புரளி மனோஹர் சொல்கிறான் என்பதால் மட்டுமல்ல. என்னுடைய ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கேட்டுக்கொண்டதாலும் (சரி விடுங்க பத்துக்கணக்கான) இந்த கேள்வி பதில் பகுதியை மீண்டும் ஆரம்பிக்கலாம் என்று என் அப்பன் தகர நெடுங்குழைகாதன் சத்தியமாக முடிவெடுத்ததில். இனி நேரே பதில்கள். (கேள்விகள் ?) அனானி ஆப்ஷன் இல்லாததால் என்னுடைய நன்பர்கள் பல ப்ளாக்கர் ஐடிகளில் வருவார்கள்.
செர்வாண்டிஸ்
கேள்வி : கோவை எண்கவுண்டர் சம்பவத்தை பற்றி நீங்கள் ஏன் இன்னும் பதிவு போடவில்லை ?
போண்டா : நானும் ஒரு பதிவை எழுதி வைத்திருந்தேன். எண்கவுண்டர் தவறு. அதே நேரம் பாலியல் வண்புணர்வும் தவறு. மேலும் சிறுமிகளும் இதற்கு காரணம் என்பது போல. மேலும் இஸ்ரேலில் இதை விட சிறப்பாக எப்படி செயல்படுவார்கள் என்பது பற்றியும். மாற்றுக்கருத்துக்களை எழுதிய உண்மைத்தமிழனுக்கே ஏராளமான மைனஸ் ஓட்டுக்கள் விழும் நிலையில், பார்வதி அம்மாள் விவகாரத்தில் அனைவரும் துப்பிய எச்சில் இன்னும் பாத் டப் அளவுக்கு ரொம்பியிருப்பதால், பதிவை அப்படியே ட்ராப்டில் வைத்துவிட்டேன். கடுமையாக உழைக்கும் கவுண்டர் சாதி என்று ஒரு பதிவு உள்ளது. அதை படித்துக்கொள்ளுங்களேன் ?
நாட்டாமை
கேள்வி : தமிழ்மணம் விளம்பரம் போடுவதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?
போண்டா : தமிழ்மணம் விளம்பரம் போடுவது நல்லதே. ஆனால் நிர்வாகிகள், வாடிக்கையாளர்களிடம் இருந்து காசை பறிப்பது எப்படி என்பதை குறித்து நான் எழுதிய பதினைந்து பதிவுகளையும் வழிப்பறி என்ற லேபளின் கீழ் க்ளிக் செய்து படித்துக்கொண்டால் நல்லது. இப்படித்தான் சமீபத்தில் 1979 இல் அப்போதைய குடியரசு தலைவர் மாளிகையில் உகாண்டா அதிபர் கொவாடிண்டா காவாலிக்கு ப்ரெஞ்சு மொழியில் இருந்து அஸ்ஸாம் மொழிக்கு மாற்றி அதில் இருந்து இங்கிலீஷ் மொழிக்கு மாற்றி சொல்லும் டங்குவார் டவாலி வேலைக்கு (மூன்று மொழி துபாஷி) சென்ற போது பீஸ் கொடுக்காமல் ஏமாற்றிய நாற்பது வயது பிகருக்கு டகுல்பாஜி கொடுத்து அங்கே கொடியில் காய்ந்த ஜனாதிபதி மாளிகையின் சமையல்காரரின் இண்டியன் டை, மற்றும் போட்டோ ஸ்டுடியோ அழுக்கடைந்த கோட்டு, பாரின் டை (அந்த பிகரே கட்டிவிட்டது) ஆகியவற்றை அடித்துவந்ததை சொல்லவேண்டும். இன்னும் அந்த இண்டியன் டை என்னுடைய கர்ச்சீப் ஆக உபயோகம் ஆகிறது. இதை எல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால், வாடிக்கையாளரிடம் வழிப்பறி என்பது ஒரு கலை.
க்ருஷ்ணன்
கேள்வி : ஆ ராசாவை ஏன் இன்னும் பிரதமர் நீக்கவில்லை ? உங்கள் கருத்து என்ன ?
போண்டா : இதுபற்றி துக்ளக் சோ கருத்து தான் என் கருத்தும். துக்ளக் சோவின் கருத்து இதுவரை எனக்கு தெரியாது.
சரவணன் கொளத்துமேடு
கேள்வி : மோடி பிரதமர் ஆக வாய்ப்பு உண்டா ?
வாங்க திரு சரவணன் அவர்களே. இப்படி திடீர்னு யாராவது உண்மையிலேயே கேள்வி கேட்டுவிடும்போது அந்த சந்தோஷத்தில் என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. என்ன கேட்டீர்கள் ? மோடி பிரதமர் பதவிக்கா ? என் அப்பன் தென் திருப்பல்லி தகர கடுங்குழைகாதன் அருளால் மோடி பிரதமர் பதவியை பிடித்தால் பட்டாப்பட்டி, மங்குணி அமைச்சர், வெளியூர்க்காரன் ஆகியோரை சிங்கப்பூரில் இருந்து மலேசியாவுக்கு நாடு கடத்தும்படி செய்வேன்.
To Be Continued .........
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
'கள்' உண்ணாமை வேண்டும் அப்படின்னு காந்தி சொன்னதா கேள்வி..ஆனா அவர் கிட்ட கள் பத்தி யாரோ கதை விட்டு இருக்கனும்...கள் ரொம்ம போதை..உடம்ப...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...
28 comments:
Cheap taste!
//இப்படித்தான் சமீபத்தில் 1979 இல் அப்போதைய குடியரசு தலைவர் மாளிகையில் உகாண்டா அதிபர் கொவாடிண்டா காவாலிக்கு ப்ரெஞ்சு மொழியில் இருந்து அஸ்ஸாம் மொழிக்கு மாற்றி அதில் இருந்து இங்கிலீஷ் மொழிக்கு மாற்றி சொல்லும் டங்குவார் டவாலி வேலைக்கு (மூன்று மொழி துபாஷி) சென்ற போது பீஸ் கொடுக்காமல் ஏமாற்றிய நாற்பது வயது பிகருக்கு டகுல்பாஜி கொடுத்து அங்கே கொடியில் காய்ந்த ஜனாதிபதி மாளிகையின் சமையல்காரரின் இண்டியன் டை, மற்றும் போட்டோ ஸ்டுடியோ அழுக்கடைந்த கோட்டு, பாரின் டை (அந்த பிகரே கட்டிவிட்டது) ஆகியவற்றை அடித்துவந்ததை சொல்லவேண்டும்//இதிலே எங்க டங்குவார் எல்லாம் அறுந்திருச்சே
கேள்வியும் நல்லா இருக்கு அதை விட பதில் ரொம்ப நல்லா இருக்கு.
//இதுபற்றி துக்ளக் சோ கருத்து தான் என் கருத்தும். துக்ளக் சோவின் கருத்து இதுவரை எனக்கு தெரியாது.//
ஹா..ஹாஹா.
மாயூ,. என்ன இது,
நன்றி குறும்பன்
திருப்பல்லி தகர கடுங்குழைகாதன் அருளால் மோடி பிரதமர் பதவியை பிடித்தால் பட்டாப்பட்டி, மங்குணி அமைச்சர், வெளியூர்க்காரன் ஆகியோரை சிங்கப்பூரில் இருந்து மலேசியாவுக்கு நாடு கடத்தும்படி செய்வேன்.
//
நாடு கடத்தும்போது , சங்கிலி போட்டு கடத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
( ஏன்னா.. ஒரு தடவைதான் குறி தவறும்... அடுத்த முறை.. சரியா சுடுவோம்..ஹி..ஹி)
அனைவரும் துப்பிய எச்சில் இன்னும் பாத் டப் அளவுக்கு ரொம்பியிருப்பதால், பதிவை அப்படியே ட்ராப்டில் வைத்துவிட்டேன். கடுமையாக உழைக்கும் கவுண்டர் சாதி என்று ஒரு பதிவு உள்ளது. அதை படித்துக்கொள்ளுங்களேன் ?
//
ஹா.ஹா...
Cheap taste!
//
ஆமாண்ணே.. டை, பழைய ஜட்டி எல்லாம் எடுத்துட்டு வந்திருக்ககூடாது.. விடுங்க.. அடுத்த முறை, அவரை யாருக்கும் தெரியாம எடுத்துட்டு வரச்சொல்றோம்...
//அடுத்த முறை, அவரை யாருக்கும் தெரியாம எடுத்துட்டு வரச்சொல்றோம்...//
ரெண்டு.மூணு வாரமா தலைமறைவா இருந்தவங்க எல்லாம் திரும்பவும் கெளம்பியாச்சா?!
கேள்வி பதில் ரொம்ப நல்லா இருக்கு.
Blogger மாயவரத்தான்.... said...
//அடுத்த முறை, அவரை யாருக்கும் தெரியாம எடுத்துட்டு வரச்சொல்றோம்...//
ரெண்டு.மூணு வாரமா தலைமறைவா இருந்தவங்க எல்லாம் திரும்பவும் கெளம்பியாச்சா?!
//
ஹி..ஹி.. ஆமாண்ணே.. சும்மா சும்மா சொறிஞ்சுவிட்டா, எப்படி தலைமறைவா இருக்கிறதாம்.. அதான் வந்துட்டோம்...
//ஹி..ஹி.. ஆமாண்ணே.. சும்மா சும்மா சொறிஞ்சுவிட்டா, எப்படி தலைமறைவா இருக்கிறதாம்.. அதான் வந்துட்டோம்...//
அது சரி!
மாயவரத்தான்.... said...
// //Cheap taste!// //
போண்டா மாதவன் குறித்து யார் எப்படி பேசினாலும் அதை "Cheap taste" ஆக கருதவே முடியாது.
உண்மையில், போண்டா மாதவன் அளவுக்கு "Cheap taste"ஆக பேச உலகில் ஆளே இல்லை.
ஸாரி..
மருத்துவர் ஐயையோவை தான் ரவி போண்டா மாதவன் என்று அழைக்கிறார் என்று தெரியாமல் பின்னூட்டமிட்டுவிட்டேன்.
ஆமாமாம்.. மருத்துவர் ஐயையோ & அவருடைய அல்லக்கைகள் பேசுவதை / நடப்பதைப் போல கீழ்த்தரமாக பேச / நடக்க யாருமே இல்லை தான்!
@மாயவரத்தான்
பாங்காக் என்றாலே பலான மேட்டர்தான் என்று புரூடா கட்டுரை எழுதி, பாங்காக்கை பார்க்காத மக்களை ஏமாற்றும் அற்பமான வேலையை செய்யும் நபர் இப்படித்தானே பேசமுடியும்!
மாயவரத்தான்.... said...
// //அதான் போன பின்னூட்டத்திலேயே சொல்லிவிட்டேனே. உம்மைப் போன்ற அல்லக்கைகள் அளவிற்கு தரக்குறைவாக யாராலும் பேச முடியாது என்று!// //
மதிப்பிற்குரிய மாயவரத்தான்
உங்களது பின்னூட்டத்திற்கு நான் மறு பின்னூட்டமிட்டது தவறுதான். அவ்வாறே, உங்களது பாங்காக் குறித்த கட்டுரை குறித்து இங்கு எழுதியாதும் தவறுதான்.
டோண்டு குறித்து திரு. ரவி எழுதியதும் அதற்கு நான் கருத்துகூறுவதாக நினைத்து, உங்களுடன் முரண்பட்டதற்காக வருந்துகிறேன்.
உங்கள் மனம் புண்படும்படி பேசியிருந்தால் அதற்காக வருந்துகிறேன். மன்னிக்கவும்.
நன்றி
ஆச்சரியம்!
அருளின் கடைசி பின்னூட்டம் காரணமாக அதற்கு முந்தைய என்னுடைய பின்னூட்டத்தை நான் டெலிட்டுகிறேன்.
ரவி என்னுடைய பார்வையில் நல்ல நகைச்சுவை பதிவு எழுதும் மொத்த தகுதிகளும் உங்களுக்கு இருக்கிறது. வயிறு புண்ணாகி விட்டது. அவரும் இதை நகைச்சுவையாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்படியும் கொக்கி போட முடியுமா? :) மிகவும் பிடித்து இருந்ததால் முதன் முதலாக கமன்ட் போடுகிறேன்.
dear ravi
this is my first PINNUTAM
nalla nagaichuvai
balu vellore
ஆமா...ரவி... இதெல்லாம் அவரு படிக்கிறாரா இல்லையா??? :)) இல்ல வெறும் கடைல டீ
ஆத்துறீங்கள???
போண்டா மாதவன்லாம் எதுக்கு ஒரிஜீனல் பேரையே போடுங்களேன் ரெண்டும் ஒரே மாதிரித்தான் இருக்கு..:))
நீர் இன்னும் இந்த போண்டாவை விடவில்லையா? நல்லா இருக்கு நைனா!
Post a Comment