன்று, அது தோல்வியில் முடிந்திருக்கிறது. அறிவியல் கதையும் இல்லாமல், காதல் கதையும் இல்லாமல் மொக்கையாக
முடிந்துபோனது.
என்னுடைய ஸ்கோர் 2/10. மீண்டும் முயலுங்கள், நிறைய வாசியுங்கள்.
வாழ்த்துக்கள் துவாரகன்.
3. விபூதி வாசனை - சவால் சிறுகதை விதூஷ்.
மர்மதேசம் டைப்பில் விர்ரடிக்கும் கதை. லைட்டாக ஆரம்பித்து ராக்கெட்
வேகத்தில் பயணிக்கிறது. இடையிடையில் வரும் முருகன் பாடல்ஸ், வேல், வசனம்ஸ் எல்லாம் ஜில்லிட வைக்கிறது. கடைசியில் முடிவு புரியாமல் இரண்டாவது முறை படித்தேன். ஓரளவு புரிந்தது. எனக்கென்னவோ இந்த ஆதியும் பரிசலும், வெறும் தலைப்பை அல்லது தீமை மட்டும் கொடுத்துவிட்டு வார்த்தைகள், வசனங்களை முடிவு செய்யும் வேலையை எழுத்தாளர்களிடமே விட்டுவிட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது. காரணம், விதூஷ் கதையில் ஆட் மேன் அவுட் ஆக தெரிவது அந்த வசனங்களே. அவை இல்லாமலேயே விதூஷே சிறப்பான
வார்த்தைகளை கோர்க்கும் சுகந்திரத்தை இழந்துவிட்டாரோ என்று
எண்ணத்தோன்றுகிறது.
என்னுடைய ஸ்கோர் 6.5 / 10. வெல் டன் விதூஷ்.
டைமண்ட் - முகிலன்
மொத்தத்தில் தெளிவான சரளமான நடை. இதுவரை படித்த கதைகளில் கொடுக்கப்பட்ட டேக் லைன்ஸ் கிட்டத்தட்ட பொருந்தி வருவது இந்த கதையில்தான். எஸ்பியை கொஞ்சம் மரியாதையாக விளித்திருந்தால் அந்த கேரக்டரின் அழுத்தம் கூடியிருக்கும். குலோப்ஜாமூன் டெக்னிக் புதுசாயிருக்கு. கொஞ்சம் கொஞ்சம் லாஜிக் மீறல், கதையின் முடிவில் பெரிய லாஜிக் மீறல். அதாவது போலீஸ் கடத்தல்காரர்களின் அதே என்க்ரிப்ஷன் டெக்னிக்கை உபயோகப்படுத்தி டாக்டரின் இமெயில் ஐடியை பிடித்து சிலமணி நேரத்தில் கண்டுபிடிப்பது கன்வின்ஸிங் ஆக
இல்லை. பரபர நடைக்காக மதிப்பெண்களை அள்ளுகிறது. போட்டிக்கான கதையில் தேவையற்ற டிஸ்கிகளை தவிர்த்திருக்கலாம்.
என்னுடைய மதிப்பெண் 6/10. வாழ்த்துக்கள்.
தெய்வம் : பலாபட்டறை ஷங்கர்
என்ன ஏது என்று புரியாமல் கடைசிவரை தவிக்கவிட்டதில் பலாபட்டறையாருக்கு வெற்றி. கடைசி ட்விஸ்ட் அருமை. மரம் வெட்டி போடுவது போன்ற சில விஷயங்கள் ஏதோ ஜாதிக்கலவரத்துக்காகத்தான் என்பது போலவும், ஒரு குறிப்பிட்ட ஜாதியார் செய்த போராட்டத்தினை ரீவைண்ட் செய்வது போலவும் இருப்பதை தவிர்த்திருக்கலாம். அருமையாக கதையில் அது ஒரு கரும்புள்ளியாக இரண்டு
இடத்தில் இருக்கிறது. முதல்வர் திரைப்படம் பார்த்துக்கொண்டிருப்பதை
இன்னும் கொஞ்சம் எளிமையாக புரியும்படி சொல்லியிருக்கலாம். கடைசி
ட்விஸ்டுக்காக அல்லது ரூம் போட்டு யோசித்தமைக்காக மதிப்பெண்களை
அள்ளுகிறது.
என்னுடைய மதிப்பெண் 6/10 , வாழ்த்துக்கள் ஷங்கர்.
7 comments:
ரவி, விமர்சனங்கள் அருமை.
இனிமேல்தான் நீங்கள் குறிப்பிட்டக் கதைகளைப் படிக்க வேண்டும்.
me the first???
அருமை, நன்றிகள், நடுவர்களின் வேலைப்பளுவை சற்று குறைத்தமைக்கு.
உங்களின் பதிவுகள் எண்ணிக்கை குறைகின்றன , எதனால்
நல்லாவே விமர்சனம் பண்றீங்க. :) யாருதான் பத்துக்கு பத்து எடுக்கிராங்கனு பார்ப்போம்.
ரவி
மிகவும் மகிழ்வாக உணர்கிறேன்.
எழுதியவர்கள் சார்பாகவும் என் சார்பாகவும் நன்றி..
(சொல்லத்தேவையில்லையெனினும்..)
பார்மெட்டிங் சரியா பண்ணலை. இன்றைக்கு மற்ற கதைகளையும் முடிச்சுடறேன்.
இது போல போட்டியில் கலந்து கொள்ளாத பதிவர்கள் அனைவரும் விமர்சனம் போட்டா நல்லாருக்குமே..!!
Post a Comment