Wednesday, May 30, 2007

கொரியாவின் வரலாறு மற்றும் கொரிய மொழி கத்துக்கலாம் வாரீயளா ?



கொரிய மொழி, கொரிய நாடு பற்றி இந்த கட்டுரையில் கொஞ்சம் பார்க்கலாம்.
அளவில் நமது இலங்கையை அல்லது இந்திய மேற்கு வங்காளத்தை ஒத்த கொரிய நாடு, இப்போது வட கொரியா மற்றும் தென் கொரியா என்று இரு பிரிவாக பிரிந்து கிடக்கிறது...அது பற்றி பார்க்குமுன் கொஞ்சம் கொரிய தீபகற்பத்தின் வரலாற்றை சற்றி பின்னோக்கி பார்த்தால் கி.மு 2333 ஆம் ஆண்டில் இருந்து தகவல்கள் காண கிடைக்கின்றன...ஜியோசன் (Gojoseon) டைனாஸ்டி - அரசாங்கம் இந்த ஆண்டுவாக்கில் உருவாகி கி.மு மூன்றாம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது என்று சொல்கிறார்கள்...பிறகு நம்ம ஊர் சேர சோழ பாண்டியர் மாதிரி மூன்று பிரிவாக பிரிந்தனவாம்...

அவை முறையே க்யோகிர்யோ, சில்லா மற்றும் பாக்ஜே...(Goguryeo, Silla, and Baekje)..வழக்கம் போல இந்த மூன்று ப்ரதேசங்களுக்கிடையில் போர்கள், கலாச்சார உறவுகள், அரசியல், வாணிகம் என்று எல்லாம் உண்டு...இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் கொரிய நாகரீகம் சீனாவுக்கும் ஜப்பானுக்கு இடையில் காலாச்சார தூதுவனாகவும், ஜப்பானின் ஆரம்ப கலாச்சாரங்களும் நாகரீகங்களும் உருவாகவும் காரணமாக இருந்தது...(கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே 200 கிலோமீட்டர் நீள கடல் - அவ்ளோதாங்க)

சமகாலத்தில் கொரியர்களுக்கு ஜப்பானியர்களை பிடிக்கவே பிடிக்காது..சாமுராய் வீரர்களான ஜப்பானியர்களுக்கு பொழுது போகவில்லை என்றால் கிளம்பி வந்து கொரிய பெண்களை பிடித்து சென்றுவிடுவார்களாம். உலகப்போர் நடந்த காலத்தில் கூட கொரிய பெண்கள் பாதிக்கப்பட்டார்கள், அது தனி கதை..

நம் தமிழகத்தின் சேர சோழ பாண்டியர் போல இந்த மூன்று ராஜ்ஜியங்களுக்கும் போர்களும் அரசியலும் இருந்தன என்று ஏற்கனவே குறிப்பிட்டேன் அல்லவா...க்யோகிர்யோ மற்றும் பாக்ஜே பிரதேசங்கள் சீனாவுக்கு எதிரான போரில் கவனம் செலுத்தவும், சீன ஆக்கிரமிப்பை தடுக்கவும் தலைப்பட்ட காலத்தில் சில்லா ராஜாங்கம் கொரிய தீபகற்பத்தின் பெரும்பகுதியை வளைத்திருந்தது...கி.மு 676 ஆம் ஆண்டு வாக்கில் கொரிய தீபகற்பத்தை முழுமையான தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது சில்லா ராஜ்ஜியம்....

அப்படியே சில நூற்றாண்டுகள் தாவி விடலாம் வாருங்கள்...கி.பி 1392 ஆம் ஆண்டு வாக்கில் இ-சாங்-கி (Yi Seong-gye) ஆல் எழுப்பப்பட்ட ராஜ்ஜியம் ஜோசன் சாம்ராஜ்ஜியம்..(Joseon Dynasty - கி.பி 1392ல் இருந்து 1910 ஆண்டு வரை ஆட்சி அதிகாரத்தில் இருந்த வம்சம் இது...

இந்த வம்சத்தில் ஆண்ட அறிவாற்றல் வாய்ந்த மன்னர் அரசர்.சேஜோங் (Sejong the Great - 1418-1450) கண்டறிந்த எழுதும் முறைதான் ஹங்குல் (Hangul)...அதுவரை வரிவடிவம் அற்ற கொரிய மொழி வரி வடிவம் பெற்றது இந்த காலம்தான்....சீன மொழியில் எழுதிக்கொண்டிருந்த கொரியர்கள் தங்கள் சொந்த வரிவடிவத்தை உருவாக்கியதை இன்றும் கொண்டாடுகிறார்கள்...இந்த காலகட்டத்தில் கொரியா கலாச்சாரத்திலும், பண்பாட்டிலும், அறிவியலிலும் நாலு கால் பாய்ச்சலில் முன்னேறி ஓடியது என்று தான் சொல்லவேண்டும்...பாருங்கள் இந்த எழுத்தின் மகிமையை....

கி.பி 1870க்கு போகலாம் வாருங்கள்...இந்த காலகட்டத்தில் கொரியாவை விட பல மடங்கு முன்னேற்றம் கண்டுவிட்ட ஜப்பான், கொரிய நாட்டின் மீது தனது மேலாதிக்கத்தை செலுத்த ஆரம்பித்திருந்தது...கொரிய அரசர் ஜப்பானிய ஏஜண்டுகளால் கொல்லப்பட்ட துன்பியல் சம்பவமும் 1895 ஆம் ஆண்டு நடந்தேறியது...

1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரில் ஜப்பானுக்கு அணுகுண்டுகள் மூலம் விழுந்த மரண அடிக்கு பிறகு குரங்கு பிரித்த அப்பம் கதையாக கம்யூனிச சோவியத் ரஷ்யா, கொரியாவில் மேல் பகுதியை பிரித்து வட கொரியா என்றும், அமெரிக்காவின் ஏற்ப்பாட்டில் ஜனநாயக தென்கொரியாவும் உதயமானது....ஒரு ஆச்சர்யம், ஜப்பானிடமிருந்து விடுபட்ட கொரிய தனது முதல் விடுதலை நாளை ஆகஸ்ட் 15 ஆம் தேதி ருசித்தது...

இன்றைக்கு கொரியவின் நிலை பற்றி எல்லோருக்கும் தெரியும்...ஒரு புறம் இன்னும் ஏழ்மையில் தத்தளிக்கும் வட கொரியா...அணுகுண்டு தயாரிப்பேன் வெடிப்பேன் வடிப்பேன் என்று பூச்சாண்டி காட்டி அமெரிக்கா ப்ரீஸ் செய்திருந்த வங்கி கணக்குகள் எல்லாம் இப்போது தான் திறக்கப்பட்டன...தென் கொரியாவின் சப்பை மூக்கு நன்பர்களின் சாம்ஸங் / எல்.ஜி / ஹுண்டாய் என்று ப்ராண்டுகள் உலகமெங்கும் சக்கைப்போடு போடுகின்றன...

சரி இப்போ கொஞ்சம் ஹங் குக், அதாவது கொரிய மொழி பழகுவோமா...

யொ பொ செயோ ( Yo Bo Se Yo) - ஹல்லோ

அன்ன ஹசியோ ( an-na-ha-si-yo) - இது க்ரீட்டிங்...ஒரு வணக்கம் மாதிரி...உபயோகப்படுத்தலாம்...

சங்காமீ ஓதோகீ த்வே சிம் னி கா (Sang ha me o thokee Dwe SIM Ni Ka) - உங்க பேரு என்ன ?

ஜே இரும்ன் ரவி இம்னிதா ( Je Erum Un Ravi IM Ni DA) - என்னோட பேரு ரவி

மெசயோ ச்சுல் குன் யெசயோ ( Mesio Chul Gun Yesaio) - எப்ப அலுவலகம் வருவ ?

மொகசயோ ? (Mo Ga Sa Yo) - சாப்டீங்களா ?

அனியோ (Anio) - இல்லை (No)

நே / யோ ( Nee / Yoo ) - ஆமாம் ( Yes)

இ-ஹீ-ஹா-ஷெஷயோ-யோ ( E-He-Ha-Shessoeo-Yo) - ஏதாவது புரிஞ்சதா ? (Did you understand anything )

னீ சங்கம் யோ (Ne Sangam Yo ) - எனக்கு கொஞ்சம் புரிஞ்சது (I Understand a Little)

கம்ஸாமீதா ( Kam Sa Me Da ) - நன்றி (Thanks)

9 comments:

சயந்தன் said...

//ரவி இம்னிதா //

ம்னிதா.. நல்ல பெயர்.. யாராவது தமிழ்பட கதாநாயகிக்கு வைக்கலாம்

அபி அப்பா said...

என்னாச்சு ரவி! உடம்புக்கு முடியலையா?:-)) சொல்லவேயில்ல...ஏதோ மொக்கை இருக்கும்ன்னு ஓடியாந்தா..

Anonymous said...

//எனக்கு தெரிஞ்சு ஒரு தொப்பித்தலையர் //

நா. கண்ணன் அவர் பெயர்.....

வரலாறு-புவியியல் எல்லாம் எனக்கு வேண்டாம் (ஏன்னா நானு திராவிடன் இல்லை...ஹிஹிஹி), லாங்குவேஜ் மட்டும் படித்துக்கொள்கிறேன்....... :-)

Anonymous said...

கம்ஸாமீதா - யாரிது? நமீதாவோட தங்கையா?

Anonymous said...

எல்லாத்துக்கும் சொன்னீங்க சரி. ஐ லவ் யு எப்படி சொல்றது என ஒரு தடவை சொன்னா கெட்டா போயிடும்? கொரியப் பொண்ணு ஒண்ணு நம்ம‌
தெருப் பக்கமாக வந்திட்டு போகிது.

புள்ளிராஜா

Anonymous said...

Korean for Thank You is Kamsa Hamnida ...

குசும்பன் said...

ரவி நானே புச்சா..ஏதோ எல்லாரையும் கலாய்கலாம்ன்னு
ஒரு blog ஆரம்பிச்சா..."கண்ணா பின்னாவென்று" திட்டி
ஏன் அவருக்கு பின்னூட்டம் போட்ட என்று எனக்கு பின்னூட்டம்
போட்டு இருக்காங்க...இது எல்லாம் சகஜமா? நீங்களும் அங்க பின்னூட்டம்
போட்டு இருந்தீங்க அதான் கேட்கிறேன்...

வவ்வால் said...

//இ-ஹீ-ஹா-ஷெஷயோ-யோ ( E-He-Ha-Shessoeo-Yo) - ஏதாவது புரிஞ்சதா ? (Did you understand anything )//

கண்டிப்பா சூப்பர் ஸ்டார் படம் எல்லாம் கொரியால ஹிட் ஆகும் ஏன்னா, அவர் இ ..ஹீ ஹா நு தான் படத்துல சிரிப்பார்!

ACE !! said...

நல்லா இருக்குங்க உங்க பதிவு.. ஒரு சில (அரண்மனை) படங்களையும் இந்த பதிவுல போட்டிருக்கலாம்..

இந்த எளிய வாக்கியங்களை நானும் எழுதி எடுத்துட்டு போனேன் கொரியா போன போது ஆனா நிறைய நேரம் மண்டை காஞ்சது என்னவோ உண்மை :D :D

கொரிய மக்கள் போன் பேசிட்டு முடிக்கும் போது "யே......"னு ஒரு பெரிய இழு இழுக்கறாங்களே ஏன்?? ரொம்ப நாளாவே குடைந்து கொண்டிருக்கும் கேள்வி இது.. "OK" மாதிரியா இந்த "யே..."??

வாழ்த்துக்கள்..

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....