நான் ரொம்ப வியர்டுங்க (Wierd) விட்ருங்க...

வியர்டு ஆட்டத்துக்கு கார்த்திக் ப்ரபு கூப்டாக...சுடர் ஆட்டத்துக்கு லக்கி லூக் கூப்டாக..அப்புறம் ஏதோ ஆட்டத்துக்கு ரிச்மண்ட் தமிழ் சங்கத்துக்காரங்க கூப்டாக...கடைசியில் இப்போதான் கொஞ்சம் நேரம் கிடைச்சுது...சரி அப்படியே லேட்டஸ்ட் ஆட்டமான வியர்டு ஆட்டத்துல கொஞ்சம் இறங்கினா என்னான்னு வந்துட்டேன்...

சில பல வியர்டுகளை நீங்களும் பார்த்திருக்கலாம்...பேசியிருக்கலாம்...ஆனா டோட்டலா வியர்டான ஆளு இருக்காமுன்னா அது நாந்தானுங்கோவ்...சரி அப்பாலிக்கா அதுல ஒரு அஞ்சே அஞ்சு எடுத்து பட்டியல் போடோனுமாமே...போட்டுருவம்...

சாப்பாட்டு விஷயம்

கையில அமவுண்டு சேர்ந்தவுடனே ஸ்டார் ஹோட்டல்லதான் சாப்பிடுவேன், பப்புல தான் பிண்ட் பியர் அடிப்பேன் அப்படீன்னு போவாங்க பலபேர்...ஒரு முறை நான் ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பி வந்துட்டு மறுபடி ப்ராஜக்ட் டைட்டானதால சிங்கப்பூரில போய் ஒரு மாதம் Singtel நிறுவனத்தில ட்ரெயினிங் போய்ட்டு, திரும்ப சிட்னி போறதா ப்ளான்...2005 மே மாசம்னு நினைக்கிறேன்....பெங்களூர் இண்டர்மீடியட் ரிங் ரோடுன்னு ஒரு ரோடு இருக்கு...அங்கே கட்டிட வேலை செய்யுறவங்களுக்கு ஒரு தள்ளுவண்டியில கூழ் + மோர் எல்லாம் விற்ப்பாங்க...நான் வண்டியை ஓரங்கட்டி ரெண்டாவது சொம்பு கூழை உள்ளே இறக்கிக்கிட்டிருக்குமோது தோள் மேல ஒரு கை விழுது...வாட் ரவி, வாட் ஆர் யூ டூயிங் ஹியர்னு...பார்த்தா என்னோட ப்ராஜக்ட் மேனேஜர்....நான் ஆபீஸ்ல ட்ரெயினிங் கண்டக்ட் பண்றதா சொல்லிட்டு கூழ் குடிச்சிக்கிட்டிருந்தா...:)) அப்புறம் ஒரே அட்வைஸ் மழை....பி ஹெல்த் கான்ஷியஸ்..டோண்ட் ஈட் ரோட் சைட் புட் அப்படீன்னெல்லாம்......நாங்கல்லாம் அதையா கேப்போம்...இப்போக்கூட ரெண்டு சொம்பு கூழ்தான் அடிச்சேன் லஞ்சுக்கு...ம்ம்ம்ம்...நான் கொஞ்சம் வியர்டுங்க...விட்டுடுங்க..

கமெண்டிங் விஷயம்

எல்லா விஷயத்தையும் லைட்டா எடுத்துக்கற ஆளு..பெரிய விஷயம் கூட என்னை பாதிக்காம லைட்டா எடுத்துப்பேன்...
ஒரு முறை இந்த மாதிரி நானும் என்னோட அத்தை மகனும் பஸ்ல போய்க்கிட்டிருந்தப்போ, வண்டி நின்னுருச்சு...எங்களுக்கு முன்னால நீண்ட வரிசையில் வண்டிகள் நின்னுக்கிட்டிருந்தது...எல்லாரும் என்ன என்னனு விசாரிச்சிக்கிட்டிருந்தாங்க...ஒரு ஆள் ஜன்னல் வழியா சொன்னான்...ஆக்சிடெண்டுப்பா...ரெண்டு பேர் அவுட்...என்று....உடனே நான் கேட்டேன்...அடுத்த ஆளை இறங்கி ஆடச்சொல்லவேண்டியது தானே அப்படீன்னு...ஒரு முறை முறைச்சான் பாருங்க....சில சமயம் யாரவது அங்கே ஆக்சிடெண்டுப்பா, பத்து பேர் அவுட் அப்படீன்னா, மீதிப்பேர் என்ன ஆனாங்க அப்படீன்னு கேட்டு நல்லா வாங்கிக்கட்டியிருக்கேன்.....ம்ம்ம்ம்...நான் கொஞ்சம் வியர்டுங்க...விட்டுடுங்க..

டென்ஷன் விஷயம்

பலபேர் பல விஷயங்களுக்கு டெங்ஷன் ஆவாங்க...நானும் சில விஷயங்களுக்கு டெங்ஷன் ஆகிற ஆளுதான்...ஆனால் பல நேரங்களில் நான் ரொம்பவே கூல்...தலைமேலே இடி விழுந்தாலும் மின்னல் என்ன கலர்னு பார்த்துக்கிட்டிருப்பேன்....பல சமயம் தலைபோகிற பிரச்சினையை எல்லாம் கூட கூலாக எடுத்துக்கிட்டி சுத்திக்கிட்டிருக்கேன்....ஒரு முறை எனக்கு ஒரு இண்டர்வியூ...ஒரு நாலு வருஷம் முன்னாடி...நான் பார்க்கவேண்டிய மானேஜர் அந்த அலுவலகத்தில் அப்போது இல்லை...எப்போது வருவார் என்று கேட்டதுக்கு இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும் என்று சொல்லப்பட்டது...சரி அப்படியே வெளியே வந்தேன்...பக்கத்தில் ஒரு க்ரிக்கெட் கிரவுண்ட்...சின்னப்பிள்ளைகள் கிரிக்கெட் விளையாடிக்கிட்டு இருந்தாங்க...நான் கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தேன்...பிறகு கொஞ்ச நேரம் பந்தை எடுத்துப்போட்டேன்...பிறகு எனக்கு பவுலிங் கொடுத்தார்கள்...என்னுடைய சிறப்பான பந்துவிச்சினால் எதிர் அணி சுருள, நமக்கு பேட்டிங்கும் கிடைச்சது...அப்போது ஒரு கார் எங்கள் கிரவுண்டை க்ராஸ் செய்தது.....பிறகு இரண்டு மணி நேரம் முடிந்தவுடன் இண்டர்வீயூவுக்கு வியர்த்து வழிய சென்றேன்...சட்டையெல்லாம் மண்...பார்த்தவுடன் மானேஜர் கேட்டார்...நீங்கள் தானே அங்கே க்ரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தது என்று...நான் அட்டகாசமாக சிரித்தேன்...வேலையும் கிடைத்தது....சிறப்பாக பணி செய்து மானேஜரிடம் நல்ல பெயரும் வாங்கினேன்...இரண்டு மாதம் முன்பு ஒரு ஹோட்டலில் அவரை பார்த்தபோது அவரது சகாக்களிடம் எல்லாம் இந்த விஷயத்தை சொல்லி ஒரே சிரிப்பு.....அவங்களிடமே மீண்டும் இண்டர்வியூவுக்கு போவப்போறேன்...ம்ம்ம்...நான் கொஞ்சம் வியர்டுங்க...விட்டுடுங்க..

கொள்கை மறுப்பு விஷயம்

மனிதனுக்கு உபயோகப்படாதா விதிகள் மீறுவதற்க்கே என்பது கொள்கை....Unwanted Rules to be Broken...எவனாவது மொக்கையான ரூல்ஸ் போட்டா பிடிக்காது...உருப்படியான ரூல்ஸ் என்றால் மதிப்பதில் தப்பில்லை...ஆனால் மொக்கையாக ஒன்றுக்கும் உதவாத ரூல்ஸை போட்டு எரிச்சல் மூட்டினால் அதை உடைத்து எறியும்போது சும்மா குளுகுளுன்னு இருக்கும்...கடவுள் மறுப்பு கொள்கையை ஏற்றது சிலபல ஆண்டுகளுக்கு முன்னால்தான்.....கடவுள் பெயரால் மக்களை முறைப்படுத்தினார்கள், வழிப்படுத்தினார்கள் என்பது என்னமோ உண்மைதான்...நாகரீகம் அற்ற கூட்டத்தை வழிப்படுத்த ஒரு பயமுறுத்தும் ஆப்ஜெக்ட் தேவைப்பட்டது அந்த காலத்தில்.....ஆனால் இப்போது சாமி கண்ணை குத்திவிடும் என்று எவனும் திருடாமலோ, கொள்ளையடிக்காமலோ இல்லையே...அதனால் தான் தானே போலீஸ் கோர்ட் எல்லாம்...ஆக காலத்துக்கு பொருந்தாத அந்த சாமியை கும்பிடத்தான் வேண்டுமா ? கல்லையையும்,சிலையையும்,ஆபிரகாமிய மதங்களையும் ( நன்றி ஆர்.எஸ்.எஸ்) பின்பற்றுபவர்கள் சொல்வதெல்லாம் கடவுள் உலகத்தை படைத்தார் என்பதே...அட வெண்ணைகளா, கடவுள் உலகத்தை படைத்தான் என்றால் பரிணாம வளர்ச்சி கொள்கையை ஏன் ஒத்துக்கொண்டீர்கள், குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்று உள்ள ஆதாரங்களை ஏன் ஏற்றுக்கொண்டீர்கள் ? உங்கள் அறிவுக்கு எட்டாத விஷயம் என்றால் அதை கடவுள்மேல் போட்டுவிடுவீர்களா ? கடவுள் படைக்கும்போதே ஏன் சாட்டிலைட் டீவீக்களையும், லேப்டாப்புகளையும் படைக்கவில்லை ? கடவுள் உலகத்தை படைக்கும்போதே பெங்களூருவில் எட்டு அடுக்கு சாலைகளையும் படைத்திருக்கலாம் இல்லையா ? கடவுள் உலகத்தை ரட்சிக்கிறார் என்றால் ஏன் சுனாமியும், நில நடுக்கங்களும் ? அப்படி கடவுள் உலகத்தை தண்டிக்கிறார் என்றால் ஏன் ஜப்பானில் அணுகுண்டு வீசி லட்சக்கணக்கானவரை, ஆயிரக்கணக்கானவரை கொன்ற அமெரிக்காவை ஏன் தண்டிக்கவில்லை மடையர்களே...நீங்க யாரும் கோச்சுக்காதீங்க, நான் உங்களை புண்படுத்த இதை சொல்லவில்லை...நான் என்னை நோக்கி சொல்லிக்கறது இது...ஆமாம் இந்த விஷயத்தில் நான் கொஞ்சம் வியர்டு....விட்ருங்க.....

ஹெல்ப்பிங் விஷயம்

யாரு எக்கேடு கெட்டா எனக்கென்ன, நான் பாட்டுக்கு என்னோட வேலையை பார்த்துக்கிட்டு போலாமே அப்படீன்னா மனது கேக்கமாட்டேங்குது......போனமாசம் காலையில ஜாக்கிங் போயிட்டு இருக்கும்போது ஒரு பொண்ணு ரோட்டுல அழுதுக்கிட்டே போச்சு...அப்படியெ பிடிச்சு விசாரிச்சா, காலேஜ் நோட்டு புக் வாங்க அப்பாகிட்ட பணம் கேட்டதுக்கு அவர் தரலையாம்....நமக்குதான் யாரு கண் கலங்கினாலும் இதயம் வெடிச்சுருமே...அப்படியே வீட்டுக்கு கூட்டிப்போயி காலை டிபனை சாப்பிட வெச்சு, அப்படியே புக் ஷாப் கூட்டிப்போயி ரெண்டாயிரத்துக்கு புக்ஸ் / பென் / நோட்ல இருந்து எல்லாம் வாங்கி தந்தேன்......மத்தவங்களுக்கு ஹெல்ப் செய்யறதுனால பணத்தை தவிர நான் எதையும் இழந்துட்டேன்னு சொல்ல முடியாது.....ஆனால் நிறைய மன நிம்மதி கெடைச்சு இருக்கு......ஆனால் சில பேர் கொடுக்கும் உதவியை முழுமையா பயன்படுத்திக்காததை பார்க்கும்போது கொஞ்சம் எரிச்சல் வந்தாலும் மீண்டும் மீண்டும் ஓடிப்போய் உதவுவதை பார்த்து சில நன்பர்கள் கடும் எரிச்சல் அடைஞ்சிருக்காங்க.....ம்ம்ம் விடுங்க...நான் எல்லாம் அதை கேட்பேனா...நான் கொஞ்சம் வியர்டுங்க...விட்டுடுங்க....

கடைசியாக...

நம்மோட (என்னோட) லைப் டைம் மற்றவங்களை விட ரொம்ப கம்மின்னு எனக்கு தெரியும்...அதனால இருக்கும் காலம் வரை முழுமையா எஞ்சாய் செய்யலாமே என்பது தான் என் கொள்கை...ம்ம்ம்ம்.....நான் கொஞ்சம் வியர்டுங்க...விட்டுடுங்க..

இப்போது நான் அழைக்கும் மக்கள்...

1. பொட்டீகடை
2. லக்கி
3. பாலா
4. வரவணை
5. சுகுணா திவாகர்

இதுல யாராவது ஏற்கனவே வியர்டிட்டீங்கன்னா பின்னூட்டத்துல சொல்லுங்க, ஆளை மாத்தனும்...

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Comments

Anonymous said…
வாத்தியார் ஐய்யாவும் தான் கூப்டாக. அதை மறந்துட்டேனே...!!!!
ரெண்டு பேர் அவுட்...என்று....உடனே நான் கேட்டேன்...அடுத்த ஆளை இறங்கி ஆடச்சொல்லவேண்டியது தானே அப்படீன்னு//

என் பிரண்டும் இப்படி தான் நக்கலான் ஆளு , ஒரு இடத்தில அவனுக்கு அடியே போட்டாங்க..சோ ஜாக்கிரதையா இருங்க

சட்டையெல்லாம் மண்...பார்த்தவுடன் மானேஜர் கேட்டார்...நீங்கள் தானே அங்கே க்ரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தது என்று...நான் அட்டகாசமாக சிரித்தேன்...வேலையும் கிடைத்தது..//

இதை தனி பதிவாக போடவும் ப்ளீஸ் ஆர்வமா இருகு அதை புல்லா படிக்க
uNmaiyaana vired pathivu ithuthaan ravi...
pidichirukku.. romba pidichirukku

senshe
//ரெண்டு பேர் அவுட்...என்று....உடனே நான் கேட்டேன்...அடுத்த ஆளை இறங்கி ஆடச்சொல்லவேண்டியது தானே அப்படீன்னு//

:))

neenga eppavumae ippadiththaanaa?

senshe
Anonymous said…
நன்றி கார்த்திக் ப்ரபு, தனிப்பதிவாக கண்டிப்பாக போடுவோம்...
செந்தழல் ரவி said…
ஷென்ஷி,

பாலாபாய் வியர்டு ஆட்டத்தில் கலந்துக்கலை, பிஸியாம்.....நீங்க வியர்டு ஆட்டம் ஆடிட்டீங்களா ? நீங்க ஏன் அந்த ஆட்டத்தில் கலந்துக்கக்கூடாது ??

டெல்லி வியர்டு மேட்டர் எல்லாம் கேட்க ஆசை...!!! செந்தில் மற்றும் உங்களின் வியர்டு மேட்டர் எழுதுங்களேன்...
உங்களோட ஹெல்ப்பிங் டெண்டன்சி பாராட்டத்தக்கது, ரவி. உங்களுடைய வேலை வாய்ப்பு வலையிதழ் அந்த எண்ணங்களின் வெளிப்பாடுதான். தொடர்ந்து கலக்குங்க.

பாராட்டுக்களுடன்
வினையூக்கி
உங்களோட ஹெல்ப்பிங் டெண்டன்சி பாராட்டத்தக்கது, ரவி. உங்களுடைய வேலை வாய்ப்பு வலையிதழ் அந்த எண்ணங்களின் வெளிப்பாடுதான். தொடர்ந்து கலக்குங்க.

பாராட்டுக்களுடன்
வினையூக்கி
Vicky said…
// தலைமேலே இடி விழுந்தாலும் மின்னல் என்ன கலர்னு பார்த்துக்கிட்டிருப்பேன்.

கலக்கல் ரவி :)
// மடையர்களே...நீங்க யாரும் கோச்சுக்காதீங்க, நான் உங்களை புண்படுத்த இதை சொல்லவில்லை...நான் என்னை நோக்கி சொல்லிக்கறது இது...ஆமாம் இந்த விஷயத்தில் நான் கொஞ்சம் வியர்டு....விட்ருங்க..... //

அப்பு ரவி!
இது சுப்பரப்பு!!; அப்ப மடையர்களே என்று நீங்க என்னைச் சொல்லல!! தங்சப்பு!!
மொத்தம் நல்லா இருக்கு!!
Sridhar Venkat said…
இந்த weird tag-லேயே உங்க tag நல்லா வந்திருக்கு. (இதில உ.கு. எல்லாம் இல்லைங்கோ).

முத 3-ம் நிஜமாவே weird-தான். அடுத்த 2-ம் அப்படி தோணல :-)

உங்க எழுத்து நடை ரொம்ப நல்லா மெருகேறியிருக்கு. வாழ்த்துகள்.
நல்லா சொல்லி இருக்கிங்க ரவி.
ஹி... ஹி...

நான் கூட இன்னும் தேன் மிட்டாய் வாங்கி சாப்பிடுவேன். சேம் பின்ச் :)

அப்புறம் அண்ணா... ஒரு ஷாக்...
நானும் NMC தான் :)))
ரவி,

2ம், 3ம் தான் wierdஆ எனக்கு தோணுது.

/ஆனால் நிறைய மன நிம்மதி கெடைச்சு இருக்கு../

அழகு..!

உங்களுடைய வேலை வாய்ப்பு வலையிதழ் நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

Popular Posts