புத்தம் புதிய புத்தகமே...(தலைப்பு:காப்பி ஓனர்:கோவி.கண்ணன்)

பிடித்த புத்தகப்பட்டியலை வெளியிடச்சொல்லி பின்னூட்ட நாயகர் சொல்லிட்டாரு...அதுக்கப்புறமும் சும்மா இருந்தா நல்லா இருக்குமா?

எனக்கு பிடிச்சதெல்லாம் காமிக்ஸ் புத்தகங்கள் தானுங்க...எஸ்.விஜயன் நடத்தும் சிவகாசி பிரகாஷ் பப்ளிஷர்ஸ்க்கு மனியார்டர் அனுப்பி அள்ளிருவேன்...

பிறகு நேரம் கிடைக்கும்போது படிக்கிறது.....

சென்ற மாதம் சென்னைக்கு போனபோது சில புத்தகங்கள் வாங்கினேன்..

1. மது மங்கை மேதை - குஷவந்த் சிங்

சூப்பரான புத்தகம்...மெய்யாலுமே நல்ல எழுத்தாளர்தான்...சாம்பிள்..நாடாளுமன்ற நியமன உறுப்பினராக இருந்த காலத்தில் நடந்ததை எழுதி இருக்கார்...காற்று பிரிவதை பற்றி...உறுப்பினர்கள் அவர்கள் திருப்தியை இரு விதங்களில் வெளிப்படுத்துவார்கள் - ஒன்று ஏப்பம் - மற்றது - காற்று பிரிவது என்று சொல்கிறார்...:))

ஒருமுறை சத்தமாக காற்று பிரிந்ததை - இது சபை அவமதிப்பா இல்லையா என்று ஒரு உறுப்பினர் கேட்டாராம்...:))

2. புத்தர் ஜாதகக் கதைகள்

அருமையான கதைகளை கொண்டது...யார் வெளியீடு என்பதை நான் நாளை வெளியிடு(!!!)கிறேன்..

3.மைக்ரோவேவ் குக்கிங்

இதைபடித்து செய்த சிக்கன் தீய்ந்துவிட்டது என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்...மற்றபடி தரமான படங்களுடன் அருமையாக இருக்கிறது...

மேற்க்கண்ட மூன்று புத்தகங்களும் - தி.நகர் போத்தீஸ் எதிரே கொஞ்சம் இடப்புறம் உள்ள ஒரு கடையில் - பதிப்பகத்தார் கடை என்று நினைக்கிறேன்.. - வாங்கினேன்...

4. இரத்த படலம் - லயன் காமிக்ஸ் வெளியீடு

மொத்தம் 13 பாகமுங்க..இது வரை பத்து பாகம் கையில் இருக்கு...1986 ல் இருந்து வருது..93ல் இருந்து வாங்குறேன்..தன்னையே தேடும் ஒருவனின் கதை..மைக்கல் வான்ஸ் ஓவியங்கள் படு ஜோர்....ஒரு சின்ன - டயலாக் இல்லாத ஒரு காட்சிக்கு கூட - அருமையாக ஓவியம் தீட்டும் வான்ஸ் உழைப்பு - ஒரு மைல் கல் என்று சொன்னால் மிகையாகாதுங்க...

அதை தரமாக தமிழ்கூறும் நல்லுலகிற்க்கு தந்த எஸ்.விஜயனை - எவ்வளவு பாராட்டினாலும் தகும்...

மற்றபடி - இரவுக்கழுகு - ரேஞ்சர் டெக்ஸ் வில்லர், லக்கி லூக் (வலையுலக லக்கி லூக் அல்ல - நிஜ லக்கி லூக், பரலோகத்துக்கு ஒரு பாலம் / ஜேன் இருக்க பயமேன் என்ற கதைகள் எல்லாம் படு ஜோரா இருக்கும்), சிக்-பில் ( அருமையான காமெடி கதைகள் உண்டு ) - இதனுடன் இலவச இணைப்பாக வந்த மதியில்லா மந்திரி - தலைகீழாய் ஒரு தினம் - சூப்பர்...

ஏதோ எழுதியாச்சு - நம்ம பங்குக்கு...

நான் அழைக்கும் நண்பர்கள்..

1. லக்கி லூக்
2. அனுசுயா
3. கவிதா
4. இளமாறன்
5. மங்கை

மறக்காதீங்க...நீங்க எழுதி முடிக்கும் வரை விடமாடேன் ஆமாம்...:))

Comments

காமிக் படிக்கிறது நல்ல விசயம்தான் ... சீனர்கள் வயது வேறுபாடின்றி கார்டூன் புத்தகங்களில் மூழ்குகிறார்கள். தினத்தந்தி சிந்துபாத் கதையை தேடித் தேடிப் படித்தவர்களில் நானும் ஒருவன்.

சிரிப்பூட்டும் வாயுபற்றி எழுதி சிரிக்க வைத்துவிட்டீகள்.:))

எனது அழைப்பை அலைகழிக்காமல் உடனடியாக நிறை வேற்றியதற்கு 'சதயம்' அவர்களிடம் சொல்லி ஒரு மோனிகா பொலுசி ( ?) படம் அனுப்ப சொல்றேன் :)
//ரேஞ்சர் டெக்ஸ் வில்லர்,//

ஒரே ரத்தம் இப்ப இல்ல அப்ப :)
///ஒரே ரத்தம் இப்ப இல்ல அப்ப :)///

காதுலயா ??
///சிரிப்பூட்டும் வாயுபற்றி எழுதி சிரிக்க வைத்துவிட்டீகள்.:))///

குஷ்வந்தின் நடையில் வயிறை புன்னாக்கிடும்..
குஷ்வந்த் சிங் அவரது புத்தகத்தில் அவருடைய மனங்கவர்ந்த நாடாளுமன்றத் தோழி ஜெ. ஜெயலலிதா பற்றி ஏதாவது ஜொள்ளி இருக்கிறாரா?
சொல்லி இருக்கார் லக்கி...

நல்ல அழகி..சிறந்த பேச்சாளி என்று...

அவ்ளோதான் :))
ரவி,

ஆஹா..... இப்படிப் போகுதா கதை.

இந்தத் தலைப்புக்கு காப்பி ஓனர் நான் இல்லையா?

ஜனவரி 2006லே காப்பிரைட்
இருக்கேப்பா(-:
காப்பிரைட் : துளசி கோபாலுக்கு மாற்றி கொடுக்கப்படுகிறது...

இவங்க பின்னூட்ட நாயகின்னு ஊருக்கே தெரியுமே...

:))
//செந்தழல் ரவி said...
///சிரிப்பூட்டும் வாயுபற்றி எழுதி சிரிக்க வைத்துவிட்டீகள்.:))///

குஷ்வந்தின் நடையில் வயிறை புன்னாக்கிடும்..
//

ஒரு வேளை வயிறு புண்ணாகுவதால் தான் அது வருகிறதே. குஷ்வந்த் சிங் பெயரிலேயே வச்சிருக்கார் அதான் :))
Mayooresan said…
நீங்க சொன்னதுகளில லயன் காமிக்ஸ் கதைகள் நான் வாசித்திருக்கின்றேன். இன்றும் என்னுடைய புத்தக இறாக்கையில் பல லயன் காமிக்ஸ் புத்தகம் உண்டு. வரலாற்றுப் புத்தகத்தில் வைத்து டெக்ஸ் வில்லரின் இரத்த நகரம் வாசித்தபோது ரீச்சரிடம் மாட்டுப்பட்டு நன்றாக அடி வேண்டியது இன்றும் மறக்க முடியாது!!!!!!!
//காதுலயா ?? //
நான் கதையில சொன்னனுங்க டெக்ஸ்வில்லர எனக்கும் பிடிக்கும் அப்புறமா பூந்தளிர்ல வருமே ஒரு குரங்கும் வேட்டைக்காரனும் அதுவும் பிடிக்கும்
//அருமையான கதைகளை கொண்டது...யார் வெளியீடு என்பதை நான் நாளை வெளியிடு(!!!)கிறேன்..//

ஹலோ... குஷ்வந்த் சிங் ஜோக்கு நேற்று '*நேற்று சத்தமாக வெளியிட்டிங்க*' இதை எப்போ வெளியிடப் போறிங்க :))
விடமாட்டீங்க நீங்கன்னு தெரியும்...நேத்தே பார்த்துக்கொண்டு வந்திட்டேன்...ஹுக்கும்..

மது - மங்கை - மேதை - கண்ணதாசன் பதிப்பகம்...

Popular Posts