சோனியாவுக்கு மருத்துவ உதவி !! - அப்டேட் !!!

கடந்த 2006 ஆம் ஆண்டு நான் வலைப்பதிவுக்கு நுழைந்த காலத்தில் மகாலட்சுமி என்ற பெண்ணுக்கு கல்வி உதவி கேட்டு வலைப்பதிவர்களை அணுகியிருந்தேன். மகாலட்சுமி ஒரு ஏழை / தலித் பெண், கல்லூரியை தொடர முடியாமல் (பணம் கட்ட இயலா சூழலில்) வெளியேறியிருந்தார்.

அவரை டீச்சர் ட்ரெயினிங் சேர்க்க கிட்டத்தட்ட ரூ 60 ஆயிரத்தை வலைப்பதிவர்கள் கொடுத்து உதவினார்கள்.....

அப்போதெல்லாம் பார்ப்பனர்கள், பார்ப்பனீயம் என்று ஜல்லியடித்துக்கொண்டிருந்தேன், ஆனால் அதிகமாக உதவியவர்கள் அவர்கள் தான் :) :)

இன்றைக்கு மகாலட்சுமி ஒரு ஆசிரியை !!

மேல்விவரங்களை இந்த பதிவில் படிக்கலாம் :

http://tvpravi.blogspot.in/2007/01/blog-post.html

இப்போது அதுபோன்றதொரு கோரிக்கையுடன் உங்களை அணுகுகிறேன். இந்தமுறை ஒரு ஏழைப்பெண்ணுக்கு மருத்துவ உதவி செய்ய !!!

திருவண்ணாமலையில் புனர்ஜீவன் அறக்கட்டளையை நடத்திவரும் திரு லூர்து அவர்கள் - 30 குழந்தைகளை புனர்ஜீவன் மூலம் படிக்க வைத்துவருகிறார்...அமெரிக்காவில் வாழ்ந்து வந்தவர் - இயேசு சபையை சேர்ந்தவர் - இந்த குழந்தைகளுக்காக திருவண்ணாமலையிலேயே தங்கிவிட்டார் !!

தற்போது இந்த முக்கியமான கோரிக்கையோடு அணுகியிருக்கிறார் !!

சோனியா
இவருக்கு வயிற்றில் கட்டி வளர்ந்துள்ளது - அது கிட்னியை நசுக்கும் அளவில் உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக மரண வேதனையில் அவதிப்பட்டு வருகிறார்.இப்போது வலி அதிகமாகிவிட்டபடியால் - கட்டி பெரிதாகிவிட்டது- என்றும் உடனடியாக ஆப்பரேஷன் செய்யவேண்டும் என்றும் அவசர உதவி தேவை என்றும் மின்னஞ்சல் செய்துள்ளார் !! அவரிடம் பேசிய போது இந்த வலியை பொறுத்துக்கொண்டே கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த குழந்தை இருந்து வருகிறது என்பதை மிகுந்த வருத்ததோடு சொன்னார் !!!

மெடிக்கல் ரிப்போர்ட் ஸ்கேன் கூகிள் மூலம் அப்லோட் செய்துள்ளேன் - பிடிஎப் கோப்பு https://drive.google.com/file/d/0B0ng1nVEvPr4RHgxWU5KQm9ja2s/edit?usp=sharing (கோப்பை தரவிறக்கம் செய்ய முடியவில்லை என்றால் தெரிவிக்கவும்)

திருவண்ணாமலையில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்த ஆப்பரேஷன் செய்வதற்கான வசதிகள் இல்லை - உங்களுக்கு தெரியும் தானே - சென்னையில் MMC யில் உள்ள மருத்துவர்கள் மட்டுமே செய்ய முடியும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்...

MMC யும் அரசு மருத்துவமனை / மருத்துவக்கல்லூரி தான், ஆனால் மூன்று மாதங்கள் அங்கே தங்கி சிகிச்சை எடுக்கவும் - ஆப்பரேஷன் வெற்றிகரமாக நடைபெற்று பிழைத்தால் - இன்ன பிற செலவுகளுக்கு சுமார் 30 ஆயிரம் வரை கேட்டுள்ளார்.

தாயில்லா பிள்ளையான சோனியாவின் தந்தையார் கண் பார்வை இழந்தவர் - அவரால் இது கண்டிப்பாக முடியாது என்ற நிலையில் நம்மிடம் உதவி கேட்டுள்ளார்.

நீங்கள் நேரடியாக லூர்து அவர்களிடம் பேசலாம், அவரிடம் மின்னஞ்சலில் மேல் விவரம் - தேவை எனில் - கேட்கலாம் அல்லது அவர் வங்கி கணக்கில் உங்களால் முடிந்த தொகையை கொடுத்து உதவலாம்...எவ்வளவு சிறிய தொகையானாலும் பரவாயில்லை...

லூர்து அவர்களின் மின்னஞ்சல் klourdu@gmail.com
அலைபேசி எண் : 9566615687

அவரது வங்கி கணக்கு விவரம்

Account Name : Punar Jeevan (New Life ) Trust
Savings Bank Account Holder : 0407 0530 0001 4629
IFSC: SIBL0000407
The South Indian Bank LTD
Poonamallee Branch
70 IBAYAM Complex, Trunk Rd.,
Karayan Chavadi, Poonamallee.
Chennai 600056

இதை வாசிக்கும் தோழர்கள் / தோழிகள் உங்கள் பேஸ்புக் வால் / ட்விட்டர் கணக்கில் / வலைப்பதிவில் இதனை பதிவு செய்யுங்கள், முடிந்தால் ஊடகத்துறை தோழர்களும் பதிவு செய்யுங்களேன் !!!

அப்டேட்

ஒரு சிறுநீரகம் முழுவதுமாக பழுதடைந்துள்ளது. (suppressed by tumor). இன்னொரு சிறுநீரகத்தின் வேலை செய்யும் தன்மையை பரிசோதித்து அது நன்றாக இருப்பதாக உறுதி செய்துள்ள மருத்துவர், திங்கள் அன்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்துள்ளார்.

இப்போதைக்கு நாம் செய்யவேண்டியது இந்த அறுவை சிகிச்சை நல்லபடியாக நடக்கவேண்டும் என்று நம்பிக்கையோடிருப்பதே !!! (மேலதிக உதவிகள் ஏதாவது தேவை எனில் என்று திங்கள் அன்று சொல்கிறேன்)

இதுவரை செய்யப்பட்ட உதவிகள் பற்றிய தகவல் - பேலன்ஸ் ஷீட் செவ்வாய் அல்லது புதன் கிழமை ஆன்லைனில் அப்லோட் செய்கிறேன் !!! நன்றி !!

மேலும் அப்டேட் / தகவல்கள்

முன்னதாக MMC யில் உடனடியாக அனுமதிக்கவும், ஆபரேஷன் செய்யவும் ஒத்துக்கொள்ளவில்லை. அங்கே இருந்தவர்கள் சொல்லிய தகவலில் ராய் மெமோரியல் மருத்துவமனையில் சென்று சந்தித்து சேர்த்தார்கள். சோனியா இப்போது இருப்பது 3 ஆம் மாடி - தேனாம்பேட்டை ராய் மெமொரியல் மருத்துவமனை... உதவிக்காக இருப்பது இரண்டு ஆசிரியைகள்..

மீனா :  மொபைல் எண் விரைவில் அப்டேட் செய்கிறேன்
ராஜேஸ்வரி: 8189938342

இவர்கள் இருவரும் ஒரு மாணவிக்காக சிரமம் பார்க்காமல் மிகவும் உதவியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை..

மொத்த செலவு 95 ஆயிரம் ஆகலாம் என்று எஸ்டிமேட் கொடுத்துவிட்டார்கள்...

இதில் ஏற்கனவே 10 (என் பங்கு) +10+2+5+30 (இன்னும் உறுதி செய்யப்படவில்லை) வந்துள்ளது, அவர்கள் அனுமதி பெற்று அவர்களின் பெயரை பதிவில் வெளியிடுவேன்..

இன்னும் 40k வரை தேவைப்படலாம் !! ஆகவே நல்லிதயங்கள் தொடர்ந்து இந்த பதிவை ஷேர் செய்து உதவவேண்டும்...

ஒரு சிறுநீரகம் நீக்கப்பட இருப்பதால் 3 மாதம் முதல் 6 மாதம் முதல் மருந்துகளும் கொடுக்கவேண்டும் !! ஆகவே தொகையில் மீதி இருந்தால் அதனை அதற்கு உபயோகப்படுத்துவேன்..

Comments

நல்ல பகிர்வு...
கண்டிப்பாக செய்வோம்...
AAB College said…
Thank you for sharing
https://aab-edu.net/

Popular Posts