ஆயாவை கொல்வது எப்படி ?

மறுபடியும் பெரியம்மா பைய்யன் விஷயத்தையே சொல்லப்போறேன் என்றாலும் - சொல்லவில்லை என்றால் மேட்டர் வெளிவராதே !!!!

மேட்டர் பெருசா ஒன்னுமில்லைங்க...எங்க பெரியம்மா மகன் கோபு அவங்க பெருசை - அதாவது அவங்க கிழவியை போட்டுத்தள்ள முடிவுசெய்தான்...

அதிர்ச்சி அடையாதீங்க...கள்ளிப்பாலுக்கு தப்பிவந்த அந்த கிழவி செய்த அழிச்சாட்டியம் கொஞ்ச நஞ்சமா ? சொல்லிமாளாது...( நான் சொல்லலீங்க - கோபு சொல்லுறான்)

எல்லா வீட்டிலயும் நடக்கறது தான்...ஆனாலும் இந்த கிழவி செய்தது ரொம்ப ஓவர், அதனால கோபுவும், அவனோட தம்பியும் சேர்ந்து கிழவிக்கு ஆப்பு வைக்கிறது அப்படீன்னு முடிவு செய்தாங்க..

கிழவி வழக்கமா போடுற பொடிடப்பாவில மேலாக்க பொடித்தூளு கொஞ்சம் தெரிகிறமாதிரி கொட்டி - கீழால மொளகாத்தூளை போட்டுட்டானாம்...

அன்னைக்குன்னு பார்த்து - ரொம்ப ஜலதோஷமாயிருக்கு - கொஞ்சம் கொடும்மா உன்னோட பொடியை என்று எங்க பெரியம்மா வாங்கி கொஞ்சம் உள்ளே இழுக்க - அய்யய்யோ எரியுதே - என்று அவங்க அலற - கிழவி உஷாராகிட்டது...அத்தோட பயலுகளை போட்டுக்குடுத்து - ஏற்க்கனவே எரிச்சலில் இருந்த பெரியம்மா - அடி பிச்சிட்டாங்க...

அதனால அடுத்த முயற்ச்சியை எடுக்க கொஞ்ச நாள் ஆனாலும் - பாத்ரூமில் கரண்ட் ஷாக் அடித்து கிழவி அகால மரணம் என்று - தினத்தந்தியில் வந்த செய்தியை பார்த்து உஷாரானான் நம்ம கோபு..

அப்புறம் என்ன - எலக்ட்ரீஷியன் மகனுடன் கொஞ்சம் அளவளாவி - கொஞ்சம் வயர் கூட தேற்றிவிட்டான்..கனெக்ஷனும் இரவே கொடுத்தாகிவிட்டது - காலையில் கிழவி தட்டு தடுமாறி - தொட்டியில் இருந்து தண்ணீர் எடுக்கும்போது அலறல் சத்தம் மட்டும்தான் கேட்கவேண்டும் என்று பாத்ரூம் பின்னால் காத்திருந்தால் - பெரியப்பா தொட்டியை நோக்கி போகிறார் - அலறக்கூட முடியாமல் - திருடனுக்கு தேள் கொட்டியதுபோல் விழித்த கோபு - பெரியப்பா - இது என்னாடா ஒயர் என்று கையில் - எடுத்து போட்டுவிட்டதால் - தப்பினார்...விதியில் இருந்து...பிறகு கனெக்ஷனை கண்டு பிடித்து - சாத்தினார் - கதவை அல்ல - நம்ம பயல் கோபுவை...

என்னடா இது - என்று ஒரு ஆறு மாதம் காத்திருந்த பூதம் மீண்டும் விழித்துக்கொண்டது...புட் பாய்சன் - புட் பாய்சன் என்று பேசிக்கறானுங்களே....என்று அதுபற்றி பக்கத்து தெரு டாக்டரிடம் விசாரித்து தெரிந்து கொண்ட கோபு - சிக்கனை - இரண்டு நாள் கழித்து கிழவிக்கு கொடுத்து -புட் பாய்சனை வேண்டி விரும்பி வரும்படி செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டான்...

புட் பாய்சனாகிய சிக்கனோடு - கொஞ்சம் தூக்க மாத்திரையும் கலந்து ஆயாவை மேலுலகத்திற்க்கு பார்சல் செய்வது என முடிவு செய்தான்..

ஞாயிறு செய்த சிக்கனை பாத்தித்தில் மூடி - கட்டிலுக்கடியில் வைத்தான், புதன்கிழமை ஆனது...

கொஞ்சம் வீச்சம் அடித்தது...மறுபடி வாணலியில் சிறிது வறுவல் செய்து, கிராமத்துக்கு சென்றிருந்த பாட்டிக்காக வெயிட்டிங்..

ஆறு மணிக்கு தான் வந்தது கிழவி...வீட்டு ஹாலில் காலை நீட்டி போட்டு உட்கார்ந்திருந்தது...

பெரியம்மாவின் தூக்க மாத்திரை டப்பாவில் மீதம் இருந்த நாலு தூக்க மாத்திரையும் பொடி செய்து - தண்ணீரில் கலந்து அப்படியே மேலாக்க தெளித்து - ரெடியானது மயக்க + உணவு விஷ (அதாங்க புட் பாய்சன்) சிக்கன்...

ஆயா - இந்தா சிக்கன்..உனக்காகவே வச்சிருந்தேன் என்று நீட்ட...

கண்ணூ...சிக்கனாடீ..ஆயாவுக்காகவே வச்சிருந்தியா...இந்தாடி செல்லம்...நீ ஒரு துண்டு சாப்பிடு என்றது கிழவி..

வேணாம் ஆயா...நீ சாப்பிடு...( இது நம்ம கோபு...)

இல்லை..நீ ஒரு துண்டு சாப்பிடு...மீதியை நான் சாப்பிடுறேன்...என்றது எமகாதகி..

ஒரு துண்டு சாப்பிட்டா ஒன்னும் ஆகிடாது என்று மனதுக்குள் நினைத்தபடி - ஒரு சிக்கன் துண்டை வாயில் திணித்த ஆயா பாசத்துக்கு கட்டுப்பட்டான் கோபு...

சில நிமிடத்தில் - தலை கிறு கிறு என்று வந்தது நம்ம கோபுவுக்கு....

மயங்கினான்...

ஹாஸ்பிட்டலுக்கு தூக்கிக்கொண்டு ஓடினார் - பணிமுடித்து வந்த பெரியப்பா...

புட் பாய்சன் ஆகி இருக்கு சார் - அவில் எடுத்திருப்பான் போல - ரெண்டு நாள் பெட்ல இருக்கனும்...என்று டாக்டர் சொன்னது சன்னமாக கேட்டது நம்ம கோபுவுக்கு...

இரண்டு நாள் பெட் வாசம்...

சனிக்கிழமை டிஸ்சார்ஜ்...கால்வாசி சாப்பிட்ட ஹார்லிக்ஸ் பாட்டில் - மீதிவைத்த பழங்கள் எல்லாத்தையும் பொறுப்பா எடுத்துக்கிட்டி - பெரியப்பாவோட வீட்டுக்கு வந்து பாக்குறான்...

எங்க பெரியம்மா வாங்கிக்கிட்டு வந்த அல்வாவை நடு வீட்டில காலை நீட்டி போட்டுக்கிட்டு சாப்பிட்டுக்கிட்டு இருக்கு..

ஆயா...

Comments

ஆரம்பிச்சிட்டியா ராசா ? கமெண்ட் பிறகு அடிக்கிறேன் - இப்போ வேலை கொன்சம்.
ஏதோ கொஞ்சம்..:)
தம்பி said…
விவரமான கிழவிதான் :)
கடைசியில கிழெவி போச்சா போகலியா? என்னப்பா ரவி - பல்லில்லாத கிழெவியை கொல்ல இத்தனை முயற்ச்சியா?
- பிரபா
ரவி,
போன பதிவிலயே கொஞ்சம் சந்தேகம் இருந்தது, ஆனால் இப்போ அது நிச்சயம் ஆயிடிச்சி, உண்மைய சொல்லுங்க கோபு அப்படிங்கிறது - ரவி தானே?


//அந்த கிழவி செய்த அழிச்சாட்டியம் கொஞ்ச நஞ்சமா ? சொல்லிமாளாது...//

பாவம் ரெம்ப கஷ்டப்பட்டிருப்பீங்க போல இருக்கு

//அல்வாவை நடு வீட்டில காலை நீட்டி போட்டுக்கிட்டு சாப்பிட்டுக்கிட்டு இருக்கு..
ஆயா//

அப்போ உங்களுக்கெல்லாம் அல்வாவா,
பாட்டிக்கு ஆயுசு கொட்டி,அன்புடன்...
சரவணன்.
நல்ல நகைச்சுவையான எழுத்து ஆனா முதியோர்களிடம் இவ்வளவு ‍வெறுப்பு ஏனோ? உங்களுக்கு? .... :(
சே...சே....அப்படியெல்லாம் கிடையாது - அனு...

லைட்டா எடுத்துக்கோங்க ப்ளீஸ்..

ஐ.லவ்.ஆயா...
சூப்பர் பாட்டி.
//எங்க பெரியம்மா வாங்கிக்கிட்டு வந்த அல்வாவை நடு வீட்டில காலை நீட்டி போட்டுக்கிட்டு சாப்பிட்டுக்கிட்டு இருக்கு..
//

பாட்டியே அல்வா பாட்டியாக இருக்கும் போது பாட்டிக்கு அல்வா கொடுக்க முயன்றால் இப்படித்தானோ :))))
//அதிர்ச்சி அடையாதீங்க...கள்ளிப்பாலுக்கு தப்பிவந்த அந்த கிழவி செய்த அழிச்சாட்டியம் கொஞ்ச நஞ்சமா ? சொல்லிமாளாது...( நான் சொல்லலீங்க - கோபு சொல்லுறான்)//
நகைச்சுவை என்றாலும் இந்த வரிகள் ரொம்ப மோசமானவை.
மங்கை said…
உங்க அட்டூளியத்துக்கு ஒரு அளவே இல்லையா

///இந்தியன் said...
கடைசியில கிழெவி போச்சா போகலியா?///

இதுல இந்த சந்தேகம் வேற

((ஆமா.. நீங்க எந்த company லே வேலை செய்யரீங்க))
என்ன ரவி,

நீங்க செஞ்ச வில்லன் வேலையை எல்லாம் உங்க பெரியம்மா பையன் மேல போடுறது நியாயம் இல்லைங்க...
கோச்சுக்காதீங்க சந்தோஷ்...ச்சும்மா...:)
மங்கை அவர்களே...

இந்தியன் என்று கமெண்ட் போடுவது என் நன்பன் பிரபா - சிங்கையில் இருந்து
பாவம் அவனும் ஏதாவது ஆயா போபியாவில சிக்கி இருப்பானோ என்னம்மோ ?

ஹி ஹி

நாம குப்பை கொட்டுறது எல்.ஜி
Desperado said…
//ஐ.லவ்.ஆயா...//

அடடா..அடடா...என்னமா பாசத்த காமிக்கீங்க...பாட்டிக்கு படிக்க தெரியுமா? பதிவைக் பாட்டிக்கு காட்டி பாசத்த தெரியப்படுத்துங்க..

ஆனா படிவு நல்லா தமாஷா தான் இருந்துச்சி. :))))))))
ஒரு கிலோ சிக்கனை ஒண்டியா சாப்பிட்டதுல ஆறு மாசத்துக்கு முன்னாடி போய் சேந்துடுச்சிங்க பாட்டி...

பரலோகத்திருந்து பாத்துக்கிட்டு இருக்கும்...
Anonymous said…
Very Funny !
நன்றிங்னாவ்.

Popular Posts