Tuesday, September 16, 2008

கோவை பதிவர் சந்திப்பு படங்கள். பெயரிலி மன்னிக்கவும்.

சமீபத்தில் 2008ல் கோவை சென்றபோது...சும்மா சொல்லக்கூடாது...உடலை உறுத்தாதாத மெல்லிய வெய்யில்...மாலையில் மென்மையான க்ளைமேட்...பதிவர் மங்கை எப்போதும் சொல்வார்...எங்களோட கோவை மாதிரி வராது என்று...

என்னடா கோவைக்காரர்களோட ஊர்ப்பாசம் கொஞ்சம் ஓவராகவே இருக்கே என்று நினைப்பேன்...இப்போதுதான் தெரிகிறது கோவைவாசிகளால் ஏன் அவங்களோட ஊரை விட்டுக்கொடுக்க முடியவில்லை என்று...

அதிஷா செல்லாவின் அலுவலகத்தில் இருந்து சனிக்கிழமை அழைத்தார்...மருதமலையில் வலைப்பதிவர்களுக்கு காதுகுத்துவதாக...ச்சே..தங்கச்சி புள்ளைகளுக்கு காதுகுத்துவதாக...

செல்லா வழக்கம்போது மச்சினிச்சியை பார்க்க பழனி போய்விட்டதால் செல்லாவின் கார் கிடைக்காது...காலையில் பரிசலை அழைத்தபோது ராம் நகரில் இருந்து கிளம்புவதாக சொன்னார்...நான் வடவள்ளியில் இருப்பதாக சொல்லியபோது...அய்யோ பார்ட்னர் அங்கயே நில்லுங்க என்றார்...

ஒரு பெட்டிக்கடையில் உட்கார்ந்தேன்...ஏழு ரூபாய் பீடிக்கட்டுக்கு ஆறுரூபாய் கொடுத்து வேறு ப்ராண்ட் கேட்டுக்கொண்டிருந்தவரிடம்...ஏங்க...விலைவாசியெல்லாம் எப்படிங்க இருக்கு...என்றேன்...விலைவாசி எல்லாம் ரொம்ப குறைந்துவிட்டதாகவும், அரிசி கிலோ ரூ நூறுக்கு விற்றால்தான் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று தெரிவித்துவிட்டு அவர்பாட்டுக்கு பீடியை வாங்கிக்கொண்டு போய்விட்டார்...கோவை குசும்பு...

பரிசலோடு மொக்கைபோட்டுக்கொண்டே மருதமலை அடைந்து அங்கே ஒரு கடையில் பொரிகடலை செப்பரேட் பாக்கிங் வாங்கிக்கொண்டு அதிஷா வரும் படிநோக்கி இருவரும் அமர்ந்தோம்...மிள்காய் தூள் இட்ட ஒரு மாங்காய் வாங்கினேன்...சூரிய வெளிச்சத்தால் வெதும்பிய காய்...இரண்டு பீஸ்க்கு அப்புறம் வாங்கிய கடையிலேயே வைத்துவிட்டேன்...

அதிஷா குடும்பத்துடன் படியேறிவந்தார்...இட்லி,பொங்கல்,புளிசாதம், தயிர்சாதம் என்று பல ஐட்டங்களை தூக்கிவந்திருந்தார்கள்...பர்ஸ்ட் சாப்பாடு...என்று அழைத்துப்போய்...

இதற்கிடையில் ஈரவெங்காயம், வடகரையார் இருவரும் வந்து இணைந்தார்கள்...ரெண்டு வலைப்பதிவர்கள் சேர்ந்தாலே "சந்திப்பு சந்திப்பு" என்று பதிவு போடமுடியும்போது ஐந்துபேர் !!! ஹா !!! அப்புறம் என்ன..ஆனால் வழமையாக பதிவர் சந்திப்புகளில் பேசப்படும் எந்த விஷயங்களும் இல்லாமல், பொதுவாக பேசி கலைந்தோம்...எனக்கு தங்கமணி ஆணியை தயார்படுத்தியிருந்ததால் ஒரு மணிக்குள் போகவேண்டியாகவேண்டும் என்று சொல்லி ஈரவெங்காயம் காரில் ஏறி விரைந்து அட்டெண்டென்ஸ் போட்டேன்...

அடுத்த மேட்டர் : செல்லா, சஞ்ஜெய் மற்றும் நான் கேரளா சென்ற பயணம் பற்றியது...அது கண்டிப்பாக தனிப்பதிவாக எழுதவேண்டியது...பரிசல் பதிவில் இந்த பதிவுக்கான படங்கள் உள்ளது...என்னுடைய காமிராவை மருதமலை சந்திப்பின்போது எடுத்துசெல்லவில்லை...

ஞாயிறு மதியம் செல்லாவிண்ட காரில் ஞானும் செல்லாவும் பின்னே சஞ்ஜெயும் மலையாளக்கரையோரம் ஒதுங்கிய மேட்டரை விரிவாக எழுதுகிறேன், இப்'போதைக்கு கொஞ்சம் படங்கள்...!!!





என்னுடைய சோனி சைபர்ஷாட் பாய்ண்ட் அண்ட் ஹூட்டை வைத்து இப்படிக்கூட எடுக்கலாம் என்று காட்டிய செல்லா...



செல்லாவின் அலுவலகத்தில் நானும் சஞ்செயும்



நானும் சஞ்ஜெயும் ஏதோ ஒரு கரண்டு மரத்தின் அடியில்



நான் இருப்பது கேரளாவில். அண்ணை ஓசை செல்லா இருப்பது தமிழகத்தில். இருவரது பாஸ்போர்ட்டும் இந்தியாவில் வாங்கியது.



நானும் சஞ்ஜெயும் நிற்பது இதுக்கு கீழேதான்.



போற வழியில ஒரு ஆக்சிடெண்ட். எப்படியெல்லாம்ம் யோசிச்சு மோதுறானுங்கடா..



சஞ்ஜெய் மற்றும் ஓசையார் வாக்கிங் டுவேர்ட்ஸ் கேரளா. லாட்டரி சீட்டு வாங்கபோறாரா செல்லா ? இவ்ளோ சிரிப்பு...(இல்ல க்வாட்டர் ஒயினும், ராகி பக்கோடாவும் சாப்பிட்டதாலயா ?)

பி.கு : பெயரிலி ஓசையாரும் சஞ்ஜெயும் ஒன்றுதான் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு சஞ்ஜெயின் கோவை ஐப்பியை சப்ளைசெய்த நபர் யோசிக்கட்டும். பெங்களூர் என்றால் ரவி, கொரியா என்றால் ரவி, ஈரோடு என்றால் வால்பையன், திருப்பூர் என்றால் பரிசல், சென்னை என்றால் லக்கிலூக் என்ற மொக்கையான சிந்தனையிலிருந்து வெளியே வாருங்கடா மொதல்ல. குண்டு சட்டியில் குதிரை ஓட்டினது போதும். நீங்கள் நினைப்பதைவிட இந்த மீடியா நன்றாகவே ரீச்சாகிக்கொண்டிருக்கிறது...

Friday, September 12, 2008

கோவையில் வலைப்பதிவர் சந்திப்பு வைக்கலாமா ?

நான் ஒரு ரெண்டு நாள் கோவைப்பகுதியில் முகாம் அடிக்க இருக்கிறேன்...!!!

அப்படியே ஓசை செல்லா, வாத்தியார் சுப்பைய்யா போன்ற பிரபல பதிவர்களையும் அவர்களது கோவைவாழ் ஸ்டூடன்ஸையும் சந்தித்து மொக்கை போடலாம் என்று திட்டம்...

வாத்தியார் சுப்பைய்யாவுக்கு பெங்களூரில் இருந்து ஒரு ஸ்பெஷல் கிப்ட் கொடுத்து அவரை கூல் செய்யவும் திட்டம்..!!!

ஞாயிறு மாலை அண்ணா பார்க் பக்கமாக ஒரு சிறிய சந்திப்பு ஏற்பாடு செய்தால் நன்றாகவே இருக்கும்...

பொதுவாக ஓசை செல்லாவின் எண்ணுக்கு அழைத்தீர்கள் என்றால் நான் எங்கே இருக்கிறேன் என்று தெரிந்துபோகும்...

அங்கே நான் கிடைக்கவில்லை என்றால்

எனது சகோதரர் ரஞ்சித் 9345903889 அல்லது எனது ரோமிங் எண் 99025 84054 ஆகியவற்றில் இருப்பேன்...

எந்த பர்சனல அஜெண்டாவும் (எனக்கு) இல்லை என்பதால் லதானந்த் சார் எங்கே என்று தேடும் திட்டமும் உள்ளது, மற்ற மேட்டர் பிறகு பேசிக்கலாம்...

இப்போதைக்கு இதை படிக்கும் கோவை நன்பர்கள், கோவை வலைப்பதிவர் சந்திப்பு பற்றி திங்க் பண்ணி (ரூம் போட்டு யோசிச்சு) பதிவு போடுங்களேன்..

இராமராஜன் ஆடுகளை காணவில்லை (LIVE REPORT)

ஜெயா டீவியில் இப்போது ஓடிக்கொண்டிருக்கும் "கிராமத்து மின்னல்" என்ற படத்தில் ராமராஜன் ரேவதியின் ஆடுகளை மீட்க தண்ணீரில் இறங்குகிறார். அந்த சைக்கிள் கேப்பில் ராமராஜன் மேய்த்துக்கொண்டிருந்த ஆடுகளை காணவில்லை..

ஊர்க்காரர்கள் அவரை பிடித்து மரத்தில் கட்டுகிறார்கள்...(நாளைக்கு பஞ்சாயத்து கூடுன பிறகு நாட்டாமை வந்து தீர்ப்பு சொல்லுவாராம்)



ஆனால் ஆக்சுவலி அந்த ஆடுகள் வந்து மே.மே என்று கத்துவதை ரேவதி கேட்டு, ராமராஜனை "அவுத்து உடச்சொல்லி" கேட்டுக்கொண்டிருக்கிறார்...

தலைகூட சீவாம கிராமத்து உடையில் நிற்கும் விகல்பமில்லாத ராமராஜன் படங்களை இன்றைக்கும் ரசிக்கமுடிகிறது...இந்த வீடியோவில் ராமராஜன் பாடல் ஒன்றை ரீமிக்ஸ் செய்துள்ளதை கண்டிப்பாக ரசிக்கலாம்...

இந்த வார செருப்பு / சாணி கரைசல் :

டேய் லைவ் ரிப்போர்ட் போடுறதுக்கு கொஞ்சமாவது காமன்ஸென்ஸ் வேனாம் ? அத்தனை பேர் சொல்லியும் பதிவை அப்படியே வெச்சிருக்கும் பாரிஸ் திவாவுக்கு இந்தவார சாணிக்கரைசல்.

அடுத்தது யாரை திட்டுறேன் என்று தெரியவேண்டும் என்றால் மேலே பீட்ப்ளிட்ஸ் சப்ஸ்க்ரைப் பட்டனில் உங்கள் ஈமெயில் ஐடி கொடுத்து பதிந்துகொள்ளுங்கள்....

Wednesday, September 10, 2008

SSLC ? தேசிய மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் கல்வியுடன் பணி...

உங்கள்ள எத்தனை பேருக்கு இப்படி ஒரு மத்திய அரசு நிறுவனம் இருக்குன்னு தெரியாது...பாரஸ்ட் ஆப்பீஸர் லதானந் சாருக்கு ஒருவேளை தெரிந்திருக்கலாம்...

http://iwst.icfre.gov.in/

இந்த இணைய தளத்தை ஒருமுறை பார்வையிடுங்களேன்...

இங்கே என்ன மேட்டர் என்கிறீர்களா ?

1938 ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் இப்போது இத்தாலி நாட்டு வணிக நிறுவனங்களின் குழுமத்துடன் இணைந்து இப்போது பெங்களூர் மல்லேசுவரத்தில் பத்து ஹெக்டேர் அளவுள்ள பெரிய இடத்தி செயல்பட்டு வருகிறது...

முதலில் இந்த பொதுத்துறை நிறுவனம் என்ன வகையான ஆராய்ச்சிகளை செய்கிறது என்று பார்க்கலாம்..

எளிமையாக சொல்லப்போனால் சந்தன மரத்தில் இருந்து எண்ணையை பிழிந்து எடுக்கும் முறை, பல்வேறு மரவகைகளை ஏற்றுமத்திக்கு முன்பான ப்ராஸஸிங் ( ஒரு ரோஸ் உட் மரத்தை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யனும்னா இந்த நிறுவனத்தில் இருந்து சான்றிதழ் பெறனும்)

மேலும் பல்வகை சோப்புகள், அழகுசாதன பொருட்களில் பயன்படும் சிண்ட்ரெல்லா ஆயில், லெமன் க்ராஸ் ஆயில் போன்றவற்றை எப்படி பிரித்து எடுத்து, பதப்படுத்துவது போன்ற பல விடயங்களை சொல்லித்தருகிறார்கள்...

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருப்பவர்கள் மற்றும் புதிதாக ஏதாவது தொழில் தொடங்க விருப்பம் உள்ளவர்கள், அல்லது இந்தியாவில் செயல்படும் பல்வேறு ஏற்றுமதி நிறுவனங்களில் பணிபுரிய விரும்புபவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை இந்த நிறுவனம் காலங்காலமாக வழங்கி வருகிறது...

500 ரூபாய் படிப்பு செலவு மற்றும் 500 ரூபாய் தங்கும் வசதிக்கான செலவு...மொத்தம் ஐந்து வார படிப்பு. ஆகக்கூடி செலவு மொத்தமே 3000 ரூபாய்.

இந்த நிறுவனத்தில் கல்விக்கான தலைவர் டாக்டர் பங்கஜ் அகர்வாலிடம் பேசியபோது இந்த கல்வியை படித்தவர்களை கேம்பஸ் இண்டர்வியூ மூலம் நேரடியாக கம்பெனிகள் தேர்ந்தெடுத்துக்கொண்டு போய்விடுவதாகவும், ஆனால் படிப்பில் சேருவதற்கு மாணவர்களுக்கு தக்க விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதாகவும் தெரிவித்தார்...

சிறப்பாக படிப்பை முடிப்பவர்கள் இத்தாலி நிறுவனங்கள் அள்ளிச்சென்றுவிடுவதாகவும் தெரிவித்தான்...

தமிழ்கூறும் நல்லுலகம் இதனால் பயன் அடையட்டுமேன்னு இதை எழுதுகிறேன்...

இந்த சுட்டியையும் படித்துவிடுங்கள் : http://iwst.icfre.gov.in/awwtc/awwtc.htm

பேட்ச் நம்பர் 44 அடுத்த மாதம் 20.10.2008 அன்று ஆரம்பிக்கிறது, படிப்பில் சேர விரும்புபவர்கள் இந்த ஆராய்ச்சி மையத்தை தொடர்புகொண்டு உங்கள் இடத்தை உறுதிசெய்துகொள்ளுங்கள்...

கல்வியின் முழுமையான விவரம்

20/10/2008 - 25/10/2008 : முதல்நிலை படிப்பு. செலுத்தவேண்டிய கட்டணம் ரூ 500. இருப்பிட வசதி தேவை என்றால் மேலதிக கட்டணம் ரூ500 ( ஒரு வாரம்)

27/10/2008 - 08/11/2008 : முதல்நிலை படிப்பு. செலுத்தவேண்டிய கட்டணம் ரூ 500. இருப்பிட வசதி தேவை என்றால் மேலதிக கட்டணம் ரூ500 ( இரண்டு வாரம்)

10/11/2008 - 28/11/2008 : முதல்நிலை படிப்பு. செலுத்தவேண்டிய கட்டணம் ரூ 500. இருப்பிட வசதி தேவை என்றால் மேலதிக கட்டணம் ரூ500 ( மூன்று வாரம்)

பெங்களூர் மல்லேசுவரத்தில் இந்திய அறிவியல் கழகத்துக்கு அடுத்ததாக இந்த நிறுவனம் அமைந்துள்ளது...

தொடர்புகொள்ளவேண்டிய முகவரிகள்:

The Director.
Institute of Wood Science and Technology
Advanced Woodworking Training Centre
18th Cross, Malleswaram
Bangalore - 560 003
Ph: 080-23346811
080-57649559 (Direct)
Email: awtc_ice@icfre.org


The Commissioner
Italian Trade Commission
115, Maker Chambers VI
11th floor, Nariman point
Mumbai - 400 021
Ph : 022-22821125
022-22815654
Email : mumbai.mumbai@ice.it

THE Officer-in-charge, IWST
Advanced Woodworking Training Center
C/o IWST, Malleswaram 18th cross
Bangalore - 560 003
Ph : 080-23346811
Email : awtc_ice@icfre.org

நிறுவன வரைபடம் : http://iwst.icfre.gov.in/images/bangalore.jpg



உங்கள் சகோதரரோ நன்பரோ இதுபோன்றதொரு ப்ரேக்கை எதிர்பார்த்திருந்தால் அவர்களை இந்த படிப்பில் சேர்த்துவிடவும்...

வாழ்த்துக்கள்...!!!

Thursday, September 04, 2008

ஷகீலாவும், நமீதாவும் பின்னே ஞானும்.லக்கியும்,வரவணையானும்



ஷகீலாவும்



நமீதாவும்



பின்னே வரவணையான், லக்கிலூக் , ரவியும்.

இடம்: உண்மைத்தமிழனின் சொந்த ஊர்..
தேதி : தெரியல..
பதிவோட நோக்கம் : கும்மி

ஸ்டார்ட் த மீஜிக்

ஹைய்யா...உயிர்மை புக்கு இங்க வாங்கலாமே !!!

உயிர்மை புத்தகங்களை இணையத்தில் வாங்கும் வசதியை ஏற்படுத்தி இருக்கிறாங்க...

இங்க சொடுக்கி பார்வையிடலாம் : www.uyirmmai.com

நன்றி Humanபுத்திரன்.

வால்பையனை வைத்து அதிரடி போட்டி - பரிசு

வலையுலகில் காமெடியில கலக்கிய / கலக்கிக்கிட்டு இருக்கிற மக்கள்ல எனக்கு தெரிஞ்ச பட்டாசுகள் லக்கிலுக், இளவஞ்சி, கைப்புள்ள, வெட்டிப்பயல், கொங்கு ராசான்னு ஒரு செட்டு இருக்குது...

இன்னைக்கும் மனசு சரியில்லைன்னா இவங்க பழைய பதிவு ஏதாவது படிச்சா மனசு லேசாகிடும்...

ஆனா புதுசா வந்திருக்குற கும்மி கோஷ்டிகள் வால்பையன், பரிசல், அதிஷா, ஜிம்ஷா, சின்னப்பையன், ராப் என்று இவர்களின் அட்டூழியம் அளவுக்கு மீறுது...சில சமயம் படிச்சு சிரிச்சு அலுவலகத்துல அடுத்தவங்க பைத்தியம்னு நினைக்கிற மாதிரி...

அதிரடியா ஒரு சின்ன போட்டி வெச்சு இந்த கும்மி கோஷ்டிகளின் உண்மையான திறமைகளை பரிசீலிக்க...

இதோ ஒரு போட்டி...தாம் தூம் படத்தில் அங்கங்கே ரஷ்ய வார்த்தைகள் பேசப்படுகின்றன, ஒரு மன்னும் புரியல...ஆனால் நான் கேள்விப்பட்டவரை ரஷ்ய மொழி தெரிந்த ஒரே ஒருவர் வலையுலகில், அது வால்பையன்...

வால்பையனுக்கு தெரிந்த ரஷ்ய வார்த்தை ஒன்றை பின்னூட்டத்தில் சொல்பவர்களுக்கு பாலபாரதியின் அவன் அவள் அது புத்தகம் பரிசாக கொரியரில் அனுப்பிவைக்கப்படும்...

பின்னூட்ட மட்டுறுத்தல் இல்லாததால் கும்மி கோஷ்டிகள் காத்திருக்கத்தேவையில்லை, அடிச்சு பட்டையை கிளப்பவும்...

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....