ஒரு விளக்கம்..

தமிழ்மணம் நிர்வாகிக்கு...

என் மறுமொழி நிலவர சேவை நீக்கி உள்ளீர்கள் - என்னை கலந்து ஆலோசிக்காமல். ஆகவே எனது விளக்க கடிதம் இதனுடன் அனுப்புகிறேன்.
அன்னை தெரசா பற்றி ஒரு தூஷன பின்னூட்டம் வந்தது எனது இந்த பதிவில்.

போலி பின்னூட்டத்தை நான் அனுமதித்ததால் என் மறுமொழி சேவை நீக்கியதாக தெரிவித்தது இந்த பதிவு

ஆரம்பத்தில் இருந்து வஜ்ரா மீது ஒரு சந்தேகம் எனக்கு...காரணம் அவர் பின்னூட்டம் இட்டு சில வினாடிகளில் சர்ச்சைக்குரிய பின்னூட்டம் வந்தது...
பிறகு அவர் தனிமடலில் கூறினார்..குமரன் மடல் செய்தார்..அது அவராக இருக்க முடியாது, அப்படிப்பட்ட ஆள் அல்ல என்று...ஆகவே சந்தேகம் தீர்ந்தது..

இது நடந்தது வெள்ளி அன்று..

அடுத்த இரு நாட்களும் விடுமுறை எனக்கு...

நான் அந்த பின்னூட்டத்தை அப்படியே வைத்திருக்க வேறொரு காரணமும் உண்டு..வெளியிடத்தேவை இல்லை என்று நினைத்தேன்..இப்போது வெளியிடுகிறேன்...

ஒரு போலியாரின் போர்வையில் ஒளிந்துகொண்டு பல போலிகள் இங்கே...அனைத்து பதிவுகளிலும் கைவரிசையை காட்டிக்கொண்டு இருக்கின்றனர்...காலையிலும் போலி பின்னூட்டம், இரவிலும் போலி பின்னூட்டம், அதிகாலையிலும் போலி பின்னூட்டம்...

போலியாருக்கு வேறு வேலையே கிடையாதா...போலி பின்னூட்டமிடுவதை தவிர..ஆக பலர் போலியின் போர்வையில் போலி பின்னூட்ட கைவரிசை காட்டுகின்றனர் என்று தெரிந்தது...

ஆகவே,போலி போலிகளை கண்டறிந்து - தோலுரிப்பது தான் நோக்கம்..

கணிணி நெட்வொட்க் ஆராய்ச்சி மற்றும் பணி துறையில் கால் பதித்து வெற்றி நடைபோடும் என் கல்லூரி நண்பர்கள் உதவியுடன் வஜ்ரா பெயரில் / அல்லது வஜ்ராவே போட்ட சர்ச்சைக்குரிய பின்னூட்டத்தை வைத்து - கண்டுபிடிக்க முயற்ச்சி செய்யலாம் என்பதே திட்டம்...

என் கல்லூரி நன்பர் ஒருவர் கூகுள் நிறுவனத்திலும் பணிபுரிவதாக கேள்வி.

நன்பர்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும்..

அவர்களுக்கும் விடுமுறை..எனக்கும் விடுமுறை..வெள்ளியன்றே தொலைபேசினேன்..அவர்கள் ஆஸ்திரேலியாவில் இருப்பதால் வெள்ளி மாலை இந்திய நேரத்திற்க்கு அவர்கள் பணி முடித்து சென்றுவிட்டனர்...

ஆகவே, திங்கள் அன்று அவர்களிடம் உள்ள மென்பொருள் உதவியுடன் முயற்ச்சி செய்யலாம் என்பதே திட்டம்.

ஆனால் நீங்கள் - அவசரப்பட்டுவிட்டீர்..என்னிடம் ஒரு மடல் அனுப்பி கேட்டிருந்தால் நான் தகுந்த தன்னிலை விளக்கம் கொடுத்திருப்பேன்..

இனிவரும் காலங்களிலாவது என் போல் யாரும் பாதிக்கப்படாமல் இருக்க யாராவது புகார் கொடுத்தால் - இருதரப்பு வாதங்களையும் கேட்டு பிறகு முடிவெடுக்கவும்...

மேலும் மறுமொழி நிலவரச் சேவை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்..

இதன் நகல்:

காசி
லக்கிலூக்
விடாது கருப்பு
குமரன்
வெற்றி
முத்து தமிழினி
டோண்டு
ஜெயராமன்
வஜ்ரா
கானா பிரபா
கொங்கு ராசா
துளசி கோபால்
இளவஞ்சி
அனுசுயா
கவிதா
நாமக்கல் சிபி
பின்னூட்ட நாயகர் கோவி.கண்ணன்
பாஸ்டன் பாலா
குழலி
ரோசா வசந்த்

( ரவி மனதுக்குள் சொல்லிக்கொள்வது : (மனம் 1) டேய் டேய்..இப்படி பதிவு போட்டதால தமிழ்மனத்தின் இறையான்மைக்கு பங்கம் வந்திடுத்து என்று தமிழ்மணத்தில் இருந்தே தூக்கிவிடுவாங்க... ( மனது 2 சொல்கிறது) அடப்போடா..தமிழ்மணம் இல்லைன்னா தேன்கூடு...அது இல்லைன்னா ஒரு குருவிக்கூடு...எதுவுமே இல்லைன்னா ??)


விடை கிடக்கிறது : மனம் 1 சொல்கிறது : ஆபீஸ் வேலையை கவனிக்க வேண்டியதுதான் ஹி ஹி ஹி

Comments

இந்த பதிவுக்கு நான் எந்த பின்னூட்டமும் இடவேண்டிய அவசியமில்லை.... இருந்தாலும் உங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டிய தார்மீக கடமை எனக்கு இருப்பதாக உணர்கிறேன்.... எனவே தான் இந்தப் பின்னூட்டம்.....


////ஒரு போலியாரின் போர்வையில் ஒளிந்துகொண்டு பல போலிகள் இங்கே...அனைத்து பதிவுகளிலும் கைவரிசையை காட்டிக்கொண்டு இருக்கின்றனர்...காலையிலும் போலி பின்னூட்டம், இரவிலும் போலி பின்னூட்டம், அதிகாலையிலும் போலி பின்னூட்டம்...

போலியாருக்கு வேறு வேலையே கிடையாதா...போலி பின்னூட்டமிடுவதை தவிர..ஆக பலர் போலியின் போர்வையில் போலி பின்னூட்ட கைவரிசை காட்டுகின்றனர் என்று தெரிந்தது...

ஆகவே,போலி போலிகளை கண்டறிந்து - தோலுரிப்பது தான் நோக்கம்..////

உண்மையே.... ஏனைய போலிகளின் பாவங்களையும் சேர்த்து இயேசுநாதரைப் போல நம் புகழ்பெற்ற "போலியாரே" பாவங்களைச் சுமக்க வேண்டியிருக்கிறது :-)

ஆரம்பத்தில் நானும் போலியார் மீது மிக கோபமாக இருந்தேன்.... ஆனாலும் போலியாரிடமாவது "தன்னம்பிக்கை" "கொஞ்சம் நேர்மை" இருப்பதாக உணர்கிறேன்.... ஏனைய சில இழிப்பிறவிகள் தங்களை யோக்கியர்களாக வெளியே காட்டிக்கொண்டு தங்கள் உள்மன வக்கிரங்களை அனானி / அதர் ஆப்ஷன் மூலம் வெளிக்காட்டுவதைப் பார்ந்து நொந்து விட்டேன்....
காசி
லக்கிலூக்
விடாது கருப்பு
குமரன்
வெற்றி
முத்து தமிழினி
டோண்டு
ஜெயராமன்
வஜ்ரா
கானா பிரபா
கொங்கு ராசா
துளசி கோபால்
இளவஞ்சி
அனுசுயா
கவிதா
நாமக்கல் சிபி
பின்னூட்ட நாயகர் கோவி.கண்ணன்
பாஸ்டன் பாலா
குழலி
ரோசா வசந்த்

இவ்வளவு பேருக்கும் சேர்த்தே ஆப்பு வெச்சிருக்கேன்னு மறைக்காம சொல்லுகிறீர்கள்.
அப்பு ... உங்கள் பதிவை பின்னூட்ட தொகுப்பில் தேடுவதில்லை ... நேரிடையாகவே அப்ப அப்ப வந்து பாத்துட்டு போறேன். குருவி கூட்டில் இருந்தாலும் சரி கூடாரத்தில் இருந்தாலும் சரி பாத்துட மாட்டோம் ?
dondu(#4800161) said…
"ஆகவே, திங்கள் அன்று அவர்களிடம் உள்ள மென்பொருள் உதவியுடன் முயற்ச்சி செய்யலாம் என்பதே திட்டம்.

ஆனால் நீங்கள் - அவசரப்பட்டுவிட்டீர்..என்னிடம் ஒரு மடல் அனுப்பி கேட்டிருந்தால் நான் தகுந்த தன்னிலை விளக்கம் கொடுத்திருப்பேன்..

இனிவரும் காலங்களிலாவது என் போல் யாரும் பாதிக்கப்படாமல் இருக்க யாராவது புகார் கொடுத்தால் - இருதரப்பு வாதங்களையும் கேட்டு பிறகு முடிவெடுக்கவும்..."

இன்று புதன். திங்கள் அன்று ஏதேனும் கண்டுபிடிக்க முடிந்ததா?

ஆனால் தமிழ்மணம் நிர்வாகிகள் தெளிவாகவே கூறியுள்ளனர், போலிப் பின்னூட்டங்களை சம்பந்தப்பட்டப் பதிவர் பல முறை பாதிக்கப்பட்டவர் கேட்டுக் கொண்ட பிறகும் எடுக்கவில்லையெனில் அவர் பதிவுகள் தமிழ்மணம் மறுமொழி இற்றைப்படுத்தலிலிருந்து தூக்கப்படும் என்று. சம்பந்தப்பட்டப் பதிவரிடம் போய் விளக்கங்கள் கேட்கப் போவதாக எங்கும் குறிப்பிடவில்லை என்பதை. ஆக, அவர்கள் தூக்கியது அவர்கள் அறிவித்த நெறிமுறையின்படியே.

போலிப் பின்னூட்டத்தை எடுத்து விட்டீர்கள், ஆனால் அதை உண்மையெனத் தவறாகக் கருதி நீங்கள் கொடுத்த எதிர்வினையை அப்படியே வைத்திருப்பதன் நோக்கம் என்ன? அது இதோ:
"வஜ்ரா..இதைவிட கொடுமையா அசிங்கப்படுத்த முடியுமா ? உங்கள் மேல் மரியாதை வைத்திருக்கும் செந்தழல் ரவியின் மனதை குத்தீட்டி கொண்டு கிழித்துவிட்டீரே...

மற்றவர்கள் தெரிந்து கொள்ளட்டும் என்பதற்காக தான் பிரசுரம் செய்துள்ளேன்..

மியூஸ் இதை ஆமோதிப்பார்..சில ஆன்லைன் லிங்குகளை கொடுப்பார்..என்ன அழுக்கு சிந்தனை.."

வஜ்ராவை இந்தப் போலிப் பின்னூட்டம் சம்பந்தமாக எதிர்த்து அனானி போட்டப் பின்னூட்டம் இதோ:

"போலி ரசிகர் மன்றம் said...
///அவர் கொல்கத்தாவில் விபசார விடுதி நடத்தி கோடி கோடியாக சம்பாதித்தார். அவ்வளாவுதான் இப்போது சொல்ல முடியும்.////
லவடிகோபால், அன்னை தெரசா என்ன உன் ஆத்தா ஜெயலலிதாவா? உன் பாப்பார பாம்பு புத்தியை கடைசியில காமிச்சுட்டே. ஒழுங்காக ஒருத்தனுக்கு பொறந்தவன் இதுமாதிரி எந்த காலத்திலேயும் நெனைக்க மாட்டாண்டா வஜ்ரா.
Thursday, June 29, 2006 2:45:15 PM"

நான் கூறுகிறேன், உங்கள் போலிப் பின்னூட்ட நீக்கமும் அரைகுறையாகத்தான் இருக்கிறதென்று. உங்களுக்கு வஜ்ரா மேல் இருக்கும் காழ்ப்புணர்ச்சியை இதைவிட மலிவாக நீங்கள் காட்டிட இயலாது.

போன வெள்ளியன்றே வஜ்ரா அவர்கள் அந்த அனானி பின்னூட்டம் இடவில்லை என்று தெரிந்தும், அது ஒருவனுடைய நற்பெயரைத் தாக்குகிறது எனத் தெரிந்த பிறகும் சாவகாசமாக விடுமுறை கழிக்கச் செல்கிறீர்கள், அதற்கானக் காரணத்தை இங்கு இப்பதிவில் கூறினீர்கள். ஆனால் அப்பதிவில் நீங்கள் கூறியது வேறு காரணம். அது இதோ:
"ஜெயராமன் அவர்களே...
அவனை நிறுத்தச்சொல்லு...நான் நிறுத்தரேன் என்கிறமாதிரி...
தாங்கள் இன்னும் மியூஸ் பின்னூட்டத்தை வைத்திருக்கிறீர்தானே...
( அது எங்கள் மனதை புன்படுத்தும் என்று தெரிந்தும்)
ஆகவே நீங்கள் நீக்கிவிட்டு வாருங்கள்...அப்போது நானும் பரிசீலனை செய்கிறேன்...
மேலும் இப்போதெல்லாம் நான் என் பழைய கொள்கைகளை தாங்கிக்கொண்டு இருக்கவில்லை...
Thursday, June 29, 2006 3:09:38 PM"

என்ன போங்குத்தனமான வாதம்? வஜ்ராவை பற்றிய தப்பெண்ணத்தை நீக்கிக் கொள்ள ஜெயராமன் அவர்கள் தன் பதிவிலிருந்து ஒரு பின்னூட்டத்தை நீக்க வேண்டுமெனக் கேட்கிறீர்களே, இதை என்ன சொல்வது?

இவ்வளவு நடந்த பிறகும் அதர் ஆப்ஷனை வைத்து அழகு பார்க்கிறீர்கள். அதை வைத்து நல்லது கெட்டதை பகுத்தறியும் அறிவு உங்களிடம் இல்லாதபோது, அதை நீக்கி பிளாக்கர் பின்னூட்டம் மட்டும் செயல்படுத்துவதுதானே புத்திசாலித்தனம்?

இந்தப் பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்ட இதன் நகல் என்னுடைய "முரட்டு வைத்தியம்-4" பதிவிலும் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2006/05/4.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
இந்த விசயத்தில் தமிழ்மணத் திரட்டி நிர்வாகம் செய்ததில் எந்தத் தவறுமில்லை. முழுக்க முழுக்க சரியே.
நீங்கள் கொடுக்கும் இந்த விளக்கம்கூட நீங்கள் ஏன் அப்பின்னூட்டத்தை அழிக்காமல் வைத்தீர்கள் என்பதற்கான விளக்கம் தானேயொழிய எந்த விதத்திலும் மறுமொழி காட்டும் சேவை நிறுத்தப்பட்டதை விமர்சிக்க உதவாது.

தனிமடலில் தொடர்பு கொண்டிருந்தாலும் இதே விளக்கத்தைத் தானே கொடுக்கப்போகிறீர்கள்? இந்த விளக்கம் எப்படி உங்களுக்கு மறுமொழி காட்டும் சேவையை தொடர்ந்து வழங்க உதவுமென்று எனக்கு எள்ளளவும் புரியவில்லை.

நீங்கள் அவரைக் கண்டுபிடிக்க, முறியடிக்க எடுத்த முயற்சிக்குப் பாராட்டு. ஆனால் எந்தவிதத்திலும் நீங்கள் பின்னூட்டம் வெளியிட்டு வைத்திருந்ததை தமிழ்மணம் பொறுத்துக்கொண்டு உங்களுக்கு தொடர்நது அச்சேவையை வழங்கவேண்டுமென்று எதிர்பார்க்க முடியாது.

கொஞ்சம் யோசித்துச் செயற்பட்டிருந்தால், அவரைக் கண்டுபிடிப்பதற்குரிய வசதிகளை உறுதிப்படுத்திக்கொண்டு, பின் அப்பின்னூட்டத்தை வெளியிட்டு உடனடியாகச் செயற்பட்டிருக்கலாம். அப்பின்னூட்டத்துக்கான மறுப்பு வந்து நீங்கள் அப்பின்னூட்டத்தை நீக்க வேண்டிய காலம் வருவதற்குள் ஒரு முடிவு கிடைத்திருக்கும். அதைவிட்டுவிட்டு தான்தோன்றித்தனமாக பின்னூட்டத்தை வெளியிட்டுவிட்டு, அதற்குப்பின் சனி ஞாயிறு விடுமுறை, நண்பன் வீட்டுக்குப் போய்விட்டான் என்று காரணம் சொல்வது சிறுபிள்ளைத்தனம்.

நீங்கள் எடுத்த கண்டுபிடிக்கும் முயற்சிக்காக நீங்கள் செய்த தியாகமாக இதை எடுத்துக்கொள்ளுங்கள்.
செந்தழல் ரவி,
நீங்கள் அனுப்பிய மேலுள்ள பதிவின் நகல் கிடைத்தது. காசி அண்ணர் அவர்கட்கும், செல்வராஜ் அண்ணர் அவர்கட்கும் நான் மீண்டும் ஓர் பின்னூட்ட மூலம் உங்களின் மறுமொழிச் சேவையை இயங்க வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளேன். அப்பின்னூட்டம் இன்னும் பிரசுரமாகவில்லை. அப் பின்னூட்டத்திற்கு அவர்களின் பதிலை எதிர்பார்த்திருக்கிறேன். ஓர் நல்ல பதிலைத் தருவார்களென எதிர்பார்க்கிறேன்.
டோண்டு சுட்டிக்காட்டிய படி மீதம் உள்ள பின்னூட்டங்களும் அழிக்கப்படும்.

வசந்தன் காமெடியையும் ரசித்தேன்...
//இன்று புதன். திங்கள் அன்று ஏதேனும் கண்டுபிடிக்க முடிந்ததா?///

நான் இன்னும் பணியில் இருப்பதால் திங்கள் கிழமை கொஞ்சம் வேலை..செவ்வாயன்று வேலை முடிந்தது...

இன்று ரிசல்ட் கிடைத்துவிடும்..

:) :)
ரவி, உன் நன்பன் என்ற முறையில் சொல்லுகிரேன்.இந்த வலைபதிவு வேலை எல்லாம் விட்டுவிட்டு உன் டீம் மெம்பர்கலுக்கு டெலகாம் சொல்லிக்கொடுக்க ஆரம்பி.இது உனக்கு வெட்டி வேலை.
நோண்டு கூறியபடி வேலைசெய்துவரும் ரவியை போலியார் தலைமைக்கழகம் வண்மையாக கண்டிக்கிறது.

சிம்ரன் ஆப்பக்கடை மேல்மாடி,
துபாய்.
நன்றி இளமை....தமிழ்மணம் பார்க்கலைன்னா தூக்கமே வரதில்லை..

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
///உண்மையே.... ஏனைய போலிகளின் பாவங்களையும் சேர்த்து இயேசுநாதரைப் போல நம் புகழ்பெற்ற "போலியாரே" பாவங்களைச் சுமக்க வேண்டியிருக்கிறது :-)///

மலையூர் மம்பட்டியான் பேரை சொல்லி கொள்ளை அடித்தமாதிரி :))
Anonymous said…
அன்பு ரவி,
இளமை சொல்வதையே நானும் சொல்கிறேன்.
பிரபா.
பிரபா...

தொலை தொடர்பு மற்றும் மொபைல் டெஸ்டிங் தொழில்நுட்பம் குறித்து முழுமையாக எழுதவேண்டும் என்பது என் அவா..

நீ விரும்பியபடி, அந்த வேலை முடிந்ததும் செய்கிறேன்..

நன்றி டா.
சுமா said…
Dear செந்தழல் ரவி,

உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன்.தமிழ்மணம் Display செய்யாவிட்டாலும் படிப்பேன்.
நீங்கள் கூறியபடி telecom பற்றி எழுதுங்கள், எனக்கு மிகவும் useful ஆக இருக்கும்.
தமிழ்மனத்தில் இருந்து நீக்கியது தவறு என்று தோன்றுகிறது.
நீங்கள் விளக்கம் கொடுத்துவிட்டதாலும்,பின்னூட்டங்கள் இப்போது இல்லை (பார்க்கவில்லை முன்பு, டோண்டு பின்னூட்டத்தில் இருந்து தெரிந்து கொண்டேன்) தடையை விலக்கிடுவாங்க என்று நினைக்கிறேன்.

அன்புடன்,
சுமா
கோவி.கண்ணன் - உங்க பின்னூட்டம் மூலமா கேவி கேவி அழவைச்சிட்டீங்க...

பாசக்கார பயதான் நீங்க...
//வஜ்ரா மேல் இருக்கும் காழ்ப்புணர்ச்சியை///

அப்படி எல்லாம் கிடையாது டோண்டு அவர்களே...மொத்தமாக பப்ளிஷ் செய்யும்போது போய்விட்டது...நீங்க சுட்டிகாட்டிய பிறகுதான் கண்டு அழித்தேன்...

நன்றி..
நன்றி சுமா..சில கான்சப்டுகளை தமிழ்படுத்தும்போது பல பிரச்சினைகளை சந்திக்கிறேன்...குமரனிடம் கேட்டுத்தான் நிறைவுசெய்ய வேண்டும்..
goinchami-9B said…
//இந்தப் பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்ட இதன் நகல் என்னுடைய "முரட்டு வைத்தியம்-4" பதிவிலும் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2006/05/4.html
அன்புடன்,
டோண்டு ராகவன்//

இதுகூட தனது பதிவு எப்போதும் சமீபத்தில் மறுமொழியப்பட்ட இடுகைகளில் தெரியவேண்டும் என்பதற்காக டோண்டு செய்யும் சூழ்ச்சிதானே என்ன கேவலமான ஜென்மம்! இந்த பொழப்பு பொழைக்கறதுக்கு நாண்டுகிட்டு சாகலாம்!
dondu(#4800161) said…
"இதுகூட தனது பதிவு எப்போதும் சமீபத்தில் மறுமொழியப்பட்ட இடுகைகளில் தெரியவேண்டும் என்பதற்காக டோண்டு செய்யும் சூழ்ச்சிதானே என்ன கேவலமான ஜென்மம்! இந்த பொழப்பு பொழைக்கறதுக்கு நாண்டுகிட்டு சாகலாம்!"

என்ன செய்வது, போலி டோண்டுவைப் போன்ற இழிபிறவிகளுடன் யுத்தம் செய்ய வேண்டியிருக்கிறதே.

தன் சொந்தப் பெயரில் வராமல் ஊரார் பெயரைத் தனக்கு இனிஷியலாகப் போட்டு தன் பிறப்பைப் பற்றியே மற்றவர்களைச் சந்தேகப்பட வைக்கும் போலி டோண்டு போன்ற இழிபிறவிகள் நாண்டுக்கிட்டு சாகணும்.

இன்னும் ஒரு விஷயம் ரவி அவர்களே, குறைந்த பட்சம் இந்த டோண்டு ராகவன் அதர் ஆப்ஷனையோ அல்லது அனானி ஆப்ஷனையோ உபயோகிக்க மாட்டான் என்பதை உங்களுக்கு பலமுறை தெளிவாக்கியதால் இம்முறை என்னுடைய முதல் இரண்டு சோதனைகள் மட்டும் பாஸ் ஆகின்றனவா எனப் பார்த்து இப்பின்னூட்டத்தை மட்டுறுத்தல் செய்யவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
என் புதிய கணினியில் கொஞ்சம் பிரச்சினை இருப்பதால் - பின்னூட்டம் வந்துள்ளது குறித்தான மடல் - கட்டம் கட்டமாக தான் தெரியும். ஆகவே முதலில் பப்ளிஷ் செய்து, பிறகு பதிவை ஓப்பன் செய்துதான் பார்க்கவேண்டும்..

பிலாகு டேஷ்போர்டில் - பல அனானி / பிலாக்கர் கமெண்டுகள் பப்ளிஷ் செய்யாமலும் - டெலீட் செய்யாமலும் இருப்பதால் அங்கு வைத்து கண்டறிவது சிரமம். ( மேலும் சில போலிகள் எழுதிய தூஷன பின்னூட்டங்கள் வேறு இருப்பதால் மீண்டும் மீண்டும் சென்று பார்ப்பது பிடிப்பதில்லை)

ஆகவேதான் ஆப்பக்கடைக்காரர் பின்னூட்டம் கூட வெளியாகி உள்ளது.அது பற்றி குறிப்பிட்டவர் மடல் அனுப்பினால் நீக்குவேன்...

அம்புட்டுதேங்க...வர்ட்டா...
//செந்தழல் ரவி சைட்...
கோவி.கண்ணன் - உங்க பின்னூட்டம் மூலமா கேவி கேவி அழவைச்சிட்டீங்க...

பாசக்கார பயதான் நீங்க...
//
பயதான் சொன்னவுடனே கொஞ்சம் பயந்துட்டேன்.
செந்தழல் ரவி. உங்களின் இந்தப் பதிவை என் பதிவின் பின்னூட்டத்தில் கண்டு இங்கே வந்தேன். நீங்கள் குறிப்பிட்டப் பதிவில் பின்னூட்டங்கள் போட்டவர் 'குமரன் எண்ணம்' என்ற பெயரில் எழுதும் திரு. செந்தில் குமரன் அவர்கள். அவரும் தொடக்கத்தில் குமரன் என்ற பெயரில் எழுதினார். பின்னர் அது குழப்பம் விளைவிக்கலாம் என்று கருதி வேறு பெயரில் எழுதுங்கள் என்று நான் வேண்டிக் கொண்டதால் பெருந்தன்மையுடன் குமரன் எண்ணம் என்ற பெயரில் எழுதத் தொடங்கினார். அவரே உங்களுக்குத் தனிமடலும் அனுப்பியிருக்கலாம். உங்களின் இந்தப் பதிவு அவருக்குப் பின்னூட்டமாகச் சென்றிருக்கவேண்டியது என்பதைத் தெரியப்படுத்தவே இந்தப் பின்னூட்டம்.

உங்களுக்கு 'தொலை தொடர்பு' பற்றிய தமிழாக்கங்களில் ஏதாவது ஐயம் இருந்தால் தயங்காமல் கேளுங்கள். எனக்குத் தெரிந்தவரை சொல்கிறேன்.
குசும்பன் வேறு
யாருமல்ல. வந்திய
தேவன் தான். வந்திய
தேவன் மறந்து போய்
குசும்பன் ஐடியில்
ஸ்ரீகாந்திற்கு
பதில்
சொல்லியிருந்தார்.
தான் குசும்பன்
என்பதை காட்டி
கொண்டு விட்டார்.
யாரோ தகவல் சொல்லி
இரண்டு நாள் கழித்து
அந்த பின்னூட்டத்தை
நீக்கியும்
விட்டார். இப்படி
வசமாய் மாட்டி
கொண்டு குசும்பன்
பதிவில் 'கடைசி
வார்த்தை' என்று
எழுதி அப்பன்
குதிருக்குள் இல்லை
என்று சொன்னார்.
யாருமே இதை
கவனித்ததாக
தெரியவில்லை.
ரவி சரியாத்தான் பதிவுக்கு தலைப்பு வைத்திருக்கிறீர்
தனித்திரு - தனியா பொலம்புகிற மாதிரி ஆயிடுச்சே
விழித்திரு - மறுமொழி திரட்டப்படும் வரை விழி(ளி)த்திரு
பசித்திரு - ஒடியாங்கடா, அனானியாவது ஒடியாங்கடா எதாவது பாத்து ஒரு பின்னூட்டம் போட்டு போங்கடா
:)))))))
ரவீந்திரன்,

உண்மையில் தமிழ்மணம் காரர்கள் ரொம்ப ரொம்ப நல்லவர்கள். காரண காரியம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டார்கள். சம்பந்தப்பட்ட அந்த பதிவை அழித்துவிட்டு முறையிட்டீர்கள் என்றால் நிச்சயம் உங்கள் பதிவைச் சேர்த்துக் கொள்வார்கள். கவலை வேண்டாம்.
நல்லா காமெடி செய்யறீங்க கருப்பு அவர்களே...

நான் எதற்க்கு அந்த பதிவை அழிக்கவேண்டும் ?

ஒருவேளை இவங்க எல்லாம் சேர்ந்து காசுபோட்டு தமிழ்மணத்தை வாங்கிட்டிருப்பாங்களோ ?

என்ன கூப்பிடலியே அப்பு...

:) :) ஏதாவது பதிவெழுதினால் தனிமடல் செய்து தெரியப்படுத்தவும்...
பின்னூட்டத் திரட்டியில் ரவி....... பின்னங்கால் பிடறியில் அடிக்க இடறினாலும் பரவாயில்லை என்று ஓடோடி வந்தேன்..
உள்ளேன் அய்யா !
கோவி.கண்ணன் - உங்க அளும்புக்கு அளவே இல்லையே...

உங்க வயது என்ன பதினாறா - தமிழ்மணத்தில் துள்ளி விளையாடுறீரே
ரவி,
உங்களுக்கு அது நகைச்சுவையாகத் தெரிவது வருத்தத்துக்குரியது. அப்படித்தான் தமிழ்மண நிர்வாகிகளின் அறிவிப்பையும் நகைச்சுவையாகவே எடுத்துக் கொண்டுள்ளீர்கள். உங்களுக்கு பின்னூட்டத் திரட்டி வசதியை நீக்கியதையும் அப்படியே நகைச்சுவையாக எடுத்துக் கொண்டிருந்தீர்களென்றால் நன்று. உங்களுக்கு மீண்டும் அவ்வசதி அளிக்கப்பட்டுள்ளது.
உண்மையிலேயே எது நகைச்சுவை?
ரவி உங்களை தமிழ்மண நிர்வாகிகள் சரியாக் புரிந்து கொள்ளவில்லை... பல பதிவுகளை நிர்வாகிக்கும் பொழுது எல்லோர் பற்றியும் அவர்கள் அறிந்து கொள்வது முடியாத காரியம். தமிழ் மண நிர்வாகிகள் செய்தது சரியல்ல இருப்பினும் எல்லா பிரச்சனைகளும் இப்பொழுது சரியாக முடிந்திருப்பது நல்ல விஷயமே உங்களுக்கு சரியான முறையில் இந்த பிரச்சனையில் ஆதரவளித்திருக்க வேண்டும் அப்படி செய்யாமல் விட்டதற்கு எனக்கு இந்த பிரச்சனை பற்றி மிக தாமதமாக தெரிய வந்ததே காரணம். அதற்காக வருந்துகிறேன்.

All is well that ends well...
கோச்சுக்காதீங்க வசந்தன்...

தலைவர் பாணியில் சொல்லவேண்டும் என்றால் கிடைக்கறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்கறது கிடைக்காது...

///நீங்கள் எடுத்த கண்டுபிடிக்கும் முயற்சிக்காக நீங்கள் செய்த தியாகமாக இதை எடுத்துக்கொள்ளுங்கள். ///

இதை தான் காமெடி என்று சொன்னேன்..

என்னை முதல்முதலில் தியாகி என்று சொல்லிட்டீங்க இல்லையா..

மற்றபடி உங்க மனதை புன்படுத்தி இருந்தால் அன்புடன் மன்னிச்சுருங்க...சரியா..
வாழ்த்துக்கள் ரவி.... எப்படியோ உண்ணாவிரதம் எல்லாம் இருந்து காரியத்தைச் சாதிச்சிட்டோம்...

ஆனாலும் இந்த களேபரத்துல ஒரிஜினல் மேட்டர் (அன்னை தெரசா) Vanish ஆயிடுச்சி பார்த்திங்களா?

முதல் கட்டத்தில் வெற்றி அவங்களுக்கு தான்..... நாம தோத்து தான் போயிட்டோம்...
நீங்கள் சொல்வது சரி என்று தான் படுகிறது லக்கி....
Dharan said…
அட என்னா தலீவா உங்களுக்கே ரீவீட்டா...(இதற்கான அர்த்தம் தல ரவி க்கு மட்டும்தான் பிரியும்)

கமெடியா கீதுப்பா....
லக்கிலூக் சொல்லியதுபோல வெற்றி அடந்தவர்களில் ஒருவரின் பின்னூட்டம்...

வாங்க தரன்...உங்களுக்கே காமெடியா...நிரம்ப சந்தோஷம்..அட்லீஸ்ட் உங்களுக்கு ஒரு காமெடி சீனையாவது நான் கிரியேட் பன்னினேனே...

தொண்டரடிப்பொடியனா லட்சனமா போய் வேலையைப்பாருங்கப்பு...
Anonymous said…
நன்பர் : நண்பர்
நன்பர்களுக்கு : நண்பர்களுக்கு
முயற்ச்சி : முயற்சி
தமிழ்மனத்தின் : தமிழ்மணத்தின்
Anonymous said…
ஏதோ நடக்குது என்னமே புரியலா

தமிழ்மணமே வேண்டாமே
ரவி!
மீண்டு(ம்)வந்ததற்க்கு வாழ்த்துக்கள்!
தொலைத் தொடர்பு பற்றி தாங்கள் எழுதப் போகும் தொடருக்கு வாழ்த்துக்கள்!

//உங்க வயது என்ன பதினாறா - தமிழ்மணத்தில் துள்ளி விளையாடுறீரே //
ஆமாம் ரவி இந்தக் கோவி கொஞ்சம் ஓவராத்தான் ஆடுராரு,கொஞ்ச நாளைக்கு முன்னால இந்தக் கோவி.கண்ணன் ஆடி ஆப்பு வாங்கியது மற்ந்துட்டதோ?:))))

அன்புடன்...
சரவணன்.

Popular Posts